என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2 children injured"

    • 5 பேர் ஒரே மோட்டார் சைக்கிளில் இன்று காலை நெய்வாசலில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்றனர்.
    • லாரி டிரைவர் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே அரியலூர் மாவட்டம் இருங்காலங்குறிச்சி பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர், ஒரு பெண் உள்பட 5 பேர் ஒரே மோட்டார் சைக்கிளில் இன்று காலை நெய்வாசலில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்றனர். பின்னர்அவர்கள் நெய் வாசலில் இருந்து கடலூர் செல்லும் சாலையில்,  திட்டக்குடி அடுத்த கொடிகளம் பஸ் நிலையம் அருகே வந்தபோது எதிரே வந்த லாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிளின் மீது வேகமாக மோதியது.இதில் மோட்டார் சைக்கிளில் வந்து 5 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த வாலிபர் மற்றும் ஒரு பெண் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

    இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து படுகாயம் அடைந்த மற்றொரு பெண் உட்பட 2 சிறுவர்களையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த திட்டக்குடி போலீஸ் டிஎஸ்பி காவியா தலைமையிலான போலீசார் மற்றும் ஆவினங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக சேர்த்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? மற்றும் இவர்கள் மீது மோதிய லாரி டிரைவர் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • நொய்யலில் உள்ள தனது கணவர் மணிகண்டனை பார்ப்பதற்காக சென்று கொண்டிருந்தார்.

    கரூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பொத்தனூர் காட்டுத்தெரு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 35). இவரது மனைவி சங்கீதா (28). இவர்களுக்கு பிரனீத் (11) என்ற மகனும், கனிஷ்கா என்ற மகளும் உள்ளனர்.

    இந்நிலையில் சங்கீதா மொபட்டில் பிரனீத், கனிஷ்கா ஆகியோரை அழைத்து கொண்டு நொய்யலில் உள்ள தனது கணவர் மணிகண்டனை பார்ப்பதற்காக சென்று கொண்டிருந்தார்.

    புகழூர் வாய்க்கால் அருகே வந்து கொண்டிருந்தபோது, கட்டிபாளையம் பகுதியை சேர்ந்த சந்திரன் என்பவர் ஓட்டி வந்த சரக்கு ஆட்டோ, சங்கீதா ஓட்டி வந்த மொபட் மீது மோதியது.

    இதில் மொபட்டில் இருந்து தூக்கி வீசப்பட்ட சங்கீதா, பிரனீத், கனிஷ்கா ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    இதையடுத்து அவர்கள் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த விபத்து குறித்த புகாரின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீசார் விபத்தை ஏற்படுத்திய டிரைவர் சந்திரன் மீது வழக்குப்பதிந்து,சரக்கு ஆட்டோவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×