என் மலர்
கடலூர்
- கடலூர் அருகே வீட்டை விட்டு சென்ற முதியவர் மாயமானார்.
- அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் செல்வராஜை பல்வேறு இடங்களில் தேடினர்.
கடலூர்:
கடலூர் அருகே மணப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ். (வயது 54) இவர் சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன்பின்னர் அவர் வீடுதிரும்பவில்லை. எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. எனவே இதுகுறித்து கிருமாம்பாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிந்து செல்வராஜ் என்ன ஆனார் எங்கு சென்றார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- திருமாவளவன் கடலூர் அருகே கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் திடீரென்று பலத்த குண்டு வெடித்த சத்தம் கேட்டது.
- கட்சி நிர்வாகிகள் மற்றும் போலீசார் பெரும் மூச்சு விட்டபடி அமைதி அடைந்தனர்.
கடலூர்:
கடலூரில் நேற்று பல்வேறு விடுதலை சிறுத்தைகள் கட்சி நிகழ்ச்சிகளில் தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி. கலந்து கொண்டு கட்சிக்கொடி ஏற்றி பேசினார். அப்போது கடலூர் பகுதிகளில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் இருசக்கர வாகனம் மற்றும் கார்களில் தலைவர் திருமாவளவனை பின்தொடர்ந்து சென்றனர். நேற்று இரவு திருமாவளவன் கடலூர் அருகே கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் திடீரென்று பலத்த குண்டு வெடித்த சத்தம் கேட்டது. இதனால் தலைவர் திருமாவளவன் கடும் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் தலைவர் திருமாவளவனை நிர்வாகிகள் சூழ்ந்து பாதுகாத்தனர்.
பின்னர் உடனடியாக எந்த இடத்தில் குண்டு சத்தம் கேட்டது என பார்த்த போது அங்குள்ள ஒரு காரில் ரேடியேட்டர் பலத்த சத்தத்துடன் வெடித்தது தெரியவந்தது. அப்போது இதனை பார்த்த கட்சி நிர்வாகிகள் மற்றும் போலீசார் பெரும் மூச்சு விட்டபடி அமைதி அடைந்தனர். இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நிகழ்ச்சி என்பதால் ஏராளமான கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்வார்கள் என்பதால் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் கட்சி கொடியேற்று விழாவில் திடீரென்று வெடிகுண்டு வெடித்தது போல் சத்தம் கேட்டதால் அனைவரும் மத்தியிலும் பெரும் பரபரப்பு நிலவியது.
- திட்டக்குடி பகுதியில் கஞ்சா விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
- பின்னர் 3 பேரையும் ஜாமீனில் விடுவித்தனர்.
கடலூர்:
திட்டக்குடி, ராமநத்தம் பகுதிகளில் தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி ரகசிய தகவலின் பேரில் நேற்று ராமநத்தம் பொதுப்பணித்துறை அலுவலகம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்துக்கொண்டும், குடித்துக்கொண்டும் இருந்த 4 பேரை ராமநத்தம் போலீசார் கைது செய்தனர். இதேபோல் திட்டக்குடி பஸ் நிலையத்தில் ஆவின் பாலகம் அருகில் நேற்று மாலை 10 கிராம் கஞ்சா வைத்திருந்த மூன்று பேரை திட்டக்குடி போலீசார் கைது செய்தனர். பின்னர் 3 பேரையும் ஜாமீனில் விடுவித்தனர்.
- போதையில் இருந்த ராமலிங்கம் நிலை தடுமாறி வீட்டு வாசலில் கீழே விழுந்தார்.
- ராமலிங்கம் மனைவி முத்தாண்டி குப்பம் போலீசில் புகார் தெரி வித்தார்.
கடலூர்:
பண்ருட்டி அருகே கீழ கொல்லை பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 62) விவசாயி. இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளார். மேலும் ராமலிங்கத்திற்கு நீண்ட நாட்களாக குடிப்பழக்கம் இருந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் குடித்து விட்டு தன் வீட்டிற்கு வந்தார். அப்போது போதையில் இருந்த ராமலிங்கம் நிலை தடுமாறி வீட்டு வாசலில் கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த அடி ஏற்பட்டது. இதைப் பார்த்த வீட்டிலிருந்தவர்கள் ராம லிங்கத்தை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரி யில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சை க்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராமலிங்கம் இன்று காலை பரிதாபமாக இறந்தார். இது குறித்து ராமலிங்கம் மனைவி முத்தாண்டிகுப்பம் போலீசில் புகார் தெரி வித்தார். புகாரின் பேரில் முத்தாண்டிகுப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடலூர் மாவட்டம் முழுவதும் பரவலாக விடிய விடிய மழை பெய்து வந்தது.
- வாகனங்கள் செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
கடலூர்:
வடகிழக்கு பருவமழை தொடங்கியதை யொட்டி கடலூர் மாவட்டம் முழுவதும் பரவலாக விடிய விடிய மழை பெய்து வந்தது. கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வீடுகள் மற்றும் சாலைகளில் தண்ணீர் சூழ்ந்ததால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் கடலூர் சுற்றுலா மாளிகை முகப்பு பகுதியில் உள்ள மரத்தில் இருந்து திடீரென்று பெரிய அளவிலான மரக்கிளைகள் சாலையில் பலத்த சத்தத்துடன் விழுந்தது. அப்போது அருகாமையில் இருந்த பொதுமக்கள் அலறி அடித்து ஓடியதோடு, வாகன ஓட்டிகள் முன்கூ ட்டியே வாகனங்களை நிறுத்தினர்.
மேலும் அப்போது அவ்வழியாக வாகன ஓட்டிகள் பாதசாரிகள் மற்றும் வாகனங்கள் செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்ப ட்டதோடு யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இதனை தொடர்ந்து அங்கிருந்து பொதுமக்கள் சாலையில் விழுந்த பெரிய அளவி லான மரக்கி ளைகளை உடனடியாக அகற்றும் பணியில் ஈடுபட்டு சாலை ஓரத்தில் பாதுகாப்பாக கொண்டு சென்று வைத்தனர். இது மட்டும் இன்றி கடலூர் மற்றும் சுற்றுவ ட்டார பகுதிகளில் சாலை ஓரத்தில் உள்ள மரங்களில் உள்ள கிளைகளை சம்பந்த ப்பட்ட அதிகாரிகள் ஊழியர்களை கொண்டு அகற்றி பாதுகாப்பான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- 11 வயது சிறுமி வீட்டில் குளிக்கும் போது வீடியோ எடுத்ததை காட்டியுள்ளார்.
- போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ்வழக்கு பதிந்து நாகராஜனை தேடி வந்தனர்.
கடலூர்:
பண்ருட்டி அருகே நடுவீரப்பட்டு பல்லவரா யநத்தம் முருகன் கோவில் தெரு வை சேர்ந்தவர் நாக ராஜ். (வயது24), கூலி தொழி லாளி திருமண மாகாதவர். இவர்கடந்த 15-ந் தேதி இதே பகுதியை சேர்ந்த நடுவீரப்பட்டு அரசு பள்ளியில் 6 -ம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி வீட்டில் குளிக்கும் போது வீடியோ எடுத்ததை காட்டியும், அவரை மிரட்டி பல முறை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டுபுதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து பண்ருட்டி மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) நந்தகுமார் மற்றும் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ்வழக்கு பதிந்து நாகராஜனை தேடி வந்தனர். நேற்று அவரை போலீசார் கைது செய்தனர். கைதான அவர் பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
- 50 ஏக்கர் பரப்பில் மக்காச்சோளம் பயிர் செய்து வருகின்றனர்.
- 5 ஏக்கர் பரப்பில் பயிர் செய்துள்ள மக்காசோளம் பயிரை முற்றிலும் பன்றிகள் நாசம் செய்து உள்ளன.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கோழியூர், வசிஷ்டபுரம் பகுதியில் 50 ஏக்கர் பரப்பில் மக்காச்சோளம் பயிர் செய்து வருகின்றனர்.தற்போது இரவு நேரத்தில் திடீரென காட்டு பன்றிகள் கூட்டம், கூட்டமாக வெள்ளாற்று பகுதியில் இருந்து விவசாய விளை நிலத்தில் படை எடுத்து அறுவடைக்கு தயாராக இருந்த மக்காச்சோளத்தை அழித்து வருகிறது. பாடுபட்டு பயிர் செய்து தற்போது அறுவடைக்கு தயாராக உள்ள மக்கா சோளம் கதிர்களை பன்றி கூட்டம் நாசம் செய்து உள்ளது. நேற்று சுமார் 5 ஏக்கர் பரப்பில் பயிர் செய்துள்ள மக்காசோளம் பயிரை முற்றிலும் பன்றிகள் நாசம் செய்து உள்ளன.
ஏக்கர் ஒன்றுக்கு உழவு கூலி, விதை, களை எடுத்தல், உரம் உள்ளிட்ட அனைத்து செலவுகளுக்கும் 40 ஆயிரம் ரூபாய் செலவாகி உள்ளதாகவும், இந்த 40 ஆயிரம் ரூபாயும் தற்போது இழப்பாகி உள்ளதாகவும், விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.எனவே மாவட்ட நிர்வாகமும், வனத்துறையும் காட்டு பன்றியிடமிருந்து விவசாய விளைநிலத்தை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் விவசாய விளைநிலத்திற்கு வனவிலங்குகள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து உள்ளனர்
- அரசியலை அரசியலாக பார்க்க வேண்டும். தனிநபர் பெயரை உச்சரிப்பது அரசியல் அநாகரிகம் ஆகும்.
- அநாகரிகம் அரசியலுக்கு என்றும் எங்களுக்கு உடன்பாடு இல்லை.
கடலூர்:
கடலூரில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வருகை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
குஜராத்தில் தொங்குபாலம் அறுந்து விழுந்ததில் நூற்றுக்கும் மேற்பட்ட இறந்த குடும்பத்திற்கு இந்திய அரசும் குஜராத் மாநில அரசும் இழப்பீடு தொகை வழங்க வேண்டும்.
இதுபோல் சம்பவம் எதிர் வருங்காலங்களில் நடக்காமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதோடு நீதி விசாரணை உடனடியாக அமைக்க வேண்டும். கோவையில் நடந்த சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக அரசியல் ஆதாயம் தேடும் நோக்கில் பாஜகவினரும், ஆளுநரும் செயல்படுவது அதிர்ச்சி அளிக்கிறது.
தமிழக ஆளுநர் தி.மு.க. ஆட்சிக்கு எதிராக தவறான தகவல் கூறுவது அதிர்ச்சி அளிக்கிறது. அவர் தனது பதவியான ஆளுநர் என்பதை மறந்து ஆர்.எஸ்.எஸ். தொண்டராக செயல்படுகிறார். அரசியல் பேசுகிறார். ஆன்மீகம் என்ற பெயரில் மதவாதம் பேசுகிறார்.
திராவிட இயக்கங்களுக்கு எதிராக அவதூறு பரப்புகிறார். கோவை சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தவறான கருத்து தெரிவித்து வருகிறார். இது தொடர்பாக தமிழ்நாடு காவல்துறை தலைவர் உரிய விளக்கம் அளித்துள்ளார். அதில் கோவை சம்பவம் தொடர்பாக ஏற்கனவே மத்திய அரசு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பா.ஜ.க. சார்பில் தெரிவிப்பது திட்டமிட்ட உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புவதாக தெரிகிறது.
மத்திய அரசு பொதுவான எச்சரிக்கை அறிவித்துள்ளனர். கோவையில் நடக்க போகுது என்றோ? முஸ்லிம் நபர் இதில் ஈடுபட உள்ளார் என்றோ? யாரும் சொல்லவில்லை. மத்திய அரசு எச்சரிக்கை விடுத்தும் தமிழக உளவுத்துறை செயல்படவில்லை என அப்பட்டமாக அரசியல் ஆதாயம் தேடுவதை விடுதலை சிறுத்தைகள் கட்சி கண்டிக்கிறது.
ஆனால் முதலமைச்சர் கோவை சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக என்.ஐ.ஏ விசாரிக்க உடனடியாக பரிந்துரை செய்தார். கோவை வெடிப்பு சம்பந்தமாக அவதூறு பரப்பி வரும் பாஜகவை வன்மையாக கண்டிக்கிறோம் .
கடலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு, மாவட்டத்தின் வளர்ச்சியை மேற்கொண்டு வரும் மாவட்ட அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மற்றும் என்னை குறித்து அவதூறாக பேசி இருப்பதை வன்மையாக கண்டிக்கின்றோம்.
அரசியலை அரசியலாக பார்க்க வேண்டும். தனிநபர் பெயரை உச்சரிப்பது அரசியல் அநாகரிகம் ஆகும். அநாகரிகம் அரசியலுக்கு என்றும் எங்களுக்கு உடன்பாடு இல்லை. மேலும் கடலூர் மாவட்டத்தில் பாஜகவினர் காலூன்ற எண்ணுகிறார்கள். காசு கொடுத்து கூட்டத்தைக் கூட்டி பேசி உள்ளனர்.
கடலூர் மாவட்டம் மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதும் பா.ஜ.க.வினர் காலூன்ற முடியாது. வட மாநிலத்தைப் போல் வன்முறையை தூண்டி அதன் மூலம் குளிர் காயிலும் என எண்ணுகிறார்கள்.
தமிழகம் என்றும் சமூக நீதிக்கான மண்ணாகும். மதவாதம் அரசுக்கு அனுமதி இல்லை என தேர்தல் சமயத்தில் மக்கள் பாடம் கண்டிப்பாக புகட்டுவார்கள். நாளை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மூன்று பிரச்சனைகளை வலியுறுத்தி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
அப்பொழுது வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா துணை மேயர் தாமரைச்செல்வன் மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா மற்றும் திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- பத்மாவதிக்கு தொடர்ந்து வயிற்று வலி அதிகரித்ததால், பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
- பத்மாவதிக்கு தொடர்ந்து வயிற்று வலி நிற்காமல் இருந்ததால் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்காக நள்ளிரவில் அனுப்பி வைத்தனர்.
கடலூர்:
கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் வாரந் தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்று வருகின்றது. அதன்படி இன்று காலை கைக்குழந்தையுடன் கணவன், மனைவி கடலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு நேரில் வந்தனர். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது -பண்ருட்டி சிறுவத்தூர் சேர்ந்தவர் வெங்கடேசன். எனது மனைவி பத்மாவதி இரண்டாவது முறையாக கர்ப்பமானார். இதனைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி கடலூர் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் கடந்த அக்டோபர் 14ஆம் தேதி எனது மனைவி பத்மாவதி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் எனது மனைவி பத்மாவதிக்கு தொடர்ந்து வயிற்று வலி அதிகரித்ததால், பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். ஆனால் பத்மாவதிக்கு தொடர்ந்து வயிற்று வலி நிற்காமல் இருந்ததால் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்காக நள்ளிரவில் அனுப்பி வைத்தனர்.பின்னர் ஜிப்மர் மருத்துவமனையில் எனது மனைவி பத்மாவதியை முழு சோதனை செய்து பார்த்த போது குடல் பகுதியையும் வயிற்றையும் ஒன்றாக வைத்து மருத்துவர்கள் தவறான சிகிச்சை செய்தது கண்டுபிடித்ததாக அங்குள்ள மருத்துவர்கள் தெரிவித்த போது கடும் அதிர்ச்சி அடைந்தோம்.
பின்னர் உடனடியாக ஜிப்மர் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்தினர். ஆகையால் இது குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் சம்பந்தப்பட்ட மருத்துவர்களிடம் விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
- பஸ்கள் நிறுத்தப்படும் அனைத்து பகுதிகளும் மழைக் காலங்களில் சேறும் சகதியுமாக மிக மோசமாக உள்ளது.
- டிரைவர்கள் பஸ்களை பணிமனையில் இயக்குவது மிக சிரமமாக உள்ளது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகராட்சி உட்பட்ட தி.இளமங்கலத்தில் கடந்த சுமார் 29 ஆண்டுகளுக்கு மேலாக அரசு போக்குவரத்து கழக விழுப்புரம் கோட்டம் திட்டக்குடி கிளை பணிமனை உள்ளது. இங்கு பஸ்கள் நிறுத்தப்படும் அனைத்து பகுதிகளும் மழைக் காலங்களில் சேறும் சகதியுமாக மிக மோசமாக உள்ளது.
இதனால் டிரைவர்கள் பஸ்களை பணிமனையில் இயக்குவது மிக சிரமமாக உள்ளது. சில சமயம் பஸ்கள் பணிமனையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தில் சிக்கிக் கொள்வதால் டிவைர்கள் பஸ்களை இயக்க சிரமப்படுகின்றனர்.இது குறித்து பல ஆண்டுகளாக போக்குவரத்து தொழிலாளர்கள் தமிழக அரசுக்கு போக்குவரத்து பணிமனையை சீர் செய்து சமநிலைப்படுத்தி தருமாறு கோரிக்கை வைத்தும் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக தொடரும் அவல நிலை நீடிக்கிறது.
பஸ்களை இயக்கும் சமயத்தில் பள்ளத்தில் பஸ் சிக்கிக் கொண்டு பழுது ஏற்பட்டால் டிவைர்கள் பொறுப்பு என அவர்களுக்கு மெமோ கொடுப்பதாக புகார் எழுந்து உள்ளது.இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில் அரசு பஸ்களை பராமரிக்கும் பணிமனை பொறுப்புடன் அப்பகுதியில் சிமெண்ட் தளம் அமைத்து பஸ்களை நிறுத்த வேண்டும். மேலும் பணிமனையில் பணி புரியும் ஊழியர்கள், டிரைவர்கள், கண்டக்டர்கள் தங்கும் ஓய்வறை உயரமான தளம் அமைத்து தர வேண்டும்.
காரணம் தற்போது தரை மட்டத்துக்கு ஓய்வறை உள்ளதால் பின்புறம் உள்ள் விவசாய நிலங்களில் இருந்து பாம்புகள் உள்ளே நுழைவது அன்றாட நிகழ்வுகளாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் போக்குவரத்து பணிமனையை போர்க்கால அடிப்படையில் சீர் செய்து தர வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
- டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிர்பாராத விதமாக அருகில் இருந்த கூரை வீட்டுக்குள் புகுந்தது.
- அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் சிறு காயங்களுடன் உயிர் சேதமின்றி உயிர்தப்பினர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியை சேர்ந்தவர் தீபன். கார் டிரைவர். இவர் அதே பகுதியைச் சேர்ந்த சரஸ்வதி (வயது 50), ரூபி (58) இருவரையும் காரில் ஏற்றிக்கொண்டு விழுப்புரத்தில் உள்ள நிகழ்ச்சி ஒன்றிற்கு அழைத்துச் சென்றார். மீண்டும் நேற்று இரவு நிகழ்ச்சி முடிந்தவுடன் விழுப்புரத்தில் இருந்து காட்டுமன்னார்கோவில் நோக்கி கார் வந்தார்.அப்போது சிதம்பரத்தில் இருந்து விருத்தாச்சலம் செல்லும் சாலை வளையமாதேவி அம்மன் குப்பம் பகுதி அருகே கார் சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிர்பாராத விதமாக அருகில் இருந்த கூரை வீட்டுக்குள் புகுந்தது.
அப்போது வீட்டில் தூங்கி கொண்டிருந்த கலைச்செல்வன் சத்தம் கேட்டு அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தார். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் சிறு காயங்களுடன் உயிர் சேதமின்றி உயிர்தப்பினர்.இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து விபத்தில் காயமடைந்த சரஸ்வதி ரூபி ஆகியோரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சேத்தியாதோப்பு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்துக்குள்ளான காரை அப்புறப்படுத்தி விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இந்த பகுதிக்கு வந்து செல்கின்றனர்.
- இருசக்கர வாகனங்கள் வழியாக செல்ல முடியாமலும் தவித்து வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பஸ் நிலையம் அருகாமையில் பூ மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட் பகுதிகளில் உணவகங்கள், பூ கடைகள், நடைபாதை பழக் கடைகள், வணிக வளாகங்கள் உள்ளன. இதன்காரணமாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இந்த பகுதிக்கு வந்து செல்கின்றனர். மேலும் பூ மார்க்கெட்டில் தினந்தோறும் கிலோ கணக்கில் பூக்கள் வீணாகி அதே பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றது. மேலும் அந்த பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள், உணவகங்கள் உள்ளிட்ட பல்வேறு கடைகளில் இருந்தும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக பூ மார்க்கெட் பகுதிகளில் தற்போது குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றது. மேலும் இருசக்கர வாகனங்களில் ஏராளமான பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களையும் இந்த பகுதிக்கு வந்து வாங்கி செல்கின்றனர்.
கடந்த சில தினங்களாக குப்பைகளை நகராட்சி ஊழியர்கள் சரியான முறையில் சுத்தம் செய்யாததால் தற்போது குப்பைகள் குவிந்து உள்ளன. இதன் காரணமாக அந்த பகுதி முழுவதும் தற்போது துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயமும் நிலவி வருகிறது. இது மட்டுமின்றி குப்பைகள் சரியான முறையில் அகற்றப்படாத காரணத்தினால் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு வழி இல்லாமலும் இருசக்கர வாகனங்கள் வழியாக செல்ல முடியாமலும் தவித்து வருகின்றனர். ஆகையால் கடலூர் நகராட்சி அதிகாரிகள் அதிகமாக மக்கள் செல்லக்கூடிய பூ மார்க்கெட் பகுதிகளில் குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்றி நோய் பரவும் அபாயத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.






