என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  சேத்தியாத்தோப்பு அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வீட்டுக்குள் புகுந்த கார்
  X

  வீட்டுக்குள் புகுந்த கார்.

  சேத்தியாத்தோப்பு அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வீட்டுக்குள் புகுந்த கார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிர்பாராத விதமாக அருகில் இருந்த கூரை வீட்டுக்குள் புகுந்தது.
  • அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் சிறு காயங்களுடன் உயிர் சேதமின்றி உயிர்தப்பினர்.

  கடலூர்:

  கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியை சேர்ந்தவர் தீபன். கார் டிரைவர். இவர் அதே பகுதியைச் சேர்ந்த சரஸ்வதி (வயது 50), ரூபி (58) இருவரையும் காரில் ஏற்றிக்கொண்டு விழுப்புரத்தில் உள்ள நிகழ்ச்சி ஒன்றிற்கு அழைத்துச் சென்றார். மீண்டும் நேற்று இரவு நிகழ்ச்சி முடிந்தவுடன் விழுப்புரத்தில் இருந்து காட்டுமன்னார்கோவில் நோக்கி கார் வந்தார்.அப்போது சிதம்பரத்தில் இருந்து விருத்தாச்சலம் செல்லும் சாலை வளையமாதேவி அம்மன் குப்பம் பகுதி அருகே கார் சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிர்பாராத விதமாக அருகில் இருந்த கூரை வீட்டுக்குள் புகுந்தது.

  அப்போது வீட்டில் தூங்கி கொண்டிருந்த கலைச்செல்வன் சத்தம் கேட்டு அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தார். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் சிறு காயங்களுடன் உயிர் சேதமின்றி உயிர்தப்பினர்.இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து விபத்தில் காயமடைந்த சரஸ்வதி ரூபி ஆகியோரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

  இதுகுறித்து தகவல் அறிந்த சேத்தியாதோப்பு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்துக்குள்ளான காரை அப்புறப்படுத்தி விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×