search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திட்டக்குடி அருகே மக்கா சோளத்தை நாசப்படுத்தும் காட்டு பன்றிகள்  விவசாயிகள் வேதனை
    X

    சேதமடைந்த மக்காச்சோளத்தை விவசாயி  கவலையுடன் பார்த்த காட்சி.

    திட்டக்குடி அருகே மக்கா சோளத்தை நாசப்படுத்தும் காட்டு பன்றிகள் விவசாயிகள் வேதனை

    • 50 ஏக்கர் பரப்பில் மக்காச்சோளம் பயிர் செய்து வருகின்றனர்.
    • 5 ஏக்கர் பரப்பில் பயிர் செய்துள்ள மக்காசோளம் பயிரை முற்றிலும் பன்றிகள் நாசம் செய்து உள்ளன.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கோழியூர், வசிஷ்டபுரம் பகுதியில் 50 ஏக்கர் பரப்பில் மக்காச்சோளம் பயிர் செய்து வருகின்றனர்.தற்போது இரவு நேரத்தில் திடீரென காட்டு பன்றிகள் கூட்டம், கூட்டமாக வெள்ளாற்று பகுதியில் இருந்து விவசாய விளை நிலத்தில் படை எடுத்து அறுவடைக்கு தயாராக இருந்த மக்காச்சோளத்தை அழித்து வருகிறது. பாடுபட்டு பயிர் செய்து தற்போது அறுவடைக்கு தயாராக உள்ள மக்கா சோளம் கதிர்களை பன்றி கூட்டம் நாசம் செய்து உள்ளது. நேற்று சுமார் 5 ஏக்கர் பரப்பில் பயிர் செய்துள்ள மக்காசோளம் பயிரை முற்றிலும் பன்றிகள் நாசம் செய்து உள்ளன.

    ஏக்கர் ஒன்றுக்கு உழவு கூலி, விதை, களை எடுத்தல், உரம் உள்ளிட்ட அனைத்து செலவுகளுக்கும் 40 ஆயிரம் ரூபாய் செலவாகி உள்ளதாகவும், இந்த 40 ஆயிரம் ரூபாயும் தற்போது இழப்பாகி உள்ளதாகவும், விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.எனவே மாவட்ட நிர்வாகமும், வனத்துறையும் காட்டு பன்றியிடமிருந்து விவசாய விளைநிலத்தை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் விவசாய விளைநிலத்திற்கு வனவிலங்குகள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து உள்ளனர்

    Next Story
    ×