என் மலர்tooltip icon

    கடலூர்

    • 5 நபர்கள் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
    • திடீரென்று குளவிகள் நடந்து சென்றவர்களை சரமாரியாக கடித்தது.

    கடலூர்:

    கடலூர் அருகே நெல்லிக்குப்பம் சித்தரசூர் ரயில் நிலையம் அருகே அதே பகுதியை சேர்ந்த 5 நபர்கள் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று குளவிகள் நடந்து சென்றவர்களை சரமாரியாக கடித்தது. இதில் ஐந்து நபர்கள் வலி தாங்காமல் கதறி துடித்தனர். இதனை தொடர்ந்து 5 பேரை மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

    • மண்புழு உரம் தயாரிக்கும் கொட்டகை உள்ளது.
    • சிறிது நேரத்தில் இந்த தீ மள மள வென பற்றி கொட்டகை முழுவதும் எரிந்து சேதமானது.

    கடலூர்:

    கடலூர் அருகே குணமங்கலம் பகுதியில் மண்புழு உரம் தயாரிக்கும் கொட்டகை உள்ளது. சம்பவத்தன்று இந்த கொட்டகையில் திடீரென்று தீப்பிடித்து எறிந்தது. சிறிது நேரத்தில் இந்த தீ மள மள வென பற்றி கொட்டகை முழுவதும் எரிந்து சேதமானது. இந்த தீ விபத்தில் 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து ஊராட்சி செயலாளர் அன்பு நெல்லிக்குப்பம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • ஆற்றில் அடையாளம் தெரியாத 55 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் இறந்த நிலையில் நீரில் மிதந்து வந்தது.
    • உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கடலூர்:

    கடலூரில் அருகே திருவந்திபுரத்தில் கெடிலம் ஆறு உள்ளது. இன்று காலை இந்த ஆற்றில் அடையாளம் தெரியாத 55 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் இறந்த நிலையில் நீரில் மிதந்து வந்தது. இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நீரில் மிதந்து வந்த மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தேவராஜ் அரசூர் பகுதியில் ஆயில் மில் கம்பெனி வைத்து நடத்தி வந்தார்.
    • வீட்டில் உள்ளவர்கள் வந்து பார்த்தபோது தேவராஜ் தூக்கில் பிணமாக தொங்கினார்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே பண்டரகோட்டை பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜ் (வயது 55). தொழிலதிபர். இவர் அரசூர் பகுதியில் ஆயில் மில் கம்பெனி வைத்து நடத்தி வந்தார். இந்நிலையில் இன்று காலை வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் வீட்டில் உள்ள கழிவறைக்கு சென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வீட்டில் உள்ளவர்கள் வந்து பார்த்தபோது தேவராஜ் தூக்கில் பிணமாக தொங்கினார். இதைப் பார்த்த அதிர்ச்சடைந்த அவர்கள் இது குறித்து புதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

    • பிரபல துணிக்கடையான கே. வி. டெக்ஸ் உள்ளது.
    • கே.வி.டெக்ஸ் உரிமையாளர் வீட்டில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் - சிதம்பரம் சாலையில் பிரபல துணிக்கடையான கே. வி. டெக்ஸ் உள்ளது. இந்த கே.வி. டெக்ஸ் துணிக்கடையில் தினமும் ஏராளமான பொதுமக்கள் ஆடைகள் வாங்கி செல்வார்கள். இந்த நிலையில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு கே.வி. டெக்ஸ் கடையில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் துணிகளை வாங்கி சென்றனர். இதன் காரணமாக இந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர். இது தொடர்பாக பொதுமக்கள் கே.வி.டெக்ஸ் நிறுவனம் கடலூரில் முக்கிய சாலையாக உள்ள சிதம்பரம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என குற்றச்சாட்டு வைத்து புகார் தெரிவித்திருந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை கடலூர் கே.வி.டெக்ஸில் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வருமானத்துறை சேர்ந்த சுமார் 15-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அதிரடியாக உள்ளே சென்றனர். பின்னர் கடலூர் கே.வி.டெக்ஸில் ஆடைகள் எடுத்துக் கொண்டிருந்த பொதுமக்களை அவசர அவசரமாக வெளியேற்றினார்கள்‌. மேலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வருமானவரித்துறையினர் தீவிரமாக ஆய்வு மேற்கொண்டனர்.

    இதில் கே.வி.டெக்ஸ் நிர்வாகம் ஏதேனும் வரி ஏய்ப்பு செய்துள்ளார்களா? என தீவிரமாக சோதனையில் ஈடுபட்டனர். மேலும் ஆடைகள் எத்தனை கோடிக்கு வாங்கியுள்ளார்கள்? எத்தனை கோடிக்கு விற்பனை செய்து உள்ளார்கள்? இதில் அரசுக்கு சரியான முறையில் வரி செலுத்தி உள்ளார்களா? அல்லது வரி ஏய்ப்பு செய்துள்ளார்களா? என்பது குறித்து துருவித் துருவி விசாரணை மேற்கொண்டதோடு கணக்குகளை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் கடலூர் பாடலீஸ்வரர் கோவில் தெருவில் உள்ள கே.வி.டெக்ஸ் உரிமையாளர் வீட்டில் 3 கார்களில் வந்த 7 அதிகாரிகள் அதிரடியாக உள்ளே சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    புதுவை இந்திராகாந்தி சிலை அருகே கே.வி. டெக்ஸ் துணிக்கடை இயங்கி வருகிறது. இங்கு இன்று காலை 11 மணியளவில் சென்னையில் இருந்து 8 வருமான வரித்துறை அதிகாரிகள் வந்து அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வாடிக்கையாளர்களை வெளியேற்றி விட்டு ஊழியர்களிடம் இருந்த செல்போன்கள் உள்ளிட்டவைகளை வாங்கி வைத்துக்கொண்டு இந்த சோதனை நடைபெற்றது. சோதனையை தொடர்ந்து புதுவை கே.வி.டெக்ஸ் கடை முன்பு துப்பாக்கி ஏந்திய 4 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கடலூர் மற்றும் புதுவை கே.வி. டெக்ஸ் நிர்வாகத்தினரால் கட்டப்பட்ட கட்டிடம் சரியான முறையில் அனுமதி பெறாமல் கட்டப்பட்டதாக கடலூரில் தமிழக அரசும், புதுவையில் புதுவை அரசும் கடைக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர். பின்னர் அந்தந்த அரசிடம் உரிய அனுமதி பெற்று சட்டதிட்டத்திற்குள் கடை திறக்கப்பட்டு வியாபாரம் செய்து வந்தனர்.

    இந்த நிலையில் கே.வி.டெக்ஸ் நிர்வாகத்தினர் வரி ஏய்ப்பு செய்துள்ளார்களா? என வருமானவரித்துறையினர் தற்போது தீவிர சோதனையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதேபோன்று விழுப் புரம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள வணிக வளாகத்தில் வருமான வரி சோதனை நடந்தது.

    • சென்னையில் பா.ஜ.க. மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • சென்னையில் நேற்று மாலை கைது செய்தனர்

    கடலூர்:

    நடிகைகள் குஷ்பு சுந்தர், நமீதா, காயத்ரி ரகுராம், கவுதமி ஆகியோர் குறித்து தி.மு.க. பேச்சாளர் சைதை சாதிக் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதை கண்டித்து சென்னையில் பா.ஜ.க. மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணா மலையை சென்னையில் நேற்று மாலை கைது செய்த தால் பண்ருட்டி நான்கு முனை சந்திப்பில் கடலூர் மாவட்ட பொதுச் செயலாளர் ஜீவா வினோத்குமார் தலைமை யில் கண்டன ஆர்ப்பா ட்டம் நடைபெற்றது.

    இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் சுகுமார், மாவட்ட செயலாளர் சுனில் சவுந்தர்யா, மாவட்ட பிரிவு தலைவர்கள் அசோக் ராஜ், முருகன், கிருஷ்ணமூர்த்தி ஒன்றிய தலைவர்கள் சக்திவேல், ஜெகதீஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரகு, பண்ருட்டி நகர மகளிர் அணி தலைவி அஞ்சுகம் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய அணி பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன கோஷமிட்டனர்.

    திட்டக்குடி நகர பா.ஜ.க. தலைவர் பூமிநாதன் தலைமையில் திட்டக்குடி பஸ் நிலையத்தில் ஆர்ப்பா ட்டம் நடை பெற்றது. இதில் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் சின்ன சேலத்தில் நேற்று மாலை நெசவாள அணி மாநில செயலாளர் செந்தில் ராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அனுமதி இன்றி ஆர்ப்பாட்ட த்தில் ஈடுபட்ட செந்தில் ராஜா உட்பட பாஜகவை சேர்ந்த 10 பேர் மீது சின்ன சேலம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

    • வீட்டினுள் இருந்த பீரோ உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
    • கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த பனப்பாக்கம் பாட்டை தெருவை சேர்ந்தவர் குமார் (வயது46). விவசாயி. இவர் நேற்று காலை 8 மணிக்கு தனது வீட்டை பூட்டிக்கொண்டு விவசாய நிலத்திற்கு வேலை சென்றார். வேலைமுடிந்து மதியம் 12.30மணிக்கு வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின்பி ன்பக்க கதவு திறந்துகிடந்தது. மேலும் வீட்டினுள் இருந்த பீரோஉடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டினுள் புகுந்த மர்ம ஆசாமிகள் பிரோவில் இருந்த 6 பவுன் நகை மற்றும் ரூ20,000 பணம் திருடி சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து விவசாயி குமார் புதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனார். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். பட்டபகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • நவம்பர் 2-ஆம் தேதியை கிறிஸ்தவர்கள் கல்லறைத் திருநாளாக கடைப்பிடித்து வருகின்றனர்.
    • கல்லறைத் தோட்டத்தில் திருப்பலியும், சிறப்பு வழிபாடும் நடத்தப்படும்.

    கடலூர்:

    கல்லறைத் திருநாளை முன்னிட்டு, கடலூரில் உள்ள கல்லறைத் தோட்டங்களில் கிறிஸ்தவர்கள் சிறப்புத் திருப்பலி நடத்தினர். இறந்தவர்களை நினைவு கூறும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 2-ஆம் தேதியை கிறிஸ்தவர்கள் கல்லறைத் திருநாளாக கடைப்பிடித்து வருகின்றனர். இது அனைத்து ஆன்மாக்கள் தினம் என்றும் அழைக்கப்படுகிறது. கல்லறைத் திருநாள் அன்று கிறிஸ்தவர்கள் கல்லறை தோட்டத்துக்குச் சென்று இறந்த தங்கள் உறவினர்களின் கல்ல றையில் அவர்களின் ஆன்மா இளைப்பாற ஜெபம் செய்வது வழக்கம்.

    மேலும், கல்லறைத் தோட்டத்தில் திருப்பலியும், சிறப்பு வழிபாடும் நடத்தப்படும். அதன்படி, கடலூரில் உள்ள புனித கார்மேல் அன்னை கல்லறைத்தோட்டம், ஏ.எல்.சி. கல்லறைத் தோட்டம், புனித எபிநேசர் கல்லறைத் தோட்டம், ஆர்.சி. கத்தோலிக்க கல்லறைத் தோட்டம், கம்மியம்பேட்டை புனித சூசையப்பர் கல்லறைத் தோட்டம், அரசு தலைமை மருத்துவமனை பின்புறம் உள்ள கல்லறைத் தோட்டத்தில் கிறிஸ்தவர்கள் சென்று பிரார்த்தனை நடத்தினர். மேலும் தங்கள் உறவினர் கல்லறைகளில் மெழுகுவர்த்தி ஏற்றி மலர்கள் தூவி மாலை அணிவித்து முன்னோ ர்களை நினைவு கூர்ந்தனர். 

    • விருத்தாசலம் காவல்துறையினர் 4 பேர் மீது வழக்குப் பதிந்தனர்
    • வழக்கில் அரசு தரப்பில் கூடுதல் அரசு வக்கீல் பெரிய.செந்தில்குமார் வாதாடினார்.

    கடலூர்:

    கடந்த 2011-ஆம் ஆண்டு விருத்தாசலம் வி.என்.ஆர். நகரை சேர்ந்த ஜெயராஜ் என்பவரின் மனைவி அமுதா வீட்டில் தனியாக இருந்தபோது, சிலிண்டர் வேண்டுமா என கேட்பதுபோல் 4 பேர் வீட்டின் கதவைத் தட்டியுள்ளனர். அமுதா சிலிண்டர் வேண்டாம் என்றார். ஆனாலும் அங்கிருந்து செல்லாத 4 நபரும் "தண்ணீர் கொடுங்கள்" எனக் கேட்டுக்கொண்டே வீட்டுக்குள் சென்று அமுதா வைக் கொடூரமாகத் தாக்கி அவரது கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் செயினைப் பறித்துச் சென்றனர். இதுகுறித்து விருத்தா சலம் காவல்துறையினர் 4 பேர் மீது வழக்குப் பதிந்தனர். இந்த வழக்கு விருத்தாசலம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பை முதன்மை சார்பு நீதிமன்ற நீதிபதி ஜெகதீஸ்வரி நேற்று வழங்கினார்.

    இதில் குற்றம் சாட்ட ப்பட்ட கண்டியாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ராஜதுரை மற்றும் மணலூர் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் ஆகிய 2 பேரும் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டதால் இந்தியத் தண்டனைச் சட்டம் 454 பிரிவின் கீழ் 7 ஆண்டு சிறைத் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும், இந்தியத் தண்டனைச் சட்ட பிரிவு 394, 397-ன் படி ஏழு ஆண்டு சிறைத் தண்டனையும், 2 தண்டனைகளையும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தீர்ப்புளித்தார். அபராதம் கட்டத் தவறினால் மேலும் ஒரு மாதம் சிறைத் தண்டனை அனுப விக்க வேண்டும் என உத்தரவிட்டார். தீர்ப்புக்குப் பின் ராஜதுரை மற்றும் சந்திரசேகர் ஆகி யோரை போலீசார் சிறைச்சாலை க்கு அழைத்துச் சென்றனர். மேலும் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆனந்தக்குடி கிராமத்தைச் சேர்ந்த வீரப்பன், குடிகாடு கிராமத்தைச் சேர்ந்த பரமானந்தன் ஆகிய 2 பேரையும் நீதிபதி விடுதலை செய்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் கூடுதல் அரசு வக்கீல் பெரிய.செந்தில்குமார் வாதாடினார்.

    • சேத்தியாத்தோப்பு அருகே குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • கிராம மக்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் சாலை சீர் செய்யப்படவில்லை என அந்தப் பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் ஒன்றியம் கூளாப் பாடி ஊராட்சி தென்பாதி கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு பள்ளிக்கூட சாலை குண்டும் குழியுமாக, மழைக்காலங்களில் சேரும் சகயுதிகமாக உள்ளது. இந்த வழியாக மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

    இந்த சாலை கடந்த 2009 ஆண்டுகளில் போடப்பட்டது. இது குறித்து கிராம மக்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் சாலை சீர் செய்யப்படவில்லை என அந்தப் பகுதி மக்கள் தெரிவித்தனர். இது குறித்து கிராம மக்கள் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளபெருக்கு காரணமாக சிதம்பரம் பகுதியில் 1500-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.
    • மாவட்டம் முழுவதும் 1000-க்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கடும் அவதிக்குள்ளானர்கள்.

    கடலூர்:

    தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை கடந்த 2 நாட்களுக்கு முன்பு தொடங்கியது. அதன்படி பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் கனமழை நீடித்து வருகிறது. கடலூர் மாவட்டத்தில் கடந்த 1 வாரத்துக்கு மேலாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

    நேற்று முதல் பெய்ய தொடங்கிய மழை இன்று காலை வரை விடிய விடிய கொட்டிதீர்த்தது. இன்று காலையும் மழை பெய்தபடி காணப்பட்டது. இதேபோல மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி, விருத்தாசலம், சிதம்பரம், பரங்கிப்பேட்டை, சேத்தியாத்தோப்பு, காட்டுமன்னார் கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மழை கொட்டி தீர்த்தது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளபெருக்கு காரணமாக சிதம்பரம் பகுதியில் 1500-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. மாவட்டம் முழுவதும் 1000-க்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கடும் அவதிக்குள்ளானர்கள்.

    தொடர்ந்து மழை பெய்து வருவதால் மாவட்ட நிர்வாகம் உஷார்படுத்தப்பட்டுள்ளது. தண்ணீர் சூழும் பகுதிகளுக்கு செல்ல படகு தயார் நிலையில் உள்ளது. இதுதவிர மாநகராட்சி, நகராட்சி பகுதியில் வெள்ளத்தை தடுக்க மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஏரிகள் மற்றும் குளங்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் புவனகிரியை சுற்றியுள்ள ஆதிவராக நத்தம், மஞ்சகுழி, பெருமாத்தூர், சுத்துக்குழி, பூதவராயன்பேட்டை, வண்டு ராயன்பட்டு, உடையூர், கீரப்பாளையம், வடகறி ராஜபுரம், ஒரத்தூர், தெற்கு திட்டை, வடக்குதிட்டை, பு.சித்தேரி, சாத்தப்பாடி ஆகிய பல்வேறு கிராமங்களில் நள்ளிரவில் பலத்த மழை பெய்தது.

    • மயிலாடுதுறையில் இருந்து பயணிகள் விழுப்புரத்திற்கு டிக்கெட் பெற்றுக் கொண்டு வந்து கொண்டிருந்தனர்‌.
    • வருங்காலங்களில் இது போன்ற பாதிப்புகள் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்‌.

    கடலூர்:

    விழுப்புரம் பகுதியில் ெரயில்வே தண்டவாளத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் ெரயில்கள் இயங்காது என ெரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தனர். இன்று காலை மயிலாடுதுறையில் இருந்து பயணிகள் விழுப்புரத்திற்கு டிக்கெட் பெற்றுக் கொண்டு வந்து கொண்டிருந்தனர்‌. அப்போது கடலூர் முதுநகர் ெரயில் நிலையத்திலிருந்து ெரயில் செல்லாது என அதிகாரிகள் அறிவித்து ெரயிலில் இருந்த பயணிகளை உடனடியாக இறங்குமாறு அறிவுறுத்தினர். அப்போது இதனை கேட்ட ெரயில் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்து ெரயில்வே துறை அதிகாரியிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்தனர். அப்போது விழுப்புரம் பகுதியில் ெரயில்வே தண்டவாளத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் விழுப்புரம் வரை ெரயில்கள் இயங்காது என தெரிவித்தனர்.

    அப்போது பொதுமக்கள் கடும் கோபம் அடைந்து எதற்காக விழுப்புரம் வரை ெரயில் டிக்கெட் வழங்கீனர்கள்? இதற்கு யார் அனுமதி கொடுத்தார்கள்? என அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த அதிகாரிகள் இது சம்பந்தமாக ெரயில்வே துறை உயர் அதிகாரி களிடம் தெரிவித்து வருங்காலங்களில் இது போன்ற பாதிப்புகள் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்‌. தற்போது கடலூர் முதுநகரில் இருந்து அவர் அவர்கள் எடுத்த ெரயில் கட்டணத்தை மீதி தொகை வழங்கப்படும் என தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து ரயில்வே துறை அதிகாரிகள் பொது மக்களுக்கு வழங்கக்கூடிய ரயில் கட்டணத்தை வழங்கினர். பின்னர் பொதுமக்கள் அவசர அவசரமாக கொட்டும் மழையில் நனைந்தபடி பஸ்சில் செல்வதற்கு ஓடினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

    ×