என் மலர்
கடலூர்
- கடலூரில் தனியார் ஹோட்டலில் காளீஸ்வரன் வேலை செய்து வருவதால் தற்போது கடலூர் கூத்தப்பாக்கம் கிருஷ்ணசாமி நகரில் வசித்து வந்தனர்.
- இவரது மனைவி முத்துமீனா சந்தேகப்பட்டு கேட்கும் போது இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்ததாக கூறப்படுகிறது.
கடலூர்:
நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் காளீஸ்வரன் (வயது 30). இவரும் முத்துமீனா என்பவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த 4 மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து கடலூரில் தனியார் ஹோட்டலில் காளீஸ்வரன் வேலை செய்து வருவதால் தற்போது கடலூர் கூத்தப்பாக்கம் கிருஷ்ணசாமி நகரில் வசித்து வந்தனர். இந்த நிலையில் காளீஸ்வரன் அடிக்கடி மொபைல் போனில் அதிகளவில் பேசி வந்துள்ளார்.
இதனால் இவரது மனைவி முத்துமீனா சந்தேகப்பட்டு கேட்கும் போது இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மீண்டும் இவர்களுக்குள் சண்டை வந்ததால் முத்துமீனா கோபித்துக் கொண்டு தனது மொபைல் போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு வெளியில் சென்று விட்டார்.இதன் காரணமாக மன உளைச்சலில் இருந்த காளீஸ்வரன் தனது வீட்டில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் காளீஸ்வரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- எதிரே வந்த அரசு விரைவு பஸ் ஒன்று, மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
- நஷ்டஈடாக ரூ.21 லட்சத்து 21 ஆயிரம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.
கடலூர்:
கடலூர் அருகே உள்ள குமளங்குளத்தை சேர்ந்தவர் மாசிலாமணி மகன் சிவக்குமார் (வயது 33). இவர் ஜவுளிக்கடையில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்தார். கடந்த 8.12.2018 அன்று சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். காஞ்சீபுரம் மாவட்டம் கூவத்தூர் அருகே சென்ற போது, எதிரே வந்த அரசு விரைவு பஸ் ஒன்று, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சிவக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக அவரது குடும்பத்தினர் கடலூர் மூத்த வக்கீல் சிவமணி, வக்கீல்கள் சரவணன், முகுந்தன், சத்யா ஆகியோர் மூலம் கடலூர் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி கடந்த 16.9.2020 அன்று சிவக்குமாரின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் நஷ்டஈடாக ரூ.21 லட்சத்து 21 ஆயிரம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். ஆனால் இதுவரை நஷ்டஈடு தொகை வழங்காததால் கோர்ட்டில் நிறைவேற்று மனுதாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரித்த நீதிபதி சுபாஅன்புமணி, விபத்தில் இறந்த சிவக்குமாரின் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் வட்டியுடன் ரூ.27 லட்சத்து 88 ஆயிரத்து 706 நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும், இல்லையெனில் சம்பந்தப்பட்ட போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பஸ்சை ஜப்தி செய்யவும் உத்தரவிட்டார். இருப்பினும் நஷ்டஈடு தொகை வழங்கப்படாததால் கடலூர் பஸ் நிலையத்தில் நின்ற தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பஸ்சை கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.
- தொடர் மழையால் நேற்று பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
- நெற்பயிர், கரும்பு, வாழை, ஊடுபயிர் ஆகியவை தண்ணீரால் சூழ்ந்துள்ளது.
கடலூர்:
வடகிழக்கு பருவமழை தற்போது தமிழகம் முழுவதும் தொடங்கி உள்ளது. இதன் காரணமாக கடந்த 2 நாட்களாக கடலூரில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த தொடர் மழையால் நேற்று பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. நேற்று இரவும் விடிய விடிய மழை பெய்தது. கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் பரங்கி பேட்டை, கீரப்பாளை யம், குமராட்சி ஆகிய பகுதிகளில் 3 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களை தண்ணீர் சூழ்ந்துள்ளது. இது தவிர கடலூர், அண்ணாகிராமம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட பகுதியில் 1000 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர், கரும்பு, வாழை, ஊடுபயிர் ஆகியவை தண்ணீரால் சூழ்ந்துள்ளது.
கனமழைக்கு கடலூர் மாவட்டத்தில் 200 வீடுகள் சேதமாகி உள்ளது. 8 கால்நடைகள் இறந்துள்ளது. 7 இடங்களில் மின்கம்பம் சாய்ந்துள்ளது. ஒரு இடத்தில் மரம் முரிந்துள்ளது. தொடர் மழை காரண மாக கடலூர் மாநகராட்சி பகுதியில் 2000 ஆயிரம் வீடுகளை தண்ணீர் சூழ்ந்து ள்ளது. இந்த பகுதியில் உள்ள தண்ணீரை ராட்சத குழாய் மூலம் பம்பிங்செய்து மாநகராட்சி நிர்வாகத்தினர் அகற்றி வருகிறார்கள். கடலூர் மாவட்டத்தில் ஒன்றிய வாரியாக தோட்ட க்கலை, பொதுப்ப ணித்து றை, வருவாய்துறை அதி காரிகள் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
- கனமழை யின் காரணமாக வயல்க ளில் தேங்கிய மழைநீர் வடிய வழியில்லாமல் வயல்களிலேயே தேங்கி பயிர்கள் அழுகும் நிலைஏற்பட்டுள்ளது.
- ஏக்கருக்கு ரூ.15 ஆயிரத்திலிருந்து ரூ.20 ஆயிரம் வரை செலவுகள் செய்துள்ளோம்.
கடலூர்:
வடகிழக்கு பருவ மழை தற்போது தமிழகத்தில் பெய்து வருகிறது. இதனால் கடலூர் மாவட்டத்தில் மழை பரவலாக மழைபெய்து வருகிறது.குறிப்பாக கடலோர பகுதியில் மழை வெளுத்த வாங்கி வருகிறது. சேத்தியாத்தோப்பு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக கீரப்பாளையம் ஒன்றியத்துக்குட்பட்ட பரதூர் ஊராட்சியில் 500 ஏக்கர் பரப்பளவில் உள்ள விளை நிலங்களில் சம்பா நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளது. கனமழை யின் காரணமாக வயல்க ளில் தேங்கிய மழைநீர் வடிய வழியில்லாமல் வயல்களிலேயே தேங்கி பயிர்கள் அழுகும் நிலைஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ஏக்கருக்கு ரூ.15 ஆயிரத்திலிருந்து ரூ.20 ஆயிரம் வரை செலவுகள் செய்துள்ளோம். தற்போது பெய்து வரும் கனமழையால் நெற்பயிர்கள் மூழ்கி உள்ளது. இதனால் நஷ்டம் ஏற்படும். விளை நிலங்களில் மழைநீர் தேங்குவதற்கு முக்கிய காரணம் சிதம்பரம் கோட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் யாக பாசன வாய்க்காலை தூர்வாரி பராமரிக்காத காரணத்தாலும் மெத்தன போக்காலும் அதிகளவு மழைநீர் தேங்கி நெற்பயிர்கள் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம், மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்களை மதிப்பீடு செய்து உரிய இழப்பீடுவழங்க வேண்டும் என்றனர்.
- 6-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் நவீன் ராஜ் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டனர்.
- வெள்ளாருக்கு தண்ணீரை கொண்டு செல்வதற்கு ஜேசிபி எந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகராட்சிக்கு உட்பட்ட 6-வது வார்டு தர்மக்குடிகாடு பகுதியில் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து 6-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் நவீன் ராஜ் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டனர். பின்னர் திட்டக்குடி நகராட்சி பகுதியில் இருக்கின்ற அனைத்து கழிவுநீர்களையும் தர்மகுடிகாடு பகுதி வழியாக கொண்டு சென்று வெள்ளாற்றில் கலக்கப்போவதாக நகராட்சி நிர்வாகம் அறிவித்ததாக கூறி கடந்த மாதம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு கலந்து சென்றனர். திட்டக்குடி நகராட்சிக்கு உட்பட்ட தர்மகுடிக்காடு அருகே திட்டக்குடி - விருத்தாசலம் மாநில சாலையோரம் மழைக்காலத்தில் மழை நீர் அதிக அளவில் தேங்கி நிற்கிறது. இதுகுறித்து பொதுமக்கள் திட்டக்குடி நகராட்சியிடம் தேங்கியுள்ள மழை நீரை அகற்றி தர கோரிக்கை வைத்தனர். அதன் பேரில் இன்று திட்டக்குடி நகராட்சி ஆணையர் ஆண்டவன், நகர மன்ற தலைவர் வெண்ணிலா கோதண்டம், நகர துணைத் தலைவர் பரமகுரு மற்றும் நகராட்சி ஊழியர்கள் ஆகியோர் ஜேசிபி இயந்திரம் மூலம் தேங்கியுள்ள மழை நீரை வடிக்கால் வழியாக தர்மக்குடிகாட்டில் இருந்து வெள்ளாருக்கு தண்ணீரை கொண்டு செல்வதற்கு ஜேசிபி எந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நகராட்சிக்கு உட்பட்ட அப்பகுதி மக்கள் 6-வது வார்டு உறுப்பினர் நவீன்ராஜ் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஜேசிபி எந்திரத்தை முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவல் பேரில் திட்டக்குடி டிஎஸ்பி காவியா, இன்ஸ்பெக்டர் சீனிபாபு, சப் இன்ஸ்பெக்டர் பாக்யராஜ் மற்றும் போலீசார் பொது மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது போராட்ட க்காரர்கள் தற்போது தற்காலிகமாக இந்த வழியாக பள்ளம் தோண்டப்பட்டால் விரைவில் திட்டக்குடி நகராட்சி சாக்கடை நீர் அனைத்தும் இவ் வழியாக தான் அருகிலுள்ள வெள்ளா ற்றிக்கு செல்லும் எனவே இவ்வழியாக வடிகால் அமைக்க அனுமதிக்க மாட்டோம் எனக் கூறி வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். நகராட்சி சார்பில் தற்போது பருவ மழை தொடங்கிய தால் சாலை ஓரம் உள்ள மழை நீரை மட்டும் செல்வதற்கு தற்காலிகமாக பள்ளம் தோண்டி வெள்ளா ற்றில் மழை நீரை விடுவதாக தெரிவித்தனர். இதற்கு மீண்டும் எதிர்ப்பு தெரிவி த்ததால் இதுகுறித்து விருத்தாசலம் சார் ஆட்சியர் தலைமையில் திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலக த்தில் சமாதான கூட்டம் நடைபெறும் என டிஎஸ்பி காவியா தெரிவி த்தார். இதையடுத்து போராட்ட க்காரர்கள் அங்கு இருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- சிதம்பரம் அருகே கனமழைக்கு சுவர் இடிந்து மூதாட்டி பலியானார்.
- கடந்த 2 நாட்களாக சிதம்பரம் பகுதியில் கனமழை பெய்து வருகிறது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள நஞ்சமகத்துவாழ்க்கை கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது தாயார் கலியம்மாள் (வயது 70). இவர் தனியாக வசித்து வருகிறார். கடந்த 2 நாட்களாக சிதம்பரம் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இவரது வீட்டில் சுவர் நனைந்து இருந்தது. நேற்று திடீரென பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது. இதில் கலி யம்மாள் இடிபாடுகளுக்குள் சிக்கினார்.
அவர் உயிர் பிழைக்க கூச்சல்போட்டார். சத்தம்கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்தனர். உடனே அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர். அவரை பரி சோதித்த டாக்டர்கள் கலி யம்மாள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தில்லை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மாநகராட்சி அதிகாரிகள் வீடுகளை காலி செய்ய வேண்டும் என நோட்டீஸ் வழங்கியிருந்தனர்.
- ஒரு பெண் திடீரென்று மண்எண்ணை கேனை எடுத்து வந்து தீக்குளிக்க முயன்றார்.
கடலூர்:
கடலூர் புருக்கீஸ் பேட்டை மஞ்சனிக்குப்பம் பகுதியில் அ ரசு இடத்தை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு 8 வீடுகள் கட்டப்பட்டதாக கூறி மாநகராட்சி அதிகாரிகள் வீடுகளை காலி செய்ய வேண்டும் என நோட்டீஸ் வழங்கியிருந்தனர். இந்த நிலையில் இன்று காலை மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் முரளி தலைமையில் ஆய்வாளர்கள் அருள், தினகரன் மற்றும் ஊழியர்கள் ஜேசிபி எந்திரத்துடன் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
மேலும் ஜேசிபி எந்திரம் மூலம் வீடுகளை இடிக்க சென்றபோது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் அமர்நாத் தலைமையில் பொதுமக்கள் ஜேசிபி வாகனத்தை முற்றுகையிட்டு வீடுகளை இடிக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அங்கிருந்த அதிகாரியிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒரு பெண் திடீரென்று மண்எண்ணை கேனை எடுத்து வந்து தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து அந்த பெண்ணிடம் இருந்து உடனடியாக கேனை பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது எங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும். இங்கு இருந்து காலி செய்வதற்கு போதுமான கால அவகாசம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இதனை தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் தாசில்தாரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது இதுசம்பந்தமாக உரிய முறையில் விசாரணை நடத்தி பொதுமக்கள் வைத்த கோரிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனை தொடர்ந்து தற்காலிகமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட வீடுகளை இடிக்காமல் அதிகாரிகள் அங்கிருந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
- ஜெயராமன் திருமணம் செய்து கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
- செவிலியரை கடலூருக்கு அழைத்து வந்த ஜெயராமன் திடீரென்று பிடிக்கவில்லை என்று கூறினார்.
கடலூர்:
கடலூர் புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மகன் ஜெயராமன் (வயது 22). என்ஜினியர். இவரும் 23 வயது செவிலியரும் கடந்த சில ஆண்டுகளாக பழகி வந்தனர். அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதனையடுத்து ஜெயராமன் திருமணம் செய்து கொள்வதாக செவிலியர் பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி கடந்த 1 மாதத்திற்கு முன்பு பரங்கிப்பேட்டை புதுப்பேட்டை பகுதிக்கு அழைத்து சென்று ஜெயராமன் திருமணம் செய்து கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று செவிலியரை கடலூருக்கு அழைத்து வந்த ஜெயராமன் திடீரென்று பிடிக்கவில்லை என்று கூறினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த செவிலியர்பெண் கடலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில், ஜெயராமன் தன்னை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அதற்கு உடந்தையாக அவரது தந்தை சுந்தரமூர்த்தி, தாய் ராஜேஸ்வரி, மகள் ஜெய ஸ்ரீ ஆகியோர் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். அதன் பேரில் 4 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூரில் பெண் செவிலியரை திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஒரே நாளில் 130 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது குறிப்பிடத் தக்கதாகும்.
- சிதம்ப ரத்தில் அதிகபட்சமாக 15.3 சென்டிமீட்டர் மழை அளவு பதிவானது குறிப்பிடத்தக்கதாகும்.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி முதல் இன்று காலை 8 மணி வரை ஒரே நாளில் 130 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது குறிப்பிடத் தக்கதாகும். இதில் சிதம்ப ரத்தில் அதிகபட்சமாக 15.3 சென்டிமீட்டர் மழை அளவு பதிவானது குறிப்பிடத்த க்கதாகும். கடலூர் மாவட்டத்தில் மழை அளவு மில்லி மீட்டர் அளவில் பதிவாகியுள்ளது பின்வருமாறு:-
சிதம்பரம்-153.8, சேத்தியத்தோப்பு- 128.6, அண்ணாமலைநகர்-119, பரங்கிப் பேட்டை115.8, கே.எம்.கோயில்-115, லால்பேட்டை-111, புவன கிரி-105, ஸ்ரீமுஷ்ணம்- 56.2, பெல்லாந்துறை-55.2, கடலூர்-52.6, கொத்த வாச்சேரி- 35.0, ஆட்சியர் அலுவலகம்-32.6, விருத்தா சலம்-32.0, எம்.மாத்தூர்-28.0, குப்பநத்தம்-27.6, குறிஞ்சிப்பாடி- 27.0, SRC குடிதாங்கி - 25.0, வேப்பூர்- 16.0, காட்டுமயிலூர்- 14.0, கீழ்செருவாய்- 13.0, பண்ருட்டி- 12.0, வானமா தேவி- 11.0, தொழுதூர்- 9.0, வடக்குத்து-8.0, லக்கூர்- 7.1மொத்தம் - 1309.50 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது.
- தீபாவளி பண்டிகை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் துணிகளை வாங்கி சென்றனர்.
- ரூ.30 கோடியில் கே.வி. டெக்ஸ் கிளை தொடங்க அடிக்கல் நாட்டப்பட்டது.
கடலூர்:
கடலூர் - சிதம்பரம் சாலையில் பிரபல துணிக்கடையான கே. வி. டெக்ஸ் உள்ளது. இந்த கடையில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பொது–மக்கள் துணிகளை வாங்கி சென்றனர். இதன் காரணமாக இந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வகையில் கூட்டம் அலைமோதியது. இதனால் கடலூர், சிதம்பரம் சாலையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இந்த நிலையில் நேற்று காலை கடலூர், விழுப்புரம், புதுவை மற்றும் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கே.வி.டெக்ஸில் வருமான வரித்துறை அதிகாரிகள் சுமார் 15-க்கும் மேற்பட்டோர் அதிரடியாக சோதனை செய்தனர். இதனையடுத்து கே.வி. டெக்ஸ் நிர்வாகம் ஏதேனும் வரி ஏய்ப்பு செய்துள்ளார்களா? என்பது குறித்து தீவிரமாக விசாரணை செய்தனர். மேலும் கணக்குகளை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வு காலை வரை நீடித்தது.
இதனைத் தொடர்ந்து இன்று 2-வது நாளாக கே.வி.டெக்சில் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். புதுவை, கடலூரில் உள்ள கே.வி. டெக்ஸ் நிறுவனங்களில் இந்த சோதனை நடந்தது. கடலூர் ரெயில் நிலையம் அருகே உள்ள கே.வி. டெக்சின் மற்றொரு கடையிலும் சோதனை நடந்தது. இதனால் இன்றும் பொது மக்கள் யாரும் கடைகளுக்குள் அனுமதிக்கப்படவில்லை. மேலும் கே.வி. டெக்ஸ் உரிமையாளர்களான கண்ணையன், வெங்கடேசன் ஆகியோர் வீடுகளிலும் இன்று 2-வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது.
இந்த சோதனையின் போது முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. சென்னை கேளம் பாக்கத்தில் ரூ.30 கோடியில் கே.வி. டெக்ஸ் கிளை தொடங்க அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த தகவல் வருமான வரித்துறைக்கு தெரிய வரவே கே.வி. டெக்ஸ் நிறுவனத்தினர் வரி ஏய்ப்பு செய்துள்ளார்களா? என்ற சந்தேகத்தின் பேரில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இதேபோன்று விழுப் புரம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள வணிக வளாகத்தில் இன்று 2-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
- காந்திநகர் மணி முத்தாற்றங்கரையிலுள்ள முத்துமாரியம்மன் கோவில் உள்ளது.
- மர்ம நபர்கள் அம்மன் சிலை கழுத்திலிருந்து 6 கிராம் தாலி, 3000 ரூபாய் பணத்தை திருடிச் சென்றனர்.
கடலூர்:
விருத்தாசலம் நகராட்சிக்குட்பட்ட காந்திநகர் மணி முத்தாற்றங்கரையிலுள்ள முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று இரவு கோயில் பூசாரி வழக்கம் போல் பூஜை முடித்து விட்டு கோவிலை பூட்டிச் சென்றுள்ளார். இன்று காலை, கோயில் பூசாரி தனவேல் கோயிலுக்கு வந்து பார்த்த போது கோயில் கதவு பூட்டை உடைத்து, நேற்று இரவு மர்ம நபர்கள் அம்மன் சிலை கழுத்திலிருந்து 6 கிராம் தாலி, 3000 ரூபாய் பணத்தை திருடிச் சென்றனர்.
இதுகுறித்து கோயில் உண்டியல் மற்றும் இரும்பு கம்பி கோயில் எதிரே உள்ள மணிமுத்தாற்றங்கரையில் கிடந்துள்ளது. இதனையடுத்து, விருத்தாச்சலம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் அங்கு வந்த குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இத்திருட்டு சம்பத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்த படி ஆஸ்பத்திரிக்கு சென்றார்.
- நரசிம்ம ஜோதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தை அடுத்த மூக்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னபையன் மனைவி சாரதாம்பாள் (வயது 65). இவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் தனது மகன் அரவிந்தனுடன் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்த படி ஆஸ்பத்திரிக்கு சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார்.
இதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி சாரதாம்பாள் இறந்தார். இது குறித்து சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்ம ஜோதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.






