என் மலர்tooltip icon

    கடலூர்

    • அருணா கடலூரில் தனியார் கல்லூரி ஒன்றில் 3-ம் ஆண்டு பி.ஏ. தமிழ்படித்து வருகிறார்.
    • எங்கும் கிடைக்காததால் பாபுபண்ருட்டி போலீசில் புகார் செய்தார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகை அணைக்கட்டு தெரு சேர்ந்தவர் பாபு கட்டிட தொழிலாளி.இவருக்கு மனைவி,ஒரு மகன், ஒரு மகள்உள்ளனர். இவரது மகள்அருணா (வயது 19). இவர் கடலூரில்த னியார் கல்லூரி ஒன்றில் 3-ம் ஆண்டு பி.ஏ. தமிழ்படித்து வருகிறார். நேற்று காலை வீட்டில் இருந்தவர் திடீரென்று காணாமல்போய்விட்டார். இவரை பலஇடங்களில்தேடிஎங்கும்கிடைக்காததால் பாபுபண்ருட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார்(பொறுப்பு), சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா ஆகியோர் வழக்கு பதிவு செய்துகாணாமல் போன கல்லூரி மாணவிஅருணாவை வலைவீசி தேடுகின்றனர்.

    • கிருத்திகா கலைக் கல்லூரியில் பி. காம் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
    • திருச்செந்தூர் நோக்கி சென்ற விரைவு ெரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

    கடலூர்:

    சிதம்பரம் வல்லம்படுகை ெரயில்வே நிலையம் அருகில் கணேசமூர்த்தி மகள் கிருத்திகா (வயது 19) இவர் கடலூர் கலைக் கல்லூரியில் பி. காம் 3-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று கிருத்திகா கல்லூரிக்கு சென்று விட்டு பின்னர் சிதம்பரத்தில் உள்ள கம்ப்யூட்டர் பயிற்சி நிலையத்திற்கும் சென்று விட்டு இரவு வீட்டிற்கு திரும்பி உள்ளார்.

    அப்போது வல்ல ம்படுகை -மயிலாடுதுறை ெரயில் நிலையத்திற்கு உட்பட்ட ெரயில் நிலையத்தில் சென்னையில் இருந்து திருச்செந்தூர் நோக்கி விரைவு ரயில் ஒன்று வந்தது. இந்நிலையில் கிருத்திகா வீட்டின் பின்புறம் உள்ள ெரயில் நிலையத்திற்கு வந்து திருச்செந்தூர் நோக்கி சென்ற விரைவு ெரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து இது குறித்து மயிலாடுதுறை ெரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்த மயிலாடுதுறை ெரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிருத்திகா உடலை மீட்டு மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக சேர்த்தனர். மேலும் இதுகுறித்து ெரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மருதத்தூர் கிராமத்தில் கடந்த 50 ஆண்டு காலமாக வசிக்கின்றனர்.
    • உடும்புகள் அதிகம் இரவு நேரத்தில் நடமாடுகின்றன.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே மருதத்தூர் கிராமத்தில் கடந்த 50 ஆண்டு காலமாக 1வது வார்டில் வசிக்கும் அப்பகுதி மக்கள் எங்கள் பகுதியில் சாலை வசதி இல்லாமல் வசித்து வருவதாகவும் அப்பகுதியில் தெரு விளக்குகள் இது இவரை போட்டு தரவில்லை என புகார் எழுந்தது. இது தவிர சாலையோரம் உள்ள பகுதிகளில் பாம்புகள் , உடும்புகள் அதிகம் இரவு நேரத்தில் நடமாடுவதால் மிகுந்த அச்சத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கிறார்கள்.

    சமீபத்தில் அத்த தெருவில் வசித்த ஒரு சிறுவனுக்கு பாம்பு கடித்து மிகவும் உயிருக்கு போராடி காப்பாற்றினோம். எனவே இது சம்பந்தமாக சாலை வசதி தேவை எனக் கூறி பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் ஊராட்சி நிர்வாகம் இதுகுறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. என கூறி 1வது வார்டில் சாலை வசதி, குடிநீர் வசதி, தெரு விளக்கு தராத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பள்ளி சிறுவர்கள் உட்பட 50-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    அங்கு வசிக்கும் மக்கள் கூறுகையில் எங்களுக்கு மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் எங்கள் பகுதியில் சாலை வசதி செய்து தர வேண்டும், தெருவிளக்குகள் அமைத்து தர வேண்டும், குடிநீர் வசதி செய்து தர வேண்டும் இனியும் செய்து தர தாமதித்தால் விரைவில் திட்டக்குடி, விருத்தாச்சலம் மாநில சாலையில் மக்கள் ஒன்று திரண்டு நாங்கள்சாலை மறியலில் ஈடுபடுவோம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். 

    • 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விளைநிலங்களில் தண்ணீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்பட்டது.
    • மாவட்டம் முழுவதும் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடலூர்:

    வடகிழக்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வருவதால் கடலூர் மாவட்டம் சிதம்பரம், குமராட்சி, கீரப்பாளையம், குறிஞ்சிப்பாடி ,குள்ளஞ்சாவடி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விளைநிலங்களில் தண்ணீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்பட்டது. தற்போது தொடர் மழை பெய்து வருவதால் பெரும்பாலான விளைநிலங்களில் தண்ணீர் வடியாமல் பயிர்கள் அழுகி வரும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    நேற்று கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் புவனகிரி சேத்தியாத்தோப்பு காட்டுமன்னார்கோவில் பரங்கிப்பேட்டை குறிஞ்சிப்பாடி கடலூர் தொழுதூர் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதனை தொடர்ந்து நேற்று தொடர் மழை காரணமாக ஒரு குடிசை வீடும் மற்றும் 4 கால்நடைகளும் இறந்துள்ளன இது மட்டும் இன்றி மாவட்டம் முழுவதும் முக்கியசாலைகள் அனைத்தும் பெரிய அளவிலான பள்ளம் ஏற்பட்டு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது இந்த நிலையில் வங்கக்கடலில் வருகிற 9 -ந் தேதி உருவாக உள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதிகாற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    எனவே கடலூர் மாவட்டம் முழுவதும் தாழ்வான பகுதிகளில் தற்போது தண்ணீரை வெளியேற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மாவட்டம் முழுவதும் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதோடு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றது. மேலும் ஏரிகள் நிரம்பி உள்ள நிலையில் தொடர் மழை பெய்தால் தண்ணீர் வெளியேற்றும் நடவடிக்கை தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    கடலூர் மாவட்டத்தில் மழை அளவு மில்லி மீட்டர் அளவில் பின்வருமாறு:- புவனகிரி - 27.0, சேத்தியாதோப்பு- 20.4, அண்ணாமலைநகர் - 16.0, கீழ்செருவாய் - 13.0, காட்டுமன்னார்கோயில் - 12.0,பெல்லாந்துறை - 9.2, சிதம்பரம் - 7.0, லால்பேட்டை - 6.0, பரங்கிப்பேட்டை - 5.6, . குறிஞ்சிப்பாடி - 5.0, தொழுதூர் - 4.0, கொத்தவாச்சேரி - 3.0, ஸ்ரீமுஷ்ணம் - 2.1 , கலெக்டர் அலுவலகம் - 0.8, கடலூர் - 0.7 மொத்தம் - 131.80 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. 

    • போதை பொருட்கள் விற்றதாக 9 பெண் உள்பட 40 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
    • பாண்டியன் தோட்டத்தில் கஞ்சா பதுக்கி விற்பனை செய்தது தெரிய வந்தது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் கஞ்சா, ேபாைத பொருட்கள் விற்பவர்களை கைது செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். அதன்படி நேற்று முன்தினம் நடந்த அதிரடி சோதனையில் குட்கா மற்றும் போதை பொருட்கள் விற்றதாக 9 பெண் உள்பட 40 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

    எனினும் சிதம்பரம் பரங்கிபேட்டை பகுதியில் கஞ்சா பதுக்கி விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது பரங்கிப்பேட்டை பகுதியை சேர்ந்த பாண்டியன் என்பவர் தனது வீட்டு தோட்டத்தில் கஞ்சா பதுக்கி விற்பனை செய்தது தெரிய வந்தது. அதனை தொடர்ந்து பாண்டியனை கைது செய்தனர். அவரிடம் இருந்து 1500 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
    • யார் ஈடுபட்டாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சக்தி கணேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா பொருட்கள் பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கையாக தொடர்ந்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வப்போது கடைகள் மற்றும் சாலை ஓரங்களில் விற்பனை செய்யப்படும் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கடலூர் மாவட்டத்திற்குட்பட்ட கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாச்சலம், திட்டக்குடி, சேத்தியாத்தோப்பு, சிதம்பரம் ஆகிய உட்கோட்டத்தில் போலீசார் திடீரென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது நெல்லிக்குப்பம், கடலூர் புதுநகர், முதுநகர், விருத்தாச்சலம் பகுதியில் விற்பனை செய்யப்பட்ட கஞ்சா மற்றும் மாவட்ட முழுவதும் விற்பனை செய்யப்பட்ட தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் ஒரே நாளில் மாவட்ட முழுவதும் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதாக 9 பெண்கள் உட்பட 40 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் இவர்களிடம் இருந்து 30 ஆயிரம் மதிப்பிலான கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல் செய்தனர். மேலும் மாவட்டம் முழுவதும் இது போன்ற நடவடிக்கையில் யார் ஈடுபட்டாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சக்தி கணேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • அப்போது கோழிப்பண்ணையில் இருந்த 33 மின்விசிறிகள், மின் மோட்டார்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
    • இது குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் அருகே ரெட்டிச்சாவடி பெரிய காட்டு பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமதாஸ் (வயது 68). இவருக்கு அதே பகுதியில் கோழி பண்ணை உள்ளது. இந்த கோழிப்பண்ணை கடந்த 6 மாதமாக பூட்டி இருந்தது. நேற்று அதன் உரிமையாளர் ராமதாஸ் நேரில் சென்று பார்த்த போது அதிர்ச்சி அடைந்தார். அப்போது கோழிப்பண்ணையில் இருந்த 33 மின்விசிறிகள், மின் மோட்டார்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

    இதன் மதிப்பு சுமார் ஒரு லட்சம் ஆகும். இதுகுறித்து ராமதாஸ் ரெட்டிச்சாவடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். இது குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • பண்ருட்டி கெடிலம் ஆறு,கண்டரக் கோட்டை தென்பெண்ணை ஆறுஆகிய இடங்களில்நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    • தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை செய்து திருப்பி அனுப்பி வைத்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் கடந்த மூன்று நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆறு ஏரி குளம் ஆகிய இடங்களில்நீர் நிரம்பி உள்ளது. பண்ருட்டி கெடிலம் ஆறு,கண்டரக் கோட்டை தென்பெண்ணை ஆறுஆகிய இடங்களில்நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இதனைத் தொடர்ந்து போலீசார் ஆறு, குளம்,ஏரிகளில் குளிக்க கூடாது என்று தடை விதித்துள்ளனர் கண்டரக்கோட்டை தென்பெண்ணை ஆற்று பகுதியில் குளிப்பதற்காக வந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்களை புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் நந்தகுமார், பயிற்சிசப்.இன்ஸ்பெக்டர் ஜெயந்தி மற்றும் போலீசார்தீவிர ரோந்து பணியில்ஈடுபட்டு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை செய்து திருப்பி அனுப்பி வைத்தனர்.

    • சுந்தரமூர்த்திக்கு தனது 16 வயது மகளை மீனா திருமணம் செய்துவைத்துள்ளார்.
    • குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு பண்ருட்டி மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினம் சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் சுபாஷ். இவரது மனைவி மீனா. இவர்களுக்கு 16 வயதில் மகள் உள்ளார். பண்ருட்டி அருகே கவரப்பட்டு ஹவுசிங் போர்டு சுந்தரமூர்த்தி. இவருக்கும்,மீனாவுக்கும் வியாபாரம் தொடர்பாக பழக்கம் ஏற்பட்டது. எனவே சுந்தரமூர்த்திக்கு தனது 16 வயது மகளை மீனா திருமணம் செய்துவைத்துள்ளார். இது பற்றி சமூக நலத்துறை அலுவலர்களுக்கு தகவல் கிடைத்தது.

    இதனை தொடர்ந்து சமூக நலத்துறை சார்பில் குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு பண்ருட்டி மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. ஊர்நல அலுவலர் ராணி கொடுத்த புகாரின் பேரில் பண்ருட்டி மகளிர் போலீசார் மாமியார் மீனா, மருமகன் சுந்தரமூர்த்திஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமி சுபஸ்ரீ மகளிர் காப்பகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டார்.  

    • கடந்த2 மாதங்களுக்கு மேலாக அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளனர்.
    • சாலையோரம் பாதுகா ப்புக்கு உபகரணங்கள் வைக்கவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கடலூர்:

    திட்டக்குடி அருகே பெருமுலை கிராமத்து செல்லும் சாலையோரம் சாலை விரிவாக்க பணிக்காக சுமார் 1 கிலோமீட்டர் தூரம் தோண்டப்பட்ட பள்ளம் கடந்த2 மாதங்களுக்கு மேலாக அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளனர். பள்ளத்தில் ஏதும் ஜல்லி கொட்டி மூடாமல் பள்ளம் தோன்றிய நிலையில் அப்படியே உள்ளதால் அவ்வழியாக சிறுமுலை, பெருமுலை, புலிவலம், கீரனூர், வேப்பூர் வரை செல்லும் அனைத்து பஸ்களும் அவ்வழியே செல்கிறது.

    மேலும் அன்றாட தேவைக்காக அருகிலுள்ள திட்டக்குடி நகரத்திற்கு சிறுகுறு விவசாயிகள், வணிகர்கள், பொதுமக்கள், கல்லூரி மாணவ மாணவிகள் ஆகியோர் வருகை தருகின்றனர். இதில் சாலை ஓரம் பள்ளம் தோண்ட ப்பட்ட நிலையில் எந்த பாதுகாப்பும் வைக்காமல் தோண்டப்பட்ட நிலையில் கிடப்பதால் விபத்துக்கள் அன்றாடம் பள்ளத்தில் சக்கர வாகனங்கள் எதிர்பாராத விதமாக விழுந்து சிக்கிக்கொள்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறைஅதிகாரிகள் சாலைபணியை விரைந்து முடிக்கவும் சாலையோரம் பாதுகா ப்புக்கு உபகரணங்கள் வைக்கவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து ள்ளனர்.

    • விஷ்வா (வயது 24). என்ஜினீயரிங் முடித்து வீட்டில் உள்ளார்.
    • தனது மகனை உறவினர்கள் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார்.

    கடலூர் :

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் முத்துமாணிக்கம் நாடார் தெருவை சேர்ந்தவர் சேகர். அவரது மகன் விஷ்வா (வயது 24). என்ஜினீயரிங் முடித்து வீட்டில் உள்ளார். நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் நண்பர்களுடன் வெளியே சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த சேகர் தனது மகனை உறவினர்கள் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். எங்கு தேடியும் விஷ்வா கிடைக்கவில்லை. இதுகுறித்து சிதம்பரம் டவுன் போலீசில் சேகர் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விஷ்வா என்ன ஆனார் எங்கு சென்றார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அலுவலக சுற்றுச்சுவர் கட்டப்பட்டதால் பொதுமக்கள் பாதிப்படைந்து உள்ளதாக புகார் அளித்தார்‌.
    • சக்தி தலைமையில் போலீசார் மற்றும் பொதுமக்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்‌.

    கடலூர்:

    கடலூர் அருகே கிழக்கு ராமாபுரத்தில் ஊராட்சி அலுவலகத்தில் சுற்றுச்சுவர் இருந்து வருகின்றது. அதே பகுதியை சேர்ந்த ஒரு நபர் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு பொது வழியாக இருந்த இடத்தில் அலுவலக சுற்றுச்சுவர் கட்டப்பட்டதால் பொதுமக்கள் பாதிப்படைந்து உள்ளதாக புகார் அளித்தார்‌. அதன் பேரில் இன்று காலை வட்டார வளர்ச்சி அலுவலர் சக்தி தலைமையில் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். மேலும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். இத்தகவல் அறிந்த ஊர் பொதுமக்கள் பெருமளவில் அங்கு திரண்டனர். பின்னர் பல ஆண்டுகளாக ஊராட்சி அலுவலகம் சுற்றி சுற்றுச்சுவர் இருந்து வந்த நிலையில் இடிக்க அனுமதிக்க மாட்டோம் என ஊர் பொதுமக்கள் தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் சக்தி தலைமையில் போலீசார் மற்றும் பொதுமக்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்‌. அப்போது சுற்றுச்சுவர் இடிக்காமல் அதற்கு மாறாக மாற்று வழி ஏற்படுத்துவதன் மூலம் அனைவரும் எளிமையாக சென்று வரலாம் என பொதுமக்கள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அதிகாரிகள் மாற்று வழி மூலம் செல்வதற்கு அதிகாரிகள் தற்போது அந்த இடத்தை அளவீடு செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    ×