கடலூர் அருகே கோழிப்பண்ணையில் துணிகர திருட்டு

அப்போது கோழிப்பண்ணையில் இருந்த 33 மின்விசிறிகள், மின் மோட்டார்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் அருகே  கோழிப்பண்ணையில்  துணிகர திருட்டு
Published on

கடலூர்:

கடலூர் அருகே ரெட்டிச்சாவடி பெரிய காட்டு பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமதாஸ் (வயது 68). இவருக்கு அதே பகுதியில் கோழி பண்ணை உள்ளது. இந்த கோழிப்பண்ணை கடந்த 6 மாதமாக பூட்டி இருந்தது. நேற்று அதன் உரிமையாளர் ராமதாஸ் நேரில் சென்று பார்த்த போது அதிர்ச்சி அடைந்தார். அப்போது கோழிப்பண்ணையில் இருந்த 33 மின்விசிறிகள், மின் மோட்டார்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

இதன் மதிப்பு சுமார் ஒரு லட்சம் ஆகும். இதுகுறித்து ராமதாஸ் ரெட்டிச்சாவடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். இது குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com