என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொடர் மழை: பண்ருட்டி பகுதியில் ஆறு, குளம், ஏரிகளில் குளிக்க தடை
    X

    வெள்ளப்பெருக்கு காரணமாக ஆறுகளில் குளிக்க கூடாது என்று போலீசார் எச்சரிக்கை போர்டுஅமைத்துள்ளதை படத்தில் காணலாம்.

    தொடர் மழை: பண்ருட்டி பகுதியில் ஆறு, குளம், ஏரிகளில் குளிக்க தடை

    • பண்ருட்டி கெடிலம் ஆறு,கண்டரக் கோட்டை தென்பெண்ணை ஆறுஆகிய இடங்களில்நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    • தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை செய்து திருப்பி அனுப்பி வைத்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் கடந்த மூன்று நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆறு ஏரி குளம் ஆகிய இடங்களில்நீர் நிரம்பி உள்ளது. பண்ருட்டி கெடிலம் ஆறு,கண்டரக் கோட்டை தென்பெண்ணை ஆறுஆகிய இடங்களில்நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இதனைத் தொடர்ந்து போலீசார் ஆறு, குளம்,ஏரிகளில் குளிக்க கூடாது என்று தடை விதித்துள்ளனர் கண்டரக்கோட்டை தென்பெண்ணை ஆற்று பகுதியில் குளிப்பதற்காக வந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்களை புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் நந்தகுமார், பயிற்சிசப்.இன்ஸ்பெக்டர் ஜெயந்தி மற்றும் போலீசார்தீவிர ரோந்து பணியில்ஈடுபட்டு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை செய்து திருப்பி அனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×