என் மலர்
கடலூர்
- காளியம்மன் கோவில் அருகில் சென்று கொண்டிருந்தபோது திடீரென தவறி கீழே விழுந்தார்.
- மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த ஆ.நத்தம் கிராமத்தை சேர்ந்தவர்சண்முகம் (52). இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் பண்ருட்டி தட்டாஞ்சாவடி காளியம்மன் கோவில் அருகில் சென்று கொண்டிருந்தபோது திடீரென தவறி கீழே விழுந்தார். இதனால் படுகாயம் அடைந்த இவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர் மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்சி கிச்சை பலனிக்காமல் இன்று பரிதாபமாக உயிர் இழந்தார். இது குறித்து பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பு நந்தகுமார் சப்.இன்ஸ்பெக்டர் சரண்யா ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணைநடத்தி வருகின்றனர்.
- வி.சி.க. பிரமுகர் செல்லப்பன், ஜமாலுதீன், விஜயபாஸ்கர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மற்றவர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.
- கடத்தலுக்கு பயன்படுத்திய காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சிதம்பரம்:
தஞ்சை மதினா வடக்கு தெருவை சேர்ந்தவர் காஜாமைதீன் (வயது 52). சென்னையில் உள்ளார். இவர் சிதம்பரம் வடக்கு ரதவீதி கே.கே.சி. தெருவில் வசித்து வரும் ஜமாலுதீன் என்பவருக்கு சொந்தமான வீட்டை விலைக்கு வாங்கினார்.
அந்த வீட்டை அவர் காஜாமைதீனுக்கு பத்திரம் பதிவு செய்து கொடுத்தார். ஆனால், அந்த வீட்டை ஜமாலுதீன் ஒப்படைக்கவில்லை.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜமாலுதீன் சென்னைக்கு சென்று காஜாமைதீனிடம் தனக்கு தருமாறு கேட்டார். ஆனால், காஜாமைதீன் மறுத்து விட்டார்.
எனவே, ஆத்திரம் அடைந்த ஜமாலுதீன், காஜாமைதீனை காரில் கடத்தி வந்து சிதம்பரம் வண்டிகேட் பகுதியில் உள்ள லாட்ஜில் அடைத்தனர்.
இது தொடர்பாக காஜாமைதீன் செல்போன் மூலம் தனது மனைவிக்கு பேசியுள்ளார். அவர் ஆன்லைன் மூலம் போலீசுக்கு புகார் செய்தார்.
அதன் பேரில் சென்னை நீலாங்கரை போலீசார் வழக்கு பதிந்தனர். இந்த வழக்கு சிதம்பரம் பகுதிக்குட்பட்டதால் அங்கு மாற்றப்பட்டது.
இது தொடர்பாக ஜமாலுதீன், ரபீக், சிதம்பரம் தொகுதி பாராளுமன்ற வி.சி.க. செயலாளர் செல்லப்பன், விஜயபாஸ்கர், செந்தில், நடனம், நடராஜ், ரவீந்திரன் உள்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இவர்களில் வி.சி.க. பிரமுகர் செல்லப்பன், ஜமாலுதீன், விஜயபாஸ்கர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மற்றவர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.
இவர்களிடம் விசாரணை நடத்தியதில் காஜாமைதீனிடம் விற்கப்பட்ட வீட்டை புதுவையை சேர்ந்தவருக்கு ரூ.2 கோடிக்கு விலை பேசியது தெரிய வந்தது.
கடத்தலுக்கு பயன்படுத்திய காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- மோசமான வானிலையையொட்டி கடலூர் மாவட்டத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகள் கடலுக்கு செல்லவில்லை.
- கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது. படகுகள் அனைத்தும் கரைகளில் ஓய்வு எடுத்தன.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் தாழங்குடா, தேவனாம்பட்டினம், நல்லவாடு, துறைமுகம், தைக்கால் தோனித்துறை, ராசா பேட்டை, அக்கரைகோரி உள்ளிட்ட 49 மீனவ கிராமங்கள் உள்ளன.
இங்கு சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீன்பிடி தொழில் மற்றும் அதனை சார்ந்துள்ள தொழிலை நம்பியுள்ளனர். இதற்காக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசை படகு, பைபர் படகு, கட்டுமரங்கள் ஆகியன உள்ளது.
இவர்கள் நாள்தோறும் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகிறார்கள். கடந்த சில நாட்களாக கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதனிடையே இன்று (9-ந்தேதி) வங்காள வரிகுடா கடல் பகுதியில் மோசமான வானிலை நிலவுவதால் 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைகாற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.
மேலும் ஆழ்கடல் பகுதிகளில் தங்கி மீன் பிடிக்கும் மீனவர்கள் உடனே துறைமுக பகுதியில் கரை திரும்ப வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மோசமான வானிலையையொட்டி கடலூர் மாவட்டத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது. படகுகள் அனைத்தும் கரைகளில் ஓய்வு எடுத்தன.
கடலூர் தேவனாம்பட்டினம், தாழங்குடா, சுபஉப்பலவாடி ஆகிய பகுதிகளில் இன்று காலை கடல் சீற்றம் அதிகமாக இருந்தது. இதனால் கடற்கரையோரம் மணல் அரிப்பு ஏற்பட்டது. இதனையறிந்த மீனவர்கள் படகுகளை பாதுகாப்பான இடத்துக்கு இழுத்து சென்றனர்.
- சிறுவன் உயிரிழந்த சம்பவத்தைத் தொடந்து உறவினர்கள் சாலை மறியல் ஈடுபட்டனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருத்தாசலம்:
விருத்தாசலத்தில் ஓராண்டாக சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பேருந்து நிழற்குடைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கிய தண்ணீரில் மூழ்கி 10 வயது சிறுவன் உயிரிழந்தான்.
சிறுவன் உயிரிழந்த சம்பவத்தைத் தொடந்து உறவினர்கள் சாலை மறியல் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, சிறுவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இதனை பார்த்த அருண்குமாரின் தாய் இளவரசி தடுக்க முயன்ற போது அவரையும் அடித்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
- அருண்குமார், இளவரசி மற்றும் குணசங்கர் ஆகிய 3 பேரும் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
கடலூர்:
கடலூர் பெரியகாரைக்காடு பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 26). இவரது பெரியப்பா காசிநாதனுக்கும், அதே பகுதியை சேர்ந்த ரவிக்குமார் என்பவருக்கும் முன் விரோத தகராறு இருந்து வந்தது. சம்பவத்தன்று அருண்குமாரை , குணசங்கர், ரவிக்குமார் மற்றும் ஒரு சிலர் சேர்ந்து தாக்கினார்கள். அப்போது இதனை பார்த்த அருண்குமாரின் தாய் இளவரசி தடுக்க முயன்ற போது அவரையும் அடித்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த தகராறில் குணசங்கர் என்பவரை தாக்கியதால் அவருக்கும் காயம் ஏற்பட்டது.
இதன் காரணமாக அருண்குமார், இளவரசி மற்றும் குணசங்கர் ஆகிய 3 பேரும் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து அருண்குமார் கொடுத்த புகாரின் பேரில் குணசங்கர், ரவிக்குமார் உள்பட 6 பேர் மீதும், குணசங்கர் கொடுத்த புகாரின் பேரில் அருண்குமார் உள்பட 4 பேர் மீதும் என 10 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சம்பவத்தன்று பெய்த மழையால் சக்திவேல் வீட்டின் மழைநீர் சுப்பிரமணியன் வீட்டுசுவரின் மீது விழுந்துள்ளது.
- இரும்பு பைப்பால் கடுமையாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
கடலூர்:
பண்ருட்டி அருகே சிறுதொண்டமாதேவி கிராமத்தை சேர்ந்தவர்கள் சுப்பிரமணியன்(வயது62). சக்திவேல் (65). இவர்கள் இருவரும்பக்கத்து பக்கத்துவீட்டுக்காரர்கள். சம்பவத்தன்று பெய்த மழையால் சக்திவேல் வீட்டின் மழைநீர்சுப்பிரமணியன் வீட்டுசுவரின் மீதுவிழுந்துள்ளது. இதனைஅவர்தட்டிக்கேட்டு தண்ணீரைதிருப்பிவிடசொல்லியுள்ளார். ஆத்திரமடைந்த சக்திவேல், அவரதுமகன்கள்வினோத், விக்னேஷ், மருமகள் பிரியங்கா ஆகியோர் சேர்ந்துசுப்பிரமணியன் மற்றும்அவரது மகன்களை அரிவாளால் வெட்டி இரும்பு பைப்பால் கடுமையாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
படுகாயம் அடைந்த சுப்பிரமணியன் அவரது மகன் கடலூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்குதீவிர சிகிச்சைஅளிக்கப்பட்டுவருகிறது. இது தொடர்பாகசுப்பிரமணியன் கொடுத்தபுகாரின்பேரில் காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிவுசெய்து சக்திவேல், அவரது மகன்கள் வினோத்,விக்னேஷ்,மருமகள் பிரியங்கா ஆகியோரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
- பண்ருட்டியில் போதை பொருட்கள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- ன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப். இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார்சம்பவ இடத்திற்குசென்று சோதனை நடத்தினர்.
கடலூர்:
பண்ருட்டி அருகே சிறுவத்தூர் பகுதியில்அரசு அனுமதியின்றி போதை பொருட்கள் பெட்டி கடையில் வைத்து விற்பனை செய்து வருவதாக புதுப்பேட்டை போலீசாருக்கு தகவல்கிடைத்தது.
இதன் பேரில்இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப். இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார்சம்பவ இடத்திற்குசென்று சோதனை நடத்தினர். அப்போது கடையில் வைத்துஇருந்த 20 பாக்கெட்டு போதை பொருட்களை பறிமுதல்செய்தனர். பின்னர் விற்பனை செய்தசிறுவத்தூர் கிராமத்தைச் சேர்ந்தபரந்தாமன் (37),ராமலிங்கம் (55)ஆகிய இருவரை புதுப்பேட்டைபோலீசார் கைது செய்தனர்.
- யாரும் இல்லாத போது பெட்ரூமில் புடவை துணி யால்தூ க்குபோட்டு தற்கொ லை செய்து கொண்டார்.
- இது பற்றி பண்ருட்டி போலீசில் புகார் தெரிவித்தனர்.
கடலூர்:
பண்ருட்டி ரயில்வே நகரை சேர்ந்தவர் சிவானந்தம் இவரது மகன் தீபன் (25),கூலி தொழிலாளி இவர் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத போது பெட்ரூமில் புடவை துணி யால்தூ க்குபோட்டு தற்கொ லை செய்து கொண்டார். கூலி வேலை க்கு சென்று வீடு திரும்பிய இவரது பெற்றோர்கள் சிவானந்தம்- மலர்மகன் தூக்கில் பிணமாகதொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இது பற்றி பண்ருட்டி போலீசில் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப்- இன்ஸ்பெக்டர்சரண்யா மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றிபண்ருட்டி அரசுஆஸ்பத்திரிக்குபிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
- சுரங்கத்தில் தீ விபத்து ஏற்பட்டதால், அப்பகுதியில் பணிபுரிந்த தொழிலாளிக்கு எவ்வித உயிர் சேதமும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.
- தீவிபத்தில் பல லட்சம் மதிப்பிலான கன்வேயர் பெல்ட் எந்திரம் முற்றிலுமாக எரிந்து சேதம் அடைந்துள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
நெய்வேலி:
நெய்வேலியில் என்.எல்.சி. இந்திய நிறுவனம் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இங்குள்ள திறந்தவெளி நிலக்கரி சுரங்கங்களில் பழுப்பு நிலக்கரி மூலம் மின் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகம் மட்டுமல்லாமல், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.
நேற்று நள்ளிரவில் என்.எல்.சி.யில் உள்ள சுரங்கம் 1 ஏ-வில், நிலக்கரியை சுரங்கத்திலிருந்து வெளியே கொண்டு வரும், கன்வேயர் பெல்ட் எந்திரம், எதிர்பாராத விதமாக ஏற்பட்ட, மின்கசிவால், திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் வான் உயரத்திற்கு தீயானது பரவி, சுரங்கம் முழுவதும் புகைமண்டலமாக மாறி உள்ளது.
சுரங்கத்தில் தீ விபத்து ஏற்பட்டதால், அப்பகுதியில் பணிபுரிந்த தொழிலாளிக்கு எவ்வித உயிர் சேதமும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த என்எல்சி தீயணைப்புத் துறையினர், விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீவிபத்தில் பல லட்சம் மதிப்பிலான கன்வேயர் பெல்ட் எந்திரம் முற்றிலுமாக எரிந்து சேதம் அடைந்துள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
தற்போதுநெய்வேலி முதலாவது சுரங்க விரிவாக்கத்தில், எந்திரம் தீப்பற்றி எரியக்கூடிய வீடியோ வெளியாகி சமூகவலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
- சந்தானம் அன்றாட வாழ்வாதாரத்திற்காக ஆடுகள் வளர்த்து வருகிறார்.
- 12 ஆடுகளை கடித்து குதறிய நாய்கள் அடுத்த கட்டமாக மனிதரை தாக்கவும் வாய்ப்புள்ளது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே சிறுமுலை கிராமத்தில் வசித்து வரும் சந்தானம்( 53) கூலி தொழிலாளி. இவர் அன்றாட வாழ்வாதாரத்திற்காக ஆடுகள் வளர்த்து வருகிறார். இவர் தனது வீட்டிலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு அப்பால் ஒரு கொட்டகை அமைத்து அதில் 15 ஆடுகளை கட்டி வைத்துள்ளார். நேற்று மாலை சுமார் 5 மணி அளவில் நேற்று அப்பகுதியில் உள்ள தெரு நாய்கள் ஆடுகளை கடித்துக் குதறி உள்ளது. இதில் 12 ஆடுகள் இறந்து போனது இறந்து போன ஆடுகள் மீதமுள்ள 3 ஆடுகளை ஒரு மாட்டு வண்டியில் ஏற்றிக்கொண்டு இன்று காலை திட்டக்குடி காவல் நிலையத்திற்கு வந்து புகார் அளித்துள்ளார். இது போன்று அப்பகுதியில் தொடர்ந்து ஆடுகளை தெரு நாய்கள் வெகுவாக வேட்டையாடுவது தொடர் கதையாக உள்ளது.
இது சம்பந்தமாக ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை நேரில் தெரிவித்தும் அவர்கள் கண்டுகொள்ள வில்லை கூறி எட்டடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஒரே நாளில் 12 ஆடுகளை கடித்து குதறிய நாய்கள் அடுத்த கட்டமாக மனிதரை தாக்குவதற்கு முன்பு தெருநாய்களை பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- 12 கால்நடைகள் இறந்த நிலையில், 8 குடிசை வீடுகள் இடிந்து சேதம் அடைந்து உள்ளன.
- பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
கடலூர்:
வடகிழக்கு பருவ மழை தொடங்கியதை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர் கன மழை பெய்து வந்தது. நேற்று கடலூர் மாவ ட்டத்தில் அண்ணாமலை நகர், சிதம்பரம், பரங்கி ப்பேட்டை, வடக்குத்து, கொத்வாச்சேரி, புவனகிரி காட்டுமன்னார்கோவில் லால்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் ஏற்கனவே கன மழை பெய்த காரணத்தினால் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட விளை நிலங்களில் தண்ணீர் சூழ்ந்து பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் தொடர் மழை காரணமாக 12 கால்நடைகள் இறந்த நிலையில், 8 குடிசை வீடுகள் இடிந்து சேதம் அடைந்து உள்ளன.
இதனை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் ஏரிகள் நிரம்பி வந்த நிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும் கடலூர் மாவட்டம் முழுவதும் தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரையும், வீடுகள் பகுதிகளில் சொந்த மழை நீரையும் மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியேற்றும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் மழை அளவு மில்லி மீட்டர் அளவில் பின்வருமாறு-அண்ணாமலைநகர் - 32.0, சிதம்பரம் - 28.8, பரங்கிப்பேட்டை - 28.0, மீ-மாத்தூர் - 2.0, வடகுத்து - 1.0, கொத்தவாச்சேரி - 1.0, புவனகிரி - 1.0, காட்டுமன்னார்கோயில் - 1.0, லால்பேட்டை - 1.0, மொத்தம் - 95.80 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது.
- புதுச்சத்திரம் பகுதியில் ஆயில் சுத்திகரிக்கும் தொழிற்சாலை இருக்கிறது.
- தொழிற்சாலையில் இரும்பு உள்ளிட்ட பொருள்கள் மலை போல் குவிந்து கிடக்கிறது.
கடலூர்:
சிதம்பரம் அருகே புதுச்சத்திரம் பகுதியில் ஆயில் சுத்திகரிக்கும் தொழிற்சாலை இருக்கிறது. இந்த தொழிற்சாலை நீண்ட நாட்களாக செயல்படாமல் பூட்டியே கிடக்கின்றது. இந்நிலையில் பூட்டிக்கிடக்கும் தொழிற்சாலையில் இரும்பு உள்ளிட்ட பொருள்கள் மலை போல் குவிந்து கிடக்கிறது. இந்த இரும்பு பொருட்களை புதுச்சத்திரம் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதியில் உள்ள வர்கள் இங்கு வந்து இரும்பு பொருட்களை திருடி செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.
நேற்று இரவும் இந்த ஆலையில் திருட்டு சம்பவம் தொடர்ந்துள்ளது. இதில் இரும்பு பொருட்களை திருட மர்ம கும்பல் 3 மினி லாரிகளில் சுமார் 700 கிலோ இரும்பு பொருட்களை திருடி செல்ல முற்பட்டனர். இந்த திருட்டு குறித்து புதுச்சத்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்த புதுச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வினதா தலைமையிலான போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது போலீசார் வருவதை கண்டவுடன் மர்மகும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டது. மேலும் போலீசார் சுமார் 20000 மதிப்புள்ள 700 கிலோ இரும்பு பொருட்கள் ஏற்றி இருந்த 3 மினிலாரிகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம கும்பல் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






