என் மலர்tooltip icon

    கடலூர்

    • ரோட்டில் சுற்றித்திரியும் கழுதைகள் சண்டையிட்டு ஓடுவதால் விபத்துக்கள் ஏற்படுகின்றன.
    • பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் அன்றாடம் சாலையில் செல்கின்றனர்.

    கடலூர்; 

    கடலூர் மாவட்டம் திட்ட க்குடியில் விருத்தாச்சலம் மாநில சாலையில் போக்கு வரத்துக்கு இடையூறாக ரோட்டில் சுற்றித்திரியும் கழுதைகள் சண்டையிட்டு ஓடுவதால் விபத்துக்கள் ஏற்படுகின்றன. மேலும் சாலையில் செல்லும் இருசக்கர வாக னங்கள், 4 சக்கர வாகன ங்கள், பாதசாரிகள், பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் அன்றாடம் சாலையில் செல்கின்றனர்.

    திட்டக்குடியில் மண ல்மேடு பகுதியைச் சேர்ந்த கழுதைகள் ரோட்டில் காலை, மாலை, இரவு என அனைத்து நேரங்களிலும் ரோட்டில் சுத்தி திரிவது மட்டு மில்லாமல் ஒன்று க்கொன்று சண்டையிட்டுக் கொண்டு தாறுமாறாக ரோட்டில் ஓடுவதால் இருசக்கர வாகனங்கள் மீது மோதுவதால் அன்றாட விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே திட்டக்குடி காவ ல்து றை மற்றும் நகரா ட்சி நிர்வாகம் திட்டக்கு டியில் கழுதை களை பராமரிக்கும் உரிமையாளர்களை வரவ ழைத்து ரோட்டில் சுத்தி திரியும் கழுதைகளை கட்டிப்போட்டு முறையாக பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்துமாறு வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி ஊர்ந்து செல்கின்றனர்.
    • மழை நீரை அகற்றும் பணியில் கொட்டும் மழையிலும் அதிகாரிகள், ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி மற்றும் சுற்றுப்புற வட்டார கிராமங்களில் நேற்று இரவு தொடங்கி விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் வாகன ஓட்டி கள்கடும் அவதிக்கு உள்ளாகி முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி ஊர்ந்து செல்கின்றனர். பண்ருட்டி கடலூர் ரோடு, சென்னை சாலை, கும்பகோணம் சாலை, காந்தி ரோடு, ராஜாஜி சாலை, பகுதி களில் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    பண்ருட்டி பகுதிகளில் உள்ள ஏரி, ஆறு, குளங்க ளில் நீர் நிரம்பி வழிகி றது. கனமழை காரண மாக வருவாய்த்துறை, நகராட்சி துறை, ஊரக வளர்ச்சித்துறை, காவல்துறை அதிகாரிகள் இரவு முழுவதும் தங்களது அலுவலகங்களில் தங்கி இருந்து மழை பாதிப்புகள் குறித்து தீவிரமாக கண்காணித்து வந்தனர். தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணியில் கொட்டும் மழையிலும் அதிகாரிகள், ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    • தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளானார்கள்.
    • தொடர் மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே இன்று முதல் (11-ந்தேதி) கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

    அதன்படி நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது. விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது. இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களில் தண்ணீர் புகுந்துள்ளது.

    தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளானார்கள். தொடர் மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

    விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி, மரக்காணம், திண்டிவனம், விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளிலும் விடிய விடிய கனமழை நீடித்தது.

    இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. கனமழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

    • 3 மாதத்திற்கு முன்புதான் என்.எல். சி நிறுவனத்தில் நிரந்தர தொழிலாளியாக சேர்ந்துள்ளார்.
    • ரோட்டில் கீழே விழுந்த அரவிந்துக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    கடலூர்:

    நெய்வேலி புதுநகர் 4-வது வட்டம் பஞ்சாப் சாலையில் வசித்தவர் அரவிந்த். இவர் நெய்வேலி என்.எல்.சி. நிறுவனம் 2-வது அனல் மின் நிலைய மனித வளத்துறை பிரிவில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 3 மாதத்திற்கு முன்புதான் என்.எல். சி நிறுவனத்தில் நிரந்தர தொழிலாளியாக சேர்ந்துள்ளார். நேற்று இரவு 10-வது வட்டம் மெயின் ரோட்டில் இருந்து மெயின் பஜாருக்கு தனது மோட்டார் சைக்கிளில் அரவிந்த் சென்று கொண்டிருந்தார். அப்போது தானாகவே ரோட்டில் கீழே விழுந்த அரவிந்துக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    உடனடியாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அரவிந்தை என்.எல்.சி. பொது மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அரவிந்த் இறந்து விட்டதாக கூறினர். இறந்து போன அரவிந்துக்கு மனைவியும், 1 வயதில் பெண் குழந்தையும் உள்ளது. இதுகுறித்து நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • இன்று அதிகாலை முருகையன் தலையில் வெட்டு காயத்துடன் ரத்த வெள்ளத்தில் மயங்கிய நிலையில் இருந்தார்.
    • இரும்பு கடைக்குள் நுழைந்து பொருட்கள் திருட முயற்சி செய்தது குறிப்பிடத்தக்கதாகும்.

    கடலூர்:

    கடலூர் அருகே குமராபுரத்தில் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவில் எதிர்புறத்தில் பழைய இரும்பு பொருட்கள் வாங்கும் கடை உள்ளது. இங்கு குமராபுரம் சேர்ந்த முருகையன் (வயது 59) என்பவர் காவலராக பணிபுரிந்து வந்தார். இன்று அதிகாலை முருகையன் தலையில் வெட்டு காயத்துடன் ரத்த வெள்ளத்தில் மயங்கிய நிலையில் இருந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் நெல்லிக்கு ப்பம் போலீசருக்கு தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து முருகையனை சிகிச்சை க்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் முருகேசன் பலத்த காயம் ஏற்பட்டதால் உயிருக்கு மோசமான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    இந்த நிலையில் நெல்லிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை செய்தனர். இந்த நிலையில் பழைய இரும்பு பொருட்களை மர்ம நபர்கள் யாராவது திருடவந்த போது காவலர் முருகையன் தடுத்த போதுஅங்கிருந்த மண்வெட்டியால் தலையில் வெட்டிவிட்டு தப்பி சென்றார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்கு வெட்டினா ர்களா? என்பதனை குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதே பகுதியில் ஆஞ்சநேயர் கோவில், அம்மன் கோவில் பூட்டை உடைத்து திருட முயற்சி செய்ததும், மேலும் பழைய இரும்பு கடைக்குள் நுழைந்து பொருட்கள் திருட முயற்சி செய்தது குறிப்பி டத்தக்கதாகும்.

    இதனை தொடர்ந்து பழைய இரும்பு பொருள் வாங்கும் கடைக்கு காவலராக முருகையன் இருந்த நிலையில் மர்ம நபர்கள் கொலைவெறியுடன் தலையில் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் கடலூர் , நெல்லிக்குப்பம் பகுதிகளில் பெண்களிடமிருந்து செயின் பறிப்பு மற்றும் கடைக்கு காவலராக பணிபுரிந்து வந்த முருகேசன் என்பவரை மர்ம நபர்கள் வெட்டி சென்ற சம்பவம் கடலூர் மற்றும் நெல்லிக்குப்பம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படு த்தி உள்ளது. 

    • பெண் அதிகாரி தனது இருசக்கர வாகனத்தை ஓரமாக நிறுத்தி 2 பேருக்கு வழி விட்டார்.
    • பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    கடலூர்:

    கடலூர் சாவடியை சேர்ந்த மாவட்ட கூட்டுறவு வங்கியில் பணிபுரிந்து வந்த பெண் அதிகாரி நேற்று இரவு தனது பணியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் தனது வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது பெண் அதிகாரியை 2 பேர் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்ததாக தெரிகிறது. இதனால் சந்தேகம் அடைந்த பெண் அதிகாரி தனது இருசக்கர வாகனத்தை ஓரமாக நிறுத்தி 2 பேருக்கு வழி விட்டார். அப்போது பின்னால் வந்த இருசக்கர வாகனத்தில் இருந்த 2 பேர் சிறிது தூரம் சென்று திடீரென்று நின்றனர். பின்னர் பெண் அதிகாரியிடம் ஒரு நபர் மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி வழி மாறி வந்து விட்டோம் என பேச்சை தொடர்ந்து திடீரென்று கழுத்தில் இருந்த 5 பவுன் தாலி சரடை அறுத்து கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பித்து சென்றனர். அதிர்ச்சி அடைந்த பெண் அதிகாரி "திருடன் திருடன்" என கூச்ச லிட்டார். இருந்தபோதிலும் அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பித்து சென்றனர்.

    இது குறித்து தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நேரில் பார்வையிட்டனர். இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் சந்தேக த்தின் பேரில் மோட்டார் சைக்கிள் மற்றும் ஒரு நபரை போலீசார் பிடித்து வந்து விசாரணை செய்து வருகின்றனர். இதேபோல் நெல்லிக்கு ப்பம் மேல்பட்டாம்பாக்கம் சேர்ந்த ரஞ்சினி என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இதே போல் 2 மர்ம வாலிபர்கள் பொருள் வாங்குவது போல் கடைக்குள் நுழைந்து ரஞ்சனி வாயை கையால் அழுத்தி, கழுத்தில் இருந்த 5 பவுன் தாலி சரடு பறித்து கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பித்து சென்றனர். இது குறித்து நெல்லி க்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர் மற்றும் நெல்லிக்குப்பம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்கள் வங்கி பெண் அதிகாரி மற்றும் மளிகை கடை நடத்தி வந்த பெண்களிடம் 10 பவுன் தாலி சரடு திருடி சென்றது பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து ஏராளமான நபர்களை வழிமறித்து செல்போன் திருட்டு நடைபெற்று வந்தது. இதனை தொடர்ந்து போலீசார் விசாரணைக்கு பிறகு சுமார் 5 நபர்களை செல்போன் திருடி சென்றதாக கண்டறிந்து கைது செய்தனர். இந்த நிலையில் தற்போது செயின் பறிப்பு கும்பல் தங்களின் கைவரிசை காட்டி வருவதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. 

    • புவனகிரி அருகே நாய் மீது மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலியானார்.
    • இதில் பின்னால் இருந்த வெற்றிச்செல்வி நிலை தடுமாறி சாலையில் விழுந்தார்.

    கடலூர்:

    புவனகிரி அருகே திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் உமா மகே ஸ்வரன். இவரது மனைவி வெற்றிச்செல்வி .(வயது 50) இந்நிலையில் உமா மகேஸ்வரன் மனைவி வெற்றிச்செல்வி உடன் தனது மோட்டார் சைக்கி ளில் புவனகிரி கடைவீதிக்கு சென்றனர். அப்போது தனியார் பெட்ரோல் பங்க் அருகே மோட்டார் சைக்கிள் வந்தபோது சாலையின் குறுக்கே நாய் ஒன்று ஓடியது. இதை எதிர்பாராத உமா மகேஸ்வரன் நாய் மீது மோதினார்.

    இதில் பின்னால் இருந்த வெற்றிச்செல்வி நிலை தடுமாறி சாலையில் விழுந்தார். இதில் தலையில் அடிபட்டு படுகாயம் அடைந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிதம்பரம் ராஜா முத்தையா ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்ந்தனர். மேல்சிகிச்சைக்காக புதுவை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்று இரவு வெற்றிச்செல்வி உயிரிழந்தார். இது குறித்து புவனகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இரும்பு பொருட்களை மர்மகும்பல் திருடி வேனில் கடத்துவதாக புதுச்சத்திரம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
    • முல்லைராஜ், சிவகேசவன் ஆகியோரை மடக்கி பிடித்துகைது செய்தனர்

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே புதுச்சத்திரம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஆயில் ஆலை உள்ளது. இந்த ஆலை வளாகத்தில் இரும்பு பொருட்கள் குவிக்கப்பட்டு உள்ளது. இந்த பொருட்களை பலர் திருடிய வண்ணம் உள்ளது. எனவே ஆலை நிர்வாக காவலாளிகள் கண்காணித்தபடி உள்ளது. எனினும் நேற்றுஆலை வளாகத்தில் உள்ள இரும்பு பொருட்களை மர்மகும்பல் திருடி வேனில் கடத்துவதாக புதுச்சத்திரம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வினதா தலைமையிலான போலீசார் ஆலைக்கு விரைந்தனர்.

    அப்போது ஆண்டார் முள்ளிப்பள்ளம் கிராமத்தை சேர்ந்த ராபர்ட் முல்லைராஜ் தலைைமயில் சிவகேசவன், சங்கர், கர்ணா, சுரேஷ், சிவபாலன், செல்வகுமார் ஆகியோர் ஒரு வேனில் 1,500 இரும்பு பொருட்களை வேனில் ஏற்றி கடத்த முயன்றனர். அப்போது போலீசாரை கண்டதும் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓட முயன்றது. உஷரான போலீசார் ராபர்ட் முல்லைராஜ், சிவகேசவன் ஆகியோரை மடக்கி பிடித்து கைது செய்தனர். தப்பி ஓடிய மற்றவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். இரும்பு பொருட்களை கடத்த முயன்ற வேன் பறிமுதல் செய்யப்பட்டது. 

    • அதே பகுதி சேர்ந்தவர் ஜெயகாந்தன் இவர்கள் இருவர் குடும்பத்திற்கும் முன்விரோதம் காரணமாக தகராறு இருந்து வந்தது.
    • காயமடைந்த நாகம்மாள் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    கடலூர்:

    பண்ருட்டி  அருகே ஏ.பி.குப்பத்தை சேர்ந்தவர் அய்யனார்,அதே பகுதி சேர்ந்தவர் ஜெயகாந்தன் இவர்கள் இருவர் குடும்பத்திற்கும் முன்விரோதம் காரணமாக தகராறு இருந்து வந்தது. நேற்று மீண்டும் இவர்களுக்குள் தகராறுஏற்பட்டது.ஜெயகாந்தன் மற்றும் அவரது மகன்கள் திருவேந்திரன் (30) டிரைவர்,கொளஞ்சியப்பன் (32),ஆகியோர், அய்யனார் மனைவி நாகம்மாள் (50)என்பவரை அசிங்கமாக திட்டி இரும்பு கம்மி, தடியால் தாக்கினார்.

    காயமடைந்த நாகம்மாள் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து புதுப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் இது குறித்து 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து லாரி டிரைவர் திருவேந்திரன் (30)என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காட்டுமன்னார்கோயில் தாத்தா வட்டம் பகுதியை சேர்ந்த செங்கதிர் (வயது 32) என்பவரும் அதே வீட்டிற்கு சென்று தங்கினார்.
    • இதை அருகில் இருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சடைந்து பாட்டியிடம் தெரிவித்தனர்.

    கடலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்த 17 வயது இளம் பெண் தனது பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு மேல்மூங்கிலடி பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கினார். அப்போது இந்தப் பெண்ணின் மாமா முறையான சிதம்பரம் அருகே காட்டுமன்னார்கோயில் தாத்தா வட்டம் பகுதியை சேர்ந்த செங்கதிர் (வயது 32) என்பவரும் அதே வீட்டிற்கு சென்று தங்கினார். இந்நிலையில் வீட்டில் பாட்டி இல்லாத நேரத்தில் தனியாக அந்தப் பெண் இருந்ததே நோட்டமிட்ட செங்கதிர் அந்த பெண்ணிடம் சென்று ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

    இதை அருகில் இருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சடைந்து பாட்டியிடம் தெரிவித்தனர். இது குறித்து பாட்டி சிதம்பரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து செங்கதிரை கைது செய்தனர். மேலும் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தம்பியுடன் நடந்து சென்ற சிறுமியை தூக்கி சென்று பலாத்காரம் செய்ய முயன்ற தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
    • சிறுமி கத்தியதால் சிறுமியை அப்படியே விட்டு ஓடியுள்ளார்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே காட்டாண்டிகுப்பம் வீரன் கோவில் பக்கத்தில் உள்ள ஆவாரங்காடுஅருகே தனது தம்பியுடன் நடந்து வந்த 9 வயது சிறுமியை காட்டனாண்டிகுப்பத்தை சேர்ந்த கூலி தொழிலாளி தனுஷ் சிறுமியின் தம்பியிடம் ரூ. 10 கொடுத்து வீட்டிற்கு போக கூறினார். அதன்பின்னர் அந்த சிறுமியை தூக்கி சென்றுஆவாரம்காட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார்.

    சிறுமி கத்தியதால் சிறுமியை அப்படியே விட்டு ஓடியுள்ளார். இது பற்றிசிறுமி பெற்றோரிடம் கூறியுள்ளார்.சிறுமியின் பெற்றோர் பண்ருட்டி மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.பண்ருட்டி மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வள்ளி இதுகுறித்து போக்சோசட்டத்தின் கீழ்வழக்கு பதிவு செய்து கூலி தொழிலாளி தனுஷை கைது செய்தனர்.

    • பண்ருட்டியில் திருமணமான 1 ஆண்டில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டார்.
    • கடந்த 6-ம் தேதி மேற்படி ராஜேஸ்வரி பூதம்பாடி தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே பேர்பெரியான் குப்பம் மருவன் தெரு வை சேர்ந்தவர்பாலசண்முகம். அவரது மகன் இளங்குமார் (34) என்பவர் பூதம்பாடியைச் சேர்ந்த ராஜேஸ்வரிஎன்பவரை திருமணம் செய்து ஓர் ஆண்டு ஆகிறது. குழந்தை இல்லை. இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்துள்ளது. கடந்த 6-ம் தேதி மேற்படி ராஜேஸ்வரி பூதம்பாடி தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் 7ம் தேதி நெய்வேலியில் நடை பெற்ற தங்கை மகள் மஞ்சள் நீராட்டு விழாவிற்கு செல்ல முடியாமல் மன உளைச்சலில் இருந்து வந்தார்.

    இளங்குமார் நேற்று இரவு வீட்டில் தனியாக இருந்த போது ஃபேன் கொக்கியில் புடவையால் தூக்கு மாட்டி கொண்டு தற்கொலை செய் துகொண்டார் இதுபற்றி தாயார் இளவரசி முத்தாண்டி குப்பம் போலிசில் கொடுத்த புகாரின் பேரில் முத்தாண்டி குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இது குறித்துவழக்கு பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டிஅரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்

    ×