என் மலர்tooltip icon

    கடலூர்

    • பழைய இரும்பு பொருட்கள் கடையில் காவலாளியாக வேலைபார்த்து வந்தார்.
    • சிகிச்சை பலனின்றி இன்று காலை முருகையன் இறந்தார்.

    கடலூர்:

    கடலூர் அருகே உள்ள குமாரபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகையன் (வயது 59). இவர் தோட்டப்பட்டு ஆஞ்சநேயர் கோவில் எதிரே உள்ள ஆனந்தன் என்பவருக்கு சொந்தமான பழைய இரும்பு பொருட்கள் கடையில் காவலாளியாக வேலைபார்த்து வந்தார். சம்பவத்தன்று முருகையன் இரவு நேர பணிக்கு வந்தபோது பழைய இரும்பு கடையில் மர்மநபர்கள் திருடிக்கொண்டிருந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த முருகையன் அவர்களை தட்டிக்கேட்டார். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது.

    ஆத்திரம் அடைந்த மர்மநபர்கள் அங்கு கிடந்த இரும்பு கம்பியால் தாக்கினர். பின்னர் மண்வெட்டியால் வெட்டினர். இதில் முருகையன் ரத்தவெள்ளத்தில் சுருண்டு விழுந்தார். இதனை பார்த்த கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அந்த சமயம் கடையின் உரிமையாளர் ஆனந்த் அங்கு வந்தார். ரத்தவெள்ளத்தில் உயிருக்குபோராடிய முருகையனை தூக்கிக்கொண்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவரது நிைலமை மோசமானது. எனவே முருகையன் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை முருகையன் இறந்தார்.

    இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் கொலைமுயற்சி வழக்குபதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்தனர். போலீஸ் தேடுதல் வேட்டையில் 2 பேர் சிக்கினர். விசாரணையில் பிடிபட்ட 2 பேர்தான் முருகையனை கொலை செய்தது தெரியவந்தது. அவர்கள் தோட்டப்பட்டு பழைய காலனியை சேர்ந்த திவாகரன் (19), நத்தப்பட்டு காலனியை சேர்ந்த ஜின்னா என்கிற தமிழ்வல்லவன் (20) என தெரியவந்தது. இவர்களை போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே இவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. தற்போது முருகையன் இறந்து போனதால் 2 பேர் மீது கொலைவழக்கு பதிந்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    • போராட்டம் திட்டக்குடி நகரத்தலைவர் செல்வ பூமிநாதன் தலைமையில் நடைபெற்றது.
    • வீடு கட்டும் பயனாளிகளுக்கு நிலுவைத் தொகையை விடுவிக்க கோரி போராட்டம் செய்தனர்.

    கடலூர்:

    திட்டக்குடி நகர பாரதிய ஜனதா கட்சி சார்பாக பிரதமர் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டும் பயனாளிகளுக்கு நிலுவைத் தொகையை விடுவிக்க கோரி திட்டக்குடி நகராட்சி அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் திட்டக்குடி நகரத்தலைவர் செல்வ பூமிநாதன் தலைமையில் நடைபெற்றது. போரா ட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜா, கூட்டுறவு பிரிவு மாவட்டச் செயலாளர் வேல்முருகன்,விளையாட்டு மேம்பாட்டு துறை மாவட்ட செயலாளர் சிவா, முன்னாள் மாநில செயலாளர் அமைப்பு சாரா பிரிவு பொன் பெரியசாமி, நகரத் தலைவர் விவசாய அணி ராஜராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வீட்டில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த வர்கள் அலறிஅடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியில் ஓடி வந்தனர்.
    • விரைந்து சென்று மின் வாரியத்திற்கு தகவல் தெரிவித்து மின் இணைப்பை துண்டித்தார்.

    கடலூர்:

    பண்ருட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் நேற்று இரவு முழுவதும் இடியுடன் கூடிய கனமழைபெய்தது. இதனால் பண்ருட்டி அடுத்த புலவனூர் கிராமத்தில் முருகன் கோவில் தெருவில் உள்ள ஆனைஅப்பன் என்பவரது வீட்டின் மீது பயங்கர சத்தத்துடன் இடி விழுந்தது. இதனால் வீட்டில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த வர்கள் அலறிஅடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியில் ஓடி வந்தனர். இடி விழுந்ததால் வீடு சேதம் அடைந்தது. வீட்டில் இருந்த வீட்டு உபயோக பொருட்கள் மின் சாதனங்கள் முற்றிலும் சேதம் அடைந்தன. அந்த பகுதியில் இருந்த அனைத்து வீடுகளிலும் டெலிவிஷன், மிக்சி, கிரைண்டர் ஆகியவை இடி தாக்கியதில் சேதம் அடைந்தது. இடி, மழை காரணமாக இரவு முழுவதும் மின்சாரம் தடைப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.இது குறித்து வருவாய்த் துறையினர், போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதே போல பண்ருட்டி அடுத்த திருத்துறையூர் கிராமத்தில் தோப்பு தெருவில் தொடர் மழை காரணமாக மின்கம்பி அறுந்து விழுந்தது. இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்து பஞ்சாயத்து தலைவர் திருமலை ராஜா சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மின் வாரியத்திற்கு தகவல் தெரிவித்து மின் இணைப்பை துண்டித்தார். இதனால் அங்கு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதே போல பண்ருட்டி கும்பகோணம்சாலையில் கிளை கருவூலம் எதிரில் மின் கம்பத்தில் இருந்து செல்லும் மின்சார வயர்கள் மீது மரங்கள் சாய்ந்து கிடந்தது. இதனால் அந்த வழியாக செல்பவர் மீது மரத்தில் இருந்து மின்சாரம் பாய்ந்தது. அப்போது அங்கு ரோந்து பணியில் இருந்த பண்ருட்டி போலீஸ் இன்ஸ் பெக்டர் நந்தகுமார் (பொறுப்பு) சப்- இன்ஸ்பெக்டர் சரண்யா ஆகியோர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மின்சார வாரியத்திற்கு தகவல் தெரிவித்தனர்.மின் ஊழியர்கள் சாய்ந்து கிடந்த மரக்கிளைகளை அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு ஏற்பட இருந்த பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

    • சென்னை-கும்பகோணம் சாலையில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
    • சமாதான பேச்சு வார்த்தை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.

    கடலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே காடு வெட்டி பகுதியில் சென்னை- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் நெடுஞ்சாலைக்காக சாலை விரிவாக்க பணி மேற்கொள் ளப்பட்டு சாலை யில் மண் குவிக்கப்பட்டு இருந்தது. இதனால் மழை நீர் தேங்கி தெருக்களில் புகும் அபாயம்ஏற்பட்டது. மேலும் இது சம்பந்தமாக அவ்வப்போது நெடுஞ்சா லை களில் விபத்தும் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் வட கிழக்கு பருவமழை கடந்த சில தினங்களாக பெய்து வருகிறது. இதனால் நெடுஞ்சாலையில் நீர் தேங்கி இருந்தது. இதனை அகற்று வதற்கு பலமுறை நெடுஞ்சா லை துறை அதி காரி மற்றும் வட்டாட்சி யரிடம் முறையிட்டும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதனால் அப்பகுதி மக்கள் கொட்டும் மழையில் குடையுடன் காடுவெட்டி குருவின் மகன் குரு கணல ரசன் தலைமையில் பொது மக்கள் ஒன்று திரண்டு சென்னை- கும்ப கோணம் சாலையில் திடீர் மறியல் போராட்டம் செய்தனர். தகவல் அறிந்த மீன்சு ருட்டி மற்றும் சோழத் தரம் போலீசார் மற்றும் ஜெயங் கொண்டம் வட்டாட்சியர் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். அதன் பெயரில் சம்பவ இடத்திற்கு ஜே.சி.பி. எந்திரம் வரவழைக்கப்பட்டு உடனடியாக மண் குவி யல்கள் அகற்றப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டதுடன் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்கு வரத்தும் பாதிக்கப்பட்டது.

    • கடலூர், சிதம்பரம், பண்ருட்டி, விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பரங்கிப்பேட்டை மற்றும் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.
    • தொடர்ந்து மழை நீடித்ததால் சிதம்பரம், பரங்கிப்பேட்டை, புவனகிரி பகுதியில் உள்ள விளைநிலங்கள் அனைத்தும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

    கடலூர்:

    வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுபெற்றதால் கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதோடு கடலூர் மாவட்டத்துக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது.

    இதையொட்டி நேற்றும் இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. வானிலை ஆய்வு மையம் அறிவித்தபடி கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை விடிய விடிய தொடர்ந்து நீடித்தது. சுமார் 28 மணி நேரம் கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை கொட்டி தீர்த்தது.

    இதனால் கடலூர், சிதம்பரம், பண்ருட்டி, விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பரங்கிப்பேட்டை மற்றும் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. சிதம்பரம் பகுதியில் மட்டும் ஒரே நாளில் 307.9 மி.மீ. மழை பெய்துள்ளது.

    மாவட்டம் முழுவதும் 3325.80 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. ஒரே நாளில் கடலூர் மாவட்டத்தில் 33.25 செ.மீ. மழை கொட்டி தீர்த்துள்ளது. தொடர் மழை காரணமாக கடலூர் நகர் பகுதியான குண்டு உப்பலவாடி, பாதிரிகுப்பம், கூத்தப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது.

    தொடர்ந்து மழை நீடித்ததால் சிதம்பரம், பரங்கிப்பேட்டை, புவனகிரி பகுதியில் உள்ள விளைநிலங்கள் அனைத்தும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

    கடலூரில் இருந்து சிதம்பரம் செல்லும் சாலையில் மழைநீர் தேங்கியது. இதனால் சாலை எது என்று தெரியாமல் வாகனங்கள் தத்தளித்து சென்றன. வயல் பகுதியும், சாலையும் ஒன்றுபோல் தண்ணீரில் மிதந்ததால் வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்திலேயே சென்றனர். கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் 20 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட விளைநிலங்களை தண்ணீர் சூழ்ந்துள்ளது.

    கனமழைக்கு காட்டுமன்னார் கோவிலை சேர்ந்த ஒருவர் இறந்துள்ளார். 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 13 கால்நடைகள் இறந்துள்ளன. 23 குடிசை வீடுகள் கனமழைக்கு சேதமாகி உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள் தண்ணீர் வெளியேற வழியில்லாததால் கவலையில் உள்ளனர்.

    • வடலூரில் ஹான்ஸ் புகையிலை விற்பனை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • தனது கடையில் அதேபகுதியில் வசிக்கும் தனது நண்பர் பால்ராஜ் என்பவருடன் சேர்ந்து ஹான்ஸ் விற்பதாக தெரியவந்தது.

    கடலூர்:

    வடலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரமணி, சப் இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்தின்பேரில் வடலூர் பால்காரன் காலனியில் வசிக்கும் முருகையன் (55), என்பவர் பேப்பர் ஸ்டோர் கடை நடத்தி வருகிறார். தனது கடையில் அதேபகுதியில் வசிக்கும் தனது நண்பர் பால்ராஜ் என்பவருடன் சேர்ந்து ஹான்ஸ் விற்பதாக தெரியவந்தது. அதன்அடிபடையில் கடையை சோதனை செய்தபோது, ஹான்ஸ் புகையிலை பாக்கெட் பண்டல் வைத்திருந்த 2 பேரையும் கைது செய்தனர். 

    • வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி ஊர்ந்து சென்றனர்.
    • மழை நீரை அகற்றும் பணியில்கொட்டும் மழையிலும்அதிகாரிகள் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி மற்றும் சுற்றுப்புற வட்டார கிராமங்களில் நேற்றுஇரவு இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி ஊர்ந்து சென்றனர். பண்ருட்டி கடலூர் ரோடு, சென்னை சாலை, கும்பகோணம் சாலை, காந்தி ரோடு, ராஜாஜி சாலை, பகுதிகளில் சாலைகளில் மழை நீர் வெள்ளை நீராக பெருக்கெடுத்து ஓடுகிறதுபண்ருட்டி போலீஸ் லைன் 3வது தெருவில் மழைநீர் குடியிருப்புக்குள் புகுந்தது பண்ருட்டி பகுதிகளில் உள்ள ஏரி,ஆறு,குளங்களில் நீர் நிரம்பி வழிகிறது. கனமழை காரணமாக வருவாய்த்துறை, நகராட்சி துறை, ஊரக வளர்ச்சித்துறை, காவல்துறை அதிகாரிகள் இரவு முழுவதும் தங்களது அலுவலகங்களில் தங்கி இருந்து மழை பாதிப்புகள் குறித்து தீவிரமாக கண்காணித்து வந்தனர் தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணியில்கொட்டும் மழையிலும்அதிகாரிகள் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    • நேற்று முன்தினத்தில் இருந்து கனமழை பெய்துவருகிறது.
    • இப்பகுதி யில் உள்ள ஏரிகளுக்கு நீர்வர தொடங்கி உள்ளது.

    கடலூர்:

    வடலூர் மற்றும் சுற்றுபுற பகுதிகளில் நேற்று முன்தினத்தில் இருந்து கனமழை பெய்துவருகிறது, வடலூர் பகுதியில் மிக தாமதமான மழையால், சம்பா நெற்பயிர்கள் சாகுபடி மிக தாமதமாகவே நடந்து வருவதுடன், இப்பகுதி யில் உள்ள ஏரிகளுக்கு நீர்வர தொடங்கி உள்ளது, தொடர்ந்து பெய்த கன மழையால் அந்த பகுதியில் மின் தடை ஏற்பட்டது.

    • வடலூரில் அரசு பஸ் மோதி டிரைவர் பலியானார்.
    • பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது,

    கடலூர்:

    வடலூர் காட்டுக்கொல்லை சர்வோதயநகர் பகுதியை சேர்ந்தவர் பகிரவன் (வயது 24)டிரைவர், இவர் மோட்டார் சைக்கிளிலில் விருத்தாச்சலத்தில் இருந்து வடலூர் நோக்கி வந்தார். ,வடலூர் தொழி ற்பேட்டை பொட்டுகடலை கம்பெனி அருகில் வரும்போது, கடலூரில் இருந்து விருத்தாச்சலம் சென்ற அரசு பஸ் மோதி பலத்த அடிப்பட்டு சம்பவ இடத்திலே இறந்துவிட்டார்.

    இறந்த பகிரவன் உடல் பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது, இது குறித்து புகாரின்பேரில் வடலூர் போலிசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கூரைவீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெரியசாமியின் கால் முறிவு ஏற்பட்டது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சிறுநெசலூர் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் பெரியசாமி. . இவர் இன்று காலை 8 மணி அளவில் அவர் வீட்டிற்கு அருகே உள்ள முத்துக்கருப்பன் என்பவரது வீட்டின் சந்தில் சிறுநீர் கழிக்க சென்றார். அப்போது தொடர் மழை காரணமாக முத்துக் கருப்பனின் கூரைவீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெரியசாமியின் கால் முறிவு ஏற்பட்டது.

    இது குறித்து கால் முறிவு ஏற்பட்ட பெரியசாமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இதுகுறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அங்கு சற்று பரபரப்பு நிலவியது.

    • அனைத்து வாகனங்களும் சர்வீஸ் சாலையிலே செல்லக்கூடிய நிலை ஏற்பட்டது.
    • வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு தத்தளித்து சென்றது குறிப்பிடத்தக்கது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் வேப்பூரில் இன்று அதிகாலை திருச்சியில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற லோடு லாரி சர்வீஸ் சாலை துவக்கத்திலேயே பழுதாகி நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதில் மேம்பால பணி கிடப்பில் போடப்பட்டதால் அனைத்து வாகனங்களும் சர்வீஸ் சாலையிலே செல்லக்கூடிய நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் திருச்சியில் இருந்து சென்னைக்கு செல்லக்கூடிய வாகனங்கள் அனைத்தும் திருச்சிக்கு செல்லக்கூடிய சர்வீஸ் சாலையில் திருப்பி அனுப்பியதால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.

    இதனால் அனைத்து வாகனங்களும் சுமார் 5 மணி நேரம் நகரக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டது. இதில் ஆம்புலன்ஸ் சிக்கிக்கொண்டது குறிப்பிடத்தக்கது. இதேபோல் தற்போது வடகிழக்கு பருவ மழையின் காரணமாக இரவு முழுக்க மழை பெய்து கொண்டே இருந்த சூழ்நிலையில் சர்வீஸ் சாலை முழுக்க மழை நீர் தேங்கி நின்றததால் அதில் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு தத்தளித்து சென்றது குறிப்பிடத்தக்கது எனவே மேம்பால பணியை விரைந்து முடிக்கப்பட வேண்டும் என்று பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைக்கின்றனர்.

    • அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
    • விருத்தாசலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    விருத்தாசலம் அருகே பூதாமூர் பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருபவர் ஜெயபாண்டியன். இவரது கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது என போலீசருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அங்கு சென்ற விருத்தாசலம் காவல்துறையினர் சோதனை செய்ததில் அவரது மாருதி ஆம்னி வாகனத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பதை கண்டுபிடித்தனர். இதனையடுத்து பூதாமூர் கிராம நிர்வாக அலுவலர் அசோக் தலைமையிலான வருவாய்த்துறையினர், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ததற்காக ஜெயபாண்டியணின் கடைக்கு சீல் வைத்தனர். சம்பவம் குறித்து விருத்தாசலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×