அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு சீல்

அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு சீல் வைக்கப்பட்டது.விருத்தாசலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு சீல்
Published on

கடலூர்:

விருத்தாசலம் அருகே பூதாமூர் பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருபவர் ஜெயபாண்டியன். இவரது கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது என போலீசருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அங்கு சென்ற விருத்தாசலம் காவல்துறையினர் சோதனை செய்ததில் அவரது மாருதி ஆம்னி வாகனத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பதை கண்டுபிடித்தனர். இதனையடுத்து பூதாமூர் கிராம நிர்வாக அலுவலர் அசோக் தலைமையிலான வருவாய்த்துறையினர், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ததற்காக ஜெயபாண்டியணின் கடைக்கு சீல் வைத்தனர். சம்பவம் குறித்து விருத்தாசலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com