என் மலர்
உள்ளூர் செய்திகள்
பண்ருட்டியில் கனமழை
- வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி ஊர்ந்து செல்கின்றனர்.
- மழை நீரை அகற்றும் பணியில் கொட்டும் மழையிலும் அதிகாரிகள், ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி மற்றும் சுற்றுப்புற வட்டார கிராமங்களில் நேற்று இரவு தொடங்கி விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் வாகன ஓட்டி கள்கடும் அவதிக்கு உள்ளாகி முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி ஊர்ந்து செல்கின்றனர். பண்ருட்டி கடலூர் ரோடு, சென்னை சாலை, கும்பகோணம் சாலை, காந்தி ரோடு, ராஜாஜி சாலை, பகுதி களில் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது.
பண்ருட்டி பகுதிகளில் உள்ள ஏரி, ஆறு, குளங்க ளில் நீர் நிரம்பி வழிகி றது. கனமழை காரண மாக வருவாய்த்துறை, நகராட்சி துறை, ஊரக வளர்ச்சித்துறை, காவல்துறை அதிகாரிகள் இரவு முழுவதும் தங்களது அலுவலகங்களில் தங்கி இருந்து மழை பாதிப்புகள் குறித்து தீவிரமாக கண்காணித்து வந்தனர். தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணியில் கொட்டும் மழையிலும் அதிகாரிகள், ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.