சிதம்பரம் அருகே 17 வயது பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம்

காட்டுமன்னார்கோயில் தாத்தா வட்டம் பகுதியை சேர்ந்த செங்கதிர் (வயது 32) என்பவரும் அதே வீட்டிற்கு சென்று தங்கினார்.இதை அருகில் இருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சடைந்து பாட்டியிடம் தெரிவித்தனர்.
சிதம்பரம் அருகே  17 வயது பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம்
Published on

கடலூர்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்த 17 வயது இளம் பெண் தனது பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு மேல்மூங்கிலடி பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கினார். அப்போது இந்தப் பெண்ணின் மாமா முறையான சிதம்பரம் அருகே காட்டுமன்னார்கோயில் தாத்தா வட்டம் பகுதியை சேர்ந்த செங்கதிர் (வயது 32) என்பவரும் அதே வீட்டிற்கு சென்று தங்கினார். இந்நிலையில் வீட்டில் பாட்டி இல்லாத நேரத்தில் தனியாக அந்தப் பெண் இருந்ததே நோட்டமிட்ட செங்கதிர் அந்த பெண்ணிடம் சென்று ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதை அருகில் இருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சடைந்து பாட்டியிடம் தெரிவித்தனர். இது குறித்து பாட்டி சிதம்பரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து செங்கதிரை கைது செய்தனர். மேலும் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com