பண்ருட்டியில் சிறுமிக்கு திருமணம்: கணவன்-மாமியார் மீது போலீசார் வழக்குபதிவு

சுந்தரமூர்த்திக்கு தனது 16 வயது மகளை மீனா திருமணம் செய்துவைத்துள்ளார்.குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு பண்ருட்டி மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது.
பண்ருட்டியில் சிறுமிக்கு திருமணம்: கணவன்-மாமியார் மீது போலீசார் வழக்குபதிவு
Published on

கடலூர்:

கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினம் சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் சுபாஷ். இவரது மனைவி மீனா. இவர்களுக்கு 16 வயதில் மகள் உள்ளார். பண்ருட்டி அருகே கவரப்பட்டு ஹவுசிங் போர்டு சுந்தரமூர்த்தி. இவருக்கும்,மீனாவுக்கும் வியாபாரம் தொடர்பாக பழக்கம் ஏற்பட்டது. எனவே சுந்தரமூர்த்திக்கு தனது 16 வயது மகளை மீனா திருமணம் செய்துவைத்துள்ளார். இது பற்றி சமூக நலத்துறை அலுவலர்களுக்கு தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து சமூக நலத்துறை சார்பில் குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு பண்ருட்டி மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. ஊர்நல அலுவலர் ராணி கொடுத்த புகாரின் பேரில் பண்ருட்டி மகளிர் போலீசார் மாமியார் மீனா, மருமகன் சுந்தரமூர்த்திஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமி சுபஸ்ரீ மகளிர் காப்பகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டார்.  

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com