மனைவி கோபித்து சென்றததால் விபரீதம்: காதல் திருமணம் செய்த 4 மாதத்தில் வாலிபர் தற்கொலை

கடலூரில் தனியார் ஹோட்டலில் காளீஸ்வரன் வேலை செய்து வருவதால் தற்போது கடலூர் கூத்தப்பாக்கம் கிருஷ்ணசாமி நகரில் வசித்து வந்தனர். இவரது மனைவி முத்துமீனா சந்தேகப்பட்டு கேட்கும் போது இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்ததாக கூறப்படுகிறது.
மனைவி கோபித்து சென்றததால் விபரீதம்: காதல் திருமணம் செய்த 4 மாதத்தில் வாலிபர் தற்கொலை
Published on

கடலூர்:

நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் காளீஸ்வரன் (வயது 30). இவரும் முத்துமீனா என்பவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த 4 மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து கடலூரில் தனியார் ஹோட்டலில் காளீஸ்வரன் வேலை செய்து வருவதால் தற்போது கடலூர் கூத்தப்பாக்கம் கிருஷ்ணசாமி நகரில் வசித்து வந்தனர். இந்த நிலையில் காளீஸ்வரன் அடிக்கடி மொபைல் போனில் அதிகளவில் பேசி வந்துள்ளார்.

இதனால் இவரது மனைவி முத்துமீனா சந்தேகப்பட்டு கேட்கும் போது இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மீண்டும் இவர்களுக்குள் சண்டை வந்ததால் முத்துமீனா கோபித்துக் கொண்டு தனது மொபைல் போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு வெளியில் சென்று விட்டார்.இதன் காரணமாக மன உளைச்சலில் இருந்த காளீஸ்வரன் தனது வீட்டில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் காளீஸ்வரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com