என் மலர்
உள்ளூர் செய்திகள்

கடலூர் அருகே மண்புழு உரம் கொட்டகையில் தீ விபத்து
- மண்புழு உரம் தயாரிக்கும் கொட்டகை உள்ளது.
- சிறிது நேரத்தில் இந்த தீ மள மள வென பற்றி கொட்டகை முழுவதும் எரிந்து சேதமானது.
கடலூர்:
கடலூர் அருகே குணமங்கலம் பகுதியில் மண்புழு உரம் தயாரிக்கும் கொட்டகை உள்ளது. சம்பவத்தன்று இந்த கொட்டகையில் திடீரென்று தீப்பிடித்து எறிந்தது. சிறிது நேரத்தில் இந்த தீ மள மள வென பற்றி கொட்டகை முழுவதும் எரிந்து சேதமானது. இந்த தீ விபத்தில் 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து ஊராட்சி செயலாளர் அன்பு நெல்லிக்குப்பம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






