search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வரி ஏய்ப்பு  புகார்:  புதுவை-கடலூர் கே.வி. டெக்சில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை
    X

    வருமான வரி அதிகாரிகள் சோதனையால் கடலூர்-சிதம்பரம் சாலையில் உள்ள கே.வி.டெக்ஸ் மூடப்பட்டிருந்த காட்சி.

    வரி ஏய்ப்பு புகார்: புதுவை-கடலூர் கே.வி. டெக்சில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

    • பிரபல துணிக்கடையான கே. வி. டெக்ஸ் உள்ளது.
    • கே.வி.டெக்ஸ் உரிமையாளர் வீட்டில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் - சிதம்பரம் சாலையில் பிரபல துணிக்கடையான கே. வி. டெக்ஸ் உள்ளது. இந்த கே.வி. டெக்ஸ் துணிக்கடையில் தினமும் ஏராளமான பொதுமக்கள் ஆடைகள் வாங்கி செல்வார்கள். இந்த நிலையில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு கே.வி. டெக்ஸ் கடையில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் துணிகளை வாங்கி சென்றனர். இதன் காரணமாக இந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர். இது தொடர்பாக பொதுமக்கள் கே.வி.டெக்ஸ் நிறுவனம் கடலூரில் முக்கிய சாலையாக உள்ள சிதம்பரம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என குற்றச்சாட்டு வைத்து புகார் தெரிவித்திருந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை கடலூர் கே.வி.டெக்ஸில் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வருமானத்துறை சேர்ந்த சுமார் 15-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அதிரடியாக உள்ளே சென்றனர். பின்னர் கடலூர் கே.வி.டெக்ஸில் ஆடைகள் எடுத்துக் கொண்டிருந்த பொதுமக்களை அவசர அவசரமாக வெளியேற்றினார்கள்‌. மேலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வருமானவரித்துறையினர் தீவிரமாக ஆய்வு மேற்கொண்டனர்.

    இதில் கே.வி.டெக்ஸ் நிர்வாகம் ஏதேனும் வரி ஏய்ப்பு செய்துள்ளார்களா? என தீவிரமாக சோதனையில் ஈடுபட்டனர். மேலும் ஆடைகள் எத்தனை கோடிக்கு வாங்கியுள்ளார்கள்? எத்தனை கோடிக்கு விற்பனை செய்து உள்ளார்கள்? இதில் அரசுக்கு சரியான முறையில் வரி செலுத்தி உள்ளார்களா? அல்லது வரி ஏய்ப்பு செய்துள்ளார்களா? என்பது குறித்து துருவித் துருவி விசாரணை மேற்கொண்டதோடு கணக்குகளை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் கடலூர் பாடலீஸ்வரர் கோவில் தெருவில் உள்ள கே.வி.டெக்ஸ் உரிமையாளர் வீட்டில் 3 கார்களில் வந்த 7 அதிகாரிகள் அதிரடியாக உள்ளே சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    புதுவை இந்திராகாந்தி சிலை அருகே கே.வி. டெக்ஸ் துணிக்கடை இயங்கி வருகிறது. இங்கு இன்று காலை 11 மணியளவில் சென்னையில் இருந்து 8 வருமான வரித்துறை அதிகாரிகள் வந்து அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வாடிக்கையாளர்களை வெளியேற்றி விட்டு ஊழியர்களிடம் இருந்த செல்போன்கள் உள்ளிட்டவைகளை வாங்கி வைத்துக்கொண்டு இந்த சோதனை நடைபெற்றது. சோதனையை தொடர்ந்து புதுவை கே.வி.டெக்ஸ் கடை முன்பு துப்பாக்கி ஏந்திய 4 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கடலூர் மற்றும் புதுவை கே.வி. டெக்ஸ் நிர்வாகத்தினரால் கட்டப்பட்ட கட்டிடம் சரியான முறையில் அனுமதி பெறாமல் கட்டப்பட்டதாக கடலூரில் தமிழக அரசும், புதுவையில் புதுவை அரசும் கடைக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர். பின்னர் அந்தந்த அரசிடம் உரிய அனுமதி பெற்று சட்டதிட்டத்திற்குள் கடை திறக்கப்பட்டு வியாபாரம் செய்து வந்தனர்.

    இந்த நிலையில் கே.வி.டெக்ஸ் நிர்வாகத்தினர் வரி ஏய்ப்பு செய்துள்ளார்களா? என வருமானவரித்துறையினர் தற்போது தீவிர சோதனையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதேபோன்று விழுப் புரம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள வணிக வளாகத்தில் வருமான வரி சோதனை நடந்தது.

    Next Story
    ×