என் மலர்
கடலூர்
- பல்வேறு படிப்புகளில் தமிழ்நாடு அரசால் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
- மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பித்து சான்று பெற்று பயன்பெறலாம்.
கடலூர், மே.17-
கடலூர் கலெக்டர் பாலசுப்ரமணியம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- 2023-24-ம் கல்வி ஆண்டிற்கு முன்னாள் படைவீரர்களைச் சார்ந்தோர்களுக்கு மருத்துவம், பொறியியல், டி.பார்ம், பி.பார்ம், பாலிடெக்னிக் பட்டய ப்படிப்புகள், பி.எஸ்.சி. (நர்சிங்) பி.எஸ்.சி (விவசாயம்), பி.எட் இந்திய மருத்துவம், பி.வி.எஸ்.சி, பி.எப்.எஸ்.சி., ஆசிரியர் பயிற்சி, பட்டயப்படிப்புகள் பட்ட மேற்படிப்புகள் போன்ற பல்வேறு படிப்புகளில் தமிழ்நாடு அரசால் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இவ்விட ஒதுக்கீட்டின்கீழ் விண்ணப்பிக்க முன்னாள் படைவீரரைச் சார்ந்தோர்கள் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் சான்று பெறுதல் வேண்டும்.
இணையதளம் மூலம் முன்னாள் படைவீரரின் அசல் படைவிலகுச் சான்று, அடையாள அட்டை, பள்ளி இறுதிச் சான்று, மதிப்பெண் பட்டியல், சாதிச்சான்று, கல்வி நிலையத்தில் பெறப்பட்ட விண்ணப்பம், ஓய்வூதியம் ஒப்பளிப்பு ஆணை மற்றும் முன்னாள் படைவீரர், விதவையரின் விண்ணப்பம் ஆகியவற்றுடன் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பித்து சான்று பெற்று பயன்பெறலாம்.
மேலும் சென்ற கல்வியாண்டில் பெற்ற சான்றிதழை இந்தக் கல்வியாண்டில் பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு பயன்படு த்தப்படும் பட்சத்தில் கலந்தா ய்வின்போது தங்களின் மகன், மகளின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். மேலும் சான்று பெறுவதற்கு உரிய சான்று பதிவேற்றம் மற்றும் ஏதேனும் சந்தேகம் இருப்பின் முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு உரிய விவரம் அறிந்து பயன்பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
- மது கடத்தல் மற்றும் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்படும்.
- காவல்துறைக்கு 7418846100 மற்றும் 04142- 284353 என்ற காவல் உதவி எண்களில் தகவல்கள் தெரிவிக்கலாம்.
கடலூர்:
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கடலூர் மாவட்டத்தில் உள்ள 7 உட்கோட்ட போலீஸ் அதிகாரிகள் மற்றும் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் அதிகாரிகள் மேற்பார்வையில் மது கடத்தல் மற்றும் கள்ளச்சாராய விற்பனை முற்றிலும் தடுக்கும் பொருட்டு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மது கடத்தல், மது விற்பனை மற்றும் கள் விற்பனை செய்பவர் மீது வழக்குபதிவு செய்து கைது செய்யப்பட்டு சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடலூர் மாவட்டத்தில் முக்கிய பஸ் நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் கள்ளச்சாராயம் காய்ச்சுவோர், போலி மதுபானம் விற்பனை செய்பவர்கள் மற்றும் கஞ்சா விற்பனை செய்பவர்கள் பற்றி தகவல்களை காவல்துறைக்கு 7418846100 மற்றும் 04142- 284353 என்ற காவல் உதவி எண்களில் தகவல்கள் தெரிவிக்கலாம். இந்த புகார் எண்ணுக்கு வரும் புகார்களின் அடிப்படையில் உடனடியாக சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் தகவல் தெரிவிக்கும் நபர்களின் விபரங்கள் ரகசியம் காக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் நேரில் அளித்தனர்.
- மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து தீர்வு காணவேண்டும்.
கடலூர்:
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் அனைத்துத்துறை அலுவல ர்களுடன் கலெக்டர் பாலசுப்ரமணியம் தலை மையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் குடும்பஅட்டை, முதியோர் உதவித்தொகை, மாற்றுதிறனாளிகள் உதவித் தொகை, பட்டா, நிலஅளவை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் நேரில் அளித்தனர். குறைதீர்வு கூட்டத்தில் பட்டா தொடர்பான 58 மனுக்களும், முதியோர் உதவி த்தொகை தொடர்பாக 46 மனுக்களும், வேலை வாய்ப்பு தொடர்பாக 29 மனுக்களும், காவல்துறை தொடர்பாக 102 மனுக்களும், மாற்றுதிறனாளி நல அலுவலகம் தொடர்பாக 18 மனுக்களும், இதர மனுக்கள் 157 ஆக மொத்தம் 410 மனுக்கள் வரப்பெற்றன. பொதுமக்கள் அளித்த மனுக்களை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளுக்குட்பட்டும் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரருக்கு தீர்வு வழங்க வேண்டும், மேலும் உதவித்தொகை, கழிப்பறை, வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தான மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து தீர்வு காணவேண்டும்.
குறைதீர்வு கூட்டத்தின் வாயிலாக கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கீழ் நியாய விலைக்கடையின் பணியாளர்கள் மற்றும் எடையாளர்களில் சிறப்பாகவும், பொதுமக்கள் வரவேற்கத்தக்க வகையிலும், பணிபுரி ந்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மாநில மற்றும் மாவட்ட அளவில் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கிட ஆணையிடப்ப ட்டது. அதன்படி, கடலூர் மாவட்டத்தில் 2022 -ம் ஆண்டிற்கு கலெக்டர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டு, தொழுதூர் நியாய விலைக்கடை விற்பனை யாளருக்கு முதல்பரிசு ரூ.4,000 மற்றும் திருமுட்டம் நியாய விலைக்கடை விற்பனையாளாருக்கு 2-ம் பரிசு ரூ.3,000 மற்றும் குறிஞ்சிப்பாடி நியாயவிலைக்கடை எடையாளருக்கு முதல்பரிசு ரூ.3,000 மற்றும் வேப்பூர் நியாய விலைகடை எடையாளருக்கு 2 -ம் பரிசு ரூ.2,000 என பரிசுத்தொகைகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.தொடர்ந்து தமிழ்நாடு நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் விழுப்புரம் கோட்த்தின் மூலம் கடலூர் பனங்காட்டு பகுதி ஐ-இல் கட்டிமுடிக்கப்பட்டுள்ள 240 வீடுகளில் பயனாளி பங்களிப்பு தொகை முழுவதும் செலுத்திய 9 பயனாளிகளுக்கு கலெக்டர் பாலசுப்ரமணியம் வீடுகளு க்கான ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) கற்பகம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் நந்தகுமார், மாவட்ட வழங்கல் அலுவலர் உதயகுமார், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய நிர்வாக பொறியாளர் குமாரதுரை மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- வண்டிப்பாளையம் ரோட்டில் கடந்த பல ஆண்டுகளாக கடை நடத்தி வருகின்றேன்.
- கவுன்சிலர் மற்றும் ஆதரவாளர்களுக்கு உடந்தையாக செயல்பட்டு வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் கலெக்டர் அலுவலகம் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் முன்னாள் கவுன்சிலர் நக்கீரன் புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கடலூர் பாடலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான வண்டிப்பாளையம் ரோட்டில் கடந்த பல ஆண்டுகளாக கடை நடத்தி வருகின்றேன். இந்நிலையில் கவுன்சிலர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் என்னிடம் பணம் கேட்டு கடையை உடைத்து விடுவதாக மிரட்டல் விடுத்து கடையை பூட்டி சென்றனர். இது சம்பந்தமாக இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்த போது, அவர்கள் சம்பந்தப்பட்ட கவுன்சிலர் மற்றும் ஆதரவாளர்களுக்கு உடந்தையாக செயல்பட்டு வருகின்றனர். எனவே கடையை தடையின்றி நடத்தவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதும், பணம் கேட்டு மிரட்டும் நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
- விக்கி என்பவர் திடீரென்று சுவேதாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
- போலீசார் விக்கி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் புதுக்குப்பத்தை சேர்ந்தவர் சுவேதா (வயது 22). இவர் தனது வீட்டின் முன்பு இருக்கும் குடிநீர் குழாயில் குடிநீர் பிடிப்பதற்காக சென்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த விக்கி என்பவர் திடீரென்று சுவேதாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஸ்வேதா தனது வீட்டிற்கு சென்று உள்ளார். இதனை தொடர்ந்து விக்கி சுவேதா வீட்டிற்குள் அத்துமீறி சென்று அவரை தாக்கி மானபங்கம் படுத்தி கொலை மிரட்டல் விடுத்து மேலும் வீட்டிலிருந்த பொருட்களை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் விக்கி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- கள்ள சாராயம் விற்பனை செய்வதை தடுக்கும் விதமாக 7 தனிப்படைகள் அமைத்து நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.
- கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் எச்சரிக்கை விடுத்துள்ளார்
கடலூர்:
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார்குப்பத்தில் கடந்த 13 -ம் தேதி 50-க்கு மேற்பட்டோர் கள்ளசாராயம் குடித்தனர். இதில் 12 பேர் பலியாகி உள்ளனர். இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று விழுப்புரம் மாவட்டத்திற்கு நேரில் வந்து அவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாச்சலம், சேத்தியாத்தோப்பு, சிதம்பரம், திட்டக்குடி ஆகிய உட்கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் கள்ளசாராயம் விற்பனை செய்யப்படுகிறதா? மது பாட்டில்கள், சாராயம் உள்ளிட்டவைகள் கடத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகிறதா? என்பது குறித்து தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனையடுத்து கடலூர் மாவட்டத்தில் கள்ள சாராயம் மற்றும் மது பாட்டில்கள் விற்பனை செய்வதை தடுக்கும் விதமாக 7 தனிப்படைகள் அமைத்து நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர். மேலும் கடலூர் மாவட்டத்தில் நேற்று போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டபோது 293 லிட்டர் சாராயம், 229 மது பாட்டில்கள் ஆகியவற்றை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர். மேலும் மாவட்டம் முழுவதும் 38 வழக்கு பதிவு செய்து 38 பேரை கைது செய்துள்ளனர். மேலும் இது மட்டுமின்றி கடலூர் மாவட்டத்தில் கள்ள சாராயம் மற்றும் மது பாட்டில்கள் ஆகியவற்றை சட்டவிரோதமாக விற்பனை செய்யும் நபர்கள் மற்றும் கடத்தி வரும் நபர்கள் குறித்து பொதுமக்கள் போலீசாருக்கு ரகசிய தகவல் தெரிவிக்கலாம். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- அதிர்ச்சிடைந்த அருண்குமார் காரை தேடியும் கிடைக்கவில்லை.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் அப்பர் தெருவை சேர்ந்தவர் அருண்குமார். (வயது 40). இவர் தனது வீட்டு முன்பு காரை நிறுத்தி வைத்திருந்தார். சம்பவத்தன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை காணவில்லை. இதனால் அதிர்ச்சிடைந்த அருண்குமார் காரை தேடினார். இருந்த போதும் கார் கிடைக்கவில்லை.
காரை மர்ம நபர்கள் திருடி சென்றதும் தெரிய வந்தது. இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சுமார் 35-க்கும் நரிக்குறவர் குடும்பங்களை சேர்ந்த நாங்கள் பல தலைமுறைகளாக சாலையோரம் வசித்து வருகிறோம்.
- மேற்படி நாங்கள் வாழ்வாதாரத்துக்கு சிரமப்பட்டு வருகின்றோம்.
கடலூர்:
சிதம்பரம் அருகே லால்புரம் பகுதியில் வசித்து வரும் நரிக்குறவர் இன மக்கள் வீட்டு மனை வழங்க கோரி சேகர் தலைமையில் சப்-கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்து வலியுறுத்தினர்.
மனுவில் சிதம்பரம் அருகே உள்ள லால்புரம் பஞ்சாயத்து உட்பட்ட பகுதியில் சுமார் 35-க்கும் நரிக்குறவர் குடும்பங்களை சேர்ந்த நாங்கள் பல தலைமுறைகளாக சாலையோரம் வசித்து வருகிறோம். எங்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, ஆதார் கார்டு உள்ளது. ஆனால் எங்களுக்கு வீட்டுமனை பட்டா இல்லை. மேற்படி நாங்கள் வாழ்வாதாரத்துக்கு சிரமப்பட்டு வருகின்றோம். எங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டுமென மனுவில் தெரிவித்துள்ளனர்.
- வல்லம் ஏரிக்கரைக்கு அகிலன் தனது நண் பர்களுடன் வந்தார்.
- ரூ. ஆயிரம் பணத்ைதயும், செல்போனையும் பறித்துக் கொண்டு தப்பி ஓடினர்.
கடலூர்:
பண்ருட்டி அருகே மானடிக்குப் பம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ண மூர்த்தி மகன் கலைமகன் (27).இவர் தனது நண்பர்களுடன்வல்லம் ஏரிக்கரையில் நேற்று பேசிக் கொண்டு இருந்தார். அப்போது கலைமகன் தனது செல்போனில் நெய்வேலி வட்டம் 3-ஐ சேர்ந்த அகிலன் (23) என்பவருடன், நெய்வேலி வடக்குத்து ரவுடியான கோபியுடன் நீபேச் கூடாது என எச்சரித்தார். அதற்கு அவர் ஏன் பேசக்கூடாது, நீ எங்கு இருக்கிறாய் என கேட்டு வல்லம் ஏரிக்கரைக்கு அகிலன் தனது நண்பர்களுடன் வந்தார்.
அப் போது ஏற்பட்ட தகராறில் கத்தி, வீச்சரிவாள் போன்றஆயுதங்களால் சரமாரியாக கலைமகனை வெட்டினர். பின்னர் அவரிடம் இருந்த அப்போது அவ்வழியாக வந்த பொதுமக்கள் காயம்அடைந்தவரை மீட்டு கடலூர் அரசு மருத் துவமனைக்கு கொண்டு சென்றனர். இது பற்றிதகவல்அறிந்ததும்காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன் முத்தாண்டிகுப்பம் போலீஸ் சப். இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன்மற்றும்போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் செல்போன் மூலம் பேசி முந்திரிதோப்பில் மறைந்து இருந்த அகிலன் (23), அவரது நண்பர் பொறி யாளர் வட்டம் 10-ஐ சேர்ந்த தமிழ் அரசன் (29) ஆகிய இருவரையும் கைது செய்து பணம், செல்போனை பறி முதல் செய்தனர்.
- புதுவையில் உள்ள இன்ஸ்டியூட்டில் கம்ப்யூட்டர் கிராபிக் டிசைனர் படித்து வந்தார்.
- பிளஸ்-2 மாணவியை காதலித்து வந்தார்.
கடலூர்:
புதுவை மாநிலம் கரையாம்புத்தூர் நேரு நகரை சேர்ந்தவர் கிருஷ்ணா (வயது 19). இவர் புதுவையில் உள்ள இன்ஸ்டியூட்டில் கம்ப்யூ ட்ர் கிராபிக் டிசைனர் படிப்பு வருகிறார். இவர் பண்ருட்டி அடுத்த ஒரு கிராமத்தைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவியை காதலித்து வந்தார். கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு மாணவியின் சொந்த ஊருக்கு கிருஷ்ணா வந்துள்ளார். மாணவிக்கு போன் செய்து அக்கிராமத்தில் உள்ள ஏரிக்கரைக்கு வரவழைத்து, ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்துள்ளார்.
இதில் பிளஸ்-2 மாணவி கர்ப்பமானார். இதனை அறிந்த மாணவியின் பெற்றோர் கிருஷ்ணாவின் வீட்டிற்கு சென்று தனது மகளை திருமணம் செய்து கொள்ள கேட்டுள்ளனர். இதற்கு கிருஷ்ணா மறுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பிளஸ்-2 மாணவி அவரது பெற்றோருடன் பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு வந்தார். தன்னை காதலித்து ஏமாற்றி கர்ப்பமாகிய கிருஷ்ணா மீது நடவடிக்கை எடுக்க வேண்டி புகார் கொடுத்தார். புகாரின் பேரில் கிருஷ்ணா மீது போக்சோ வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- பண்ருட்டி வட்ட சட்ட பணிகள் குழு தேசிய மக்கள் நீதிமன்றம் மாவட்ட நீதிபதி ராஜசேகரன் தலைமையில் நடந்தது.
- மக்கள் நீதிமன்றத்தில் மோட்டார் வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள் குற்றவியல் வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.
பண்ருட்டி:
பண்ருட்டி வட்ட சட்ட பணிகள் குழு தேசிய மக்கள் நீதிமன்றம் மாவட்ட நீதிபதி ராஜசேகரன் (ஓய்வு) தலைமையில் நடந்தது. பண்ருட்டி மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ஆர்த்தி, குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்-1 மகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வக்கீல்கள், போலீஸ் அதிகாரிகள் மற்றும் நீதிமன்ற ஊழியர்களும் கலந்து கொண்டனர்.
இந்த மக்கள் நீதிமன்றத்தில் மோட்டார் வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள் குற்றவியல் வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. இதில் 241 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.68 லட்சத்து 87 ஆயிரத்து 417 வழங்க உத்தரவிடப்பட்டது. ஏற்பாடுகளை பண்ருட்டி வட்ட சட்டபணிகள் குழு இளநிலை நிர்வாக உதவியாளர் ஆனந்த ஜோதி செய்திருந்தார்.
- அண்ணா மார்க்கெட் அருகே கால்வாய் சுத்தம் செய்யும் பணியில் துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.
- மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்து பார்வையிட்டனர்.
கடலூர்:
கடலூர் மாநகராட்சியில் மஞ்சகுப்பம் நேதாஜி சாலையில் அண்ணா மார்க்கெட் அருகே கால்வாய் சுத்தம் செய்யும் பணியில் துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.
இப்பணியினை மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்து பார்வையிட்டனர்.
இதனை தொடர்ந்து அண்ணா மார்க்கெட் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்களது குறைகளை ஆணையாளர் மற்றும் துணை மேயரிடம் தெரிவித்தனர். அப்போது நகர் நல அலுவலர் ஜாபர் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.






