என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Education Seat Reservation"

    • பல்வேறு படிப்புகளில் தமிழ்நாடு அரசால் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
    • மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பித்து சான்று பெற்று பயன்பெறலாம்.

    கடலூர், மே.17-

    கடலூர் கலெக்டர் பாலசுப்ரமணியம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- 2023-24-ம் கல்வி ஆண்டிற்கு முன்னாள் படைவீரர்களைச் சார்ந்தோர்களுக்கு மருத்துவம், பொறியியல், டி.பார்ம், பி.பார்ம், பாலிடெக்னிக் பட்டய ப்படிப்புகள், பி.எஸ்.சி. (நர்சிங்) பி.எஸ்.சி (விவசாயம்), பி.எட் இந்திய மருத்துவம், பி.வி.எஸ்.சி, பி.எப்.எஸ்.சி., ஆசிரியர் பயிற்சி, பட்டயப்படிப்புகள் பட்ட மேற்படிப்புகள் போன்ற பல்வேறு படிப்புகளில் தமிழ்நாடு அரசால் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இவ்விட ஒதுக்கீட்டின்கீழ் விண்ணப்பிக்க முன்னாள் படைவீரரைச் சார்ந்தோர்கள் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் சான்று பெறுதல் வேண்டும்.

    இணையதளம் மூலம் முன்னாள் படைவீரரின் அசல் படைவிலகுச் சான்று, அடையாள அட்டை, பள்ளி இறுதிச் சான்று, மதிப்பெண் பட்டியல், சாதிச்சான்று, கல்வி நிலையத்தில் பெறப்பட்ட விண்ணப்பம், ஓய்வூதியம் ஒப்பளிப்பு ஆணை மற்றும் முன்னாள் படைவீரர், விதவையரின் விண்ணப்பம் ஆகியவற்றுடன் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பித்து சான்று பெற்று பயன்பெறலாம்.

    மேலும் சென்ற கல்வியாண்டில் பெற்ற சான்றிதழை இந்தக் கல்வியாண்டில் பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு பயன்படு த்தப்படும் பட்சத்தில் கலந்தா ய்வின்போது தங்களின் மகன், மகளின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். மேலும் சான்று பெறுவதற்கு உரிய சான்று பதிவேற்றம் மற்றும் ஏதேனும் சந்தேகம் இருப்பின் முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு உரிய விவரம் அறிந்து பயன்பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    ×