என் மலர்tooltip icon

    கடலூர்

    • போலீசார் கடந்த 14-ம் தேதி முதல் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் விற்பனை செய்தவர்களை அதிரடியாக கைது செய்துள்ளனர்.

    கடலூர்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த எக்கியார் குப்பத்தில் விஷ சாராயம் குடித்து 10-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் பலருக்கு கண் பார்வை பாதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாச்சலம், சேத்தியாதோப்பு, திட்டக்குடி, சிதம்பரம் ஆகிய உட்கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் போலீசார் கடந்த 14-ம் தேதி முதல் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் 7 தனிப்படை அமைத்து போலீசார் மது பாட்டில்கள் மற்றும் சாராயம் கடத்தி விற்பனை செய்வது போன்றவற்றை தடுக்கும் விதமாக அதிரடியாக அனைத்து பகுதிகளிலும் சோதனைகளில் ஈடுபட்டு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடந்த 14-ந் தேதியிலிருந்து நேற்று (17-ந்தேதி) வரை 199 சாராயம் மற்றும் மது பாட்டில்கள் கடத்தல், கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் விற்பனை செய்தவர்களை பிடித்து வழக்கு பதிவு செய்து 203 நபர்களை அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும் இதுவரை 920 லிட்டர் சாராயம் மற்றும் 2,133 மது பாட்டில்கள் பறிமுதல் செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.

    • வேலைக்கு செல்வதாக சென்ற பெண் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை.
    • ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் தனியார் ரத்த பரிசோதனை நிலையத்தில் 19 வயது இளம்பெண் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்றுஅப் பெண் வேலைக்கு செல்வ தாக சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்சசியடைந்த அவரது பெற்றோர்கள் இளம்பெண்ணை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்த ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

    • பாலமுருகன் மனைவியை மானபங்கபடுத்தியதாக கூறப்படுகிறது.
    • போலீசார் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த காரைக்காடு பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 39).தொழிலாளி. இவருக்கும் இவரது அண்ணன் ராமனுக்கும் முன் விரோத தகராறு இருந்து வருகிறது. சம்பவத்தன்று அண்ணன் தம்பிக்கு மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக ராமன் மற்றும் அவருடன் வந்த 4 ேபர்கள் திடீரென்று பாலமுருகனை தாக்கினார்கள். இதனை தடுக்க சென்ற பாலமுருகன் மனைவி யை மானபங்கபடுத்தியதாக கூறப்படுகிறது.

    இதில் காயம் அடைந்த பாலமுருகன் கடலூர் அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்றனர். இது குறித்து கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் பாலமுருகன் கொடுத்த புகாரின் பேரில் ராமன் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • பரிவேட்டை, சாமி வீதி உலா, அரவான் களப்பலி மற்றும் தெருக்கூத்து நடைபெற்றது.
    • நாளை மாலை 6 மணி அளவில் தீமிதி திருவிழாக நடைபெற உள்ளது.

    கடலூர்:

    கடலூர் வில்வராய நத்தத்தில் பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவில் தீமிதி பிரம்மோற்சவ விழா விமர்சையாக நடைபெறு வது வழக்கம். தீமிதி திருவிழா பிரம்மோற்சவ விழா கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் தினமும் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாரதனை நடைபெற்று வந்தது. நேற்று முக்கிய விழாவான திருக்கல்யாணம உற்சவம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரத் தில் எழுந்தருளினார். இதனை தொடர்ந்து வில் வளைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் மங்கள வாத்தியத்துடன் வேத மந்திரம் முழங்க திருக்கல்யாண உற்சவம் விமர்சையாக நடைபெற்றது. பின்னர் பரிவேட்டை, சாமி வீதி உலா, அரவான் களப்பலி மற்றும் தெருக்கூத்து நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி கும்பிட்டனர். பின்னர் 21 சுமங்கலி பெண்களுக்கு மங்களப் பொருட்கள் அடங்கிய வரிசை தட்டு மற்றும் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் ஸ்ரீ திருப்பதி வெங்கடா ஜலபதி லாரி சர்வீஸ் உரிமையாளர் அருணாச சலம், கூட்டுறவு சங்க தலைவர் ஆதி பெருமாள், நிர்வாக செயலாளர் செல்வராஜ், இணை செயலாளர் திருமால்ராஜ், பொருளாளர் ரமேஷ் மற்றும் இளைஞர்கள், விழா குழுவினர் கலந்து கொண்ட னர்.

    இன்று (18 ந்தேதி) மாலை அர்ஜுனன் தபசு, விசேஷ சாந்தி, சாமி வீதி உலா, கரகத் திருவிழா நடைபெறுகிறது. நாளை (19 ந்தேதி) பிரம்ம உற்சவத்தின் சிகர விழாவான தீமிதி திருவிழா நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து காலையில் அரவான் புறப்பாடு, வீர மாங்காளி புறப்பாடு உள் ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. பின்னர் மாலை 6 மணி அளவில் தீமிதி திருவிழாக நடைபெற உள்ளது. விழாவிற்கு அய்யப்பன் எம். எல்.ஏ , 3-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் பிரகாஷ் ஆகியோர் தலைமை தாங்கு கிறார்கள். கூட்டு றவுத்துறை தனி அதிகாரி கிருஷ்ணராஜ், மகாலட்சுமி கல்வி நிறுவன உரிமையாளர் ரவி ஆகி யோர் கலந்து கொள்கிறார் கள். தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் நேர்த்திக்கடன் செலுத்த உள்ளனர். விழாவிற்கான ஏற்பாடு களை விழா குழு தலைவரும், ஸ்ரீ திருப்பதி வெங்கடா ஜலபதி லாரி சர்வீஸ் உரிமையாளருமான அருணாச்சலம், நிர்வாக செயலாளர் செல்வராஜ், இணை செயலாளர் திருமால்ராஜ், பொருளாளர் ரமேஷ் மற்றும் விழா குழுவினர் இளைஞர்கள் செய்து வருகின்றனர்.

    • புதன்கிழமை மாலை பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
    • அருள் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி யும் நடந்தது.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகையில் அமைந்துள்ளது வீரட்டா னேஸ்வரர் கோவில். இது மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு திரியோதசி தினத் தில் பிரதோஷ வழிபாடு நடைபெறுவது வழக்கம். வைகாசி மாதம் முதல் திரியோதசி தினமான நேற்று புதன்கிழமை மாலை பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து மாலை 4 மணிக்கு அபிஷேகம், ஆராதனை, விசேஷ பூஜை ஆகியவை களை தொடர்ந்து மகாதீபாராதனையும் பின்னர் நந்திதேவரின் இரு கொம்பு களுக்கு இடையே சிவனின் நடனக்காட்சி காணும் ஐதீக நிகழ்ச்சியும் நடந்தது. மாலை 6 மணிக்கு பிரதோஷ நாதர் ரிஷப வாகனத்தில் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்த ருளி பிரகார வலம்வரும் நிகழ்ச்சியும் அருள்பிர சாதம் வழங்கும் நிகழ்ச்சி யும் நடந்தது.

    • பண்ருட்டி அருகே தொழிலாளி கொலையில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • சக்திவேல் உடனே அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறை விலக்கிவிட முற்பட்டார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள கீழக்குப்பம் அய்யனார் கோவில் தெருவில் வசித்து வந்தவர் சக்திவேல்  (வயது 42)கூலித்தொழிலாளி. அதே பகுதியைச் சேர்ந்த ஞானகுரு, ராஜசேகர் ஆகியோர் ஏரியில் குளித்துக் கொண்டிருந்தனர்.அப்போது அந்த பகுதியில் கொத்தனார் வேலை பார்க்கும் 4 பேர் அங்கு வந்து அவர்களும் ஏரியில் குளித்தனர். இந்நிலையில் ஏரியில் குளித்துக் கொண்டிருக்கும் போது ஞானகுரு, ராஜசேகர் ஆகியோருக்கும் கொத்தனார் 4 பேருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டது. இதைப் பார்த்த சக்திவேல் உடனே அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறை விலக்கிவிட முற்பட்டார். அப்போது சக்திவேலுக்கும் ஞானகுரு, ராஜசேகருகும் இடைேய தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ஞானகுரு, ராஜசேகர் ஆகியோர கீழே கிடந்த கட்டையை எடுத்து சக்திவேலை பலமாக தாக்கியுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் சக்திவேல் மயங்கி கீழே விழுந்தார்.

    இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் அவரை பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி சக்திவேல் இறந்தார். இந்த சம்பவம் குறித்து அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரை பாண்டியன் முத்தாண்டி குப்பம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் சம்பவ இடத்திற்கு சென்று வழக்கு பதிவு செய்து சக்திவேலை அடித்து கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த ஞானகுரு ,ராஜசேகரை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் அதே பகுதியில் அய்யனார் கோவில் காப்பு காட்டில் தலைமறைவாக பதுங்கி இருந்த ஞானகுரு, ராஜசேகரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்கள் இருவரையும் பண்ருட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர்.

    • தனி படை போலீசார் நேற்று இரவு முழுவதும் அதிரடியாக சாராய வேட்டையில் ஈடுபட்டனர்.
    • அவர்களை கைது செய்த போலீசார் பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் புதுப்பேட்டை பகுதியில் பண்ருட்டி டி.எஸ்.பி. சபியுல்லா தலைமையில், இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் தனி படை போலீசார் நேற்று இரவு முழுவதும் அதிரடியாக சாராய வேட்டையில் ஈடுபட்டனர்.

    இதில் பண்ருட்டி அடுத்த பெரிய எலந்தம்பட்டு மாரியம்மன் கோவில் தெரு ஏழுமலை மனைவி வெள்ளச்சி (வயது 60), உளுந்தம்பட்டு ஆறுமுகம் (42) ஆகியோர் டாஸ்மாக் மதுபாட்டில், புதுவை சாராயம் விற்பனை செய்தனர். அவர்களை கைது செய்த போலீசார் பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • 4 பேர் கொண்ட கும்பல் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளி கடத்திக் கொண்டிருந்தனர்.
    • தலைமறைவாக உள்ள 4 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் இன்று காலை திருமாணிக்குழி ஆற்றங்கரை பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டிருந்தனர். அப்போது அங்கே 4 பேர் கொண்ட கும்பல் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளி கடத்திக் கொண்டிருந்தது. இதை பார்த்த போலீசார் அந்த கும்பலை பிடிக்க முயன்றனர். உடனே அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகி விட்டனர்.

    இதையடுத்து மணல் கடத்த பயன்படுத்தப்பட்ட 4 மாட்டு வண்டிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடியவர்கள் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் திருமாணிக்குழியை சேர்ந்த ராஜாங்கம், செல்வம், வெள்ளிகண்ணு, நம்பியார் என்பது தெரியவந்தது. தலைமறைவாக உள்ள 4 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    • கடலூரில் புகையிலை பொருட்கள் கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • ரூ.11 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கடலூர்:

    கடலூர் முதுநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எழில்தாசன் தலைமையிலான போலீசார் இன்று காலை கடலூர் செல்லங்குப்பம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை மறித்து சோதனை செய்தனர். அதில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து மோட்டார் சைக்கிளில் வந்த நபரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் கடலூர் முதுநகர் பென்சனர் தெருவை சேர்ந்த புகழேந்தி (வயது 40) என்பதும், புகையிலை பொருட்களை கடத்தி வந்து விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து புகழேந்தியை கைது செய்தனர். மேலும் மோட்டார் சைக்கிளுடன், ரூ.11 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • குருவை சாகுபடி பணி தொடங்கப்பட்டுள்ளது.
    • விவசாய பணிகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகில் ராமன் கோட்டகம் பகுதியில் குருவை சாகுபடி பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது. சுமார் 20 ஏக்கர் நிலப்பரப்பில் தற்போது உழவு பணி நடைபெற்று வருகிறது. இதனால் இப்பகுதி தினக்கூலி விவசாயிகள், பெண்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் விவசாய பணிகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றனர்.

    • துணை மேயர் தாமரைச்செல்வனிடம் கடலூர் நகர செயலாளர் செந்தில் மற்றும் நகர அமைப்பாளர் ஆறுமுகம் ஆகியோர் மனு கொடுத்தனர்.
    • ஒன்றிய துணை செயலாளர் வீரபாபு உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    கடலூர்:

    கடலூர் திருப்பாப்புலியூர் குப்பன்குளத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வனிடம் கடலூர் நகர செயலாளர் செந்தில் மற்றும் நகர அமைப்பாளர் ஆறுமுகம் ஆகியோர் மனு கொடுத்தனர். இந்த நிகழ்ச்சியில் குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர் குரு, மாவட்ட அமைப்பாளர்கள் ஜெயக்குமார், சித்திரவேல், ஒன்றிய துணை செயலாளர் வீரபாபு உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    • விஜயகுமார் மனைவி ரஞ்சிதா உள்பட 5 பேர் நாட்டு சக்கரை அரைக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
    • சிகிச்சை அளிக்கப்பட்ட சிறிது நேரத்தில் ரஞ்சிதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    கடலூர்:

    விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைபேட்டையில் பொன்னையன் என்பவருக்கு சொந்தமான நாட்டு சர்க்கரை அரைக்கும் ஆலை உள்ளது. இங்கு கோ.மாவிடந்தல் கிராமத்தை சேர்ந்த விஜயகுமார் மனைவி ரஞ்சிதா (23) உள்பட 5 பேர் நேற்று நாட்டு சக்கரை அரைக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். ரஞ்சிதா ஆலையில் தேங்கிய குப்பைகளை ஆலையின் பின்புறம் உள்ள தென்னந்தோப்பில் கொட்டு வதற்காக சென்று உள்ளார். அப்போது அங்கிருந்த நல்ல பாம்பு ரஞ்சிதாவின் வலது கையில் கடித்தது.

    இதில் மயங்கி விழுந்த ரஞ்சிதாவை அருகி லிரு ந்தவர்கள் மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட சிறிது நேரத்தில் ரஞ்சிதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    ×