பண்ருட்டி அருகே 2 ஆட்டோக்கள் மோதல்: 10 பேர் உயிர்த்தப்பினர்

ஒருவரின் கரும காரிய நிகழ்ச்சிக்கு தேவையான பொருட்கள் வாங்கஒரு குடும்பத்தினர் வந்தனர். 8 பெண்கள் அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.
காயம் அடைந்தவர்களை ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த காட்சி.
காயம் அடைந்தவர்களை ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த காட்சி.
Published on

கடலூர்:

கடலூர் மாவட்டம் பண்ருட்டிஅடுத்த செம்மேடு ஏரிப்பாளையம்கிராமத்தில் இருந்துஆட்டோ இன்று காலை பண்ருட்டி நோக்கி வந்தது.இந்த ஆட்டோவில் உறவினர் ஒருவரின் கரும காரிய நிகழ்ச்சிக்கு தேவையான பொருட்கள் வாங்கஒரு குடும்பத்தினர் வந்தனர். இந்த ஆட்டோசேலம் மெயின் ரோடுவளைவில் திரும்பும் போது எதிரே மணப்பாக்கத்தில் இருந்து வந்த மற்றொருஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. இதில் 2 ஆட்ேடா டிரை வர்கள் மற்றும் ஆட்டோ வில் வந்த 8 பெண்கள் அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இது பற்றி தகவல் அறிந்ததும் புதுப்பேட்டை போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்றுஅனைவரையும் பண்ருட்டி அரசு ஆஸ்பத்தி ரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துஇது குறித்து விசாரணை நடத்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com