என் மலர்tooltip icon

    கடலூர்

    • மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
    • விவசாய அணி நிர்வாகி ரா மகிருஷ்ணன், சேத்தியாத்தோப்பு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

    கடலூர்:

    என்.எல்.சி. 2-வது சுரங்க விரிவாக்கத்திற்காக வாய்க்கால் வெட்டும் பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகிறது. அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர்களை அழித்து இப்பணி நடைபெறுவதை கண்டித்தும், நிலம் கொடுத்தவர் வீட்டில் ஒருவருக்கு என்.எல்.சி.யில் வேலை வழங்க கோரியும், இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி வழங்க கோரியும் அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இது தொடர்பாக சேத்தியா த்தோப்பு அருகேயுள்ள மேல்வ ளையமாதேவி கிராமத்தைச் சேர்ந்த சாந்தி (வயது 55) என்பவர் பேட்டியளித்தார். இதில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தொடர்பாக அவதூறாகவும், ஆபாசமா கவும் பேசினார். இது தொலைக்கா ட்சிகள் மட்டுமின்றி, சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவியது.

    இதனையடுத்து அதே கிராமத்தை சேர்ந்த தி.மு.க. விவசாய அணி நிர்வாகி ரா மகிருஷ்ணன், சேத்தியாத்தோப்பு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். மேலும், தி.மு.க. தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் அருளரசி, மலர்விழி, சுதாசம்பத் ஆகியோர் சேத்தியாத்தோப்பு போலீசாரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

    இம்மனுக்களில், அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் குறித்து அவதூறாகவும், ஆபாச மாகவும் பேசிய சாந்தி மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    • பண்ருட்டி நோக்கி வந்த அரசு பஸ் மீது கற்களை வீசி தாக்கினர்.
    • ஆராய்ச்சிகுப்பம் கிரா மத்தை சேர்ந்த பா.ம.க. பிர முகர் சேட்டு மகன் ராம் குமாரை காடாம்புலியூர் போலீசார் கைது செய்தனர்

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே திருவதிகை பகுதியில் நேற்று முன்தினம் கடலூரில் இருந்து பண்ருட்டி நோக்கி வந்த அரசு பஸ் மீது கற்களை வீசி தாக்கினர். இதில், பஸ்சின் முன் பக்க கண்ணாடி சேதமானது. இந்த சம்பவம் குறித்து அரசு பஸ் டிரைவர் பழனி பண்ருட்டிபோலீஸ் நிலை யத்தில் புகார் செய்தார். தகவல் அறிந்ததும் பண்ருட்டி போலீசார் சம்பவ இடத் திற்கு விரைந்து சென்று பார் வை யிட்டு விசாரணை நடத்தினர்.

    புகாரின் பேரில் போலீ சார் வழக்கு பதிவு செய்து மர்மநபரை தேடி வந்தனர். இந்நிலையில் பஸ்சின் மீது கற்களை வீசி தாக்கியவர் முத்து நாராயணபுரம் கிரா மத்தை சேர்ந்த முத்தையன் மகன் விஜயசேகர் (வயது 25) என்பது தெரியவந்தது. இதைய டுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இவர் பா.ம.க. வை சேர்ந்த வர் ஆவார். இதேபோல் பண்ருட்டி அருகே பாவைக்குளம் பகு தியில் அரசு பஸ்சின் கண்ணாடியை உடைத்த ஆராய்ச்சிகுப்பம் கிரா மத்தை சேர்ந்த பா.ம.க. பிர முகர் சேட்டு மகன் ராம் குமாரை (37) காடாம்புலியூர் போலீசார் கைது செய்தனர்

    • என்எல்சி விவகாரத்தில் பாமக தொடர்ந்து போராட்டம் நடத்தும்.
    • மின்சாரம் தயாரிக்க மாற்று வழியை யோசிக்க வேண்டும்.

    நெய்வேலி:

    என்.எல்.சி. 2-வது சுரங்க விரிவாக்க பணிகளை கைவிட வலியுறுத்தி பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. அன்புமணி ராமதாஸ் தலைமையில் என்.எல்.சி.க்குள் நுழைவுவதற்காக புறப்பட்ட பா.ம.க.வினரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அன்புமணி ராமதாஸ் உள்பட்ட பா.ம.க.வினரை போலீசார் கைது செய்தனர். அன்புமணியை ஏற்றி சென்ற போலீஸ் வாகனத்தை மறித்து பா.ம.க.வினர் தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும் போலீஸ் வாகனத்தின் மீது கல் பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனிடையே கைதான அன்புமணி ராமதாஸ், என்.எல்.சி. விவகாரம் அனைவருக்குமான பிரச்சனை. மண்ணையும் மக்களையும் அழித்து மின்சாரம் எடுக்க வேண்டாம். தமிழ்நாட்டின் உரிமை பிரச்சனை இது. என்எல்சி விவகாரத்தில் பாமக தொடர்ந்து போராட்டம் நடத்தும். விளைநிலங்களை என்எல்சிக்காக கையகப்படுத்தக் கூடாது. தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக மாறியுள்ளது. இங்கு என்எல்சி தேவையில்லை. கடலூர் மாவட்டத்தை என்எல்சி நிர்வாகம் அழித்து விட்டது.

    மின்சாரம் தயாரிக்க மாற்று வழியை யோசிக்க வேண்டும் என கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அன்புமணி ராமதாஸ் தலைமையில் என்.எல்.சி.க்குள் நுழைவதற்காக பா.ம.க.வினர் புறப்பட்டனர்.
    • என்.எல்.சி. வாயில் நோக்கி புறப்பட்ட பா.மக.வினரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    நெய்வேலி:

    என்.எல்.சி. 2-வது சுரங்க விரிவாக்க பணிகளை கைவிட வலியுறுத்தி பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பா.ம.க.வினர் கலந்து கொண்டனர். என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்து அன்புமணி ராமதாஸ் பேசினார்.

    பின்னர், அன்புமணி ராமதாஸ் தலைமையில் என்.எல்.சி.க்குள் நுழைவதற்காக பா.ம.க.வினர் புறப்பட்டனர். என்.எல்.சி. வாயில் நோக்கி புறப்பட்ட பா.மக.வினரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பதற்றம் உருவானது.

    இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அன்புமணி ராமதாஸ் உள்பட்ட பா.ம.க.வினரை போலீசார் கைது செய்தனர். அன்புமணியை ஏற்றி சென்ற போலீஸ் வாகனத்தை மறித்து பா.ம.க.வினர் தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும் போலீஸ் மீது பாமகவினர் கல் வீசினர். இதையடுத்து போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்திய போலீசார் தண்ணீர் பீய்ச்சி அடித்து கூட்டத்தை கலைத்தனர்.


    • ஆர்ப்பாட்டத்தையொட்டி ஐ.ஜி. கண்ணன் தலைமையில் வெளிமாவட்டங்களில் இருந்து 2 ஆயிரம் போலீசார் நெய்வேலிக்கு வரவழைக்கப்பட்டு உள்ளனர்.
    • பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    நெய்வேலி:

    கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் இயங்கி வருகிறது. இங்குள்ள 3 திறந்த வெளிசுரங்கங்களை அமைத்து நிலக்கரி வெட்டி எடுத்து, அனல் மின் நிலையங்கள் மூலமாக மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

    இந்த மின்சாரம் தமிழகம், புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.

    இதனிடையே நிலக்கரி எடுக்க போதிய இடமில்லை எனவும், நிலக்கரி தட்டுப்பாட்டால் அடுத்த மாதம் (ஆகஸ்டு) முதல் 1,000 மெகாவாட் மின் உற்பத்தியை நிறுத்தப்போவதாக என்.எல்.சி. நிறுவனம் அறிவித்துள்ளது.

    எனவே 2-வது சுரங்கத்தை விரிவாக்கம் செய்வதற்காக கரிவெட்டி, கத்தாழை, மும்முடிசோழகன், வளையமாதேவி உள்ளிட்ட பகுதியில் ஏற்கனவே என்.எல்.சி.யால் கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் நேற்று முன்தினம் முதல் முதற்கட்ட பணியை தொடங்கியது.

    அந்த நிலத்தில் சாகுபடி செய்திருந்த பயிர்கள் அனைத்தும் பொக்லைன் எந்திரங்கள் மூலம் அழிக்கப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்றும் இந்த பணி 2-வது நாளாக தொடர்ந்தது.

    மேலும் என்.எல்.சி. சுரங்க நீரை வெளியேற்றுவதற்காக பரவனாறுக்கு பதிலாக புதிய பரவனாறு அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

    இதற்காக நேற்று காலை ராட்சத பொக்லைன் எந்திரங்கள் மூலம் வளையமாதேவியில் இருந்து கரிவெட்டிக்கு செல்லும் சாலையில் பள்ளம் தோண்டப்பட்டு, 10 ராட்சத குழாய்கள் பதிக்கப்பட்டது.

    மேலும் தர்மநல்லூரில் இருந்து வளையமாதேவி வரை 1½ கிலோ மீட்டர் தூரத்துக்கு புதிய பரவனாறு வெட்டப்பட்டது. இதற்கு விவசாயிகள் மற்றும் பா.ம.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாய்க்கால் வெட்டும் பணி நடைபெற்றது.

    இதனை கண்டித்து பா.ம.க.வினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பல்வேறு இடங்களில் பஸ்களின் கண்ணாடியும் உடைக்கப்பட்டன.

    இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பா.ம.க.வினரை போலீசார் கைது செய்தனர்.

    என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்து ஏற்கனவே பா.ம.க. சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. கடையடைப்பு போராட்டமும் நடத்தினர். தமிழகத்தை விட்டு என்.எல்.சி. வெளியேற வேண்டும் என பா.ம.க.வினர் கூறி வருகின்றனர்.

    இந்த நிலையில் வளையமாதேவியில் விவசாய விளைநிலங்களை அழித்து வாய்க்கால் வெட்டும் பணிக்கு பா.ம.க.வினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. நேற்று அறிவித்தார். கும்பகோணம்-பண்ருட்டி சாலையில் என்.எல்.சி. ஆர்ச் கேட் அருகே இந்த போராட்டம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது.

    அதன்படி இன்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்க பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் நண்பகல் 12.05 மணியளவில் நெய்வேலி வந்தார்.

    நெய்வேலி ஆர்ச் கேட் அருகே நடைபெற்ற முற்றுகையில் அவர் பங்கேற்றார். இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் வெளியேறு வெளியேறு என்.எல்.சி.யே வெளியேறு, வெளியேற்று... வெளியேற்று... மத்திய-மாநில அரசுகளே என்.எல்.சி. நிர்வாகத்தை உடனடியாக வெளியேற்று. விட மாட்டோம்... விடமாட்டோம்... ஒருபிடி மண்ணை கூட விடமாட்டோம் என்பது உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

    பா.ம.க. ஆர்ப்பாட்டத்தையொட்டி கடலூர் மாவட்டத்தில் 27 டாஸ்மாக் மதுக்கடைகள் இன்று மாலை 6 மணி வரை மூடப்படுகிறது.

    ஆர்ப்பாட்டத்தையொட்டி ஐ.ஜி. கண்ணன் தலைமையில் வெளிமாவட்டங்களில் இருந்து 2 ஆயிரம் போலீசார் நெய்வேலிக்கு வரவழைக்கப்பட்டு உள்ளனர். விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. ஜியாவுல்ஹக், கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய், கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் மேற்பார்வையில் 5 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 17 டி.எஸ்.பி.க்கள் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    இதுமட்டுமின்றி கடலூர் மாவட்ட போலீசார் ஆயிரம் பேரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பா.ம.க.வினரின் ஆர்ப்பாட்டம் காரணமாக நெய்வேலியில் பரப்பான சூழ்நிலை நிலவியது.

    • அரசு பஸ் டிரைவர் பழனி பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்மநபரை தேடி வந்தனர்.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே திருவதிகை பகுதியில் நேற்று முன்தினம் கடலூரில் இருந்து பண்ருட்டி நோக்கி வந்த அரசு பஸ் மீது கற்களை வீசி தாக்கினர்.

    இதில், பஸ்சின் முன்பக்க கண்ணாடி சேதமானது. இந்த சம்பவம் குறித்து அரசு பஸ் டிரைவர் பழனி பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். தகவல் அறிந்ததும் பண்ருட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்மநபரை தேடி வந்தனர். இந்நிலையில் பஸ்சின் மீது கற்களை வீசி தாக்கியவர் முத்து நாராயணபுரம் கிராமத்தை சேர்ந்த முத்தையன் மகன் விஜயசேகர் (வயது 25) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    இவர் பா.ம.க. வை சேர்ந்தவர் ஆவார். இதேபோல் பண்ருட்டி அருகே பாவைக்குளம் பகுதியில் அரசு பஸ்சின் கண்ணாடியை உடைத்த ஆராய்ச்சிகுப்பம் கிராமத்தை சேர்ந்த பா.ம.க. பிரமுகர் சேட்டு மகன் ராம்குமாரை (37) காடாம்புலியூர் போலீசார் கைது செய்தனர்.

    • கடந்த இரண்டு நாட்களாக நெற்பயிர்களை அழித்து கால்வாய் தோண்டு பணி நடைபெற்றது
    • பா.ம.க. போராட்டத்திற்கு சுமார் ஆயிரம் போலீசார் செல்ல இருப்பதால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது

    கடலூர் என்.எல்.சி. நிலக்கரி சுரங்கம் விரிவாக்கம் பணிக்கு நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது. வளையமாதேவியில் இன்னும் இரண்டு மாதத்திற்குள் அறுவடை செய்ய இருக்கும் நெற்பயிர்கள் உள்ள இடத்தில் ஜே.சி.பி. இறங்கி கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.

    நெற்பயிர்கள் அழிக்கப்படுவதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சுமார் 400-க்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்புடன் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.

    நெய்வேலியில் இன்று பா.ம.க. போராட்டம் அறிவித்துள்ளது. பாதுகாப்பு பணிக்காக இந்த போராட்டத்திற்கு சுமார் ஆயிரம் போலீசார் செல்ல இருப்பதால், கால்வாய் தோண்டும் பணி பாதுகாப்பிற்கு போலீசார் இல்லை எனக் கூறப்படுகிறது. இதனால் கால்வாய் தோண்டும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    • என்.எல்.சி.யில் 10-க்கும் மேற்பட்ட தொழிற் சங்கங்கள் உள்ளன.
    • ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் மட்டுமே வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நெய்வேலி:

    பணிநிரந்தரம் செய்ய வேண்டும் அல்லது பணி நிரந்தரம் செய்யும் வரை மாதம் ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நெய்வேலி என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர்.

    இதைத் தொடர்ந்து விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகம், கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம், சென்னை தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனாலும் இதுவரையில் என்.எல்.சி. நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இந்த நிலையில் நெய்வேலி என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிற்சங்க தொழிலாளர்கள் நேற்று மாலை நெய்வேலி நகரத்தில் உள்ள நேரு சிலை அருகில் இருந்து என்.எல்.சி. நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட ஊர்வலமாக புறப்பட்டனர்.

    அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்குமார் தலைமையில் நெய்வேலி நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல்ஹமீது மற்றும் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினா். பின்னர் தொழிலாளர்கள் அனைவரும் நேரு சிலை அருகில் அமர்ந்து கோஷம் எழுப்பியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுபற்றி தொழிற்சங்கத்தினர் கூறும்போது நேற்று இரவு 8 மணிக்குள் என்.எல்.சி. நிர்வாகம் நல்ல பதிலை கூறினால் போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொள்வோம். இல்லை என்றால் போராட்டம் தொடரும் என்றனர்.

    ஆனால் இரவு 8 மணியை கடந்தும் என்.எல்.சி. நிர்வாகத்திடம் இருந்து எந்த தகவலும் வராததால் தொழிலாளர்களின் போராட்டம் நீடித்தது. இதனால் அவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்தனர்.

    இது குறித்து என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க சிறப்பு செயலாளர் சேகா் கூறும்போது, தொழிற் சங்கத்தின் கோரிக்கைகளை வலியுறுத்தி இரவு முதல் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி இருக்கிறோம். எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற என்.எல்.சி. நிர்வாகம் முன்வந்தால் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற தொழிற்சங்கம் முடிவு செய்யும் என்றார்.

    இதையடுத்து என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் தொழிற்சங்க தலைவர் அந்தோணிராஜ், பொதுச்செயலாளர் செல்வமணி உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்ததொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இன்று 2-வது நாளாக வேலைநிறுத்த போராட்டம் தொடர்கிறது. என்.எல்.சி.யில் 10-க்கும் மேற்பட்ட தொழிற் சங்கங்கள் உள்ளன. ஆனால், ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் மட்டுமே இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை 10 மணிக்குள் முடிவு தெரியாவிட்டால் காந்திய வழியில் சத்தியாகிரக போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

    வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஜீவா ஒப்பந்த தொழிற்சங்க நிர்வாகிகளுடன் போலீசார், மாவட்ட நிர்வாகம், என்.எல்.சி. நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    வேலைநிறுத்தம் தொடர்ந்தால் என்.எல்.சி.யில் மின் உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

    • நூற்றுக்கணக்கான கர்ப்பிணி பெண்கள் தங்கி குழந்தை பெற்று செல்கின்றனர்‌.
    • தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவது போல் கழிவு நீர் முழுவதும் ஓடி குளம் போல் தேங்கி உள்ளது.

    கடலூர்:

    கடலூரில் அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நேரில் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். மேலும் அறுவை சிகிச்சை, கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்ட பல்வேறு நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் மருத்துவமனை வளாகத்தில் தங்கி சிகிச்சை பெற்று செல்கின்றனர். அரசு மருத்துவமனை வளாகத்தில் மகப்பேறு பிரிவு செயல் பட்டு வருகிறது. இங்கு நூற்றுக்கணக்கான கர்ப்பிணி பெண்கள் தங்கி குழந்தை பெற்று செல்கின்றனர். இதனால் மகப்பேறு பிரிவிற்குள் செருப்புகள் அணிந்து செல்லாத வகையில் மிக பாதுகாப்பாக கண்காணிக்கப்பட்டு வருகின்றது.

    ஆனால் மகப்பேறு பிரிவு முன்பு உள்ள கழிவு நீர் தொட்டியில் இருந்து கழிவுநீர் நிரம்பி தற்போது மகப்பேறு பிரிவு முன்பு ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவது போல் கழிவு நீர் முழுவதும் ஓடி குளம் போல் தேங்கி உள்ளது. இதன் காரணமாக மகப்பேறு பிரிவு முழுவதும் கடும் துர்நாற்றம் வீசி வருவதோடு இதனை பார்த்த கர்ப்பிணி பெண்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் கொசு உற்பத்தி பெருகி பல்வேறு நோய்கள் உருவாகும் அபாயமும் நிலவி வருகிறது.

    இது மட்டுமின்றி புதிதாக பிறந்துள்ள குழந்தைகளை பாதுகாப்பாக வைத்திருந்தாலும் கழிவு நீர் வெளியேறி உள்ளதால் பல்வேறு தொற்று நோய் மற்றும் பாதிப்புகள் ஏற்படக்கூடிய அபாயம் நிலவி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். மேலும் இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திற்கு பலமுறை புகார் அளித்தும் இதனால் வரை நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் பொதுவெளியில் இது போன்ற நிலைபாடு இல்லாத வகையில் அந்தந்த நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் மிகவும் பாதுகாப்பாக இருக்க கூடிய மருத்துவமனை வளாகம் மற்றும் பல்வேறு பிரிவுகள் செயல்பட்டு வரும் நிலையில் அஜாக்கிரதையாக செயல்பட்டு வரும் நிர்வாகத்தை சமூக அலுவலர்கள் கண்டித்து உள்ளனர்.ஆகையால் மாவட்ட நிர்வாகம் தனி கவனம் செலுத்தி இது போன்ற அவல நிலை வருங்காலங்களில் நடைபெறாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 100 நாள் வேலை திட்டத்தில் பெண்கள் வேலை செய்து வருகின்றனர்.
    • 50-க்கும் மேற்பட்ட பெண்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

    கடலூர்:

    கடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பாதிரிக்குப்பம் ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் பெண்கள் வேலை செய்து வருகின்றனர். அங்கு வேலை செய்யும் பெண்களுக்கு சரியாக வேலை வழங்கப்படவில்லை. சம்பளம் சரியாக தரவில்லை என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. இந்தநிலையில் பாதிக்குப்பம் ஊராட்சியில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பணி புரியும் பெண்களை ஆட்குறைப்பு செய்யப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை கடலூர் - பாலூர் சாலையில் பாதிரிக்குப்பம் பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இத்தகவல் அறிந்த கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் கூறுகையில்,

    ஏற்கனவே எங்களுக்கு வேலையும், சம்பளமும் சரியாக வழங்கப்படுவதில்லை. இந்த நிலையில் ஆட்குறைப்பு செய்யப் போவதாக தகவல் வந்துள்ளது. இதனால் எங்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும். மேலும் வசதியானவர்களுக்கு வேலை கொடுத்துவிட்டு, ஏழை எளிய மக்களின் வேலையை பறிக்கிறார்கள்.இதனை கண்டித்து நாங்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளோம். எனவே எங்களுக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என ஆக்ரோஷமாக கூறினார்கள்.

    இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உத்தரவாதம் அளித்தனர். இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதன் காரணமாக கடலூர் பாலூர் சாலையில் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    • சிவக்குமார் கடலூரில் வணிகவரித்துறை துணை அலுவலராக பணியாற்றி வருகிறார்.
    • தகாத வார்த்தைகளால் திட்டி இரும்பு கம்பியால் வலது நெற்றி மூக்கு பகுதியில் தாக்கினார்.

    கடலூர்:

    விழுப்புரம் மாவட்டம் இருவேல் பட்டை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன் இவரது மகன் சிவக்குமார் ( 41). இவர்,கடலூரில் வணிகவரித்துறை துணை அலுவலராக பணியாற்றி வருகிறார். இவர் கடலூரில் இரவு பணி முடித்துவிட்டு தனியார் பஸ்சில் கடலூரில் இருந்து பண்ருட்டி பஸ்நிலையம் வந்தார் பஸ்சில் இருந்து இறங்கிய போது பண்ருட்டி பூங்குணத்தை சேர்ந்த வெற்றிவேல்( 22 ) இவரது பேண்ட் பாக்கெட்டில் இருந்த மணி பர்சை எடுத்துள்ளார் .

    ஏன் எனது பாக்கெட்க்குள் கைவிட்டு பர்சைஎடுக்கிறாய் என்று சிவக்குமார் தடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வெற்றிவேல்வணிக வரித்துறை அதிகாரியை தகாத வார்த்தைகளால் திட்டி இரும்பு கம்பியால் வலது நெற்றி மூக்கு பகுதியில் தாக்கினார். இதில் ரத்தம் கொட்டியது.அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சிவக்குமாரை பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து வணிக வரித்துறை அலுவலர் சிவக்குமார் கொடுத்த புகாரில் பண்ருட்டி போலீஸ்இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்கு பதிவு செய்து வாலிபர்வெற்றி வேலை கைது செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.

    • விவசாயிகள் மற்றும் பா.ம.க.வினர் போராட்டம் காரணமாக கடலூர் மாவட்டத்தில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது
    • வளையமாதேவி பகுதியில் வாய்க்கால் வெட்டும் பணி இன்று 2-வது நாளாக நடைபெற்று வருகிறது.

    சேத்தியாத்தோப்பு:

    நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தின் 2-வது சுரங்கப்பணிக்காக கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள கற்றாழை, கரி வெட்டி, மேல்வளையமாதேவி, ஆதனூர் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள விவசாய விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டு உள்ளது.

    இந்த நிலங்களுக்கு என்.எல்.சி. நிர்வாகம் இழப்பீடு வழங்கி உள்ளது. இந்த இழப்பீடு தொகையை முழுமையாக வழங்கவில்லை. வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வந்தனர்.

    இது தொடர்பாக பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்றது. இதில் என்.எல்.சி. நிர்வாகம் கூறியதை ஒரு தரப்பு ஏற்றுக்கொண்டது. மற்றொரு தரப்பு மறுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் என்.எல்.சி. 2-ம் சுரங்க விரிவாக்கப்பணியின் ஒரு பகுதியாக நேற்று காலை சேத்தியாத்தோப்பு அருகே உள்ள வளையமாதேவி பகுதியில் பரவனாறு விரிவாக்க வாய்க்கால் வெட்டும் பணி தொடங்கியது. சுமார் 1½ கிலோ மீட்டர் நீளத்துக்கு வாய்க்கால் அமைக்கும் பணி நடைபெறுகிறது.

    விரிவாக்கம் செய்யப்படும் வாய்க்கால் வழியாக என்.எல்.சி. சுரங்க நீர் பரவனாற்றுக்கு செல்ல ஏற்பாடு செய்யப்படுகிறது. இதற்காக என்.எல்.சி. நிறுவனத்துக்கு சொந்தமான 30-க்கும் மேற்பட்ட ராட்சத மண் வெட்டும் எந்திரங்கள் கொண்டு வரப்பட்டு வாய்க்கால் வெட்டும் பணி நடந்து வருகிறது.

    தற்போது அந்த பகுதியில் விவசாயிகள் நெற்பயிரிட்டுள்ளனர். பச்சை பசேலென்று செழித்து வளர்ந்துள்ள நெற்பயிர்களை அழித்து வாய்க்கால் வெட்டுவதை அறிந்த விவசாயிகள் வேதனை அடைந்தனர். அவர்கள் வாய்க்கால் வெட்டும் பணியை தடுக்க முயன்றனர்.

    ஆனால், 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்ததால் விவசாயிகள் அந்த பணியை தடுக்க முடியவில்லை.

    விளை நிலங்களில் நெற்பயிர்களை அழித்து வருவதை கண்டித்து சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பா.ம.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அவர்களை போலீசார் கைது செய்தனர். பா.ம.க.வினர் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், என்.எல்.சி.க்கு இடம் கையகப்படுத்துவதை எதிர்த்தும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பஸ்கள் மீது கற்கள் வீசப்பட்டன.

    பண்ருட்டி, விருத்தாசலம், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 17 பஸ்களின் கண்ணாடிகள் கல்வீசி உடைக்கப்பட்டது. இதனால் நேற்று இரவு ஒரு சில பஸ்கள் இயக்கப்படாமல் டெப்போவுக்கு கொண்டு செல்லப்பட்டது. இன்று காலை முதல் பஸ்கள் வழக்கம்போல் இயங்கியது.

    விவசாயிகள் மற்றும் பா.ம.க.வினர் போராட்டம் காரணமாக கடலூர் மாவட்டத்தில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே வளையமாதேவி கிராமத்தில் நேற்று 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

    போராட்டம் தீவிரம் அடைய கூடும் என்பதால் வெளிமாவட்டங்களில் இருந்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு உள்ளனர். விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சூப்பிரண்டு தலைமையில் 750 போலீசார் இன்று கடலூர் வந்தனர். அவர்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    குறிப்பாக சேத்தியாத்தோப்பு, வளையமாதேவி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளுக்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் வளையமாதேவி பகுதியில் வாய்க்கால் வெட்டும் பணி இன்று 2-வது நாளாக நடைபெற்று வருகிறது. இதனால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ×