கடலூர் அருகே புதுவையை சேர்ந்த பிரபல ரவுடி கைது

அன்பரசனை பிரபல ரவுடி அய்யனார் என்கின்ற தாடி அய்யனார் தரப்பினர் கடத்திச் சென்று கடந்த மே மாதம் கொலை செய்து புதைத்தனர்.ரெட்டிச்சாவடி போலீசார் அய்யனார் என்கின்ற தாடி அய்யனார் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அய்யனாரை கைது செய்தனர்.
கடலூர் அருகே புதுவையை சேர்ந்த பிரபல ரவுடி கைது
Published on

கடலூர்:

கடலூர் அடுத்த ரெட்டிச்சாவடி புதுக்கடையை சேர்ந்தவர் சேகர் (வயது 51). இவரது தம்பி மகன் அன்பரசனை புதுச்சேரி மாநிலம் மடுகரையை சேர்ந்த பிரபல ரவுடி அய்யனார் என்கின்ற தாடி அய்யனார் தரப்பினர் கடத்திச் சென்று கடந்த மே மாதம் கொலை செய்து புதைத்தனர்.

இந்த கொலை வழக்கின் விசாரணைக்கு யாரும் சாட்சி சொல்ல வரக்கூடாது என்பதற்காக கொலை செய்யப்பட்ட அன்பரசனின் உறவினர் சேகர் என்பவரை வழிமறித்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்து கத்தியை கழுத்தில் வைத்து கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து சேகர் கொடுத்த புகாரின் பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் அய்யனார் என்கின்ற தாடி அய்யனார் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அய்யனாரை அதிரடியாக கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com