search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லிக்குப்பம் சாலையில் குப்பைகள் கொட்டப்படுவதால் விபத்து ஏற்படும் அபாயம்: வாகன ஓட்டிகள் அச்சம்
    X

    கடலூர் - நெல்லிக்குப்பம் சாலையில் கோண்டூரில் சாலேயோரம் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை படத்தில் காணலாம்.

    நெல்லிக்குப்பம் சாலையில் குப்பைகள் கொட்டப்படுவதால் விபத்து ஏற்படும் அபாயம்: வாகன ஓட்டிகள் அச்சம்

    • குப்பைகள் அகற்றும் பணியில் துப்புரவு ஊழியர்கள் தினந்தோறும் ஈடுபட்டு வருகின்றனர்.
    • சாலையின் ஓரத்தில் கொட்டப்பட்டு, குப்பைகளின் கூடாரமாக மாறி வருகின்றது.

    கடலூர்:

    கடலூர் ஊராட்சி ஒன்றியத்தில் கோண்டூர் ஊராட்சி உள்ளது. இது பெரிய ஊராட்சி என்பதால் அதிக மக்கள் தொகையை கொண்டுள்ளது. இந்தப் பகுதியில் இருந்து குப்பைகள் அகற்றும் பணியில் துப்புரவு ஊழியர்கள் தினந்தோறும் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறு அகற்றப்படும் குப்பைகள் அதே பகுதியில் கடலூர் - நெல்லிக்குப்பம் சாலையின் ஓரத்தில் கொட்டப்பட்டு, குப்பைகளின் கூடாரமாக மாறி வருகின்றது. இங்கு வரும் கால்நடைகள் குப்பைகளை கிளறி தங்களுக்கு தேவையான உணவுகளை உட்கொண்டு வருவதால் கடும் துர்நாற்றம் வீசி வருகின்றது. மேலும் கொட்டப்பட்டுள்ள குப்பைகளில் பெரும்பாலும் பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பதால் மக்காமல் சிதறி கிடக்கின்றது.

    அவ்வழியே வாகனத்தில் செல்வோர் மீது காற்றில் பறந்து பிளாஸ்டிக் குப்பைகள் விழுகின்றது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர். இது மட்டும் இன்றி அவ்வழியாக செல்லக்கூடிய அனைத்து பொதுமக்களும் மூக்கை பொத்திக்கொண்டு செல்லும் வகையில் துர்நாற்றம் வீசி வருவதால் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். இது சம்பந்தமாக அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகையால் ஊராட்சி நிர்வாகம், அப்பகுதி சுகாதாரத்தை பேணிக்காத்து பொதுமக்கள் பாதிக்காத வகையில் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    Next Story
    ×