என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • தி.மு.க. ஆட்சியில் 50 ஆயிரம் பேருக்கு மட்டுமே வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
    • 4 ஆண்டுகளில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களின் எண்ணிக்கை அதிகம்.

    கோவை:

    கோவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நடைபயணம் மேற்கொண்டார். அப்போது மக்களுடன் உரையாடிய எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * தேர்தல் அறிக்கையில் பொய் வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்தது தி.மு.க.

    * தி.மு.க. ஆட்சியில் 50 ஆயிரம் பேருக்கு மட்டுமே வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    * 4 ஆண்டுகளில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களின் எண்ணிக்கை அதிகம்.

    * தமிழ்நாட்டில் தூர்வாரப்படாத அணைகள் எல்லாம் அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் முறையாக தூர்வாரப்பட்டன என்றார். 



    • இபிஎஸ் மீது மலர்களை தூவி தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.
    • மத்தியில் 3வது முறையாக பிரதமர் பொறுப்பேற்று பாஜக நிலையான கட்சியாக உள்ளது.

    'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் மேட்டுப்பாளையத்தில் பிரச்சார பயணத்தை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்கினார்.

    அப்போது, இபிஎஸ் மீது மலர்களை தூவி தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.

    கோவை மேட்டுப்பாளையத்தில் நடக்கும் அதிமுக தேர்தல் பரப்புரையில் அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    கோவை மேட்டுப்பாளையத்தில் நடைபெறும் இந்த ரோடு ஷோவை பார்த்தவுடன் சிலருக்கு ஜூரம் வந்துவிடும்.

    மத்தியில் 10 ஆண்டு காங்கிரஸ் அரசில் இருந்தபோது திமுக எதையும் செய்யவில்லை. கொள்ளை அடிப்பதே திமுகவின் நோக்கமாக இருக்கிறது.

    2026 தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி அமோக வெற்றி பெரும். 2001 சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தபோது பாஜக கட்சி நல்ல கட்சி, நாங்கள் வைத்தால் மதவாத கட்சியா?

    மத்தியில் 3வது முறையாக பிரதமர் பொறுப்பேற்று பாஜக நிலையான கட்சியாக உள்ளது.

    மத்திய அரசு தமிழகத்திற்கு எதுவுமே கொடுக்கவில்லை, எதுவுமே தமிழ் செய்யவில்லை என கீரல் விழுந்த ரெக்கார்டு போல் பேசுகின்றனர்.

    16 ஆண்டுகள் மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த திமுக தமிழகத்துக்கு என்ன செய்தது?

    திமுக மக்களை பற்றி சிந்தித்ததா?, நிதி கொண்டுவந்ததா? இனியும் நாட்டு மக்களை ஏமாற்ற முடியாது.

    தமிழ்நாட்டில் வரும் தேர்தலோடு திமுக ஆட்சிக்கு முடிவு கட்டப்படும்.

    வரும் தேர்தலில் தீயசக்தியான திமுக-வின் ஆட்சி அகற்றப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும் என எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்தார்.
    • சுற்றுப்பயணத்தில் பங்கேற்க கூட்டணி கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    தமிழக சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள அ.தி.மு.க. முழு வீச்சில் தயாராகி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ள இருக்கிறார்.

    சட்டசபை தொகுதி வாரியாக ''மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்'' என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ளும் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க கூட்டணி கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தை எடப்பாடி பழனிசாமி இன்று கோவை மாவட்டத்தில் தொடங்கினார்.

    அதன்படி, மேட்டுப்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட தேக்கம்பட்டி வன பத்திரகாளி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்திய நிலையில், தனது சுற்றுப்பயணத்தை எடப்பாடி பழனிசாமி தொடங்கினார்.

    வேளாண் மக்களின் உறுதுணையோடு தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும் என எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்தார்.

    இந்நிலையில், இன்று மாலை பிரச்சார பயணத்திற்கு பிரத்யேக பேருந்தில் இபிஎஸ் புறப்பட்டார். இதில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனும் பங்கேற்றுள்ளார்.

    • நானும் ஒரு விவசாயி, விவசாயம் தான் எனது பிரதான தொழில்.
    • அ.தி.மு.க. ஆட்சியில் சொட்டு நீர் பாசனத்திற்கு மத்திய அரசிடம் அதிக நிதி பெற்றுத்தந்தோம்.

    தமிழக சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள அ.தி.மு.க. முழு வீச்சில் தயாராகி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்கிறார்.

    சட்டசபை தொகுதி வாரியாக ''மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்'' என்ற பெயரில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சுற்றுப்பயணத்தை கோவை மாவட்டத்தில் தொடங்கினார்.

    கோவை மாவட்டம் தேக்கம்பட்டியில் விவசாயிகள், செங்கல் உற்பத்தியாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:

    * நானும் ஒரு விவசாயி, விவசாயம் தான் எனது பிரதான தொழில்.

    * அ.தி.மு.க. ஆட்சியில் சொட்டு நீர் பாசனத்திற்கு மத்திய அரசிடம் அதிக நிதி பெற்றுத்தந்தோம்.

    * விவசாயிகள் படும் கஷ்டங்களை அனுபவரீதியாக நான் உணர்ந்திருக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கோவை, தேக்கம்பட்டியில் விவசாயிகள், செங்கல் உற்பத்தியாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடினார்.
    • சட்டத்துக்கு உட்பட்டு செங்கல் சூளைகளை நடத்த நாங்கள் தயாராக உள்ளோம் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

    தமிழக சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள அ.தி.மு.க. முழு வீச்சில் தயாராகி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்கிறார்.

    சட்டசபை தொகுதி வாரியாக ''மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்'' என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி இன்று சுற்றுப்பயணத்தை கோவை மாவட்டத்தில் தொடங்கினார்.

    அதன்படி, மேட்டுப்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட தேக்கம்பட்டி வன பத்திரகாளி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்திய பிறகு, தனது சுற்றுப்பயணத்தை தொடங்கிய எடப்பாடி பழனிசாமி, வேளாண் மக்களின் உறுதுணையோடு தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்தார்.

    இந்த நிலையில், கோவை மாவட்டம் தேக்கம்பட்டியில் விவசாயிகள், செங்கல் உற்பத்தியாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடினார்.

    அப்போது அவரிடம் பேசிய விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் சிலர் வழக்குப்போட்டு செங்கல் சூளையை மூட வைத்ததாக முறையிட்டனர்.

    செங்கல் உற்பத்தி நின்றதால் விறகு வியாபாரம் செய்ய முடியாமல், 3 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    தாங்கள் முதலமைச்சரானதும் செங்கல் சூளை தொழிலை மீண்டும் இயக்க ஆவன செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    சட்டத்துக்கு உட்பட்டு செங்கல் சூளைகளை நடத்த நாங்கள் தயாராக உள்ளோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

    • எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ளும் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க கூட்டணி கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
    • வன பத்திரகாளி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்திய பிறகு, தனது சுற்றுப்பயணத்தை எடப்பாடி பழனிசாமி தொடங்கினார்.

    சென்னை:

    தமிழக சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள அ.தி.மு.க. முழு வீச்சில் தயாராகி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ள இருக்கிறார். சட்டசபை தொகுதி வாரியாக ''மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்'' என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ளும் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க கூட்டணி கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தை எடப்பாடி பழனிசாமி இன்று காலை கோவை மாவட்டத்தில் தொடங்கினார்.

    அதன்படி, மேட்டுப்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட தேக்கம்பட்டி வன பத்திரகாளி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்திய பிறகு, தனது சுற்றுப்பயணத்தை எடப்பாடி பழனிசாமி தொடங்கினார்.

    வேளாண் மக்களின் உறுதுணையோடு தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும் என எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்தார்.

    • காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
    • விவசாயிகள் பெறும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.

    வடவள்ளி:

    கோவை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தொண்டாமுத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வனத்தில் ஏற்பட்ட கடும் வறட்சி காரணமாக வனவிலங்குகள் உணவு தேடி ஊருக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தின.

    இதற்கிடையே பருவமழை காரணமாக வனப்பகுதியில் வறட்சி நிலை மாறியது, இருந்த போதிலும் வனத்தில் இருந்து வெளியேறிய யானைகள் மீண்டும் வனப் பகுதிக்குள் செல்லாமல் மலை அடிவாரப் பகுதிகளில் முகாமிட்டும், சுற்று வட்டார கிராமங்களில் புகுந்து அங்குள்ள வீடுகளில் கால்நடைக்கான தீவனங்களை தின்றும் விவசாய விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியும் வருகின்றன. இதனால் விவசாயிகள் பெறும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.

    இதன்காரணமாக தொண்டாமுத்தூர் மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் ஊருக்குள் யானைகள் வராமல் தடுத்து நிறுத்த வனத் துறையினருக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில் தொண்டாமுத்தூர் அடுத்த பொம்மனம்பாளையம் பகுதியில் ரவி என்பவர் தோட்டத்திற்கு முன்பு நேற்று நள்ளிரவு 2.30 மணிக்கு ஒற்றை காட்டு யானை உணவு தேடி ஆக்ரோஷமாக சுற்றித் திரியும் காட்சிகள், அங்கு பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

    பொதுமக்களின் உயிர் மற்றும் உடமைக்கும் ஆபத்து ஏற்படும் முன்பாக அந்த ஒற்றை காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • செட்டிபாளையம் துணைமின்நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன.
    • மின்வினியோகம் பெறும் பகுதியில் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின்தடை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    கோவை:

    மசக்கவுண்டன் செட்டிபாளையம் துணைமின்நிலையத்தில் நாளை (5-ந்தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன.

    இதனால் அந்த மின்வழித்தடத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதியில் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின்தடை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    மசக்கவுண்டன் செட்டிபாளையம் பகுதியில் மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விவரம் வருமாறு:-

    மசக்கவுண்டன்செட்டிபாளையம், பொன்னேகவுண்டன்புதூர், எம்.ராயர்பாளையம், சுண்டமேடு, சென்னப்பசெட்டிப்புதூர், மாணிக்கம்பாளையம், கள்ளிப்பாளையம், தொட்டியனூரின் ஒரு பகுதி, ஓரைக்கால்பாளையம். மேற்கண்ட தகவலை கு.வடமதுரை மின்வாரிய செயற்பொறியாளர் சண்முக சுந்தரம் தெரிவித்து உள்ளார்.

    • போலீஸ் நிலையத்துக்கும், கட்டுப்பாட்டு அறைக்கும் அவர்கள் தகவல் சொன்னதாக கூறப்படுகிறது.
    • சுமார் 2 மணி நேரம் கடந்தும் போலீசார் யாரும் அங்கு செல்லாததால் தகவல் சொன்னவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    கொல்லப்பட்ட மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா மீது தற்போது அனைவரது கவனமும் திரும்பியுள்ளது. நிகிதா மீது ஏற்கனவே பல்வேறு மோசடி புகார்கள் இருந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அவரால் பாதிக்கப்பட்ட பலர் போலீசில் புகார் அளித்த வண்ணம் உள்ளனர்.

    இந்தநிலையில் போலீஸ் விசாரணைக்கு பயந்து நிகிதா கோவையில் பதுங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. கோவை-பொள்ளாச்சி சாலையில் உள்ள ஒரு ஓட்டலுக்கு நிகிதா, அவரது தாயார் ஒரு காரில் டிரைவருடன் வந்துள்ளனர். பின்னர் ஓட்டலில் அமர்ந்து அவர்கள் சாப்பிட்டுள்ளனர்.

    இதைப்பார்த்து சிலர், அவர்களிடம் விசாரித்துள்ளனர். பின்னர் அவர்களை சிறைபிடித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். போலீஸ்நிலையத்துக்கும், கட்டுப்பாட்டு அறைக்கும் அவர்கள் தகவல் சொன்னதாக கூறப்படுகிறது. சுமார் 2 மணி நேரம் கடந்தும் போலீசார் யாரும் அங்கு செல்லாததால் தகவல் சொன்னவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதையடுத்து நிகிதாவை விடுவித்துவிட்டு அவர்கள் அங்கிருந்து சென்றனர்.

    நிகிதா, தனது தாயாரை அழைத்துக்கொண்டு காரில் புறப்பட்டுச் சென்றுள்ளார். அந்த கார் கோவையை நோக்கிச் சென்றதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இதனால் நிகிதா கோவையில் தஞ்சம் அடைந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

    நிகிதா, ஓட்டலில் அமர்ந்திருக்கும் காட்சி மற்றும் அவரை சிறைபிடித்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்து உரையாற்றிய ஆடியோக்கள் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. 

    • முதற்கட்ட சுற்றுப்பயணத்தை வருகிற 23-ந்தேதி ஒரத்தநாடு, பேராவூரணி, பட்டுக்கோட்டை சட்டசபை தொகுதிகளில் நிறைவு செய்கிறார்.
    • பல்வேறு முன்னேற்பாடு பணிகளையும் அ.தி.மு.க.வினர் வேகமாக மேற்கொண்டு வருகிறார்கள்.

    கோவை:

    தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதையொட்டி அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.

    அந்த வகையில் எதிர்க்கட்சியான அ.தி.மு.கவும் மீண்டும் அரியணையில் ஏறும் முனைப்பில் தேர்தல் பணிகளை தொடங்கி விட்டது.

    அதன் ஒரு பகுதியாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

    இந்த சுற்றுப்பயணத்தில் அவர் தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கும் நேரில் சென்று மக்களை சந்திக்கிறார். தனது முதற்கட்ட மக்கள் சந்திப்பு பயணத்தை எடப்பாடி பழனிசாமி வருகிற 7-ந்தேதி கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டசபை தொகுதியில் இருந்து தொடங்குகிறார்.

    அன்று மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம் சட்டசபை தொகுதிகளிலும், மறுநாள் 8-ந் தேதி கோவை தெற்கு, வடக்கு தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் செய்கிறார். அதைத்தொடர்ந்து வரும் நாட்களில் ஒரே நாளில் 3 தொகுதிகளில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

    முதற்கட்ட சுற்றுப்பயணத்தை வருகிற 23-ந்தேதி ஒரத்தநாடு, பேராவூரணி, பட்டுக்கோட்டை சட்டசபை தொகுதிகளில் நிறைவு செய்கிறார்.

    இந்த சுற்றுப்பயணத்தின் போது ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு ரோடு ஷோ மேற்கொள்வதுடன், அதன் நிறைவில் மக்கள் மத்தியில் பேசி அ.தி.மு.க.வுக்கு ஆதரவும் திரட்டுகிறார்.

    இந்த ரோடு ஷோவின் போது அவர் வாகனத்தில் செல்லாமல் நடந்தே சென்று மக்களை சந்திக்க உள்ளார். இதுதவிர அந்தந்த தொகுதிகளில் உள்ள விவசாயிகள், தொழிலாளர்கள் உள்ளிட்டோரையும் சந்தித்து பேசுகிறார்.

    இந்த நிலையில் தனது சுற்றுப்பயணத்தின் தொடக்க விழாவில் பங்கேற்க கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ஜ.க.வுக்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.

    அந்த அழைப்பை ஏற்று வருகிற 7-ந்தேதி மேட்டுப்பாளையத்தில் தொடங்கும் எடப்பாடி பழனிசாமியின் மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயண தொடக்க விழாவில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம் மற்றும் பா.ஜ.க.வினர் பங்கேற்க உள்ளனர். இதுதவிர எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஒவ்வொரு சட்டசபை தொகுதிகளிலும் அ.தி.மு.க.வினர் மட்டுமின்றி, அந்த பகுதியை சேர்ந்த பா.ஜ.க.வினரும் பங்கேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ளதை முன்னிட்டு மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், கோவை தெற்கு மற்றும் கோவை வடக்கு சட்டசபை தொகுதிகளில் அவர் ரோடு ஷோ நடத்தக்கூடிய இடம், மக்களை சந்தித்து பேசும் இடங்களை கட்சியினர் தேர்வு செய்துள்ளனர்.

    அங்கு பல்வேறு முன்னேற்பாடு பணிகளையும் அ.தி.மு.க.வினர் வேகமாக மேற்கொண்டு வருகிறார்கள்.

    மேலும் சுற்றுப்பயணத்தை தொடங்குவதற்காக கோவைக்கு வருகை தரும் எடப்பாடி பழனிசாமிக்கு ஒருங்கிணைந்த கோவை மாவட்ட அ.தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் லட்சக்கணக்கானோர் திரண்டு வந்து அவரை மேள, தாளங்கள் முழங்க வரவேற்பதற்கான ஏற்பாடுகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    அதேபோன்று எடப்பாடி பழனிசாமி மக்களை சந்திக்க கூடிய இடங்களிலும் அ.தி.மு.க. கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் என லட்சக்கணக்கானோரை திரட்டி தங்கள் பலத்தை காட்டுவதற்கும் அ.தி.மு.கவினர் தயாராகி வருகின்றனர்.

    • கலெக்டர் அலுவலகத்திற்கு ஒருசிலர் வெடிகுண்டு வைப்பதற்கு திட்டமிட்டு உள்ளனர்.
    • தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் இருந்து அந்த கடிதம் கோவைக்கு அனுப்பப்பட்டு இருப்பது தெரியவந்து உள்ளது.

    கோவை:

    கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 30-க்கும் மேற்பட்ட அரசுத்துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. அங்கு பல்வேறு பாதுகாப்பு காரணங்கள் கருதி 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு ஒரு தபால் வந்தது. தென்காசி மாவட்டத்தை சேர்ந்த அரசு வக்கீல் பெயரில் வந்திருந்த தபாலை கலெக்டர் அலுவலக ஊழியர்கள் பிரித்து பார்த்தனர்.

    அந்த கடித்தத்தில் கலெக்டர் அலுவலகத்திற்கு ஒருசிலர் வெடிகுண்டு வைப்பதற்கு திட்டமிட்டு உள்ளனர். அவர்கள் பற்றிய விவரம் எனக்கு தெரியும். என் உயிருக்கு பாதுகாப்பு அளித்தால் அவர்கள் குறித்த விபரத்தை தெரிவிப்பதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த கலெக்டர் அலுவலக ஊழியர்கள் இதுகுறித்து உயர்அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளிக்கப்பட்டு இன்ஸ்பெக்டர் கந்தசாமி விசாரணை நடத்தினார்.

    மேலும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருந்த அரசு வக்கீலிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் தனது பெயரில் யாரோ ஒருவர் கடிதம் எழுதி இருப்பதாக கூறினார்.

    மேலும் இதே போன்ற கடிதம் அனைத்து மாவட்டத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

    தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் இருந்து அந்த கடிதம் கோவைக்கு அனுப்பப்பட்டு இருப்பது தெரியவந்து உள்ளது. தொடர்ந்து அந்த கடிதத்தை அனுப்பிய நபரை கண்டுபிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • பள்ளிக்கல்வித்துறையில் மும்மொழி கொள்கைக்கு உடன்படாததால் அவர்கள் தமிழகத்திற்கு நிதியை அளிக்கவில்லை.
    • செப்டம்பர் 15-ந் தேதி திருச்சியில் தமிழகமே திரும்பிப் பார்க்கக் கூடிய மாநாட்டை நடத்த உள்ளோம்.

    கோவை:

    திருப்பூரில் இன்று ம.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் துரைவைகோ இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலமாக கோவை வந்தார்.

    கோவை விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ம.தி.மு.க குறைந்தபட்ச அங்கீகாரம் பெற வேண்டும். அந்த அங்கீகாரத்தை பெறுவதற்கு குறிப்பிட்ட சீட்டை பெற வேண்டும் என்பது எங்களுடைய ஆசை. ஆனால் இறுதி முடிவை, கூட்டணியுடன் பேசி தலைமை தான் முடிவு எடுக்கும்.

    அதேசமயம் நாங்கள் இத்தனை சீட்டை எதிர்பார்க்கிறோம். இத்தனை சீட் கேட்டு கோரிக்கை வைக்கிறோம் என்பது தவறான சித்தரிப்பு.

    ரெயில்வே துறையில் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். சீனியர் சிட்டிசன்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை மீண்டும் வழங்க வேண்டும்.

    பா.ஜ.க ஆளும் மாநிலங்கள் இல்லாமல், இதர மாநிலங்களுக்கு உரிய நிதியை வழங்குவதில்லை என்று குற்றச்சாட்டு ஓரளவு உண்மைதான்.

    பள்ளிக்கல்வித்துறையில் மும்மொழி கொள்கைக்கு உடன்படாததால் அவர்கள் தமிழகத்திற்கு நிதியை அளிக்கவில்லை. இதனால் பல்வேறு அடிப்படை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது சம்பந்தமாக துறை சார்ந்த மந்திரிகளிடமும் எங்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மாணவர்களிடம் அரசியல் செய்யக்கூடாது என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு.

    தமிழக அரசு பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் அவர்களால் முடிந்ததை செய்து இருக்கிறார்கள். ஓரிரு குறைகள் இருக்கிறது. இருந்தாலும் அவர்களது தேர்தல் வாக்குறுதிகளை ஓரளவிற்கு நிவர்த்தி செய்துள்ளனர். மேலும் வரக்கூடிய தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்.

    செப்டம்பர் 15-ந் தேதி திருச்சியில் தமிழகமே திரும்பிப் பார்க்கக் கூடிய மாநாட்டை நடத்த உள்ளோம். தேர்தல் வரக்கூடிய காலம் என்பதால் எங்களுடைய கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும். பூத் கமிட்டிகள் அமைப்பது உள்பட 7 மண்டலங்களில் செயல்வீரர் கூட்டம் நடத்த உள்ளோம்.

    வட மாநிலங்களில் அமித்ஷா ஆங்கில மொழி என்பது அந்நிய மொழி. ஆங்கிலம் என்பது புறக்கணிக்கப்பட வேண்டும். ஆங்கிலம் இல்லாத பாரதத்தை உருவாக்க வேண்டும் என்று பிரசாரம் மேற்கொண்டு உள்ளார்.

    ஆங்கிலம் இல்லாமல் நாம் எப்படி இருக்க முடியும்? உலக தொடர்பு மொழியே ஆங்கிலம் தான். நம்முடைய தாய்மொழி ஒரு புறம் இருந்தாலும், உலக தொடர்பு மொழி என்பது ஆங்கிலம் தான். மொழியை வைத்து பா.ஜ.க தான் அரசியல் செய்கிறது.

    அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் தட்டுப்பாடு இருப்பதை மறுக்க முடியாது. கடந்த 10 ஆண்டுகளாக நிகழ்ந்த சில குளறுபடிகள் மற்றும் இன்றைக்கு இருக்கக்கூடிய நிதிச் சுமை, நிதி பற்றாக்குறையால் அதனை சரி செய்ய முடியாமல் இருக்கிறது.

    10 ஆண்டுகள் ஏற்பட்டதை 3,4 ஆண்டுகளில் சரி செய்து விட முடியாது. காலப்போக்கில் அதனை தமிழக அரசு சரி செய்து விடும் என்ற நம்பிக்கை உள்ளது.

    2009-ல் இலங்கை போர் முடிந்ததில் இருந்து தமிழக மீனவர்களை இலங்கை அரசு கைது செய்வது தொடர்கிறது.

    இதனால் மீனவர்கள் அவர்களது குழந்தைகளை இந்த மீனவத் தொழிலுக்கு அனுப்ப வேண்டாம் என்று நினைக்கிறார்கள். அடுத்த தலைமுறை இந்த மீனவத் தொழிலே செய்ய முடியாது என்ற நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளது.

    வாரந்தோறும் தமிழக மீனவர்களை இலங்கை அரசு கைது செய்வதும், கொடுமையாக தாக்குவதும் நிகழ்ந்து வருகிறது.

    இதற்கு உரிய நிரந்தர தீர்வை மத்திய அரசு கொண்டுவர வேண்டும். அது எந்த அரசாக இருந்தாலும் சரி.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×