என் மலர்tooltip icon

    சென்னை

    • காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையும்.
    • வங்காள விரிகுடாவில் புயல் உருவாக வாய்ப்புள்ளது.

    தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய தெற்கு அந்தமான் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி கடந்த 2 நாட்களாக நிலவி வந்தது. இதன்காரணமாக இன்று காலை 5.30 மணிக்கு அந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி உள்ளது. வடகிழக்கு பருவமழை காலத்தில் உருவாகி உள்ள 2-வது காற்றழுத்த தாழ்வு பகுதி இதுவாகும்.

    இந்த நிலையில், மேற்கு- மத்திய வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுவடைய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையும். மத்திய வங்கக்கடலில் 26-ந்தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி 27-ந்தேதி சூறாவளி புயலாக மாற வாய்ப்புள்ளது.

    அதன்படி, வங்காள விரிகுடாவில் புயல் உருவாக வாய்ப்புள்ளது. இந்த புயலானது ஆந்திரா நோக்கி சென்றாலும் சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • நாளடைவில் செங்கோட்டையன் அமைதியாகி விட்டார்.
    • எடப்பாடி பழனிசாமியை நேருக்கு நேர் சந்திப்பதை தவிர்க்கும் வகையிலேயே காரில் அமர்ந்திருந்தாக அ.தி.மு.க. நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    சென்னை:

    அ.தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க வலியுறுத்தி போர்க்கொடி தூக்கினார். இது தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 10 நாட்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

    செங்கோட்டையனின் இந்த கருத்துக்கு அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் யாரும் ஆதரவு தெரிவிக்கவில்லை. அதே நேரத்தில் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகியோர் செங்கோட்டையனின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.

    இதனால் இவர்கள் அனைவரும் ஒன்று சேர வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. இதன் மூலம் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகிய 3 பேரும் மீண்டும் அ.தி.மு.க.வில் இணைவதற்கான சூழல் ஏற்படுமா? என்கிற கேள்வியும் எழுந்தது. ஆனால் அது போன்று எதுவும் நடக்கவில்லை. நாளடைவில் செங்கோட்டையன் அமைதியாகி விட்டார்.

    இந்த நிலையில் செங்கோட்டையன் நேற்று அளித்த பேட்டியில் அ.தி.மு.க.வை ஒன்றிணைப்பது பற்றி எடப்பாடி பழனிசாமிக்கு நான் 10 நாட்கள் கெடு விதிக்கவில்லை என்றும் 10 நாட்களுக்குள் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்று தான் கூறியிருந்தேன் என கூறி பின்வாங்கி உள்ளார்.

    இந்த பேச்சுவார்த்தையை 10 நாளில் தொடங்கி 1½ மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என்று கூறியதை பத்திரிகையாளர்கள் தவறாக புரிந்து கொண்டு விட்டனர் என்றும் விளக்கம் அளித்துள்ள செங்கோட்டையனிடம் ராணுவ கோப்புடன் இருந்த கட்சி இப்படி உள்ளதே என்றும் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு நேரடியாக பதில் அளிக்காத செங்கோட்டையன் அது உங்கள் கருத்து என்று கூறிவிட்டு சென்னையில் இன்று நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வந்திருந்தார்.

    அ.தி.மு.க. எம்.பி. சி.வி.சண்முகம் இல்ல திருமண விழாவில் அந்த கட்சியின் பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிலையில் அதில் கலந்து கொள்ளவே செங்கோட்டையனும் சென்றார்.

    சென்னையை அடுத்த பூஞ்சேரியில் நடைபெற்ற திருமண விழாவில் எடப்பாடி பழனிசாமி முன்கூட்டியே வந்து மணமக்களை வாழ்த்தினார். அவர் திருமண மண்டபத்தின் உள்ளே இருந்ததால் செங்கோட்டையன் மண்டபத்துக்குள் உடனே செல்லாமல் நீண்ட நேரம் காரிலேயே அமர்ந்திருந்தார். எடப்பாடி பழனிசாமியை நேருக்கு நேர் சந்திப்பதை தவிர்க்கும் வகையிலேயே காரில் அமர்ந்திருந்தாக அ.தி.மு.க. நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். அ.தி.மு.க. இணைப்பு விவகாரத்தில் நல்லதே நடக்கும் என்று அவர் கூறியிருந்த நிலையில், செங்கோட்டையன் மீண்டும் நழுவி பின்வாங்கி இருப்பதாகவே அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

    • வாக்குச்சாவடி அதிகாரிகளாக உள்ள தி.மு.க.வினர், ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்படுகின்றனர்.
    • தொகுதியில் அ.தி.மு.க. ஆதரவாளர்கள் 13 ஆயிரம் நபர்களின் பெயர்கள், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில், அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. சத்தியநாராயணன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    சென்னை தி.நகர் தொகுதியில், 13 ஆயிரம் அ.தி.மு.க. ஆதரவாளர்களின் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கி விட்டனர்.

    வாக்குச்சாவடி அதிகாரிகளாக உள்ள தி.மு.க.வினர், ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்படுகின்றனர்.

    1998-ம் ஆண்டு தி.நகர் தொகுதியில் 2 லட்சத்து 8 ஆயிரத்து 349 வாக்காளர்கள் இருந்த நிலையில், 30 ஆண்டுகளுக்கு பிறகு, 2021 ம் ஆண்டு வெறும் 36 ஆயிரத்து 656 வாக்காளர்கள் மட்டுமே அதிகரித்துள்ளனர். மக்கள் தொகைக்கும், வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கைக்கும் பெரும் வித்தியாசம் உள்ளது.

    தொகுதியில் அ.தி.மு.க. ஆதரவாளர்கள் 13 ஆயிரம் நபர்களின் பெயர்கள், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. அதேநேரம், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்படவில்லை. இதுசம்பந்தமாக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு புகார் மனுக்கள் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    அதனால், தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய, 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன், தி.நகர் தொகுதியில் வாக்காளர் பட்டியலை மீண்டும் சரி பார்த்து, தவறான சேர்க்கை, நீக்கத்தை களைந்து இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா மற்றும் நீதிபதி ஜி.அருள் முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தி.நகர் தொகுதியில் மொத்தமாக வாக்காளர்கள் சேர்க்கையும், நீக்கமும் நடந்துள்ளதால், அவற்றை சரிபார்த்து திருத்தக் கோரி தேர்தல் ஆணையத்துக்கு பல மனுக்கள் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும், இது சம்பந்தமாக தமிழில் உள்ள ஆவணங்களை மொழி பெயர்த்து தாக்கல் செய்ய ஏதுவாக விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் கோரப்பட்டது.

    தேர்தல் ஆணையம் தரப்பில், நாடு முழுவதும் தேர்தலை எதிர்கொண்டுள்ள தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில், பீகாரைப் போன்ற சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள், அடுத்த வாரம் தொடங்க உள்ளது. அப்போது, மனுதாரர் தெரிவித்த புகார்கள் கவனிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    மனுதாரர் தரப்பு கோரிக்கையை ஏற்று வழக்கை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், பீகார் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு எதிரான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவு நகல்களை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டனர்.

    • ரூ.42.45 கோடியில் நடந்த மறுசீரமைப்பு பணிகளுக்கு பிறகு பொதுமக்கள் பயன்பாட்டுக்காக தொல்காப்பியப் பூங்கா இன்று திறக்கப்பட்டது.
    • பூங்காவில் புதிய நுழைவு வாயில், கண்காணிப்பு கோபுரம், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதி புதுப்பிக்கப்பட்டுள்ளது.

    முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியால் கடந்த 2008-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு, 2011-ம் ஆண்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்ட தொல்காப்பியப் பூங்கா, 58 ஏக்கர் பரப்பளவில் அடையாறு உப்பங்கழியை சீரமைத்து உருவாக்கப்பட்டது.

    கடந்த காலங்களில் முறையான பராமரிப்பு இல்லாததால், இந்தப் பூங்காவை மேம்படுத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

    அதன் அடிப்படையில், கடந்த ஜூலை 2021-ம் ஆண்டு சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை இந்தப் பூங்காவை மறுமேம்பாடு செய்ய திட்ட அறிக்கை தயாரித்தது. தமிழ்நாடு அரசு ரூபாய் 42.45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்தப் பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கியது.

    இந்நிலையில் மறுசீரமைப்பு பணிகளுக்கு பிறகு பொதுமக்கள் பயன்பாட்டுக்காக பூங்கா இன்று திறக்கப்பட்டது.

    சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தொல்காப்பியப் பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 58 ஏக்கரில் உள்ள தொல்காப்பிய பூங்காவில் புதிய நுழைவு வாயில், கண்காணிப்பு கோபுரம், பார்வையாளர் மாடம், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதி உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகளுடன் இந்தப் பூங்கா புதுப்பிக்கப்பட்டுள்ளது.

    • பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

    சென்னை:

    வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

    இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • தலைசிறந்த தியாகிகளாகத் தூக்குக் கயிற்றை முத்தமிட்ட மருதிருவரின் நினைவை என்றும் போற்றுவோம்!
    • இந்திய விடுதலைப் போராட்டத்துக்கு முன்னோடியாகத் தமிழர்கள் முன்னின்று உயிர்நீத்த வரலாற்றைத் தொடர்ந்து சொல்லுவோம்!

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    சிவகங்கைச் சீமையின் வீரத்துக்கு எடுத்துக்காட்டாக இம்மண்ணில் நிலைத்திருக்கும் மருது சகோதரர்கள் நினைவு நாள்.

    ஆங்கிலேய ஆதிக்கத்துக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து போராடும் உணர்வை அந்நாளிலேயே விதைத்து, தலைசிறந்த தியாகிகளாகத் தூக்குக் கயிற்றை முத்தமிட்ட மருதிருவரின் நினைவை என்றும் போற்றுவோம்! இந்திய விடுதலைப் போராட்டத்துக்கு முன்னோடியாகத் தமிழர்கள் முன்னின்று உயிர்நீத்த வரலாற்றைத் தொடர்ந்து சொல்லுவோம்! என்று கூறியுள்ளார். 



    • வளிமண்டல மேலடுக்கு சுழற்சி கடந்த 2 நாட்களாக நிலவி வந்தது.
    • வடகிழக்கு பருவமழை காலத்தில் உருவாகி உள்ள 2-வது காற்றழுத்த தாழ்வு பகுதி இதுவாகும்.

    தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக இந்திய வனிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய தெற்கு அந்தமான் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி கடந்த 2 நாட்களாக நிலவி வந்தது. இதன்காரணமாக இன்று காலை 5.30 மணிக்கு அந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி உள்ளது. வடகிழக்கு பருவமழை காலத்தில் உருவாகி உள்ள 2-வது காற்றழுத்த தாழ்வு பகுதி இதுவாகும்.

    இது மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் எந்த பகுதியில் நோக்கி நகரக்கூடும் என்பது தெரியவரும். 

    • முகத்துவாரத்தில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • முகத்துவாரத்தை அகலப்படுத்தும் பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் முன்னெச்சரிக்கை பணிகள் விரைந்து நடைபெற்று வருகிறது. அவ்வாறு நடைபெறும் பணிகளை முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் என அனைவரும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

    அந்த வகையில், சென்னை சீனிவாசபுரம் அருகே அடையாறு ஆறு கடலில் கலக்கும் முகத்துவாரத்தில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது, முகத்துவாரத்தை அகலப்படுத்தும் பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். 

    • நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.40-ம், சவரனுக்கு ரூ.320-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 500-க்கும், ஒரு சவரன் ரூ.92 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது.
    • கடந்த சில நாட்களாக வெள்ளி விலை குறைந்து வருகிறது.

    சென்னை:

    தொடர்ந்து உச்சத்தில் இருந்து அனைத்து தரப்பு மக்களையும் விழிபிதுங்க வைத்த தங்கம் விலை, நேற்று முன்தினம் அதிரடியாக குறைந்து இருந்தது. அன்றைய நாளில் மட்டும் கிராமுக்கு ரூ.460-ம், சவரனுக்கு ரூ.3 ஆயிரத்து 680-ம் சரிந்தது. எப்படி விலை ஏற்றம் கண்டதோ, அதே வேகத்தில் சரிந்து விற்பனை ஆனது. இதன் தொடர்ச்சியாக நேற்று மேலும் தங்கம் விலை குறைந்தது. அதன்படி, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 540-க்கும், ஒரு சவரன் ரூ.92 ஆயிரத்து 320-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.40-ம், சவரனுக்கு ரூ.320-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 500-க்கும், ஒரு சவரன் ரூ.92 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது.

    இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,540-க்கும் சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.92,320-க்கும் விற்பனையாகிறது.



    கடந்த சில நாட்களாக வெள்ளி விலை குறைந்து வருகிறது. அந்த வகையில், இன்றும் கிராமுக்கு 3 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 171 ரூபாய்க்கும் கிலோவுக்கு மூவாயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 71 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    23-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 92,000

    22-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 92,320

    21-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 96,000

    20-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 95,360

    19-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 96,000

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    23-10-2025- ஒரு கிராம் ரூ.174

    22-10-2025- ஒரு கிராம் ரூ.175

    21-10-2025- ஒரு கிராம் ரூ.182

    20-10-2025- ஒரு கிராம் ரூ.190

    19-10-2025- ஒரு கிராம் ரூ.190

    • தீபாவளி பண்டிகை காலம் என்பதால் செலவு மிகுந்த மாதத்தில் மின்சார கட்டண உயர்வு என்பது தங்களை அதிகம் பாதித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
    • பல இடங்களில் மின்சார கட்டணம் கணக்கீடு செய்யும் பணி முறையாக நடக்கவில்லை, பிரச்சனை இருப்பதாக பொதுமக்களிடம் இருந்து புகார் வருகிறது.

    சென்னை:

    மின்சார வாரியங்களின் நிதி நிலைமை சீராக இருப்பதற்காக அந்தந்த மாநிலங்களின் ஒழுங்குமுறை ஆணையம் அவ்வப்போது மின்சார கட்டணத்தில் மாற்றம் செய்து வருகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரையில் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின்கட்டண உயர்வை ஆண்டுதோறும் நுகர்வோர் விலை குறியீட்டு அடிப்படையில் மின்நுகர்வோர்களுக்கான மின்சார கட்டணத்தை மாற்றி அமைத்து உத்தரவு வெளியிடுகிறது.

    இந்த நிலையில் தமிழகத்தில் வீடுகளுக்கான மின்சார கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டதாக பொதுமக்கள் பரபரப்பு புகார் தெரிவித்தனர்.

    இதுகுறித்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் சிலர் தங்கள் வீடுகளில் இந்த மாத மின்சார கட்டணம் அதிகரித்து இருப்பதாக மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் கூறி வருகின்றனர். அதுவும் தீபாவளி பண்டிகை காலம் என்பதால் செலவு மிகுந்த மாதத்தில் மின்சார கட்டண உயர்வு என்பது தங்களை அதிகம் பாதித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

    அத்துடன் மின்சார கட்டணம் கணக்கீடு செய்ய வருபவர்கள் சரியான நேரத்தில் வந்து கணக்கீடு செய்யாததால் 500 யூனிட்டுக்கு கீழே பயன்பாடு உள்ளவர்களுக்கு அதனை கடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. 500 யூனிட்டுக்கு மேல் பயன்பாடு இருந்தால் மின்சார கட்டணம் உயர்கிறது. இதனை முறைப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இதுகுறித்து மின்வாரிய உயர் அதிகாரிகள் கூறும்போது, 'மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின்கட்டணம் தொடர்பான உத்தரவுகளை பிறப்பிக்கும்போதும், அதை நடைமுறைப்படுத்தும்போதும், வீட்டு நுகர்வு மின்சாரத்திற்கான கட்டணத்தை உயர்த்தக்கூடாது. அதேநேரம், அனைவருக்கும் வழங்கப்படும் இலவச மின்சார சலுகையும் தொடர வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையமும் கட்டண உயர்வு குறித்து எந்த உத்தரவும் தற்போது பிறப்பிக்கவில்லை. எனவே பொதுமக்கள் கூறுவதுபோல் மின்சார கட்டணம் உயரவில்லை.

    ஆனால் பல இடங்களில் மின்சார கட்டணம் கணக்கீடு செய்யும் பணி முறையாக நடக்கவில்லை, பிரச்சனை இருப்பதாக பொதுமக்களிடம் இருந்து புகார் வருகிறது. காலம் கடந்து மின்சார கணக்கீடு செய்யும்போது மின்சார கட்டணமும் உயர வாய்ப்பு உள்ளது. குறிப்பாக 60 நாட்களுக்கு 400 யூனிட் வரை ரூ.4.95 கட்டணமும், 401 முதல் 500 யூனிட் வரை ரூ.6.65-ம், 501 யூனிட் முதல் 600 யூனிட் வரை ரூ.8.80-ம், 601 யூனிட் முதல் 800 யூனிட் வரை ரூ.9.95-ம், 801 யூனிட் முதல் 1,000 யூனிட் வரை ரூ.11.05-ம், 1,000 யூனிட்டுக்கு மேல் ரூ.12.15 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வரும் காலங்களில் மின்சார கட்டணம் கணக்கீடு முறையாக எடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என்றனர்.

    • காலை 9 மணி முதல் மாலை 5 வரை மின் தடை செய்யப்படும்.
    • காமராஜ் நகர், பாடியநல்லூர், நேதாஜி நகர்.

    சென்னை:

    சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் மாலை 5 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (25.10.2025) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,

    புழல்: ஜவஹர்லால் நகர், காமராஜ் நகர், பாடியநல்லூர், நேதாஜி நகர் மற்றும் பைபாஸ் சாலை.

    • ஆழ்கடலில் இந்த தாழ்வுப்பகுதி உருவாகி இருப்பதால் அடுத்தடுத்த நிலைகளை வேகமாக அடையக்கூடும்.
    • சென்னைக்கு அருகே கடந்து, ஆந்திரா சென்றால், வட தமிழகத்தில் நல்ல மழை இருக்கும்.

    சென்னை:

    வங்கக்கடலில் சமீபத்தில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றது. மேலும் தாழ்வு மண்டலமாகவோ, புயலாகவோ வலுவடையும் என சொல்லப்பட்டது. தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என்றெல்லாம் பேசப்பட்டது. ஆனால் அதற்கான அமைப்பு அப்படியே மாறியது.

    இதனால் எதிர்பார்த்த மழையும் கிடைக்கவில்லை. வலுப்பெற இருந்த அமைப்பும் வலு குறைந்து காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக தற்போது நிலவி வருகிறது. இந்த நிலையில் தற்போது வங்கக்கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று உருவாக இருக்கிறது. தெற்கு அந்தமான் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    இந்த புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்தகட்டமாக எப்படி நகரும்? வலுவடைந்தால் அதன் இலக்கு எங்கே நோக்கி இருக்கும்? என்பது பற்றிய மற்ற விவரங்களை வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கவில்லை.

    ஆனால் இதுபற்றி வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தரிடம் கேட்டபோது, 'இது தமிழகம், ஆந்திரா 2 பகுதிகளை நோக்கி நகருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. ஆழ்கடலில் இந்த தாழ்வுப்பகுதி உருவாகி இருப்பதால் அடுத்தடுத்த நிலைகளை வேகமாக அடையக்கூடும். அந்தவகையில் 26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைகிறது. தொடர்ந்து இது புயலாகவும் மாற வாய்ப்புகள் அதிகம். இப்படி அடுத்தடுத்து வேகமாக வலுவடைந்தால், ஆந்திராவை நோக்கி நகரும். அதுவே அமைப்பு வலுவடைவதில் தாமதம் ஏற்பட்டால், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவோ அல்லது சாதாரண புயலாகவோ வடதமிழகம்-தெற்கு ஆந்திராவை நோக்கி நகரக்கூடும். இந்த 2 போக்கில் எது அதன் இலக்காக இருக்கும் என்பதை இன்று கணிக்க முடியும்' என்றார்.

    வங்கக்கடலில் உருவாகி இருக்கும் இந்த அமைப்பு ஆந்திரா நோக்கி சென்றால், தமிழகத்துக்கு மழை உள்ளிட்ட எந்த தாக்கமும் ஏற்படாது. அதுவே சென்னைக்கு அருகே கடந்து, ஆந்திரா சென்றால், வட தமிழகத்தில் அதிலும் குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் நல்ல மழை இருக்கும் என சொல்லப்படுகிறது.

    வானிலை ஆய்வு மையம் இதை சொல்லாமல் சொல்வது போல, தமிழகம் நோக்கி இந்த அமைப்பு நகரும் பட்சத்தில் மழைக்கான வாய்ப்பு எங்கெல்லாம் இருக்குமோ, அதனை 26-ந்தேதியில் இருந்து சுட்டிக்காட்டியிருக்கிறது. அதன்படி, 26-ந்தேதி திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும், 27-ந்தேதி (திங்கட்கிழமை) ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், 28-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்த 2 நிகழ்வுகளில் எது நடந்தாலும், நடக்காவிட்டாலும் மத்திய மாவட்டங்கள், மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மற்றும் தென்மாவட்டங்களில் பகலில் வெப்பமான சூழலும், இரவில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கான வாய்ப்பும் இருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    ×