என் மலர்tooltip icon

    சென்னை

    • தீபாவளி பண்டிகை கடந்த அக்.20-ந்தேதி கொண்டாடப்பட்டது.
    • விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் 25-ந் தேதி பணி நாளாக செயல்பட வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி இருந்தது.

    தீபாவளி பண்டிகை கடந்த அக்.20-ந்தேதி கொண்டாடப்பட்டது. தீபாவளி விடுமுறையில் சொந்த ஊர்களுக்கு சென்று திரும்புபவர்களுக்கு வசதியாக, கடந்த 21-ந்தேதி (செவ்வாய்கிழமை) பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் 25-ந் தேதி பணி நாளாக செயல்பட வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி இருந்தது.

    அதன்படி, சென்னையில் இன்று அனைத்து தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் இயங்கும். செவ்வாய்க்கிழமை பாடவேளையை பின்பற்றி முழு பணி நாளாக செயல்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி சென்னையில் இன்று அனைத்து பள்ளிகளும் செயல்படுகிறது.

    • தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
    • அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததை அடுத்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனிடையே, வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளதாக தமிழ்நாட்டில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது. 

    • இன்று அதிகாலை 5.30 மணிக்கு இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.
    • அக்டோபர் 25ம் தேதி அன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடையும்.

    தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய பிறகு 2-வது காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவானது. இந்த புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தெற்கு அந்தமான் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

    தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடலில் நிலை கொண்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் இன்று அதிகாலை 5.30 மணிக்கு இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.

    இந்நிலையில், தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு- வடமேற்கு நோக்கி நகர்ந்து அக்டோபர் 25ம் தேதி அன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது அக்டோபர் 26ம் தேதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வரும் 27ம் தேதி அன்று புயலாக மாற வாய்ப்புள்ளதாவும் கூறப்பட்டுள்ளது.

    • வங்கக் கடல் பகுதியில் இன்று அதிகாலை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
    • மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது.

    தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய பிறகு 2-வது காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவானது. இந்த புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தெற்கு அந்தமான் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

    தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடலில் நிலை கொண்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் இன்று அதிகாலை 5.30 மணிக்கு இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.

    இது மேற்கு- வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது.

    வருகிற 26-ந்தேதி அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது. மறுநாள் 27-ந்தேதி காலையில் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது.

    இந்நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை, கன்னியாகுமரி, மதுரை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதேபால், சிவகங்கை, தென்காசி, திருவள்ளூர், தூத்துக்குடி, நெல்லை மற்றும் விருதுநகர் மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    • ஏழை, எளிய அரசுப் பள்ளி மாணவர்களின் நலனைக் காக்க வேண்டாமா?
    • திமுக அரசிடம் தமிழக மக்களுக்கு உள்ள கடைசி எதிர்பார்ப்பு.

    பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    உங்கள் சகாவைப் பார்த்தாவது மனம் மாறுங்கள், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே!

    'பி.எம்., ஸ்ரீ' எனப்படும், பிரதமரின் முன்னேறும் இந்தியாவுக்கான பள்ளிகள் திட்டத்தில் இணைய கேரள அரசு முடிவு செய்துள்ள செய்தி தங்கள் காதுகளுக்கு எட்டியிருக்கும் என நம்புகிறேன்.

    இத்திட்டத்தில் இணைந்ததற்கான காரணமாகப் பொதுவெளியில் என்ன கூறினாலும், இதன் வாயிலாக ஸ்மார்ட் வகுப்புகள், டிஜிட்டல் நூலகம், டிஜிட்டல் ஆய்வகம், விளையாட்டு உபகரணங்களுடன் கூடிய மைதானம், இன்னோவேஷன் கவுன்சில் போன்ற வசதிகளுடன் கூடிய முன்மாதிரிப் பள்ளிகளாக அரசுப் பள்ளிகள் தரம் உயர்த்தப்படும். இதனால், கேரளாவின் பல லட்சம் ஏழைப் பிள்ளைகள் இலவசமாகத் தரமான கல்வியைப் பெற முடியும் என்பது தங்களுக்கும் தெரியும்.

    தொட்டதற்கெல்லாம் அண்டை மாநிலங்களை உற்றுநோக்கும் நீங்கள், உங்கள் கம்யூனிஸ்ட் சகாவான பினராயி விஜயன்

    அவர்கள் ஆளும் கேரளாவைப் பார்த்து மனம் மாறினால் என்ன? "கல்வியில் சிறந்த தமிழ்நாடு" என்று ஆடம்பர விழாக்களை மட்டும் நடத்தினால் போதுமா? ஏழை, எளிய அரசுப் பள்ளி மாணவர்களின் நலனைக் காக்க வேண்டாமா? அவர்களை முன்னேற்ற வேண்டாமா?

    ஆட்சி முடியும் தருவாயிலாவது, தமது அரசியல் காழ்ப்புணர்ச்சியைவிட்டு, தமிழக மாணவர்களின் நலன் காக்க முன்வர வேண்டும் என்பது தான் திமுக அரசிடம் தமிழக மக்களுக்கு உள்ள கடைசி எதிர்பார்ப்பு. அதையாவது நிறைவேற்றுங்கள் முதல்வரே!

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பஹ்ரைனில் நடைபெற்ற 3வது ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டி நடைபறெ்றது.
    • சர்வதேச அரங்கில் வெற்றிக்கொடி நாட்டி தமிழ்நாட்டுக்குப் பெருமைத் தேடித்தந்துள்ளனர்.

    பஹ்ரைனில் நடைபெற்ற 3rd Asian Youth Games-ல் நடைபறெ்ற கபடி போட்டியில் தங்கம் வென்ற தமிழ்நாடு வீரர்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    பஹ்ரைனில் நடைபெற்ற 3rd Asian Youth Games-ல், இந்திய கபடி அணி Boys மற்றும் Girls பிரிவில் தங்கப் பதக்கங்களை வென்றது அறிந்து மகிழ்ந்தோம்.

    Girls அணியில் சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த தங்கை கார்த்திகாவும், Boys அணியில் தம்பி அபினேஷ் மோகன்தாஸும் இடம்பெற்றிருந்தது நமக்கெல்லாம் பெருமை.

    தம்பி அபினேஷ் தேனியில் உள்ள நமது SDAT விடுதியில் தங்கி பயிற்சி எடுத்தவர் என்பதும், தங்கை கார்த்திகா எளிய பின்புலத்தில் இருந்து புறப்பட்டு இந்த உயரத்தை அடைந்திருக்கிறார் என்பதும் கூடுதல் சிறப்பு.

    சர்வதேச அரங்கில் வெற்றிக்கொடி நாட்டி தமிழ்நாட்டுக்குப் பெருமைத் தேடித்தந்துள்ள கார்த்திகா மற்றும் அபினேஷை வாழ்த்தி மகிழ்கிறோம். இவர்கள் இருவரும் மென்மேலும் பல வெற்றிகளை குவிக்கட்டும்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • காலையில் கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,540-க்கு விற்பனையானது.
    • சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.92,320-க்கும் விற்பனையானது.

    சென்னை:

    தொடர்ந்து உச்சத்தில் இருந்து அனைத்து தரப்பு மக்களையும் விழிபிதுங்க வைத்த தங்கம் விலை, நேற்று முன்தினம் அதிரடியாக குறைந்து இருந்தது. அன்றைய நாளில் மட்டும் கிராமுக்கு ரூ.460-ம், சவரனுக்கு ரூ.3 ஆயிரத்து 680-ம் சரிந்தது. எப்படி விலை ஏற்றம் கண்டதோ, அதே வேகத்தில் சரிந்து விற்பனை ஆனது. இதன் தொடர்ச்சியாக நேற்று மேலும் தங்கம் விலை குறைந்தது. அதன்படி, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 540-க்கும், ஒரு சவரன் ரூ.92 ஆயிரத்து 320-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.40-ம், சவரனுக்கு ரூ.320-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 500-க்கும், ஒரு சவரன் ரூ.92 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது.

    அந்த வகையில் இன்று காலை சற்று உயர்ந்தது. கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,540-க்கும் சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.92,320-க்கும் விற்பனையானது.

    இந்நிலையில் காலையில் உயர்ந்த தங்கம் விலை தற்போது குறைந்துள்ளது. அதன்படி கிராமுக்கு 140 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.11,400-க்கும் சவரனுக்கு 1120 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.91,200-க்கும் விற்பனையானது.

    கடந்த சில நாட்களாக வெள்ளி விலை குறைந்து வருகிறது. அந்த வகையில், இன்றும் கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 170 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    23-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 92,000

    22-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 92,320

    21-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 96,000

    20-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 95,360

    19-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 96,000

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    23-10-2025- ஒரு கிராம் ரூ.174

    22-10-2025- ஒரு கிராம் ரூ.175

    21-10-2025- ஒரு கிராம் ரூ.182

    20-10-2025- ஒரு கிராம் ரூ.190

    19-10-2025- ஒரு கிராம் ரூ.190

    • தி.மு.க.வில் தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவை ஏற்கனவே அமைத்துள்ளார்.
    • தேர்தல் பணிகளை மேற்பார்வையிட மண்டல அளவில் பொறுப்பாளர்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நியமித்துள்ளார்.

    சென்னை:

    தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு ஏப்ரலில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த பொதுத்தேர்தலில் 200 தொகுதிகளில் தி.மு.க. வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கை முன் வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வியூகம் வகுத்துள்ளார்.

    இதற்காக தி.மு.க.வில் தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவை ஏற்கனவே அமைத்துள்ளார். இந்த குழுவில் கட்சியின் முதன்மைச் செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, இளைஞரணி செயலாளர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் தங்கம் தென்னரசு இடம் பெற்றுள்ளனர்.

    இக்குழு தி.மு.க.வில் மேற்கொள்ள வேண்டிய சீரமைப்புகளை தலைமைக்கு தெரிவித்து வருகிறது. அதன் அடிப்படையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

    அந்த வகையில் தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் உள்ள வெற்றி வாய்ப்பு நிலவரங்களை சேகரித்து அதில் 'வீக்கான' தொகுதிகளையும் பட்டியல் எடுத்து வைத்துள்ளனர்.

    அதன் அடிப்படையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 'உடன்பிறப்பே வா' என்ற தலைப்பில் சட்ட சபை தொகுதி வாரியாக தி.மு.க.வினரை அண்ணா அறிவாலயத்துக்கு அழைத்து விசாரித்து வருகிறார். தொகுதியை மேலும் வலுவாக்கும் வகையில் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறார். இதுவரை 70 தொகுதிகளுக்கும் அதிகமாக ஆய்வு செய்துள்ளார்.

    இதன் அடுத்த கட்டமாக வாக்குச்சாவடி முகவர்களுக்கு (பி.எல்.ஏ.2) தேவையான ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் தேர்தல் பணிகளை மேற்பார்வையிட மண்டல அளவில் பொறுப்பாளர்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நியமித்துள்ளார்.

    அதன்படி சென்னைக்கு தி.மு.க. துணை பொதுச் செயலாளர் ஆ.ராசாவும், தென் மண்டல தேர்தல் பொறுப்பாளராக கனிமொழி எம்.பி.யும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதே போல் ஒவ்வொரு மண்டலத்துக்கும் அமைச்சர்களை நியமித்துள்ளார். இவர்கள் பாக முகவர்கள் கூட்டத்தை கூட்டி ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.

    இதைத் தொடர்ந்து இப்போது 'என் வாக்குச்சாவடி' 'வெற்றி வாக்குச்சாவடி' என்ற பயிற்சி கூட்டத்தை மாமல்லபுரத்தில் 28-ந்தேதி நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்பாடு செய்துள்ளார்.

    மாமல்லபுரம் அருகே உள்ள பூஞ்சேரியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெறும் இந்த பயிற்சி கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், தொகுதி பார்வையாளர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், ஒன்றிய நகரப் பகுதி பேரூர் கழக செயலாளர்கள் இந்த பயிற்சி கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் தி.மு.க.வின் வெற்றியை உறுதி செய்யும் வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் கலந்து கொண்டு பேசினார்.

    இந்த கூட்டத்திற்கான முன்னேற்பாடுகளை காஞ்சி வடக்கு மாவட்டக் கழக செயலாளர், அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னின்று செய்து வருகிறார்.

    • தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
    • மாதவரத்தில் இருந்து இன்று மற்றும் நாளை 40 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    சென்னை:

    திருச்செந்தூரில் வருகிற 27-ந்தேதி சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது. இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும், பெங்களூருவில் இருந்தும் திருச்செந்தூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை, சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்து வருகிற 26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருச்செந்தூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. திருச்செந்தூரில் இருந்து வருகிற 27-ந்தேதி சென்னை, சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. பொதுமக்கள் www.tnstc.in மற்றும் tnstc official app மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம்.

    இன்று (வெள்ளிக்கிழமை) முகூர்த்த நாள் மற்றும் வார விடுமுறையையொட்டி பொதுமக்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொள்வார்கள். எனவே, தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து இன்று திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, நெல்லை, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 365 பஸ்களும், நாளை (சனிக்கிழமை) 445 பஸ்களும் இயக்கப்பட உள்ளது.

    சென்னை கோயம்பேட்டில் இருந்து இன்று மற்றும் நாளை திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 120 பஸ்கள் இயக்கப்பட உள்ளது. பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களில் இருந்து இன்று மற்றும் நாளை பல்வேறு இடங்களுக்கும் 200 பஸ்கள் இயக்கப்பட உள்ளது. மாதவரத்தில் இருந்து இன்று மற்றும் நாளை 40 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    மேலும், வருகிற 26-ந்தேதி சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் இன்று அதிகாலை 5.30 மணிக்கு இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
    • 27-ந்தேதி காலையில் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய பிறகு 2-வது காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவானது. இந்த புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தெற்கு அந்தமான் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

    தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடலில் நிலை கொண்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் இன்று அதிகாலை 5.30 மணிக்கு இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.

    இது மேற்கு-வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது.

    வருகிற 26-ந்தேதி அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது. மறுநாள் 27-ந்தேதி காலையில் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது.

    இதன் காரணமாக கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வருகிற 26-ந்தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 27 மற்றும் 28-ந்தேதிகளில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும், சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

    இன்று புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், நாளை கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    வருகிற 26-ந்தேதி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வருகிற 27, 28-ந்தேதிகளில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த தகவலை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • ஆலோசனையில் தலைமை செயலாளர் மற்றும் துறைசார் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
    • பாதிக்கப்பட்ட பகுதிகளில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனையில் தலைமை செயலாளர் மற்றும் துறைசார் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    தமிழ்நாட்டில் மழை நிலவரம், கனமழை பாதிப்புகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    பல்வேறு மாவட்டங்களில் மழை நிலவரம், மழை பாதிப்புகள், மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை பணிகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

    பாதிக்கப்பட்ட பகுதிகளில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

    • ஒவ்வொரு ஆண்டும் உருவாகும் புயல்களுக்கு நாடுகள் பரிந்துரைக்கும் பெயர்களே சூட்டப்படுகிறது.
    • இந்த புயலானது ஆந்திரா நோக்கி செல்வதற்கான வாய்ப்புகள்.

    சென்னை:

    இந்தாண்டு வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழ்நாடு முழுவதும் மழை பெய்து வருகிறது. பெரும்பாலான மாவட்டங்களில் கனமழையும் சில மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது. கனமழை பெய்த மாவட்டங்களில் உள்ள அணைகள் நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

    இதனிடையே, வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

    அதன்படி, வருகிற 27-ந்தேதி வங்காள விரிகுடாவில் புயல் உருவாக வாய்ப்புள்ளது. இந்த புயலானது ஆந்திரா நோக்கி செல்வதற்கான வாய்ப்புகள் இருந்தாலும் சென்னையில் கனமழை பெய்யவதற்கான சாத்திக்கூறுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

    இதனிடையே, வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக உருவானால் அதற்கு தாய்லாந்து நாடு பரிந்துரைத்த Montha என்று பெயரிடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் உருவாகும் புயல்களுக்கு நாடுகள் பரிந்துரைக்கும் பெயர்களே சூட்டப்படுகிறது குறிப்பிடத்தக்கது. 

    ×