என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஆண்டு தொடக்கத்தில் அதிரடியாக உயர்ந்த சிலிண்டர் விலை
    X

    ஆண்டு தொடக்கத்தில் அதிரடியாக உயர்ந்த சிலிண்டர் விலை

    • எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர் விலையை தீர்மானிக்கின்றன.
    • கடந்த 2 மாதங்களாக வணிக சிலிண்டர் விலை குறைந்த நிலையில் தற்போது மீண்டும் உயர்ந்துள்ளது.

    சென்னை:

    சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு எண்ணெய் நிறுவனங்களே சிலிண்டர் விலையை தீர்மானித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர் விலையை தீர்மானிக்கின்றன.

    அந்த வகையில், ஜனவரி மாதத்திற்கான வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

    சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்களின் விலை 110 ரூபாய் உயர்ந்து ரூ.1,849.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2 மாதங்களாக வணிக சிலிண்டர் விலை குறைந்த நிலையில் தற்போது மீண்டும் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமுமின்றி ரூ.868.50-க்கு விற்பனையாகிறது.

    Next Story
    ×