என் மலர்
சென்னை
- தொலைபேசி வழியாக 6,598 பரிந்துரைகளும் கோரிக்கைகளும் வந்துள்ளன.
- ஏ.ஐ. வழியாக 5680 கோரிக்கைகளும் பரிந்துரைகள் வந்துள்ளது.
தி.மு.க. தேர்தல் அறிக்கைக்கு கடந்த 4 நாட்களில் பெறப்பட்டுள்ள கோரிக்கைகள் விவரம்:
3-ந் தேதி முதல் 6ம் தேதி வரை தொலைபேசி வழியாக 6,598 பரிந்துரைகளும் கோரிக்கைகளும் வந்துள்ளன. வாட்ஸ் அப் வழியாக 29,036, மின்னஞ்சல் வழியாக 1046, இணையதளம் வழியாக 8266 கியூ.ஆர்.கோடு வழியாக வழியாக 1394, ஏ.ஐ. வழியாக 5680 கோரிக்கைகளும் பரிந்துரைகளும் வந்துள்ளது.
கடந்த 4 நாட்களில் இதுவரை மொத்தம் 52,080 பரிந்துரைகளும், கோரிக்கைகளும் பெறப்பட்டுள்ளதாக தி.மு.க. அறிவித்துள்ளது.
- தமிழ்நாடு முழுவதும், ஆவின் பால் விலை மற்றும் வகைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.
- தங்கு தடையின்றி ஆவின் பால் அனைத்து பகுதிகளிலும் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
சென்னை :
ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் நாளொன்றுக்கு ஆவின் மூலம் 31 இலட்சம் லிட்டர் பால் விநியோகம் செய்பப்படுகிறது. குறிப்பாக சென்னையில் நாளொன்றுக்கு சுமார் 15 இலட்சம் லிட்டர் பால் மற்றும் மாதம் ஒன்றுக்கு சுமார் ரூ.30 கோடி மதிப்பிலான பால் பொருட்கள் 35 ஆவின் ஜங்ஷன் பாலகங்கள், 200 ஆவின் பாலகங்கள் மற்றும் சுமார் 860 சில்லரை விற்பனையாளர்கள் மூலமாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஆவின் மூலம் பொது மக்களுக்கு சமன்படுத்தப்பட்ட பால் இருமுறை சமன்படுத்தப்பட்ட பால், நிலைப்படுத்தப்பட்ட பால், நிறைகொழுப்பு பால் மற்றும் டிலைட் பால் என ஐந்து வகை பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது.
தமிழ்நாடு முழுவதும், ஆவின் பால் விலை மற்றும் வகைகளில் எவ்வித மாற்றமும் இல்லை. மேலும், தங்கு தடையின்றி ஆவின் பால் அனைத்து பகுதிகளிலும் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
எனவே ஆவின் பால் விலையேற்றம் என வெளியிடப்படும் செய்தி முற்றிலும் தவறு மற்றும் ஆதாரமற்றது என தெரிவிக்கப்படுகிறது.
- மேலும் சில கட்சிகள் கூட்டணியில் இணைவார்கள் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
- கூட்டணிக் கட்சி தலைவர்களை ஒரே மேடையில் ஏற்றி உரையாற்ற உள்ளதாகவும் கூறப்படுகிறது.
சென்னை:
தமிழக சட்டசபைக்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, இன்று காலை அ.தி.மு.க- பா.ம.க. இடையே கூட்டணி உறுதியாகி உள்ளது. மேலும் பா.ம.க. ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்து பின்னர் தெரிவிக்கப்படும் என்றும் மேலும் சில கட்சிகள் கூட்டணியில் இணைவார்கள் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
இந்த நிலையில், பிரதமர் மோடி வருகிற 28-ந்தேதி தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கன்னியாகுமரியில் நடைபெற உள்ள தாமரை மகளிர் மாநாட்டில் பிரதமர் பங்கேற்க உள்ளதாகவும், கூட்டணிக் கட்சி தலைவர்களை ஒரே மேடையில் ஏற்றி உரையாற்ற உள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதனை தொடர்ந்து கூட்டணியை உறுதி செய்யும் பணிதீவிரமாக நடைபெற்று வருகிறது. பிரதமர் வருகைக்குள் கூட்டணி பேச்சுவார்த்தையை முடிக்க பா.ஜ.க. தீவிர பணியாற்றி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சட்டசபை தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், இன்று அதிமுக- பாமக கூட்டணி உறுதியாகி உள்ளதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது.
- தி.மு.க. அரசை தூக்கி எறிந்து அ.தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.
- டெல்லியில் எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ.க.வின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலை சந்திக்கிறார்.
சென்னையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று சந்தித்து பேசினார்.
இதையடுத்து எடப்பாடி பழனிசாமி- அன்புமணி இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பான கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதன்பின் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து கூட்டணியை உறுதி செய்தனர். அப்போது, இயற்கையாக அமைந்த கூட்டணி அ.தி.மு.க. - பா.ம.க. கூட்டணி. தி.மு.க. அரசை தூக்கி எறிந்து அ.தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். எங்களது கூட்டணி வெற்றிக்கூட்டணி என்று தெரிவித்தனர்.
அ.தி.மு.க. - பா.ம.க. கூட்டணி உறுதியானதை தொடர்ந்து இன்று மாலை எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்கிறார்.
டெல்லியில் எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ.க.வின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலை சந்திக்கிறார். தொகுதி பங்கீடு விவகாரங்கள் குறித்து அவர் பேச உள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழ்நாட்டுக்கு வந்திருந்தபோது எடப்பாடி பழனிசாமி சந்திக்கவில்லை. திருச்சியில் அமித் ஷாவை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மட்டும் சந்தித்தார்.
- பாமக தொண்டர்கள் எதிர்பார்த்த கூட்டணி அமைந்துள்ளது.
- மக்கள் விரோத திமுக கூட்டணியை அகற்றுவதற்காக அதிமுகவுடன் கைகோர்த்துள்ளோம்.
சென்னை:
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் கட்சி நிர்வாகிகள் வருகை தந்தனர். இதன்பின், எடப்பாடி பழனிசாமி- அன்புமணி இடையே நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பான கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்பின், இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது முதலில் பேசிய எடப்பாடி பழனிசாமி,
* அதிமுக கூட்டணியில் அன்புமணி தலைமையிலான பாமக இணைந்துள்ளது.
* மேலும் சில கட்சிகள் எங்கள் கூட்டணியில் இணைவார்கள்.
* இயற்கையாக அமைந்த கூட்டணி அதிமுக-பாமக கூட்டணி.
* திமுக அரசை தூக்கி எறிந்து அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.
* எங்களது கூட்டணி வெற்றிக்கூட்டணி என்றார்.
இதன்பின்னர் பேசிய அன்புமணி,
* பாமக தொண்டர்கள் எதிர்பார்த்த கூட்டணி அமைந்துள்ளது.
* மக்கள் விரோத திமுக கூட்டணியை அகற்றுவதற்காக அதிமுகவுடன் கைகோர்த்துள்ளோம்.
* வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக பெருவாரியான தொகுதிகளில் வென்று ஆட்சி அமைக்கும் என்றார்.
- தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தில் விற்பனையாகிறது.
- தங்கத்துக்கு போட்டியாக வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது.
சென்னை:
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை காலை, மாலை என இருவேளைகளில் உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தில் விற்பனையாகிறது. இதனால் சுபநிகழ்ச்சிகளுக்காக தங்கம் வாங்க நினைப்போருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,870-க்கும் சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 960 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

தங்கத்துக்கு போட்டியாக வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது. அந்த வகையில், இன்று ஒரே நாளில் கிராமுக்கு 12 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 283 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
6-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,02,640
5-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,02,080
4-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,00,800
3-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,00,800
2-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,00,640
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
6-1-2026- ஒரு கிராம் ரூ.271
5-1-2026- ஒரு கிராம் ரூ.266
4-1-2026- ஒரு கிராம் ரூ.257
3-1-2026- ஒரு கிராம் ரூ.257
2-1-2026- ஒரு கிராம் ரூ.260
- சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து இரு தலைவர்களும் இறுதி செய்தனர்.
- அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வருகை புரிந்தார். சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து இரு தலைவர்களும் இறுதி செய்தனர்.
இதையடுத்து சட்டசபை தேர்தல் கூட்டணி தொடர்பாக அ.தி.மு.க. - பா.ம.க. இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
பா.ம.க.வுக்கு மாநிலங்களவை எம்.பி. சீட் ஒன்றையும் கொடுக்க அ.தி.மு.க தலைமை சம்மதம் என தகவல் வெளியாகி உள்ளது.
அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலின்போது பா.ம.க.வுக்கு ராஜ்யசபா சீட்டை அ.தி.மு.க. ஒதுக்கியது. கடந்த 2021 சட்டசபை தேர்தலில் பா.ம.க.வுக்கு 23 தொகுதிகளை அ.தி.மு.க. ஒதுக்கியது.
சட்டசபை தேர்தலில் எத்தனை தொகுதிகளில் பா.ம.க. போட்டி என்பது குறித்து இன்றே தெரிந்து விடும்
- அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்திக்கிறார்.
- கடந்த 2021 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இடம் பெற்றிருந்தது.
சட்டசபை தேர்தல் கூட்டணி தொடர்பாக அ.தி.மு.க. - பா.ம.க. இடையே ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்திக்கிறார்.
அ.தி.மு.க. உடனான கூட்டணியில் பா.ம.க.வுக்கு எத்தனை தொகுதிகள் என்ற விவரமும் இன்றே தெரிய வரும் என தகவல் வெளியாகி உள்ளது.
அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 30 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2021 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இடம் பெற்றிருந்தது. பா.ம.க. இரண்டாக பிளவுபட்டுள்ள நிலையில் அன்புமணி தரப்பு அ.தி.மு.க.வுடன் கைகோர்க்கிறது.
ராமதாஸ் தரப்பு யாருடன் கூட்டணி வைக்கிறது என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.
- அவசர தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள வாரியத்தின் https;//cmwssb.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம்.
- குடிநீர் தொட்டிகள், தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் வினியோகம் வழக்கம்போல நடைபெறும்.
சென்னை:
சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மந்தைவெளி ராமகிருஷ்ணா மடம் சாலையில் எம்.ஆர்.சி.நகர் குடிநீர் பகிர்மான நிலையத்திற்கு குடிநீர் கொண்டு செல்லும் பிரதான குடிநீர் குழாய் இணைக்கும் பணிகளை மேற்கொள்ள இருக்கிறது. எனவே, நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி வரை எம்.ஆர்.சி. நகர் குடிநீர் பகிர்மான நிலையம் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்படுகிறது.
எனவே, திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, மயிலாப்பூர், சாந்தோம், நந்தனம், ராஜா அண்ணாமலை புரம், மந்தைவெளி ஆகிய பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது. பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக வேண்டிய அளவு நீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
அவசர தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள வாரியத்தின் https;//cmwssb.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். குடிநீர் தொட்டிகள், தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் வினியோகம் வழக்கம்போல நடைபெறும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பொங்கல் பரிசு தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு வழங்கப்படுகிறது.
- பொங்கல் பரிசுத் தொகுப்பு வினியோகம் வரும் 9, 10, 11-ந் தேதிகளில் ரேஷன் கடைகள் முழுமையாக செயல்படும்.
சென்னை:
தமிழர் பண்டிகையாம் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாட தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு பொங்கல் ரொக்கப்பரிசு வழங்காத நிலையில், இந்த ஆண்டு பொங்கல் பரிசாக ரூ.3 ஆயிரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை கொண்டாட தமிழகத்தின் 2 கோடியே 22 லட்சத்து 91 ஆயிரத்து 730 அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும், இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கும், இந்த ஆண்டு பொங்கல் பரிசுத்தொகுப்பு பொருட்களுடன் தலா ரூ.3 ஆயிரம் ரொக்கத்தொகையும் வழங்கப்படுகிறது.
பொங்கல் பரிசு தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு வழங்கப்படுகிறது. இதற்காக, தமிழக அரசு சார்பில் ரூ.248 கோடியே 66 லட்சத்து 17 ஆயிரத்து 959 நிதி ஒதுக்கி அரசு அரசாணை வெளியிட்டது. இந்த நிலையில் அரசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.3 ஆயிரம் ரொக்கப்பரிசு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, பொங்கல் பரிசுத்தொகுப்பும், ரொக்கப் பரிசும் சேர்த்து மொத்தம் ரூ.6 ஆயிரத்து 936 கோடியே 17 லட்சத்து 47 ஆயிரத்து 959 செலவில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இதற்கான டோக்கன் வினியோகம் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் வழங்கப்பட்டு வரும் நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆலந்தூர் நசரத்புரத்தில் உள்ள ரேஷன் கடையில் நாளை (வியாழக்கிழமை) தொடங்கி வைக்கிறார்.
எனவே, டோக்கன் வழங்கும் பணியை 7-ந்தேதிக்குள் (இன்று) வழங்கி முடிக்க ரேஷன் கடை ஊழியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், பொங்கல் பரிசுத் தொகுப்பு வினியோகம் நடைபெற உள்ள நிலையில் வரும் 9, 10, 11-ந் தேதிகளில் ரேஷன் கடைகள் முழுமையாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை தொடங்கி வைத்த உடன், நாளைய தினமே அனைத்து ரேஷன் கடைகளிலும் பொதுமக்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தின் அடிப்படையில் பரிசுத் தொகுப்பைப் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சென்னை மாநகராட்சியில் ரூ.10 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது.
- ஆதி திராவிட நலத்துறையில் ரூ.ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று சந்தித்தார்.
அப்போது தி.மு.க. அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் அடங்கிய மனுக்களை அவர் அளித்தார். பின்னர் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டி வருமாறு:-
* நகராட்சி நிர்வாக துறையில் ரூ.64 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது.
* சென்னை மாநகராட்சியில் ரூ.10 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது.
* தொழில் துறையில் ரூ.8 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது.
* பள்ளிக்கல்வி துறையில் ரூ.5ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது.
* வேளாண் துறையில் ரூ.5 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது.
* சமூக நலத்துறையில் ரூ.4ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது.
* இந்து சமய அறநிலையத்துறையில் ரூ. ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது.
* ஆதி திராவிட நலத்துறையில் ரூ.ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது.
* இளைஞர் நலத்துறையில் ரூ.500 கோடி ஊழல் நடந்துள்ளது.
* சுற்றுலாத் துறையில் ரூ.250 கோடி ஊழல் என அனைத்து துறைகளிலும் முறைகேடுகள் நடந்திருப்பதை முழுமையாக சுட்டிக் காட்டியிருக்கிறோம்.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சரியாக இல்லாததால் தமிழகத்துக்கு வர வேண்டிய முதலீடுகள் எல்லாம் அண்டை மாநிலத்துக்கு சென்று விட்டன. கடந்த 4½ ஆண்டுகளில் தமிழக அரசு ரூ.4 லட்சம் கோடி அளவுக்கு ஊழல் செய்துள்ளது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநரிடம் வலியுறுத்தி உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- காயமடைந்தவர்கள், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் என ஏராளமானோரிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது.
- த.வெ.க. மாநில பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், இணை செயலாளர் நிர்மல் குமார், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோரிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந்தேதி நடைபெற்ற த.வெ.க. தலைவர் விஜயின் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்தனர். மேலும் 110 பேர் காயமடைந்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் ஏற்கனவே போலீசார், பிரேத பரிசோதனை மேற்கொண்ட டாக்டர்கள், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர்கள், உரிமையாளர்கள், காயமடைந்தவர்கள், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் என ஏராளமானோரிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது.
இதேபோல் த.வெ.க. மாநில பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், இணை செயலாளர் நிர்மல் குமார், ஆதவ் அர்ஜூனா, கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராகி தங்களது தரப்பு விளக்கங்களை அளித்து உள்ளனர். மேலும் த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்ட வாகனத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் மற்றும் பதிவுகளும் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் கரூர் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்க்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியது. வரும் 12-ந்தேதி நேரில் ஆஜராக விஜய்க்கு சம்மன் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.






