என் மலர்
நீங்கள் தேடியது "DMK Election Manifesto"
- தொலைபேசி வழியாக 6,598 பரிந்துரைகளும் கோரிக்கைகளும் வந்துள்ளன.
- ஏ.ஐ. வழியாக 5680 கோரிக்கைகளும் பரிந்துரைகள் வந்துள்ளது.
தி.மு.க. தேர்தல் அறிக்கைக்கு கடந்த 4 நாட்களில் பெறப்பட்டுள்ள கோரிக்கைகள் விவரம்:
3-ந் தேதி முதல் 6ம் தேதி வரை தொலைபேசி வழியாக 6,598 பரிந்துரைகளும் கோரிக்கைகளும் வந்துள்ளன. வாட்ஸ் அப் வழியாக 29,036, மின்னஞ்சல் வழியாக 1046, இணையதளம் வழியாக 8266 கியூ.ஆர்.கோடு வழியாக வழியாக 1394, ஏ.ஐ. வழியாக 5680 கோரிக்கைகளும் பரிந்துரைகளும் வந்துள்ளது.
கடந்த 4 நாட்களில் இதுவரை மொத்தம் 52,080 பரிந்துரைகளும், கோரிக்கைகளும் பெறப்பட்டுள்ளதாக தி.மு.க. அறிவித்துள்ளது.
- தொழில் துறை, விவசாயிகள் என அனைத்து தரப்பினரிடமும் கருத்துக்கள் கேட்கப்படும்.
- மக்களின் எதிர்பார்ப்பை சொல்வதாக இருக்க வேண்டும் என முதலமைச்சர் சொல்லியிருக்கிறார்.
கோவை:
மேற்கு மண்டல தி.மு.க. மகளிர் அணி மாநாடு வருகிற 29-ந்தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடக்கிறது. மாநாட்டு ஏற்பாடுகளை பார்வையிடுவதற்காக தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார்.
விமான நிலையத்தில் கனிமொழி எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
தேர்தல் அறிக்கை தயாரிக்கும் போது, தேர்தல் அறிக்கை குழு கோவையில் இருக்கும் நிர்வாகிகளிடம் கலந்து பேசி முடிவு செய்யப்படும். தொழில் துறை, விவசாயிகள் என அனைத்து தரப்பினரிடமும் கருத்துக்கள் கேட்கப்படும். தி.மு.க. தயாரிக்கும் தேர்தல் அறிக்கை, மக்களுடைய தேர்தல் அறிக்கையாக இருக்க வேண்டும். மக்களின் எதிர்பார்ப்பை சொல்வதாக இருக்க வேண்டும் என முதலமைச்சர் சொல்லியிருக்கிறார்.
இங்கிருக்கும் அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து கருத்துகள் கேட்கப்படும்.
மக்களுடைய தேவைகள் என்ன என்பதை கேட்டு தெரிந்து கொண்டு, எதையெல்லாம் செய்ய முடியுமோ, அதை வாக்குறுதியாக கொடுப்போம். அதில் எண்ணிக்கை என்று எதுவும் கணக்கு இல்லை.
அரசியல் காரணங்களுக்காக தேர்தல் நேரத்தில் பல விமர்சனங்களை சில பேர் வைப்பார்கள். அதற்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது. யாருக்கு எவ்வளவு வாக்குகள் கிடைக்கும் என்பது தேர்தல் முடிந்த பிறகு மிகத் தெளிவாக தெரியும். நாங்கள் நிச்சயமாக உறுதியாக இருக்கிறோம். மீண்டும் திராவிட மாடல் ஆட்சி தொடரும். மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக தொடர்வார் என்றார்.
முன்னதாக கோவை விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் கனிமொழி எம்.பி.க்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர்கள் தொண்டாமுத்தூர் அ.ரவி, தளபதி முருகேசன், துரை செந்தமிழ்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை மையமாக வைத்து எங்களது தேர்தல் பிரசாரம் அமைந்திருக்கும்.
- காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்றைய இந்தியாவின் அவல நிலையை படம் பிடித்து காட்டுவது போல் உள்ளது.
காரைக்குடி:
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மந்திரியுமான ப.சிதம்பரம் காரைக்குடியில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு பாரதிய ஜனதா கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதே நேரத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பா.ம.க. வலியுறுத்தி வருகிறது. ஆனால் தங்கள் கொள்கைகளுக்கு முரணான பாஜகவுடன் பாமக கூட்டணி அமைத்துள்ளது.
நோய் நாடி நோய் முதல் நாடி என்பது வள்ளுவர் வாக்கு. அதற்கு ஏற்ப ஜி.எஸ்.டி. வரியில் மாற்றம் செய்வதற்கு பதிலாக செஸ் வரியை சீரமைத்தாலே பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் உள்ளிட்டவற்றின் விலைகளை வெகுவாக குறைக்கலாம்.
மாநிலத்திலும் மத்தியிலும் ஒத்த கருத்துடைய கட்சியுடன் கூட்டணி அமைவது மிகவும் அபூர்வம். தி.மு.க.வுடன் கூட்டணி அமைந்துள்ளதில் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி. காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை மையமாக வைத்து எங்களது தேர்தல் பிரசாரம் அமைந்திருக்கும். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்றைய இந்தியாவின் அவல நிலையை படம் பிடித்து காட்டுவது போல் உள்ளது.
ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது. எனவே தி.மு.க.வின் தேர்தல் அறிக்கைகளில் கூறிய வாக்குறுதிகள் அனைத்தும் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றதும் நிறைவேற்றப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.






