என் மலர்tooltip icon

    சென்னை

    • தமிழ்நாட்டின் உரிமைகளை ஒன்றிய பாஜகவிடம் விட்டுக்கொடுத்தது அடிமை அதிமுக ஆட்சியில் தான்.
    • எந்த வித நிபந்தனையும் பழனிசாமி விதிக்கவில்லை என்று அமித்ஷா அவர்களே போட்டுடுடைத்துவிட்டார்.

    தமிழ்நாடு நலனுக்கான எந்தவித உறுதியையும் பாஜகவிடம் கேட்காமல் அடிமை சாசனம் எழுதி கொடுப்பது போல கூட்டணிக்கு சரி என தலையாட்டி பொம்மையாய் பேச்சின்றி தலையை மட்டும் ஆட்டி கூட்டணியை உறுதி செய்துள்ளார் எடப்பாடி பழனிசாமி என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார்.

    இதுகுறித்து தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    இரண்டு ரைடுகளுக்கு அரண்டு போய் அமித்ஷா முன்னிலையில் ஒருவார்த்தை கூட பேசாமல் தலையாட்டி பொம்மை போல அமர்ந்து கூட்டணியை உறுதி செய்த பழனிசாமியின் யோக்கியதையை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சுட்டிக்காட்டிவிட்டார் என்றவுடன் ரோஷம் வாந்தவரைப் போல வீண் அவதூறுகளை மட்டும் அள்ளிவிட்டு X தளத்தில் பதிவிட்டுள்ளார் பழனிசாமி.

    பாரபட்சமான GST வரிப்பகிர்வை ஏற்றுக்கொண்டு பொருளாதார உரிமையை விட்டுக்கொடுத்தது, உதய் மின்திட்டத்தில் கையெழுத்திட்டு மின்கட்டண நிர்ணய உரிமையை விட்டுகொடுத்தது, CAA வை ஆதரித்து முஸ்லீம் மக்களின் முதுகில் குத்தியது இப்படி தமிழ்நாட்டின் உரிமைகளை ஒன்றிய பாஜகவிடம் விட்டுக்கொடுத்தது அடிமை அதிமுக ஆட்சியில் தான்.

    அதோடு அடிமை அதிமுக ஆட்சியில் தான் நீட் நுழைவு தேர்வு தமிழ்நாட்டில் திணிக்கப்பட்டது என்பது தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்கு தெரியும்.

    தன் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள பாஜக கூட்டணியில் ஒட்டிக்கொண்டு தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்தவர் பழனிசாமி. சரி இப்போதாவது அதற்கு பிராயச்சித்தம் செய்யும் வகையில் நீட் விலக்களித்தால் கூட்டணி வைக்கிறேன் என்றாவது பாஜக அரசிடம் வலியுறுத்தினாரா அதுவும் இல்லை.

    எந்த வித நிபந்தனையும் பழனிசாமி விதிக்கவில்லை என்று அமித்ஷா அவர்களே போட்டுடுடைத்துவிட்டார்.

    இப்படி தமிழ்நாட்டு நலனுக்கான எந்தவித உறுதியையும் பாஜகவிடம் கேட்காமல் அடிமை சாசனம் எழுதி கொடுப்பது போல கூட்டணிக்கு சரி என தலையாட்டி பொம்மையாய் பேச்சின்றி தலையைமட்டும் ஆட்டி கூட்டணியை உறுதி செய்துள்ளார் பழனிசாமி.

    இதை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சுட்டிக் காட்டி தமிழ்நாட்டை அடமானம் வைக்க துடிக்கிறார்கள் என்று கூறியதில் என்ன தவறு.

    ஏதோ "குறைந்த பட்ச செயல்திட்டம்" உள்ளது என்கிறார். அந்த ரகசியத்தை எப்போது சொல்வார்கள் தேர்தல் முடிந்த பின்னா..? அந்த செயல்திட்டத்தில் தமிழ்நாட்டு மக்கள் நலன் சார்ந்த செயல்திட்டம் உள்ளதா..? நீட் தேர்வு விலக்கு, மும்மொழி என்ற இந்தி திணிப்பு, மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை , நிதி பகிர்வில் பாரபட்சம் இப்படியான ஒன்றிய பாஜக அரசின் வஞ்சகத்திற்கு என்ன செயல் திட்டத்தை மேற்கொள்ள போகிறார் பழனிசாமி என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கேள்வி கேட்டால் அதற்கு பதில் சொல்ல துப்பில்லை.

    "சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வருவதற்கு" மக்கள் நலனைப் பற்றி பழனிசாமி சிந்தித்தால் தானே அதை பற்றி செயல்திட்டம் வகுக்க.. உங்களது அந்த செயல்திட்டம் எல்லாம் இனி அமலாக்கத்துறை அதிமுக வினர் வீட்டுக்கதவை தட்டக் கூடாது என்பதுதான் என தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும். துரோகி அதிமுகவும், விரோதி பாஜகவும் சேர்ந்த கூட்டணியை வரும் தேர்தலில் விரட்டி அடிப்பார்கள் தமிழ்நாட்டு மக்கள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • நயினார் நாகேந்திரன் மட்டுமே வேட்பு மனுதாக்கல் செய்ததால் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
    • நயினார் நாகேந்திரன் உறுதி மொழி வாசித்து தலைவர் பதவியை ஏற்றுக் கொண்டார்.

    தமிழ்நாட்டில் பா.ஜ.க. உட்கட்சி தேர்தல் கடந்த 3 மாதமாக நடந்து வருகிறது. கிளைகள், மண்டல், மாவட்டம் என்று கட்சியின் பல்வேறு மாவட்டங்களிலும் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது.

    கடைசியாக மாநில தலைவர், தேசிய பொதுக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடத்த வேண்டி இருந்தது. இதற்கிடையில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க தலைவர் பதவியில் அண்ணாமலை நீடிப்பதை அ.தி.மு.க. தலைமை விரும்பவில்லை.

    இதனால் கூட்டணியை உறுதிப்படுத்துவதற்கு முன்பு புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் பா.ஜ.க.வுக்கு ஏற்பட்டது.

    நேற்று அமித்ஷா சென்னையில் இருந்த போது கட்சி தலைவருக்கான தேர்தலை மின்னல் வேகத்தில் தொடங்கினார்கள். மதியம் 2 மணி முதல் மாலை 4 மணிவரை தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் மனுதாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது.

    ஆனால் கட்சி மேலிடத்தை பொறுத்தவரை நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ.வை மாநில தலைவராக நியமிக்க முடிவு செய்த விட்டனர். எனவே தேர்வு ஒரு மனதாக இருக்க வேண்டும் என்ற மேலிடத்தின் விருப்பம் பற்றிய தகவல் கட்சியினருக்கு தெரிவிக்கப்பட்டது.

    இதனால் தலைவர் பதவியை எதிர்பார்த்த மூத்த தலைவர்கள் உள்பட யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. நயினார் நாகேந்திரன் மட்டுமே வேட்பு மனுதாக்கல் செய்ததால் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

    புதிய தலைவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் நிகழ்ச்சியும், தேசிய பொதுக்குழு உறுப்பினர்களை தேர்வு செய்வதும் இன்று மாலை 5 மணியளவில் வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் நடைபெற்று வருகிறது.

    இதில் கலந்து கொள்ள பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள், மூத்த தலைவர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என 3 ஆயிரம் பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளது.

    நிகழ்ச்சி தொடங்கிய நிலையில், தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரன் மட்டுமே மனு செய்து இருப்பதாகவும், அவரது மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் மாநில தேர்தல் அதிகாரியான சக்கரவர்த்தி அறிவித்தார்.

    அதை தொடர்ந்து மேலிட பார்வையாளர் கிஷன் ரெட்டி முன்னிலையில் தேசிய தேர்தல் பொறுப்பாளர் தருண்சுக் தமிழக பா.ஜ.க. தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக அறிவித்தனர்.

    அதை தொடர்ந்து நயினார் நாகேந்திரன் உறுதி மொழி வாசித்து தலைவர் பதவியை ஏற்றுக் கொண்டார்.

    • மத்திய பாஜக அரசை கண்டித்து 700க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கோஷமிட்டு போராட்டம்.
    • அம்பானிக்காக ஜனநாயகத்தை சாகடித்து வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதாக கண்டன போராட்டம்.

    சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பனகல் மாளிகை அருகே வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

    வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்று வருகிறது.

    வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா, மத்திய பாஜக அரசை கண்டித்து 700க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கோஷமிட்டு போராட்டம் நடத்தினர்.

    அப்போது, அம்பானிக்காக ஜனநாயகத்தை சாகடித்து வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதாக கண்டன கோஷமிட்டனர்.

    • மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.
    • வரும் 14ம் தேதி முதல் 18ம் தேதி வரை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு.

    மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காலை 8.30 மணி அளவில் அதே பகுதிகளில் வழுவிழந்தது. இருப்பினும், அதே மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்தது.

    இந்நிலையில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று நீலகிரி, கோவை, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும் புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் அடுத்த 3 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

    இதேபோல், வரும் 14ம் தேதி முதல் 18ம் தேதி வரை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • திமுக அமைச்சருமான பொன்முடி மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
    • மனம் புண்பட்ட அனைவரிடமும் நான் பேசிய பேச்சுக்கு மீண்டும் மீண்டும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.

    அமைச்சர் பொன்முடி கூட்டத்தில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

    இந்நிலையில், திமுக முன்னாள் துணைப் பொதுச்செயலாளரும், அமைச்சருமான பொன்முடி மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஒரு உள் அரங்கக் கூட்டத்தில், தகாத பொருளில் தவறான சொற்களைப் பயன்படுத்தி நான் பேசிய பேச்சுக்கு மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.

    இந்தத் தகாத கருத்தை நான் பேசியது குறித்து உடனடியாக மனப்பூர்வமாக வருந்தினேன். நீண்ட காலம் பொது வாழ்க்கையில் உள்ள எனக்கு இதுபோன்ற தடுமாற்றம் ஏற்பட்டது குறித்து நான் மிகவும் வருந்துகிறேன். பலருடைய மனதைப் புண்படுத்தும் வகையில் இப்பேச்சு அமைந்து விட்டது குறித்தும், அவர்கள் தலைகுனியும் சூழல் ஏற்பட்டது குறித்தும் நான் மிகவும் மனம் வருந்துகிறேன்.

    மனம் புண்பட்ட அனைவரிடமும் நான் பேசிய பேச்சுக்கு மீண்டும் மீண்டும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • 2026 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் ஆட்சி அமைக்கும்.
    • முதலமைச்சர் விமர்சனம் செய்ய வேண்டியது ஆ.ராசாவையும், பொன்முடியையும் தான்.

    தமிழகத்தில் வரும் 2026ம் ஆண்டில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் என்டிஏ கூட்டணியுடன் போட்டியிட உள்ளதாக நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார்.

    இந்நிலையில், அதிமுக- பாஜக கூட்டணி குறித்து பாஜக மாநில தலைவர் பதவிக்கு ஒருமனதாக தேர்வு செய்யப்படவுள்ள நயினார் நாகேந்திரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    அப்போது, நயினார் நாகேந்திரன் கூறியதாவது:-

    அதிமுக- பாஜக கூட்டணி மக்களின் விருப்பம். மக்கள் யாரை ஏற்கிறார்கள் என்பது தேர்தலில் தெரியும், திமுக தோல்வி பயத்தில் இருக்கிறார்கள்.

    திமுக அரசு செய்துள்ள ஊழல்கள் தொடர்பான ஆவணங்கள் பொதுமக்கள் மத்தியில் வெளியிடப்படும். 2026 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் ஆட்சி அமைக்கும்.

    முதலமைச்சர் விமர்சனம் செய்ய வேண்டியது ஆ.ராசாவையும், பொன்முடியையும் தான்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • அமைதியான மாநிலம் என்பதால் தான் அனைத்து வகையிலும் முன்னேறி வருகிறது தமிழ்நாடு.
    • சுயமரியாதையின்றி டெல்லிக்கு மண்டியிட்டு தமிழ்நாட்டை அடகு வைக்கும் துரோகக் கூட்டத்திற்கு தமிழ்நாட்டு மக்கள் தக்க விடையளிப்பார்கள்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி என்பது தோல்விக் கூட்டணி. தொடர் தோல்வியை அந்த அணிக்குக் கொடுத்தவர்கள் தமிழ் நாட்டு மக்கள். இதே தோல்விக் கூட்டணியை மீண்டும் உருவாக்கி இருக்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.

    நேற்றைய தினம் சென்னை வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா அளித்த பேட்டி, அவர் வகிக்கும் பதவிக்குத் தகுதியானதாக இல்லை. அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியை உறுதி செய்து கொள்வது அவரது விருப்பம் சார்ந்தது. ஆனால் எதற்காக இந்தக் கூட்டணியை உருவாக்கினார்கள், எந்தக் கொள்கையின் அடிப்படையில் கூட்டணி சேர்ந்துள்ளார்கள் என்று சொல்லவில்லை. மாறாக, குறைந்தபட்ச செயல்திட்டத்தை உருவாக்கப் போவதாக அவர் உறுதி அளித்துள்ளார்.

    நீட் தேர்வை-இந்தித் திணிப்பை-மும்மொழிக் கொள்கையை-வக்பு சட்டத்தை எதிர்ப்பதாகச் சொல்கிறது அ.தி.மு.க.; தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாட்டுக்கான இடம் குறையக் கூடாது என்று வலியுறுத்துவதாகச் சொல்கிறது அ.தி.மு.க.-இவை எல்லாம் இவர்களது குறைந்தபட்ச செயல் திட்டத்தில் இருக்கிறதா? இது எதைப் பற்றியும் உள்துறை அமைச்சர் பேசவில்லை.

    அ.தி.மு.க. தலைமையையும் அவர் பேச அனுமதிக்கவில்லை. மாறாக தி.மு.க.வையும் தி.மு.க. அரசையும், என்னையும் விமர்சிப்பதற்கு மட்டுமே அந்தப் பத்திரிகையாளர் சந்திப்பைப் பயன்படுத்தி இருக்கிறார் உள்துறை அமைச்சர் என்பதைப் பார்த்தவர்கள் அறிவார்கள்.

    மாநில உரிமை-மொழியுரிமை-தமிழ்ப் பண்பாடு ஆகியவற்றைக் காப்பதற்காகக் களத்தில் நிற்கும் இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம். ஆனால், அதிகார வெறியோடு அமைக்கப்பட்டிரும் பா.ஜ.க.-அ.தி.மு.க. கூட்டணி என்பது, இது அத்தனைக்கும் எதிரானது. பதவி மோகத்தில், தமிழ் நாட்டின் சுயமரியாதையை-தமிழ்நாட்டின் உரிமைகளை டெல்லியிடம் அடமானம் வைத்து, தமிழ்நாட்டை பாழாக்கியவர்தான் பழனிசாமி என்பதை யாரும் மறக்கவில்லை.

    நீட் தேர்வைப் பற்றி ஊடகவியலாளர்கள் திரும்பத் திரும்ப கேள்வி எழுப்பியபோது அதற்கு சரியான பதிலை உள்துறை அமைச்சரால் சொல்ல முடியவில்லை. 'நீட் தேர்வு சரியானது' என்றாவது தனது வாதத்தை அவர் வைத்திருக்க வேண்டும். மாறாக, 'நீட் தேர்வு எதிர்ப்பு என்பதே திசை திருப்புவது' என்ற திசை திருப்பும் பதிலையே உள்துறை அமைச்சர் சொல்லி இருக்கிறார்.

    20-க்கும் மேற்பட்ட மாணவக் கண்மணிகள் தமிழ்நாட்டில் தற்கொலை செய்து கொண்டு உயிரை மாய்த்திருக்கிறார்கள். இவர்களும் திசை திருப்பும் வகையில் தான் தற்கொலை செய்து கொண்டார்களா? இங்கு மட்டுமல்ல, பீகாரிலும் மாணவர்கள் தற்கொலை செய்துள்ளார்கள். இதற்கு உள்துறை அமைச்சர் என்ன சொல்கிறார்?

    5 மாநிலங்களில் நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக சி.பி.ஐ. வழக்குத் தாக்கல் செய்து விசாரணை நடத்தி வருவதும், மாணவர்கள் சிலரும் பெற்றோர் சிலரும் கைது செய்யப்பட்டுள்ளதாவது உள்துறை அமைச்சருக்குத் தெரியுமா? சிபிஐ யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது? விசாரிக்கவும். அதன் பிறகு 'நீட் தேர்வு எதிர்ப்பு' என்பது திசை திருப்புவதற்காகச் சொல்லப்படுகிறதா மருத்துவக் கல்வியைக் காப்பதற்காகச் சொல்லப்படுகிறதா என்பதை உள்துறை அமைச்சர் அறிவார்.

    உள்துறை அமைச்சகத்தைக் கையில் வைத்திருக்கும் ஓர் அமைச்சர், 'தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு' என்று வாய்க்கு வந்தபடி பேசி இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது.

    இது மணிப்பூர் அல்ல, தமிழ்நாடு தான் என்பதை உள்துறை அமைச்சருக்கு நினைவூட்டுகிறேன். ஒன்றரை ஆண்டுகளாக 250 பேர் படுகொலை செய்யப்பட்ட மாநிலத்தை பா.ஜ.க. ஆண்டது. அங்கே போய் அமைதியை நிலைநாட்ட முடியாத உள்துறை அமைச்சர், அமைதியான மாநிலத்துக்குள் வந்து அமைதியைக் குலைக்கப் பார்க்கிறார்.

    அமைதியான மாநிலம் என்பதால் தான் அனைத்து வகையிலும் முன்னேறி வருகிறது தமிழ்நாடு. இதனை ஒன்றிய அரசின் புள்ளிவிவரங்களே ஒப்புக் கொள்கின்றன. ஆனால், சட்டம் ஒழுங்கு மோசம் என்று உள்துறை அமைச்சர் பொறுப்பற்ற வகையில் பீதியைக் கிளப்பிச் சென்றி ருக்கிறார்.

    அ.தி.மு.க.வுடன் கூட் டணி என்று அறிவித்த மேடையில் ஊழலைப் பற்றி உள்துறை அமைச்சர் பேசிய காட்சியைப் பார்த்து தமிழ் நாட்டு மக்கள் சிரிக்கவே செய்வார்கள். ஊழலுக்காக இரண்டு முறை முதலமைச்சர் பதவியை விட்டு விலக வைக்கப்பட்டவர் ஜெயலலிதா.

    பெங்களூரு சிறப்பு நீதி மன்றத்தில் பல ஆண்டுகளாக நடைபெற்ற வருமானத்துக்கு அதிகமான சொத்துக் குவிப்பு வழக்கில் நான்காண்டு சிறைத் தண்டனை பெற்றவர் ஜெயலலிதா. அவரது கட்சியுடன் கூட்டணி வைக்கும்போது பேசத் தகுதியான வார்த்தையா ஊழல் என்பது?

    இன்றைய அ.தி.மு.க. பொறுப்பாளர்களது உறவினர் குடும்பங்களைச் சுற்றியும் மத்திய புலனாய்வு அமைப்புகள் இரண்டு சோதனைகள் நடத்தியதையும், அதில் இருந்து தப்பித்துக் கொள்ள பா.ஜ.க. தலைமையை நோக்கி அவர்கள் ஓடி வந்ததையும், அதையே நிபந்தனையாக வைத்து கூட்டணியை உறுதி செய்ததையும் உணராதவர்கள் அல்ல தமிழ்நாட்டு மக்கள். அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியை உறுதி செய்ததே 'ஊழல்' தான் என்பதை அனைத்தும் அறிந்த தமிழ்நாட்டு மக்கள் அறிவார்கள். இரண்டு ரெய்டுகள் நடந்தவுடன் அ.தி.மு.க.வை அடமானம் வைத்திருப்பவர்கள், அடுத்து தமிழ்நாட்டை அடமானம் வைக்கத் துடிக்கிறார்கள்.

    தமிழை ஒழிக்க இந்தி, தமிழர்களது வளர்ச்சியைத் தடுக்க பல்வேறு சதித் திட்டங்கள், தமிழ்நாட்டு உரிமையைப் பறிக்க தொகுதி மறுவரையறை-எனத் திட்டமிட்டு தமிழ் நாட்டை அனைத்து வகையி லும் சிதைத்து சீரழிக்க நினைக்கிறது பா.ஜ.க. தலைமை. பழைய கொத்தடிமைக் கூடாரமான அ.தி.மு.க.,வின் தலைமையை மிரட்டிப் பணிய வைத்து தன்னுடைய சதித் திட்டங்களை பா.ஜ.க. நிறைவேற்றப் பார்க்கிறது. பா.ஜ.க. தனியாக வந்தாலும், எவர் துணையோடு வந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டக் காத்திருக்கிறார்கள். சுயமரியாதையின்றி டெல்லிக்கு மண்டியிட்டு தமிழ்நாட்டை அடகு வைக்கும் துரோகக் கூட்டத்திற்கு தமிழ்நாட்டு மக்கள் தக்க விடையளிப்பார்கள்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

    • இரண்டு ரெய்டுகளுக்கே அ.தி.மு.க.வை அடமானம் வைத்துள்ளவர்கள், அடுத்து தமிழ்நாட்டை அடமானம் வைக்கப் போகிறீர்களா?
    • குறைந்தபட்ச செயல்திட்டம் என்று சொல்கிறீர்களே, அதில் மாநில உரிமைகள் - மொழியுரிமை - நீட் விலக்கு - தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்டவை இடம்பெறுமா?

    சென்னை:

    அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை விமர்சித்து இருந்தார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக எடப்பாடி பழனிசாமியும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்தார்.

    இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    நேற்று கூட்டணி அறிவித்துள்ள இரண்டு கட்சித் தலைவர்களே…

    இரண்டு ரெய்டுகளுக்கே அ.தி.மு.க.வை அடமானம் வைத்துள்ளவர்கள், அடுத்து தமிழ்நாட்டை அடமானம் வைக்கப் போகிறீர்களா?

    குறைந்தபட்ச செயல்திட்டம் என்று சொல்கிறீர்களே, அதில் மாநில உரிமைகள் - மொழியுரிமை - நீட் விலக்கு - தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்டவை இடம்பெறுமா?

    இந்தத் துரோகக் கூட்டணியை - தோல்விக் கூட்டணியைத் தமிழ்நாட்டு மக்கள் மீண்டும் நிராகரிப்பார்கள்! என்று கூறியுள்ளார். 



    • அ.தி.மு.க. ஒருபோதும் தமிழ்நாட்டை, நம் மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்காது!
    • காவிரி உரிமையை பெங்களூரிலும், முல்லைப் பெரியாறு அணை உரிமையை திருவனந்தபுரத்திலும் அடகு வைத்த தி.மு.க.வின் தலைவர்.

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    தி.மு.க. தலைவரும், விடியா தி.மு.க. அரசின் முதல்வருமான மு.க.ஸ்டாலின், தினமும் என்ன பிரச்சனை வரப்போகிறது என்று தன் தூக்கம் தொலைந்துவிட்டதாக ஒருமுறை தி.மு.க. பொதுக்குழுவில் சொன்னார்.

    நேற்று முன்தினம் அவருடைய அமைச்சர் பொன்முடியின் அருவருக்கத்தக்க ஆபாசப் பேச்சு அவர் தூக்கத்தை கெடுத்தது.

    இன்றோ, அ.இ.அ.தி.மு.க.-வின் கூட்டணி அறிவிப்பு இடிபோல் வந்து அவருக்கு இறங்கியுள்ளது போலும்!

    பீதியின் உச்சத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

    தி.மு.க. செய்த வரலாற்றுப் பிழைகள் இந்த கூட்டணி மூலம் திருத்தி எழுதப்படும் என்று நேற்று நான் எனது எக்ஸ் தள பதிவு வாயிலாக தெரிவித்தேன்.

    தமிழ்நாட்டு நலனுக்கான "குறைந்தபட்ச செயல் திட்டம்" இருக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களும் அறிவித்திருந்தார்.

    "என்னவா இருக்கும்?" என்று இரவு முழுக்க தூக்கத்தை தொலைத்த ஸ்டாலின், காலையில் தனது மொத்த வரலாற்றுப் பிழைகளையும் வெற்று நாடகங்களையும் தொகுத்து அதனை அறிக்கையாக வெளியிட்டுவிட்டார்.

    மணிப்பூர் மாநிலப் பிரச்சனைகள் பற்றி உங்களுக்கு இருக்கும் அக்கறை, துளியாவது உங்களுக்கு வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள், குறிப்பாக பெண்கள் மீது இருந்ததா? அவர்கள் பாதுகாப்பை குழிதோண்டி புதைத்த உங்களுக்கு சட்டம் ஒழுங்கு பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது?

    "NEET என்றால் என்ன? அதனை இந்திய நாட்டிற்கே அறிமுகப்படுத்தியது யார்? அதனை உச்சநீதிமன்றம் வரை வாதாடி நிலைபெறச் செய்தது எந்த கூட்டணி?"- இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லிவிட்டு, பிறகு நீட் பற்றி பேசுங்கள்!

    மு.க.ஸ்டாலின் அவர்களே- நீங்கள் ஓட்டிய திரைப்பட ரீல் முடியும் நேரம் வந்துவிட்டது!

    அ.தி.மு.க. ஒருபோதும் தமிழ்நாட்டை, நம் மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்காது! மாறாக, நமக்கான மாநில உரிமைகளை பெற்றுத் தரவே செய்யும்!

    காவிரி உரிமையை பெங்களூரிலும், முல்லைப் பெரியாறு அணை உரிமையை திருவனந்தபுரத்திலும் அடகு வைத்த தி.மு.க.வின் தலைவர் அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம்!

    தமிழ்நாடு விரோத தி.மு.க.வின் ஊழல் ஆட்சியை தோலுரித்து, மக்களின் பேராதரவோடு அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி வாகை சூடும்!

    (பி.கு. : ரெய்டுகளுக்கு பயந்து, "தொட்டுப் பார்- சீண்டிப் பார்" வீடியோ கூட வெளியிட முடியாத அளவிற்கு தொடை நடுங்கிக் கொண்டிருப்பது யார் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள்!)

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தேமுதிக-வின் கட்சி வளர்ச்சி, கட்சி பணிகளில் மட்டுமே நாங்கள் முழு மூச்சாக ஈடுபட்டு வருகிறோம்.
    • பா.ஜ.க. மாநில தலைவர் மாற்றம் என்பது அக்கட்சியின் முடிவு.

    சென்னை:

    தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் அதன் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி உறுதி செய்யப்பட்டதாக டி.வி.யில் நானும் பார்த்தேன். தெரிந்துகொண்டேன். அது அந்த இரண்டு கட்சியும் சேர்ந்து எடுத்த முடிவு. அதைப்பற்றி நாங்க எந்த கருத்தும் சொல்ல முடியாது.

    * தேமுதிகவை பொறுத்தவரைக்கும் ஏப்ரல் 30-ந்தேதி செயற்குழு - பொதுக்குழு நடத்த இருக்கிறோம். அதற்கான ஆலோசனைக்கூட்டம் இன்று நடைபெறுகிறது. அதற்காகத்தான் தேமுதிக நிர்வாகிகள் வந்துள்ளனர்.

    * தேமுதிக-வின் கட்சி வளர்ச்சி, கட்சி பணிகளில் மட்டுமே நாங்கள் முழு மூச்சாக ஈடுபட்டு வருகிறோம். செயற்குழு-பொதுக்குழு நடந்துமுடிந்தவுடன் யாருக்கெல்லாம் பதவிகள் என்று அறிவிக்கப்படும். 6 மாதம் கட்சியை வலுப்படுத்தும் பணிகளை மட்டுமே மேற்கொள்ள உள்ளோம்.

    * தேர்தலுக்கு இன்னும் ஒருவருட காலம் உள்ளது. அதனால் நாங்கள் இந்தமுறை மிகவும் யோசித்து, நிதானமாக தான் முடிவு எடுப்போம்.

    * பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியில் தான் இருந்தோம்.

    * கூட்டணி குறித்து யாரிடமும் எதுவும் பேசவில்லை, அதிகாரப்பூர்வமாக தெரிவிப்போம்.

    * தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் என்று வேண்டுகோளை வைக்கிறேன்.

    * அமைச்சர் பொன்முடியின் பேச்சு கேவலமானது. அசிங்கமாக பார்க்கிறேன்.

    * பா.ஜ.க. மாநில தலைவர் மாற்றம் என்பது அக்கட்சியின் முடிவு. அதில் எங்களின் கருத்து எதுவும் இல்லை. புதிய தலைவருக்கு தே.மு.திக. சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

    • தி.மு.க. என்கிற தீய சக்தியை வீழ்த்துவதற்கு தேசிய ஜனநாய கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும்.
    • 2026-ல் தி.மு.க.வை வீழ்த்துவதற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உறுதியாக உள்ளது.

    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அம்மாவின் தொண்டர்கள் எங்கே இருந்தாலும் ஓரணியில் திரள வேண்டும் என்று சொல்லி உள்ளேன். ஒரே கட்சியா என்று கேட்டாக்கூட இல்லை.. ஓரணியில் திரண்டு தி.மு.க. என்கிற தீய சக்தியை வீழ்த்துவதற்கு தேசிய ஜனநாய கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று சொல்லி உள்ளேன். அதுதான் இப்போது நடந்து வருகிறது.

    தி.மு.க. ஆட்சி தொடரக்கூடாது, மக்கள் விரோத ஆட்சி தொடரக்கூடாது என்று நினைக்கிறார்களோ அனைவரும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று சொன்னேன். அதுதான் நடந்து இருக்கிறது.

    தேசிய ஜனநாயக கூட்டணி என்பது பெரிய சமுத்திரம் மாதிரி. தமிழ்நாடு என்று வரும்போது அ.தி.மு.க. தலைமை ஏற்கணும் என்று சொல்லியிருக்காங்க. 2026-ல் தி.மு.க.வை வீழ்த்துவதற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உறுதியாக உள்ளது. நாங்கள் தொடர்ந்து செயல்படுவோம்.

    அதிமுக தரப்பில் இருந்த யாரும் தொடர்பு கொள்ளவில்லை என்றார். 

    • சசிகலா, ஓ.பி.எஸ்., டி.டி.வி.-க்கு வாய்ப்பில்லை என எடப்பாடி பழனிசாமி நிபந்தனை விதித்து இருப்பார்.
    • அ.தி.மு.க. வாக்கு வங்கியை தங்கள் வாக்கு வங்கியாக காண்பிப்பதற்கு பா.ஜ.க. யுக்தி.

    சென்னை விமான நிலையத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * பா.ஜ.க. கொடுத்த அழுத்தத்தின் விளைவாக அரை மனதுடன் அ.தி.மு.க. கூட்டணி.

    * சசிகலா, ஓ.பி.எஸ்., டி.டி.வி.-க்கு வாய்ப்பில்லை என எடப்பாடி பழனிசாமி நிபந்தனை விதித்து இருப்பார்.

    * சதி வலையில் அ.தி.மு.க. சிக்கிக்கொண்டிருக்கிறது என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.

    * அ.தி.மு.க. வாக்கு வங்கியை தங்கள் வாக்கு வங்கியாக காண்பிப்பதற்கு பா.ஜ.க. யுக்தி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×