என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தி.மு.க. ஆட்சி தொடரக்கூடாது... என்.டி.ஏ. கூட்டணிக்கு தான் ஆதரவு- டி.டி.வி. தினகரன்
- தி.மு.க. என்கிற தீய சக்தியை வீழ்த்துவதற்கு தேசிய ஜனநாய கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும்.
- 2026-ல் தி.மு.க.வை வீழ்த்துவதற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உறுதியாக உள்ளது.
சென்னை:
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அம்மாவின் தொண்டர்கள் எங்கே இருந்தாலும் ஓரணியில் திரள வேண்டும் என்று சொல்லி உள்ளேன். ஒரே கட்சியா என்று கேட்டாக்கூட இல்லை.. ஓரணியில் திரண்டு தி.மு.க. என்கிற தீய சக்தியை வீழ்த்துவதற்கு தேசிய ஜனநாய கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று சொல்லி உள்ளேன். அதுதான் இப்போது நடந்து வருகிறது.
தி.மு.க. ஆட்சி தொடரக்கூடாது, மக்கள் விரோத ஆட்சி தொடரக்கூடாது என்று நினைக்கிறார்களோ அனைவரும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று சொன்னேன். அதுதான் நடந்து இருக்கிறது.
தேசிய ஜனநாயக கூட்டணி என்பது பெரிய சமுத்திரம் மாதிரி. தமிழ்நாடு என்று வரும்போது அ.தி.மு.க. தலைமை ஏற்கணும் என்று சொல்லியிருக்காங்க. 2026-ல் தி.மு.க.வை வீழ்த்துவதற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உறுதியாக உள்ளது. நாங்கள் தொடர்ந்து செயல்படுவோம்.
அதிமுக தரப்பில் இருந்த யாரும் தொடர்பு கொள்ளவில்லை என்றார்.






