என் மலர்
நீங்கள் தேடியது "தமிழக பாஜக மாநில தலைவர்"
- தமிழக பாஜக மாநில துணைத் தலைவர்களாக 14 பேரை நியமனம்.
- தமிழக பாஜக துணைத்தலைவராக (தென்சென்னை) நடிகை குஷ்பு தேர்வு.
தமிழக பாஜக மாநில துணைத் தலைவர்களாக 14 பேரை நியமனம் செய்து மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்தார்.
அதன்படி, தமிழக பாஜக துணைத்தலைவராக (தென்சென்னை) நடிகை குஷ்பு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் பாஜக மாநில நிர்வாகிகளுக்கு அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அண்ணாமலை வௌியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
மரியாதைக்குரிய பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அவர்களின் ஒப்புதலுடன், தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணன் நயினார் நாகேந்திரன் அவர்களால், புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் அணித் தலைவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தங்களுக்குப் புதிதாக வழங்கப்பட்டிருக்கும் பொறுப்புகளைச் சிறப்புடன் கையாண்டு, கட்சியின் அடித்தளத்தை மேலும் வலுப்படுத்தும் இனிய தொடக்கத்திற்கு வாழ்த்துகள்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- நயினார் நாகேந்திரன் மட்டுமே வேட்பு மனுதாக்கல் செய்ததால் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
- நயினார் நாகேந்திரன் உறுதி மொழி வாசித்து தலைவர் பதவியை ஏற்றுக் கொண்டார்.
தமிழ்நாட்டில் பா.ஜ.க. உட்கட்சி தேர்தல் கடந்த 3 மாதமாக நடந்து வருகிறது. கிளைகள், மண்டல், மாவட்டம் என்று கட்சியின் பல்வேறு மாவட்டங்களிலும் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது.
கடைசியாக மாநில தலைவர், தேசிய பொதுக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடத்த வேண்டி இருந்தது. இதற்கிடையில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க தலைவர் பதவியில் அண்ணாமலை நீடிப்பதை அ.தி.மு.க. தலைமை விரும்பவில்லை.
இதனால் கூட்டணியை உறுதிப்படுத்துவதற்கு முன்பு புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் பா.ஜ.க.வுக்கு ஏற்பட்டது.
நேற்று அமித்ஷா சென்னையில் இருந்த போது கட்சி தலைவருக்கான தேர்தலை மின்னல் வேகத்தில் தொடங்கினார்கள். மதியம் 2 மணி முதல் மாலை 4 மணிவரை தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் மனுதாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால் கட்சி மேலிடத்தை பொறுத்தவரை நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ.வை மாநில தலைவராக நியமிக்க முடிவு செய்த விட்டனர். எனவே தேர்வு ஒரு மனதாக இருக்க வேண்டும் என்ற மேலிடத்தின் விருப்பம் பற்றிய தகவல் கட்சியினருக்கு தெரிவிக்கப்பட்டது.
இதனால் தலைவர் பதவியை எதிர்பார்த்த மூத்த தலைவர்கள் உள்பட யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. நயினார் நாகேந்திரன் மட்டுமே வேட்பு மனுதாக்கல் செய்ததால் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
புதிய தலைவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் நிகழ்ச்சியும், தேசிய பொதுக்குழு உறுப்பினர்களை தேர்வு செய்வதும் இன்று மாலை 5 மணியளவில் வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் கலந்து கொள்ள பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள், மூத்த தலைவர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என 3 ஆயிரம் பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளது.
நிகழ்ச்சி தொடங்கிய நிலையில், தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரன் மட்டுமே மனு செய்து இருப்பதாகவும், அவரது மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் மாநில தேர்தல் அதிகாரியான சக்கரவர்த்தி அறிவித்தார்.
அதை தொடர்ந்து மேலிட பார்வையாளர் கிஷன் ரெட்டி முன்னிலையில் தேசிய தேர்தல் பொறுப்பாளர் தருண்சுக் தமிழக பா.ஜ.க. தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக அறிவித்தனர்.
அதை தொடர்ந்து நயினார் நாகேந்திரன் உறுதி மொழி வாசித்து தலைவர் பதவியை ஏற்றுக் கொண்டார்.
- நாளை முதல், திமுக ஆட்சியை அகற்றும் வரை காலில் செருப்பு அணிய மாட்டேன்.
- 48 நாட்கள் விரதம் இருக்கப் போகிறேன். முருகப்பெருமானிடம் முறையிட போகிறேன்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
மாணவி வன்கொடுமை சம்பவத்தில் சைதை திமுக பிரமுகருக்கு தொடர்பு இருக்கிறது.
மாணவி பாலியல் வழக்கில் எப்ஐஆர் எப்படி வெளியே வந்தது. பாதிக்கப்பட்ட மாணவி குற்றம் செய்தது போல எப்ஐஆர் எழுதியுள்ளார்.
எப்ஐஆரில் அதிக ஆபாச வார்த்தைகள் உள்ளன, இப்படியெல்லாம் எப்ஐஆர் போடுவார்களா ?
பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், முகவரி முழுவதையும் போலீசார் வெளியிட்டதற்கு திமுகவினர் வெட்கப்பட வேண்டும்.
பாதிக்கப்பட்ட பெண்மை அவமானப்படுத்தும் நோக்கத்தில் எப்ஐஆர் வௌியிடப்பட்டுள்ளது.
இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று ஒரு முடிவு எடுத்து இருக்கிறேன். இந்த அரசியலாகாது, மாநிலத் தலைவராக தொண்டராக ஒரு சபதம் எடுத்துள்ளேன்.
இனிமேல் ஆர்ப்பாட்டம் கிடையாது. நாளை முதல் வேறு மாதிரியாக தான் டீல் செய்வோம்.
நாளை காலை 10 மணிக்கு என் வீட்டின் முன்பு என்னை நானே சாட்டையால் 6 முறை அடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளேன்.
நாளை முதல், திமுக ஆட்சியை அகற்றும் வரை செருப்பு அணிய மாட்டேன்.
48 நாட்கள் விரதம் இருக்கப் போகிறேன். முருகப்பெருமானிடம் முறையிட போகிறேன்.
நாளை முதல் எனது அரசியல் வேறு மாதிரி இருக்கும். ஆரோக்கியமான அரசியல், நாகரீகமான அரசியல், விவாதம், மரியாதை எல்லாம் இருக்காது.
எதற்கு அரசியல் கட்சியினருக்கு மரியாதை கொடுக்க வேண்டும். இனி மரியாதையெல்லாம் கிடையாது.
சாதாரண மனிதர்களின் பிரச்சினைகளை பேச வேண்டும். அவர்கள் இல்லாமல் அரசியல் கிடையாது.
கை உடைந்தது, கால் உடைந்தது எல்லாம் ஒரு தண்டனையா ? அரசியலுக்கு வந்ததால் அடங்கி உட்கார்ந்து கொண்டிருக்கிறேன்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் சிசிடிவி வேலை செய்யவில்லை என்று கூறுகிறார்கள். நிர்பயா நிதி எங்கே சென்றது ?
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- தவெக தலைவர் விஜய், ஆளுநரை சந்தித்த நிலையில் தற்போது அண்ணாமலையும் சந்தித்துள்ளார்.
- மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து முறையிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசி வருகிறார்.
பல்கலை மாணவி விவகாரம், பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக இன்று மதியம் தவெக தலைவர் விஜய், ஆளுநரை சந்தித்தார்.
இந்த நிலையில் தற்போது அண்ணாமலையும் ஆளுநரை சந்தித்து பேசி வருகிறார்.
ஆளுநருடனான சந்திப்பின்போது, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம், பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து முறையிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.






