என் மலர்
உத்தரப் பிரதேசம்
- பயங்கரவாதிகளின் இருப்பிடம் தகர்க்கப்படும் என்பதே இந்தியா உலகிற்கு சொன்ன பாடம்.
- பயங்கரவாதிகளின் இருப்பிடங்கள் இனி பாதுகாப்பற்றவையாக இருக்கும்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது. இதற்கு ஆபரேசன் சிந்தூர என்று இந்திய ராணுவம் பெயரிட்டது.
இதனையடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பின் தலையீட்டால் இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொள்வதாக அறிவித்தது. நாளை இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன.
இந்நிலையில், இன்று லக்னோவில் பிரம்மோஸ் ஏவுகணை உற்பத்தி பிரிவை காணொளி வாயிலாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் பேசிய ராஜ்நாத் சிங், "பாகிஸ்தானுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி பயங்கரவாதிகளுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி தந்தது. பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமையகத்தையே இந்திய ராணுவம் தாக்கியது.
பயங்கரவாதிகளின் இருப்பிடம் தகர்க்கப்படும் என்பதே இந்தியா உலகிற்கு சொன்ன பாடம். பயங்கரவாதிகளின் இருப்பிடங்கள் இனி பாதுகாப்பற்றவையாக இருக்கும். இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணை எதிரிகளுக்கு எச்சரிக்கை விடுப்பதாக அமையும்" என்று தெரிவித்தார்.
- பாதுகாப்பு காரணங்களுக்காக தரம்சாலா போட்டி கைவிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
- லக்னோவில் இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதவுள்ளன.
புதுடெல்லி:
ஐ.பி.எல். தொடரின் 58வது லீக் போட்டி இமாசலப் பிரதேசத்தின் தரம்சாலாவில் நேற்று நடந்தது. இதில் பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.
பஞ்சாப் அணி 10.1 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 122 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டம் கைவிடப்பட்டது. பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடந்து வரும் நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக போட்டி கைவிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, லக்னோவில் இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதவுள்ளன.
இந்நிலையில், பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா என்பது குறித்து ஐபிஎல் தலைவர் அருண் துமால் பேசியுள்ளார்.
இதுதொடர்பாக அருண் துமால் கூறுகையில், தற்போது நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையை உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். அரசிடம் இருந்து எந்த வழிகாட்டுதலும் கொடுக்கப்படவில்லை. எனவே, பாதுகாப்பு சூழலைக் கருத்தில் கொண்டே ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படுவது குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.
- உத்தரபிரதேச மாநில போலீசார் பாதுகாப்பு படையினருடன் இணைந்து செயல்படும்படி டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார்.
- உத்தரபிரதேச மாநிலத்தின் காவல்துறையினர் முக்கிய இடங்களில் பாதுகாப்பை வலுப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவத்தால் 'ஆபரேஷன் சிந்தூர்' தொடங்கப்பட்டது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தினர்.
முப்படைகள் கூட்டாக இணைந்து நடத்திய தாக்குதலில் 26 தீவிரவாதிகள் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனை தொடர்ந்து, இத்தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் எதிரொலியாக உத்தரபிரதேச மாநிலத்திற்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநில போலீசார் பாதுகாப்பு படையினருடன் இணைந்து செயல்படும்படி டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார். மேலும் உத்தரபிரதேச மாநிலத்தின் காவல்துறையினர் முக்கிய இடங்களில் பாதுகாப்பை வலுப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- திருமண சீசனில், இரவில் தலையில் விளக்கை சுமந்து செல்வேன்
- வாழ்நாளில் முதல் முறையாக காலணி அணிந்துகொண்டார் ராம்சேவக்.
உத்தரப் பிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தில் உள்ளது நிசாம்பூர் கிராமம். இங்கே சுமார் 40 வீடுகள் உள்ளன. 300 பேர் வசிக்கின்றனர். அனைவரும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
சில நாட்களுக்கு முன்பு வரை, இந்த கிராமத்தில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஒருவர் கூட இல்லை. ஆனால் 15 வயது ராம்சேவக் அந்த குறையை தீர்த்து வைத்துள்ளார். அவர் 10 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இவரது தந்தை ஜெகதீஷ் ஒரு கூலித்தொழிலாளி, தாய் புஷ்பா கிராமத்துப் பள்ளியில் சமையல்காரர்.
ராம்சேவக்கிற்கு 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறுவதற்கான இந்தப் பயணம் எளிதாக இருக்கவில்லை. அவர் குடும்பத்தின் மூத்த மகன். எனவே, குடும்பத்தை நடத்தும் பொறுப்பும் அவர் தோள்களில் விழுந்தது. சொந்த படிப்புச் செலவை ஏற்கும் பொறுப்பும் அவரிடமே.
இதுகுறித்து ராம்சேவக் கூறுகையில், "திருமண சீசனில், இரவில் தலையில் விளக்கை சுமந்து செல்வேன். அதற்குப் கூலியாக எனக்கு 200-300 ரூபாய் கிடைத்திருக்கும்.
திருமணங்கள் எதுவும் நடக்காதபோது, நான் தந்தையுடன் கூலி வேலை செய்து வந்தேன். இதிலிருந்து கிடைக்கும் பணத்தில் கட்டணம் செலுத்துவேன்" என்கிறார். மேலும் "உயர்நிலைப் பள்ளியில் தேர்ச்சி பெற முடியாது என்று மக்கள் தன்னை கேலி செய்வார்கள், ஆனால் ஒரு நாள் எல்லோரும் சொல்வது தவறு என்று நிரூபிப்பேன் என்று அவர்களிடம் கூறுவேன்" என்றார்.
கிராமத்தில் முதன்முறையாக 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பிறகு, ராம்சேவக்கை சந்திக்க பாராபங்கி மாவட்ட மாஜிஸ்திரெட் சஷாங்க் திரிபாதி அழைத்தார்.
ஆனால் ராம்சேவக் இடம் சரியான உடைகள் இல்லை. காலணிகள் இல்லை. சில ஆசிரியர்கள் ஒன்று சேர்ந்து ராம்சேவக்கிற்கு உடைகள் மற்றும் காலணிகளை பரிசளித்தனர்.
வாழ்நாளில் முதல் முறையாக காலணி அணிந்துகொண்டார் ராம்சேவக். மேலும் மாவட்ட மாஜிஸ்திரெட் ஷஷாங்க் திரிபாதி ராம்சேவக்கை கவுரவித்தார். மேலும் அவரது மேல் படிப்புகளுக்கான கட்டணங்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. மேலும் ராம்சேவக் மற்றும் அவரது பெற்றோரை மாவட்ட ஆட்சியரும் நேரில் அழைத்து பாராட்டினார்.
- அவருடன் மற்ற குடும்ப உறுப்பினர்களும் சேர்ந்து நடனம் ஆடினர்.
- மணப்பெண்ணை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
உத்தரபிரதேசம் மாநிலம் படாவூன் மாவட்டம் நூர்பூரை சேர்ந்தவர் 22 வயது இளம்பெண். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வாலிபருக்கும் நேற்று திருமணம் நடப்பதாக நிச்சயிக்கப்பட்டு இருந்தது.
இதனால் நேற்று முன்தினம் இரவு மணப்பெண்ணிற்கு நலங்கு வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது மணப்பெண் மகிழ்ச்சியாக நடனம் ஆடினார்.
அவருடன் மற்ற குடும்ப உறுப்பினர்களும் சேர்ந்து நடனம் ஆடினர். ஆட்டம் பாட்டம் என விழா களை கட்டியது.
அப்போது மணப்பெண் திடீரென மயங்கி கீழே விழுந்தார். அங்கிருந்தவர்கள் மணப்பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மணப்பெண்ணை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
மணப்பெண் இறந்ததால் மகிழ்ச்சியாக இருந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். தங்களது மகளுக்கு எந்தவிதமான நோய்களும் இல்லை. ஆனால் ஏன் மயங்கி விழுந்து இறந்தார் என தெரியவில்லை என கூறினர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
- மாட்டுச் சாணம் சார்ந்த இயற்கை வண்ணப்பூச்சு அரசு கட்டிடங்களில் இடம்பெற வேணடும்.
- மாட்டுச் சாணம்: பாஜக அரசின் புதிய சாதனை எனத் தெரிவித்துள்ளார் அகிலேஷ் யாதவ்.
உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வள மேம்பாட்டுத்துறை செயல்பாடு குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது பசு பாதுகாப்பு மையங்கள் தன்னிறைவு பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
மாட்டுச் சாணம் சார்ந்த இயற்கை வண்ணப்பூச்சு அரசு கட்டிடங்களில் இடம்பெற வேணடும். அதுவும் மிகப்பெரிய அளவிலான உற்பத்தியுடன் நடைபெற வேண்டும்" என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் உ.பி.யின் முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் கூறுகையில் "மாட்டுச் சாணம்: பாஜக அரசின் புதிய சாதனை" எனக் குறிப்பிட்டுள்ளார்.
அகிலேஷ் யாதவ் கருத்து குறித்து பாஜக செய்தி தொடர்பாளர் கூறுகையில் "அகிலேஷ் யாதவ் ாட்டுச் சாணம் மற்றும் கால்நடைகளை வெறுக்கிறார். ஆஸ்திரேலியா சென்ற பிறகு அவர் இந்திய கலாச்சாரம் மற்றும் மரபுகளை மறந்துவிட்டாரா, அல்லது தனது திருப்திப்படுத்தும் அரசியலுக்காக பசு, கங்கை மற்றும் கீதையை அவமதிக்கிறாரா?" என பதில் அளித்துள்ளார்.
- ராகுல் காந்தி பிரிட்டிஷ் குடியுரிமை வைத்திருப்பதாக மனு.
- மக்களவை உறுப்பினர் பதவி செல்லாது என அறிவிக்கக்கோரி மனுத்தாக்கல்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி பிரிட்டிஷ் குடியுரிமை வைத்துள்ளார். இதற்கான ஆவணங்கள் மற்றும் பிரிட்டிஷ் அரசின் சில இ-மெயில்கள் தன்னிடம் உள்ளது. இதனால் இரட்டை குடியுரிமை வைத்திருக்கும் ராகுல் காந்தி, இந்திய தேர்தல்களில் போட்டியிட தகுதியானவர் அல்ல. மக்களவை உறுப்பினர் பதவியை வகிக்க இயலாது என விக்னேஷ் ஷிஷிர் உத்தர பிரதேச மாநில அலகாபாத் உயர்நீதிமன்றம் மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை கடந்த மாதம் 21ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு, ராகுல் காந்தி பிரிட்டிஷ் குடியுரிமை வைத்திருப்பதாக கூறப்படுவது குறித்து அந்நாட்டு அரசாங்களத்திடம் விளக்கம் கேட்டு கடிதம் எழுதியுள்ளோம் என நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.
அதனைத் தொடர்ந்து விசாரணையை இன்றைய தேதிக்கு ஒத்திவைத்தது. அதன்படி இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது "மனுதாரரின் புகாரைத் தீர்ப்பதற்கு மத்திய அரசால் எந்த கால அவகாசத்தையும் வழங்க முடியாது, இந்த மனுவை நிலுவையில் வைத்திருப்பதற்கு எந்த நியாயமும் இல்லை" என தெரிவித்த நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.
மேலும், மனுதாரர் பிற மாற்று சட்ட தீர்வுகளை ஆராய்வதற்கு அனுமதி அளித்ததுள்ளது.
- நிறைய பேசும் இந்த அரசாங்கம், பயங்கரவாதிகளை நசுக்குவோம் என்று கூறுகிறது
- இந்தியா பிரான்ஸ் இடம் இருந்து ரூ. 63,000 கோடி மதிப்பில் 26 ரஃபேல் போர் விமானங்களை வாங்க அண்மையில் ஒப்பந்தம் செய்தது.
உத்தரப் பிரதேச காங்கிரஸ் தலைவர் அஜய் ராய், பஹல்காம் தாக்குதலில் மத்திய அரசின் செயலின்மை குறித்து விமர்சித்துள்ளார்.
ரபேல் என்று எழுதப்பட்ட மற்றும் எலுமிச்சை மிளகாய் தொங்கவிடப்பட்ட ஒரு பொம்மை விமானத்தை காட்டி மத்திய அரசை அவர் கேலி செய்துள்ளார்.
"நாட்டில் பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன, மக்கள் இதனால் அவதிப்படுகிறார்கள். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் நமது இளைஞர்கள் தங்கள் உயிர்களை இழந்தனர்.
ஆனால், நிறைய பேசும் இந்த அரசாங்கம், பயங்கரவாதிகளை நசுக்குவோம் என்று கூறுகிறது. அவர்கள் ரஃபேலை கொண்டு வந்தார்கள், ஆனால் அவர்கள் அதன் ஹேங்கர்களில் மிளகாய் மற்றும் எலுமிச்சை தொங்கவிட்டுள்ளனர்.
பயங்கரவாதிகள், அவர்களை ஆதரிப்பவர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் மீது அவர்கள் எப்போது நடவடிக்கை எடுப்பார்கள்?" என்று கேள்வி எழுப்பினார்.
இந்தியா பிரான்ஸ் இடம் இருந்து ரூ. 63,000 கோடி மதிப்பில் 26 ரஃபேல் போர் விமானங்களை வாங்க அண்மையில் ஒப்பந்தம் செய்தது. ஏற்கனவே இந்திய விமானப்படை வசம் 36 ரஃபேல் ஜெட் விமானங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- 15 வயதுடைய சிறுமி கடைக்காரரை பிளேடால் தாக்குகிறார்.
- பிளேடால் தாக்கிய சிறுமிக்கு மனநலப் பிரச்சினை இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
உத்தரபிரதேசத்தில் கடைக்காரர் ஒருவரை 15 வயது சிறுமி பிளேடால் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹாப்பூரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சிசிடிவி காட்சிகளில் 15 வயதுடைய சிறுமி கடைக்காரரை பிளேடால் தாக்குகிறார். அப்போது கடைக்காரர் அருகில் இருந்த பெண் உடனடியாக தலையிட்டு சிறுமியைதடுக்க முயற்சித்தார்.
இதுதொடர்பாக பேசிய கடைக்காரரின் சகோதரர் தேவ் சைனி, "அந்தப் சிறுமி அடிக்கடி எங்கள் கடையில் பொருட்களை வாங்கிவிட்டு பின்னர் திருப்பி தருவாள். இந்த முறை நாங்கள் ஏற்கனவே அவளிடம் விற்ற பொருட்களை திருப்பித் தரவோ மாற்றவோ மாட்டோம் என்று கூறியிருந்தோம். ஆனால் அவள் மீண்டும் பொருட்களை திருப்பி வாங்கி கொள்ளுமாறு எங்கள் கடைக்கு வந்தாள். எங்களை பிளேடால் தாங்குவேன் என்று மிரட்டினாள்.
கடைசியாக நாங்கள் பொருளைத் திரும்பப் பெற்றுக்கொண்டு அவளுடைய பணத்தைத் திருப்பி கொடுத்தோம். ஆனால் பணத்தை பெற்றுக்கொண்டு, திடீரென்று அங்கே நின்று கொண்டிருந்த என் சகோதரனைத் தாக்கினாள். உடனடியாக அந்த சிறுமியை பிடித்து போலீசில் ஒப்படைத்தோம்" என்று தெரிவித்தார்.
பிளேடால் தாக்கிய சிறுமிக்கு மனநலப் பிரச்சினை இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
- அவரை காதலித்த ராம் ஜனம் சிங் படேலால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
- 60 சதவீத தீக்காயங்களுடன் அசாம்கரில் உள்ள குளோபல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
உத்தரப் பிரதேசத்தின் மௌ மாவட்டத்தை சேர்ந்த 25 வயதான பெண் ஒருவருக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. அவரை காதலித்த ராம் ஜனம் சிங் படேல், வேறொரு ஆணுடன் அவரது திருமணம் உறுதி செய்யப்பட்டதை தாங்கிக் கொள்ள முடியவில்லை.
வியாழக்கிழமை, பெண் வங்கியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, தனது நண்பனுடன் பைக்கில் வந்த ராம் பெண் மீது ஆசிட் ஊற்றினான். "நீ எனக்கு கிடைக்காவில்லை என்றால் யாருக்கும் கிடைக்க கூடாது" என்று கூறிக்கொண்டே ராம் அந்த பெண் மீது ஆசிட் வீசினான்.
இதில் பெண்ணின் முகம், தோள்பட்டை மற்றும் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. தற்போது அவர் 60 சதவீத தீக்காயங்களுடன் அசாம்கரில் உள்ள குளோபல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அப்பெண்ணுக்கு மே 27 ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது.
பெண்ணின் குடும்பத்தினரின் புகாரைத் தொடர்ந்து, போலீசார் ராம் ஜனம் சிங் படேல் மற்றும் இருவரை கைது செய்தனர்.
- ராகுல்காந்தியையும், இந்தியா கூட்டணி தலைவர்களையும் விமர்சித்து அமேதியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
- சுவரொட்டிகளில், இந்தியாவின் கை பாகிஸ்தானுடன் உள்ளது என்று வாசகம் எழுதப்பட்டுள்ளது.
அமேதி:
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி 2 நாள் சுற்றுப்பயணமாக உத்தரபிரதேசம் சென்றுள்ளார்.
அங்கு தனது சொந்த தொகுதியான ரேபரெலிக்கு சென்ற ராகுல்காந்திக்கு மாநில காங்கிரஸ் தலைவர்கள் பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர்.
பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் முதல் முறையாக ராகுல்காந்தி இன்று அமேதி தொகுதிக்கு செல்கிறார். இந்நிலையில் ராகுல்காந்தியையும், இந்தியா கூட்டணி தலைவர்களையும் விமர்சித்து அமேதியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
பஹல்காமில் கடந்த வாரம் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதட்டம் நிலவுகிறது.
இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர்கள் சிலர் விமர்சித்தனர். மேலும் மோடியை கேலி செய்து படம் ஒன்றும் காங்கிரஸ் கட்சியின் எக்ஸ்தள பக்கத்தில் பகிரப்பட்டது. இதற்கு பா.ஜ.க. கண்டனம் தெரிவித்தது.
இந்நிலையில் இன்று ராகுல்காந்தி அமேதி செல்லும் நிலையில் உத்தரபிரதேச நகரம் மற்றும் அமேதி பகுதிகளில் ஏராளமான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.
காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி மற்றும் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, காங்கிரஸ் தலைவர் விஜய் வடெட்டி வார் மற்றும் இந்தியா கூட்டணி தலைவர்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக அறிக்கைகள் வெளியிட்டதாக கூறி அவர்களை விமர்சித்து ஒட்டப்பட்டுள்ள அந்த சுவரொட்டிகளில், இந்தியாவின் கை பாகிஸ்தானுடன் உள்ளது என்று வாசகம் எழுதப்பட்டுள்ளது. இந்த சுவரொட்டிகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
- குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்ய இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
உத்தரப் பிரதேசத்தின் கௌசாம்பி மாவட்டத்தில் ஒரு தலித் சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் சிங் கூறுகையில், ஏப்ரல் 24 ஆம் தேதி, 16 வயதுடைய அந்த சிறுமி வேரோரு கிரமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
ஏப்ரல் 27 ஆம் தேதி, அதே கிராமத்தைச் சேர்ந்த ஷைலேந்திர சரோஜ் என்கிற ஜாஹித், அவரது நண்பர் ஷேரு என்கிற நாசர் அகமது மற்றும் அடையாளம் தெரியாத ஒருவர் சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தையின் புகாரின் பேரில் மூன்று இளைஞர்கள் மீது பிஎன்எஸ், போக்சோ சட்டம் மற்றும் பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்பு) சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்ய இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிவித்தார்






