என் மலர்tooltip icon

    இந்தியா

    டான்சரை திருமணம் செய்த வாலிபர்: 3 ஆண்டுகள் கழித்து சொந்த ஊருக்கு திரும்பியபோது அடித்து கொலை செய்த குடும்பத்தினர்
    X

    டான்சரை திருமணம் செய்த வாலிபர்: 3 ஆண்டுகள் கழித்து சொந்த ஊருக்கு திரும்பியபோது அடித்து கொலை செய்த குடும்பத்தினர்

    • கச்சேரியில் நடனமாடும் பெண்ணை திருமணம் செய்தது குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை.
    • 3 ஆண்டுகள் கழித்து சொந்த ஊருக்கு திரும்பியபோது, அடித்துக் கொலை செய்தனர்.

    உத்தர பிரதேச மாநிலத்தில் கச்சேரி நிகழ்ச்சியில் நடனமாடும் (Stage Dancer) பெண்ணை திருமணம் செய்து கொண்டு, இரண்டு வருடத்திற்குப் பிறகு சொந்த ஊர் திரும்பியபோது தாய், தங்கைகள் உள்பட குடும்பத்தினர் அடித்துக் கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கோரக்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அமித் (வயது 30). இவர் கடந்த 2022ஆம் ஆண்டு கச்சேரியில் நடனமாடும் பெண்ணை திருமணம் செய்துள்ளார். இதற்கு அவரது குடும்பத்தினர் முக்கியமாக தாய் மீரா உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இதனால் மனைவியுடன் அமித் டெல்லிக்கு சென்றுள்ளார். சுமார் 3 வருடங்கள் கழித்து சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். அப்போதும் அமித் மீது அவரது தாயின் கோபம் தீரவில்லை.

    வீட்டிற்கு வந்ததும் அமித் உடன் தாய் மீரா, சகோதரிகள், சகோதரர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் வாக்குவாதம் மோதலாக மாறியுள்ளது. இரும்பு கம்பி, கட்டைகள் கொண்டு கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் அமித் படுகாயம் அடைந்தார். அமித்தை காப்பாற்ற முயன்றபோது அவரது மனைவியையும் கடுமையாக தாக்கியுள்ளனர்.

    இது தொடர்பாக அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உயிருக்கு போராடிய இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அமித் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மனைவி, சிகிச்சை பெற்று வருகிறார். அமித் மனைவின் புகார் அடிப்படையில் போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    Next Story
    ×