என் மலர்
இந்தியா

கொதிக்கும் மீன் குழம்பில் விழுந்து உயிரிழந்த 18 மாத குழந்தை.. பருப்பு குழம்பில் விழுந்து உயிரிழந்த சகோதரி
- குழந்தையின் தாய் வீட்டில் பானிபூரி தயாரிக்க பட்டாணி சமைத்துக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்தது.
- குழந்தையின் மரணம் குறித்து போலீசாருக்கு தெரிவிக்காமல் குடும்பத்தினர் இறுதிச் சடங்குகளைச் செய்தனர்.
உத்தரப்பிரதேசத்தில் கொதிக்கும் மீன் குழம்பில் விழுந்து ஒன்றரை வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சோன்பத்ரா மாவட்டத்தில் உள்ள துத்தியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. உயிரிழந்த குழந்தையின் பெயர் பிரியா. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பிரியாவின் சகோதரி பருப்பை சமைத்துக்கொண்டிருந்த ஒரு பாத்திரத்தில் விழுந்து இறந்தாள். இந்நிலையில் அதே முறையில் பிரியாவும் பலியாகி உள்ளது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
குழந்தையின் தந்தை ஒரு தெரு வியாபாரி. குழந்தையின் தாய் வீட்டில் பானிபூரி தயாரிக்க பட்டாணி சமைத்துக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்தது.
விளையாடிக் கொண்டிருந்த குழந்தை, அடுத்த அறைக்குச் சென்றபோது, பானையில் விழுந்தது. அலறல் சத்தம் கேட்டு, தாய் வந்து, பானையில் விழுந்த குழந்தையைக் கண்டார். குழந்தை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது, ஆனால் பலத்த தீக்காயங்களுக்கு ஆளான குழந்தை சிகிச்சையின் போது இறந்தது.
குழந்தையின் மரணம் குறித்து போலீசாருக்கு தெரிவிக்காமல் குடும்பத்தினர் இறுதிச் சடங்குகளைச் செய்தனர். மருத்துவமனையில் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், போலீசார் வீட்டிற்கு வந்தபோது இறுதிச் சடங்குகள் ஏற்கனவே முடிந்துவிட்டன. அது ஒரு விபத்து மரணம் தான் என போலீசார் உறுதிப்படுத்தினர்.






