என் மலர்
இந்தியா

கண்ணை மறைத்த போதை: இரு மகள்களை பாலியல் வன்கொடுமை செய்த கொடூர தந்தை
- குடிபோதைக்கு அடிமையான தந்தை இரு மகள்களையும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
- மனைவி புகார் கொடுக்க போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
குடிபோதைக்கு அடிமையான தந்தை, தனது 13 வயது மற்றும் 15 வயது மகள்களை பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் உத்தர பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் காலிலாபாத் கோட்வாலி காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஒரு கிராமத்தில் கணவன், மனைவி மற்றும் இரண்டு மகள்கள் கொண்ட குடும்பம் வசித்து வருகிறது. இந்த குடும்பத்தின் கணவன் குடிப்பழக்கத்திற்க அடிமையானவர் எனக் கூறப்படுகிறது. தினந்தோறும் குடிபோதையில்தான் வீட்டிற்கு வருவார்.
நேற்று முன்தினம் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். மாடியில 2ஆவது மகள் (வயது 13) தூங்கிக் கொண்டிருந்தார். போதையில் மகள் என்று கூட பார்க்காமல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். தனது தந்தையே வாழ்க்கையை சீரழித்து விட்டாரே, இதை எப்படி வெளியில் சொல்வது என பயந்து, மறைத்துள்ளார்.
ஆனால், அதை சாதகமாக்கிக் கொண்ட கொடூர தந்தை, அடுத்த நாள் (நேற்று) குடிபோதையில் வந்து மூத்த மகளை (வயது) பாலியல் வன்கொடுமை செய்துள்ளா். இது அவரது மனைவிக்கு தெரியவர, உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகார் அடிப்படையில் போலீசார் அந்த கொடூர தந்தை மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.






