என் மலர்tooltip icon

    தெலுங்கானா

    • மஹபூபாபாத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் டிப்ளமோ படித்து வந்தார்.
    • திருமணம் செய்து கொள்ளும்படி அப்பெண்ணிற்கு ஒரு நபர் தொடர்ச்சியாக தொந்தரவு கொடுத்து வந்தார்.

    தெலுங்கானாவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் ஒருவர் தனது உயிர் பிரியும் சில நிமிடங்களுக்கு முன்பு தனது அண்ணனுக்கு ராக்கி கயிறு கட்டிய நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

    தெலுங்கானா மாநிலம் மஹபூபாபாத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் டிப்ளமோ படித்து வந்தார். தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அப்பெண்ணிற்கு ஒரு நபர் தொடர்ச்சியாக தொந்தரவு கொடுத்து வந்தார்.

    இதனால மனஉளைச்சலுக்கு உள்ளான அப்பெண் ஆகஸ்ட் 15 ஆம் தேதி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது அவரை காப்பாற்றிய குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அப்பெண் ஆகஸ்ட் 17 ஆம் தேதி உயிரிழந்தார். தனது உயிர் பிரியும் சில நிமிடங்களுக்கு முன்பு தனது 2 தம்பிகளுக்கு அப்பெண் ராக்கி கயிறு கட்டினார். இந்த சம்பவம் மருத்துவமனையில் இருந்தவர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிந்துள்ள போலீசார், அப்பெண்ணிற்கு தொல்லை கொடுத்தவர்களை தேடி வருகின்றனர்.

    • சிறுமியின் குடும்பம் வறுமையால் வாடியது.
    • உறவினர்கள் யாரும் அவர்களுக்கு உதவி செய்ய முன்வரவில்லை.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், நிர்மல் மாவட்டம், பெல் தரோடாவை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவரது தந்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நல குறைவு ஏற்பட்டு இறந்து விட்டார்.

    இவரது தாயார் கூலி வேலை செய்து மகளைக் காப்பாற்றி வந்தார். தந்தை இறந்து விட்டதால் சிறுமியின் குடும்பம் வறுமையால் வாடியது. உறவினர்கள் யாரும் அவர்களுக்கு உதவி செய்ய முன்வரவில்லை.

    இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த சிறுமியின் தாய் நேற்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அறிந்த சிறுமி நிலைகுலைந்து காணப்பட்டார்.

    தனக்கு இருந்த ஒரே ஆதரவும் தற்போது இல்லாததால் மன வேதனை அடைந்தார். தாயின் இறுதி சடங்குகளை செய்ய பணம் இல்லாததால் தாயின் பிணத்தருகே அழுதபடி உட்கார்ந்து இருந்தார்.

    பின்னர் தாயின் இறுதி சடங்கு செய்வதற்காக உதவி செய்யுமாறு கிராம மக்களிடம் கேட்டார்.

    தரையில் துண்டை விரித்து விட்டு சோகமாக உட்கார்ந்து இருந்தார். இது கண்போரை கண்கலங்க செய்தது. சிறுமியின் பரிதாப நிலைமையைக் கண்ட அப்பகுதி மக்கள் கண்கலங்கியபடி சிறிது சிறிதாக பண உதவி செய்தனர்.

    இதனை சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பினர்.

    இதனைக் கண்ட தெலுங்கானா பாரத ராஷ்டிரிய முன்னாள் அமைச்சர் கே.டி. ராமராவ் விரைவில் சிறுமிக்கு நிதி உதவி அளிப்பதாகவும் தற்போது அப்பகுதி கட்சி நிர்வாகியை சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்து இறுதி சடங்கு செய்ய அனைத்து உதவியும் செய்ய உத்தரவிட்டார்.

    இதனையடுத்து சிறுமியின் தாயின் இறுதிச் சடங்குக்காண அனைத்து ஏற்பாடுகளும் நடந்தது.

    பெற்றோரை இழந்து தவிக்கும் சிறுமிக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என பலரும் சமூக வலைத்தளங்களில் கோரிக்கை விடுதது வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கணவர் 12 வருடங்களுக்கு முன்பே உயிரிழந்த நிலையில் விவசாய தினக்கூலியாக வேலை செய்து தனது ஒரே மகள் துர்காவை [11 வயது] வளர்த்து வந்தார்.
    • வீட்டில் சீலிங் காத்தாடியில் தாய் கங்காமணி தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் இருந்ததைக் கண்டு துர்கா செய்வதறியாது திகைத்துள்ளார்

    தெலுங்கானாவில் தனது தாயின் சடலத்துக்கு அருகில் அமர்ந்து இறுதிச் சடங்கு செலவுக்காக 11 வயது சிறுமி யாசகம் வேண்டிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. தெலுங்கானா மாநிலம் தன்னூர் [Thanoor] மண்டலத்தில் உள்ள பெல்தரோடா [Bheltharoda] கிராமத்தைச் சேர்ந்தவர் கங்காமணி [35 வயது]. இவரது கணவர் 12 வருடங்களுக்கு முன்பே உயிரிழந்த நிலையில் விவசாய தினக்கூலியாக வேலை செய்து தனது ஒரே மகள் துர்காவை [11 வயது] வளர்த்து வந்தார். துர்கா பள்ளியில் 6 ஆம் வகுப்பு பயின்று வருகிறார்.

    நேற்று முன்தினம் துர்காவை கங்காமணி கண்டித்து பேசியுள்ளார். இதனால் துர்கா கோபித்துக்கொண்டு தனது பெரியம்மா வீட்டுக்கு சென்றுவிட்டு இரவு வீடு திரும்பியுள்ளார். ஆனால் வீட்டில் சீலிங் காத்தாடியில் தாய் கங்காமணி தூக்கிட்டு உயிரிழந்த  நிலையில் இருந்ததைக் கண்டு துர்கா செய்வதறியாது திகைத்துள்ளார். பக்கத்துக்கு வீட்டுக் காரர்களிடம் சென்று துர்கா கூறவே, அவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில்தான் தாயின் இறுதிச்சடங்கிற்குப் பணம் இல்லாததால் வீட்டின் முன் இருந்த வீதியில் தாயின் சடலத்தைக் கிடத்தி இறுதிச்சடங்கு செலவுக்கு காசு வழங்கும்படி வருவோர் போவோரிடம் யாசகம் வேண்டியுள்ளார். இதை அறிந்த உள்ளூர் போலீஸ் சிலரும், துர்காவின் ஆசிரியர்களும், பிஆர்எஸ் முன்னாள் அமைச்சர் கேடிஆர் அருவுறுத்தலின்பேரில்  அப்பகுதியை சேர்ந்த கட்சி பிரமுகர்கள் சிலரும் காசு வழங்கி கங்காமணியின் இறுதிச் சடங்கை செய்ய உதவியுள்ளனர்.

    • பயிர்க்கடன் தள்ளுபடி செய்யவில்லை என விவசாயிகள் குற்றச்சாட்டு.
    • அதேவேளையில் 17 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

    தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்துள்ளது. தேர்தலின்போது பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி அளித்தது. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை எனக் கூறிய விவசாயிகள் ரேவந்த் ரெட்டி உருவப்பொம்மையை இறுதி ஊர்வலமாக எடுத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தலமடுகு மண்டலில் உள்ள ஒரு கிராமத்தில் முதல்வர் ரேவந்த் ரெட்டி போன்ற ஒரு உருவ பொம்மையை உருவாக்கி பாடையில் கிடத்தினர். அதற்கு செருப்பு மாலை அணிவித்து தெருத்தெருவாக இறுதி ஊர்வலம் போன்று எடுத்துச் சென்றனர். அப்போது முதல்வர் டவுன் டவுன் (CM down down) என கோஷமிட்டனர்.

    இது தொடர்பாக தகவல் அறிந்த போலீசார் போராட்டத்தை தடுத்து நிறுத்த முயன்றனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு கூட்டம் நெரிசல் ஏற்படும் நிலை ஏற்பட்டது, இறுதியாக போராட்டம் நிறைவு பெற்றது.

    அரசின் செயலற்ற தன்மையால் தாங்கள் நிதிச்சுமையால் தவிக்கிறார். ஏராளமான கடன்கள், அவர்களுக்கு திருப்பி கட்டுவது மிகப்பெரிய சுமையாக உள்ளது எனத் தெரிவித்தனர்.

    இதற்கிடையே பயிர்க்கடன் தள்ளுபடிக்கான தெலுங்கான அரசு 17 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடும் செய்துள்ளதாகவும், 3-வது மற்றும் கடைசி தவணையான 5644.24 கோடி ரூபாய் வழங்க இருப்பதாகவும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மாநிலத்தின் அனைத்து தொகுதிகளிலும் பயிர்க்கடன் தள்ளுபடி திட்டம் குறித்த விவரங்களை கட்சி சேகரிக்கும் என பிஆர்எஸ் செயல் தலைவர் கே.டி. ராம ராவ் தெரிவித்துள்ளார். அத்துடன் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் ஒவ்வொரு விவசாயியும் கடன் தள்ளுபடியைப் பெறுவதை பிஆர்எஸ் உறுதி செய்யும் என்றும் கே.டி. ராம ராவ் வலியுறுத்தினார்.

    • வீட்டு வேலைகளையும் பெண்கள் பஸ்சில் செய்யட்டும் என்று கேடிஆர் பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
    • கேசிஆரருக்கு [சந்திரசேகர ராவ்] பாஜக, ஆளுநர் பதவி வழங்க திட்டமிட்டுள்ளதாக ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்

    தமிழகத்தைத் தொடர்ந்து தெலுங்கானாவில் செயல்படுத்தப்பட்டுள்ள பெண்களுக்கான இலவச பேருந்து சேவை திட்டத்தைக் கிண்டலடித்து பாரத் ராஷ்டிர சமிதி (BRS) தலைவர் கே.சந்திரசேகர ராவின் [KSR] மகனும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராமா ராவ் [KTR] சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

     

    நேற்று முன் தினம் நடந்த கட்சிக் கூட்டத்தில் பேசிய கேடிஆர், தெலுங்கானா மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் சீதக்காவை குறிப்பிட்டு, 'ஒவ்வொருவருக்கும் சொந்தமாக ஒரு பஸ்சை கொடுங்கள், மொத்த குடும்பமும் அதில் பயணம் செய்யட்டும். பெண்கள் பஸ்சில் காய்கறிகளை நருக்கட்டும், பிரேக் டான்ஸ் ஆடட்டும், டான்ஸ் வீடியோ எடுக்கட்டும்' என்று பேசினார். சமீப காலமாக பெண்கள் பஸ்சில் சண்டையிட்டுக்கொள்ளும் வீடியோக்களை குறிப்பிட்டு இவ்வாறு வீட்டு வேலைகளையும் பெண்கள் பஸ்சில் செய்யட்டும் என்று கேடிஆர் பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதனைத்தொடர்ந்து நேற்று தனது எக்ஸ் பக்கத்தில், 'கட்சிக் கூட்டத்தில் நான் பேசியது சகோதரிகளை புண்படுத்தியிருந்தால் என்னை அவர்கள் மன்னிக்க வேண்டும். சகோதரிகளை அப்படிப் பேச வேண்டும் என்பது எனது நோக்கம் அல்ல' என்று பதிவிட்டு தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.

    இதற்கிடையில் தற்போது டெல்லியில் உள்ள தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பிஆர்எஸ் கட்சி விரைவில் பாஜகவோடு இணைக்கப்படும் என்று பேசியுள்ளது தெலங்கானா அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பிஆர்எஸ் பாஜகவின் சேரும் என்றும் கேசிஆரருக்கு [சந்திரசேகர ராவ்] பாஜக, ஆளுநர் பதவி வழங்க உள்ளதாகவும், கேடிஆருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்க உள்ளதாகவும் ஹரிஷ் ராவுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவியை வழங்க முடிவெடுத்துள்ளதாகவும் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.

     

    தெலங்கானா ராஷ்டிர சமிதி என்ற பெயரைக் கடந்த 2022 ஆம் ஆண்டு தேசிய அரசியலில் கால் பதிக்கும் நோக்கத்துடன் பாரத் ராஷ்டிர சமிதி என்று மாற்றினார் கேசிஆர். ஆனால் கடந்த ஆண்டு இறுதியில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசிடம் படுதோல்வியைச் சந்தித்தது பிஆர்எஸ். மக்களவைத் தேர்தலிலும் பெரிய அளவிலான வெற்றியை பிஆர்எஸ் பெறவில்லை. இந்த நிலையில்தான் பிஆர்எஸ் பாஜகவோடு இணைக்கப்படும் என்று ரேவந்த் ரெட்டி பேசியுள்ளார்.  

    • தேசியக்கொடி தலைகீழாக பறப்பதை கண்ட அதிகாரிகள் அதிர்ச்சி.
    • அவமாறியதை செய்த அதிகாரிகள் மீது கிரிமினல் வழக்கு பதிவு.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம்,சித்தி பேட்டை மாவட்டம், கஜ்வேல் நகராட்சியில் சுதந்திர தின விழா ஏற்பாடுகள் கோலாகலமாக நடந்தது. நகராட்சி அலுவலகம் முழுவதும் வண்ண வண்ண தோரணங்கள் மற்றும் தேசிய கொடிகள் கட்டப்பட்டு இருந்தன. பின்னர் நகர மன்ற தலைவர் ராஜமவுலி குப்தா தேசிய கொடியை ஏற்றினார்.

    அப்போது தேசியக்கொடி தலைகீழாக பறப்பதை கண்ட அதிகாரிகள் நகராட்சி ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக தேசியக்கொடி கீழே இறக்கப்பட்டு மீண்டும் சரி செய்து பறக்க விடப்பட்டது.

    தேசியக்கொடி தலைகீழாக ஏற்றி அவமாறியதை செய்த அதிகாரிகள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ஜ.க சார்பில் கஜ்வேல் போலீசில் புகார் செய்தனர்.

    இந்த சம்பவத்திற்கு காரணமானவர்களை சஸ்பெண்டு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • கிண்டியில் உள்ள மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னலஜியில் ஏரோநாட்டிக்ஸ் பயின்றார்.
    • அப்துல் கலாம் தனது அக்னி சிறகுகள் புத்தகத்தில் அக்னி ஏவுகணை வளர்ச்சியில் ராம் நாராயணின் பங்கினை நினைவு கூர்ந்துள்ளார்.

    இந்தியாவின் அக்னி ஏவுகணைத் திட்டத்தில் முக்கிய பங்காற்றிய விஞ்ஞானி ராம் நாராயண் அகர்வால் [84] நேற்று [ஆகஸ்ட் 15] காலமானார். ஐதராபத்தில் உள்ள தனது இல்லத்தில் வயது மூப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 1940 ஆம் ஆண்டு பிறந்த பிறந்த ராம் நாராயண், சென்னை, கிண்டியில் உள்ள மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னலஜியில் ஏரோநாட்டிக்ஸ் பயின்றார். பின்னர் பெங்களூரில் அமைந்துள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சைன்ஸ் -இல் தனது டாக்டர் பட்டதைப் பெற்றார்.

    1983 ஆம் ஆண்டு இந்தியாவால் தொடங்கப்பட்ட அக்னி ஏவுகணைத் திட்ட இயக்குனராக பணியாற்றினார். 1989 ஆம் ஆண்டு அக்னி ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்க கடும் உழைப்பை செலுத்தினார். எனவே, ஏவுகணை உருவாக்கத்துக்கு அடித்தளமிட்ட ராம் நாராயண், அக்னி ஏவுகணைகளின் தந்தை என்று அழைக்கப்படுத்துகிறார்.

    டி.ஆர்.டி.ஓ. [DRDO] எனப்படும் ராணுவம், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் ஆய்வக இயக்குநராகவும் ராம் நாராயண் அகர்வால் பணியாற்றியுள்ளார். ஏவுகணை தொழிநுட்ப வளர்ச்சியில் ராம் நாராயணின் பங்கினை போற்றும் வகையில் கடந்த 1990 ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ மற்றும் 2000 ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருதுகளை வழங்கி மத்திய அரசு கௌரவித்தது. ராம் நாராயண் மறைவுக்கு டிஆர்டிஓ அமைப்பு இரங்கல் தெரிவித்துள்ளது.

    மறைந்த முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாம் தனது சுயசரிதை புத்தகமான அக்னி சிறகுகள் புத்தகத்தில் அக்னி ஏவுகணை வளர்ச்சியில் ராம் நாராயணின் பங்கினை நினைவு கூர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • தண்ணீர் சூடாக்கி விட்டதா என்று பார்ப்பதற்கு வாட்டர் ஹீட்டர் கம்பியை எடுத்து பார்த்துள்ளார்.
    • அப்போது மின்சாரம் பாய்ந்து மகேஷ் பாபு மயங்கி விழுந்துள்ளார்.

    தெலுங்கானா மாநிலம் கம்மம் நகரில் மகேஷ்பாபு என்பவர் தனது வளர்ப்பு நாயை குளிப்பாட்ட வாட்டர் ஹீட்டர் கம்பியை பயன்படுத்தி வெந்நீர் போட்டுள்ளார்.

    அப்போது தண்ணீர் சூடாக்கி விட்டதா என்று பார்ப்பதற்கு வாட்டர் ஹீட்டர் கம்பியை எடுத்து பார்த்துள்ளார். அந்த சமயத்தில் அவருக்கு போன் கால் ஒன்று வந்துள்ளது. அப்போது வாட்டர் ஹீட்டர் கம்பியை தவறுதலாக தனது கைக்கு அடியில் அவர் வைத்துள்ளார்.

    அப்போது மின்சாரம் பாய்ந்து மகேஷ் பாபு மயங்கி விழுந்துள்ளார். அவரது அலறல் சத்தத்தை கேட்டு ஓடிவந்த அவரது மனைவி துர்கா கணவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் அவர் ஏற்கனவே இருந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாரம்பரிய மயில் கறி என்ற பெயரில் தேசியப் பறவையான மயிலை சமைத்து வீடியோ பதிவிட்டுள்ளார்.
    • காட்டுப் பன்றிக் கறி சமையல் வீடியோவையும் பிரணாய் பதிவிட்டிருந்தார்.

    தெலங்கானாவில் யூடியூபர் ஒருவர் மயில் கறி சமைத்து வம்படியாக வந்து சிக்கலில் மாட்டியுள்ளார். தெலங்கானா மாநிலம் சிர்சில்லா [Siricilla ] மாவட்டத்தில் உள்ள தங்களப்பள்ளியை சேர்ந்தவர் பிரணாய் குமார்.

    பாராம்பரிய உணவு வகைகளைச் சமைத்து அந்த வீடியோக்களை தனது யூடியூப் சேனலில் பதிவிட்டு வரும் பிரணாய் பாரம்பரிய மயில் கறி என்ற பெயரில் தேசியப் பறவையான மயிலை சமைத்து அந்த வீடியோவை பதிவிட்டுள்ளார்.

     

    ஆனால் மயிலை கொல்வது சட்டவிரோதம் என்பதால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரணாய் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், குற்றத்தை உறுதி செய்த பின் அவரை கைது செய்து விரைவில் சிறையில் அடிப்போம் எனவும் சிர்சில்லா மாவட்ட எஸ்.பி ராஜண்ணா உறுதியளித்துள்ளார்.

    சர்ச்சைக்குப்பிறகு பிரணாய், மயில் கறி வீடியோவை தனது யூடியூப் சேனலில் இருந்து நீக்கியுள்ளார். எனினும் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விலங்குகள் நல ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதற்கு முன்னதாக காட்டுப் பன்றிக் கறி சமையல் வீடியோவையும் பிரணாய் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • மனைவி மற்றும் தாயார் பெயரில் ரூ.1.10 கோடி வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.
    • லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாநகராட்சி கண்காணிப்பு மற்றும் வருவாய் துறை அதிகாரியாக இருப்பவர் தாசரி நாகேந்திரன்.

    இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து உள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு பல்வேறு புகார்கள் சென்றன.

    நேற்று முன்தினம் இரவு லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் நாகேந்திரன் வீட்டிற்குள் அதிரடியாக புகுந்து சோதனை செய்தனர்.


    படுக்கைக்கு அடியில் இருந்த பெட்டியில் ரூ.2.93 கோடி ரொக்கமும், ரூ.6 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள், மனைவி மற்றும் தாயார் பெயரில் ரூ.1.10 கோடி வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.

    மேலும் ரூ.1.98 கோடி மதிப்புள்ள 17 அசையா சொத்துக்கள் வாங்கி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. தாசரி நாகேந்திரன் வீட்டில் மொத்தம் ரூ 6 கோடி மதிப்பிலான பணம் நகைகள் மற்றும் சொத்துக்கள் இருப்பது தெரிய வந்தது.

    இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் அவர்களின் முன்னிலையில் எனது சேலையை கழற்றிவிட்டு சார்ட்ஸ் அணியும்படி கட்டாயப்படுத்தினர்.
    • எனது தலைமுடியை ஒரு போலீஸ் அதிகாரி பிடித்துக்கொள்ள, மற்ற இரு போலீசார் எனது இரண்டு கால்கள் மீதும் கட்டையை வைத்து தாக்கினர்

    தெலங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள சாத்நகர்[Shadnagar] காவல்நிலையத்தில் திருட்டு வழக்கில் சந்தேகத்தின் அடிப்படையில் அழைத்துவரப்பட்ட தலித் பெண் அடித்து சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தங்கம் திருடுபோன வழக்கில் தலித் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை சந்தகேத்தில் அடிப்படையில் அழைத்து வந்த போலீசார், அவர்களது மகன் முன்னிலையிலேயே இந்த வெறிச்செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்த நிலையில் சம்பந்தப்பட்ட போலீசாரை விசாரிக்க ACP உத்தரவிட்டுள்ளார்.

    பாதிக்கப்பட்ட பெண் செய்தியாளர்களிடம் பேசுகையில், முதலில் அவர்கள் எனது கணவனைப் பிடித்து வந்து அடித்தனர். அதன்பின் அவரை வெளியில் விட்டுவிட்டு என்னைப் பிடித்து வந்தனர். போலீசார் அவர்களின் முன்னிலையில் எனது சேலையை கழற்றிவிட்டு சார்ட்ஸ் அணியும்படி கட்டாயப்படுத்தினர். எனது கை, கால்களை கட்டிவைத்து, என்னை தாக்கத் தொடங்கினர்.

    எனது தலைமுடியை ஒரு போலீஸ் அதிகாரி பிடித்துக்கொள்ள, மற்ற இரு போலீசார் எனது இரண்டு கால்கள் மீதும் கட்டையை வைத்து தாக்கினர். செய்யாத குற்றத்திற்காக என்னை அடிக்காதீர்கள் என்று நான் அவர்களிடம் கெஞ்சினேன். திருடுவதற்கு பதிலாக நான் பிச்சையே எடுப்பேன் என்று கூறினேன். ஆனால் அவர்கள் எனது  காலை  உடைந்தனர்.

    எனது கால் உடைந்துவிட்டது என்று வலியால் கத்தியபடி அவர்களிடம் கூறியும் அதை அவர்கள் நம்பவில்லை. அந்த நிலையில் என்னை எழுந்து நடக்கச் சொன்ன அவர்கள், அப்படி செய்யாவிட்டால் எனது கால்களை நிரந்தரமாக செயலிழக்கும்படி உடைப்போம் என்று மிரட்டியதாக தெரிவித்தார்.

    திருட்டு வழக்கில்  எப்.ஐ.ஆர் பதியாமலேயே சந்தேகத்தின் பேரில் பெண்ணை அழைத்துவந்து சட்டவிரோதமாக அடித்துத் துன்புறுத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    • மறுநாள் அதிகாலை 3.15 மணி வரை சட்டசபை கூட்டம் நடந்தது.
    • உறுப்பினர்களுக்கு உணவு இடைவேளை அளிக்கப்பட்டது.

    திருப்பதி:

    தெலுங்கானா சட்டசபை கூட்டம் கடந்த திங்கட்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கியது. இந்த கூட்டத்தில் 31-ந்தேதிக்குள் பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்ற திட்டமிடப்பட்டிருந்தது.

    மின்சாரம், நகராட்சி நிர்வாகம், உள்துறை மற்றும் பிற துறைகள் தொடர்பான கோரிக்கைகள் மீது விவாதம் நடந்தது.

    இதனால் காலையில் தொடங்கிய சட்டசபை கூட்டம் இரவிலும் நீடித்தது. தொடர்ந்து ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விவாதம் செய்ததால் மறுநாள் அதிகாலை 3.15 மணி வரை சட்டசபை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் 19 கோரிக்கைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    தொடர்ந்து 17 மணி நேரம் சட்டசபை கூட்டம் நடத்தப்பட்டது சாதனையாக அமைந்தது. இந்த கூட்டத்தில் 70 சதவீதத்திற்கு அதிகமான எம்.எல். ஏ.க்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் நடுவில் உறுப்பினர்களுக்கு உணவு இடைவேளை அளிக்கப்பட்டிருந்தது.

    என்.டி.ராமராவ் ஒருங்கிணைந்த ஆந்திராவில் என்.டி. ராமராவ் முதல் மந்திரியாக இருந்தபோது ஒருமுறை அதிகாலை 2 மணி வரை சட்ட சபை கூட்டம் நடைபெற்றுள்ளது.

    இதேபோல் சந்திரசேகர ராவ் ஆட்சியில் 2 முறை நள்ளிரவு 1 மணி வரை தெலுங்கானா சட்டசபை கூட்டம் நடைபெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×