என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Assembly Meeting"

    • 2025ம் ஆண்டு முதல் ஜூன் 3ஆம் தேதி செம்மொழி தமிழ் நாளாக கொண்டாடப்படும்.
    • பரிசு தொகையாக ரூ. 1.88 கோடி ஆண்டு தோறும் வழங்கப்படும்.

    சட்டசபை கூட்டத்தில் பல்வேறு துறைகள் மீதான மானியக் கோரிக்கைகள் விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது பேசிய தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

    அதில் கூறியிருப்பதாவது,

    • 2025ஆம் ஆண்டு முதல் ஜனவரி 25ம் தேதி தமிழ் வழி தியாகிகள் நாளாக கடைப்பிடித்து சென்னையில் உள்ள நினைவகங்களில் வீரவணக்கம் செலுத்தப்படும்.

    • 2025ம் ஆண்டு முதல் ஜூன் 3ஆம் தேதி செம்மொழி தமிழ் நாளாக கொண்டாடப்படும்.

    • முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் வேண்டுகோளை ஏற்று மன்மோகன் சிங் தலைமையிலான அரசு 12.10 2004ஆம் ஆண்டு அன்று தமிழை செம்மொழியாக அறிவித்தது. இதனை அடுத்து முத்தமிழ் அறிஞர் கலைஞர் தலைமையில் 2010 ஆம் ஆண்ட உலக செம்மொழி விழா கோவையில் சிறப்பாக நடத்தப்பட்டது. தமிழிற்கு பெருமை செய்த கலைஞரின் பிறந்த நாளை செம்மொழி தமிழ் நாளாக தமிழ் அரசு சார்பாக கொண்டாடப்படும்.

    • செம்மொழி சிறப்பை உணர்த்தும் வகையில், 11ம் வகுப்பு, 12ம் வகுப்பு, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு பேட்டி, கட்டுரை போட்டிகள் நடத்தப்படும்.

    • தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் நடத்தப்படும் இந்த போட்டிகளில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு பரிசு தொகையாக ரூ. 1.88 கோடி ஆண்டு தோறும் வழங்கப்படும்.

    • தமிழ் அறிஞர்கள் ஒன்பதின்மர் நூல்கள் நாட்டுடைமையாக்கப்படும். நூலுரிமை தொகைக்கென ரூபாய் 91 லட்சத்திலிருந்து 35 ஆயிரம் வழங்கப்படும்.

    • டெல்லி தமிழ் சங்கத்தின் கலையரங்கத்தில் தமிழ் கலை பண்பாட்டு நிகழ்ச்சிகள் நடத்திட ஏதுவாக ரூபாய் 50 லட்சம் நிதி உதவி வழங்கப்படும்.

    • சிறந்த நூலை எழுதிய நூலாசிரியர் நூலை பதிப்பிக்கும் பதிப்பாளருக்கு பரிசு தொகை உயர்த்தி வழங்கப்படும். கூடுதல் செலவினத்திற்கு ரூபாய் 11 லட்சத்து 55 ஆயிரம் வழங்கப்படும்

    • ஜனவரி 25ம் நாளினை தமிழ்மொழித் தியாகிகள் நாள் என பின்பற்றி, புகழ் வணக்கம் செய்திட ரூபாய் 2 லட்சம் வழங்கப்படும்

    • முத்தமிழ் அறிஞர் கலைஞர் விருது தோற்றுவிக்கப்படும் ரூபாய் 17 லட்சம் ஆண்டுதோறும் வழங்கப்படும்.

    • வீறுகவியரசர் முடியரசன் அவர்களின் புகழைப் போற்றும் வண்ணம் சிவகங்கை மாவட்டத்தில் திருவுருச் சிலை நிறுவிட ரூபாய் 50 லட்சம் வழங்கப்படும்

    • சண்டிகர் தமிழ் மன்றம் கட்டிட விரிவாக்க பணிக்கு ரூபாய் 50 லட்சம் நிதி உதவி வழங்கப்படும்

    இவ்வாறு கூறியுள்ளார்.

    • சட்டசபை விதிகள் குழுவில் கொண்டுவரப்பட்ட திருத்தம்.
    • சபாநாயகர் அப்பாவு முறைப்படி அறிவித்து விதிகளில் திருத்தம் கொண்டு வந்தார்.

    சென்னை:

    தமிழக சட்டசபை கூட்டம் வழக்கமாக காலை 10 மணிக்கு தொடங்கும் கடந்த மாதம் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடர் காலை 10 மணிக்கு பதிலாக 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணிக்கு முடிவடைந்தது. மாலையில் 5 மணி முதல் இரவு 8 மணி வரை சட்டசபை கூட்டம் நடத்தப்பட்டது.

    விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடந்ததையொட்டி கூட்டத்தொடரை விரைவாக முடிக்க இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டது.

    இதற்காக தமிழ்நாடு சட்டமன்ற விதிகள் குழுவில் முடிவெடுத்து தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதற்கான அறிவிப்பை சமீபத்தில் சட்டசபையில் சபாநாயகர் அப்பாவு முறைப்படி அறிவித்து விதிகளில் திருத்தம் கொண்டு வந்தார்.

    சட்டசபை விதிகள் குழுவில் கொண்டுவரப்பட்ட திருத்தம் அப்படியே நீடிப்பதால் இனி வரும் காலங்களில் சட்டசபை கூட்டம் காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணிக்கு முடிவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கருணாநிதி முதலமைச்சாக இருந்த கால கட்டத்தில் சட்டசபை கூட்டம் காலை 9.30 மணிக்கு தொடங்குவது வழக்கம். அந்த நடைமுறை இப்போதும் கொண்டுவரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • மறுநாள் அதிகாலை 3.15 மணி வரை சட்டசபை கூட்டம் நடந்தது.
    • உறுப்பினர்களுக்கு உணவு இடைவேளை அளிக்கப்பட்டது.

    திருப்பதி:

    தெலுங்கானா சட்டசபை கூட்டம் கடந்த திங்கட்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கியது. இந்த கூட்டத்தில் 31-ந்தேதிக்குள் பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்ற திட்டமிடப்பட்டிருந்தது.

    மின்சாரம், நகராட்சி நிர்வாகம், உள்துறை மற்றும் பிற துறைகள் தொடர்பான கோரிக்கைகள் மீது விவாதம் நடந்தது.

    இதனால் காலையில் தொடங்கிய சட்டசபை கூட்டம் இரவிலும் நீடித்தது. தொடர்ந்து ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விவாதம் செய்ததால் மறுநாள் அதிகாலை 3.15 மணி வரை சட்டசபை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் 19 கோரிக்கைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    தொடர்ந்து 17 மணி நேரம் சட்டசபை கூட்டம் நடத்தப்பட்டது சாதனையாக அமைந்தது. இந்த கூட்டத்தில் 70 சதவீதத்திற்கு அதிகமான எம்.எல். ஏ.க்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் நடுவில் உறுப்பினர்களுக்கு உணவு இடைவேளை அளிக்கப்பட்டிருந்தது.

    என்.டி.ராமராவ் ஒருங்கிணைந்த ஆந்திராவில் என்.டி. ராமராவ் முதல் மந்திரியாக இருந்தபோது ஒருமுறை அதிகாலை 2 மணி வரை சட்ட சபை கூட்டம் நடைபெற்றுள்ளது.

    இதேபோல் சந்திரசேகர ராவ் ஆட்சியில் 2 முறை நள்ளிரவு 1 மணி வரை தெலுங்கானா சட்டசபை கூட்டம் நடைபெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • நாளை ஒரு நாள் மட்டும் சட்டசபை கூட்டம் நடக்கிறது.
    • பட்ஜெட் மத்திய அரசு ஒப்புதல் அளித்தவுடன் மார்ச் மாதம் சட்டசபை கூட்டப்படும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆண்டு ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நடந்தது.

    ஆகஸ்ட் 14-ந் தேதி கூட்டத்தொடர் முடிந்து சட்டசபை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. சட்டசபை விதிப்படி 6 மாதத்துக்கு ஒருமுறை சபை கூட்டப்பட வேண்டும். அதன்படி வருகிற 14-ந் தேதிக்குள் சபை கூட்டப்பட வேண்டும்.

    இதன்படி புதுச்சேரி சட்டசபை நாளை (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு கூடுகிறது. சபாநாயகர் ஏம்பலம் செல்வம் குறள் வாசித்து சபை நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார். கூட்டத்தில் அரசின் கூடுதல் செலவினங்களுக்கு சபையில் ஒப்புதல் பெறப்படுகிறது.

    மேலும் தணிக்கை அறிக்கையின் நகல் தாக்கல் செய்யப்படுகிறது. நாளை ஒரு நாள் மட்டும் சட்டசபை கூட்டம் நடக்கிறது. புதுச்சேரி பட்ஜெட் தொகையை இறுதி செய்யும் பணியில் நிதித்துறை உட்பட அரசு துறைகள் தீவிரமாக இறங்கியுள்ளன.

    பட்ஜெட் தொகை இறுதி செய்யப்பட்டவுடன், மத்திய அரசின் அனுமதிக்காக கோப்பு டெல்லிக்கு அனுப்பப்படும்.

    மத்திய அரசு ஒப்புதல் அளித்தவுடன் மீண்டும் வருகிற மார்ச் மாதம் சட்டசபை கூட்டப்படும். அப்போது நிதி பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமி 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டசபையில் தாக்கல் செய்வார்.

    • பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 10-ந்தேதி தொடங்குகிறது.
    • 12-ந்தேதி முதலமைச்சர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 10-ந்தேதி தொடங்குகிறது. 12-ந்தேதி முதலமைச்சர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.

    சட்டசபை நிகழ்வு குறித்து தலைமை செயலாளர் சரத் சவுகான் அனைத்து அரசு துறை அதிகாரிகளுக்கு விடுத்துள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுச்சேரி சட்ட சபையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் தொடர்பான பட்டியல் சட்டசபை செயலகத்தால் பின்னர் வழங்கப்படும்.

    சம்பந்தப்பட்ட துறை தலைவர்கள் சபைக்கு வந்து விவாதங்களை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். விவாதங்கள் நடக்கும்போது துறை செயலாளர்கள், சிறப்பு செயலாளர்கள் சபை வளாகத்தில் இருந்து அமைச்சர்களுக்கு தேவையான கூடுதல் விவரங்களை உடனடியாக வழங்க வேண்டும்.

    எழுத்து கேள்விகளுக்கான பதில்கள், கேள்விகள் சபையில் 48 மணிநேரத்துக்கு முன்பாகவே சட்ட சபை செயலகத்துக்கு வழங்க வேண்டும். துணை கேள்விகளுக்கும் பின்னணி தகவல்களை சேகரித்து பதில்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

    சட்டசபை செயலகத்துக்கு பதில்களை வழங்குவதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட துறை செயலாளர், அமைச்சரின் ஒப்புதலை பெறவேண்டும்.

    நாள்தோறும் நடைபெறும் முக்கியமான நிகழ்வு 2 குறிப்புகளை தலைமைச் செயலாளருக்கு அனுப்ப வேண்டும். சட்டசபைக்கு வரும் போது செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு அதிகாரிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர வேண்டும்.

    இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • திமுக தலைவர் ஸ்டாலினிடம் ஆலோசனை செய்துதான் சட்டசபை தலைவர் செயல்படுவதாக நாங்கள் கருதுகிறோம்.
    • திமுகவின் ஆதரவுடன் பன்னீர்செல்வம் முன்கூட்டியே செய்த சதித்திட்டங்கள் அம்பலமாகியுள்ளன.

    தமிழக சட்டசபை கூட்டம் இன்று காலை 10 மணியளவில் தொடங்கியது. கூட்டத்தில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரம் தொடர்பாக அதிமுக தரப்பினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களை வெளியேற்றி சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். மேலும், அவையில் பங்கேற் அதிமுகவினருக்கு ஒரு நாள் முழுக்க தடை விதித்தார்.

    இந்நிலையில், வெளியேறிய எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    சபாநாயகர் அரசியல் ரீதியாக செயல்படுகிறார். சட்டசபை வேறு கட்சி வேறு. 62 அதிமுக எம்எல்ஏக்களால் எதிர்க்கட்சி துணைத் தலைவராக உதயகுமார் தேர்வு செய்யப்பட்டவர். ஆர்.பி.உதயகுமார் மற்றும் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் பதவிகளுக்காக முன்பே கடிதம் கொடுக்கப்பட்டது

    ஓபிஎஸ் உள்ளிட்டோர் நீக்கப்பட்டது செல்லும் என நீதிமன்ற தீர்ப்பே உள்ள நிலையில் அதை சபாநாயகர் மதிக்கவில்லை. அதிமுக எம்எல்ஏக்களை கொண்ட எதிர்க்கட்சியாக உள்ளோம். எங்களது கோரிக்கையை ஏற்பதுதான் மரபு.

    நேற்று வரை சரியான முடிவு எடுக்காமல் எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரத்தில் சபாநாயகர் எங்கள் கோரிக்கையை ஏற்கவில்லை.

    எங்களது கருத்துகளை நியாயமாக தெரிவித்தும் சபாநாயகர் எங்களுக்கு முறையான பதில் கூறவில்லை.

    திமுக தலைவர் ஸ்டாலினிடம் ஆலோசனை செய்துதான் சட்டசபை தலைவர் செயல்படுவதாக நாங்கள் கருதுகிறோம். அரசியல் ரீதியாக அதிமுகவை எதிர்கொள்ளாத திமுக தலைவர் ஸ்டாலின் கொள்ளைபுறம் மூலமாக பழிவாங்குகிறார்.

    திமுகவின் ஆதரவுடன் பன்னீர்செல்வம் முன்கூட்டியே செய்த சதித்திட்டங்கள் அம்பலமாகியுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அவையில் இருந்து வெளியேற்றப்பட்ட அதிமுக எம்எல்ஏக்கள் பேரவை வளாகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
    • பேரவை வளாகத்தில் இருந்தும் வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.

    சபாநாயகர் உத்தரவின்பேரில் சட்டசபையில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தரப்பை சேர்ந்த அதிமுக எம்எல்ஏக்கள் வெளியேற்றப்பட்டனர்.

    சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி ஆதரவு எம்எல்ஏக்கள் தர்ணாவில் ஈடுபட்டதை அடுத்து, வெளியேற்றப்பட்டனர்.

    இதையடுத்து, அவையில் இருந்து வெளியேற்றப்பட்ட அதிமுக எம்எல்ஏக்கள் பேரவை வளாகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

    இதனால் தர்ணாவில் ஈடுபட்ட பழனிசாமி தரப்பு எம்எல்ஏக்களை பேரவை வளாகத்தில் இருந்தும் வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.

    • அங்கன்வாடி பணியாளர்கள் பேரவை கூட்டத்தில் வலியுறுத்தல்.
    • 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் வி.ஏ.கே.நகர் பகுதியில் காளியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் பேரவை கூட்டம் நடைபெற்றது.

    மாவட்ட பொது செயலாளர் சரவணபெருமாள் முன்னிலை வகித்தார். செயலாளர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் கண்ணன் பங்கேற்றார்.

    இதில் திமுக அறிவித்த தேர்தல் வாக்குறுதியில் குறைந்தபட்சம் ஓய்வூதியம் திட்டத்தை தமிழக அரசு உடனே அமுல்படுத்த வேண்டும் ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு அகவிலைப்படியுடன் கூடிய குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்தினர்.

    ஓய்வூ பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு மருத்துவ காப்பீடு வசதி ஏற்படுத்தி தர தமிழக அரசு ஆவண செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.

    இதில் ஆரணி, வந்தவாசி, செய்யார் உள்ளிட்ட பகுதிகளில் பணிபுரிந்த அங்கன்வாடி பணியாளர்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    சட்டப்பேரவை கூட்டத்தில் சரியாக நடக்காதவர்கள், கிராமசபை கூட்டத்தை நடத்தி வருகிறார்கள் என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சித்து உள்ளார். #ponradhakrishnan #mkstalin #bjp #kodanadmurders
    சென்னை:

    மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சட்டப்பேரவை கூட்டத்தில் சரியாக செயல்படாதவர்கள், கிராமசபை கூட்டத்தை நடத்தி வருகிறார்கள். மக்களவை தேர்தலில் வெற்றி பெற முடியாது என நினைத்ததால் கிராமசபை கூட்டத்தை திமுக நடத்துகிறது.

    பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற பயிற்சி எடுத்து வருபவர்களுக்கு வாழ்த்துகள்.

    கோடநாடு விவகாரத்தில் ஏதோ மர்மம் இருக்கிறது. அது இப்போது வெளிவர வேண்டிய அவசியம் என்ன? கோடநாடு விவகாரத்தின் பின்னணியில் அரசியல் உள்நோக்கம் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது. பின்னணியில் யார் என தமிழக அரசு கண்டுபிடிக்க வேண்டும். 

    இவ்வாறு அவர் கூறினார். #ponradhakrishnan #mkstalin #bjp #kodanadmurders
    தமிழக சட்டசபை கூட்டத்தை வருகிற 29-ந் தேதி முதல் ஜூலை 9-ந் தேதி வரை நடத்துவது என்று அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. #TNAssembly
    சென்னை:

    தமிழக சட்டசபையில் பட்ஜெட் கடந்த மார்ச் 15-ந்தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் மார்ச் 19-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடைபெற்றது.

    இந்த நிலையில் சட்டசபை கூட்டம் வருகிற 29-ந் தேதி தொடங்குகிறது. மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடத்துவதற்கான இந்த கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது பற்றி விவாதிக்க அலுவல் ஆய்வு குழு கூட்டம் சபாநாயகர் தனபால் தலைமையில் இன்று நடந்தது.

    இந்த கூட்டத்தை வருகிற 29-ந் தேதி முதல் ஜூலை 9-ந் தேதி வரை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. 23 நாட்கள் இந்த கூட்டத் தொடர் நடக்கிறது. #TNAssembly
    ×