தமிழக சட்டசபைக் கூட்டம் இனி காலை 9.30 மணிக்கு தொடங்கும்: விதிகள் குழுவில் திருத்தம்

சட்டசபை விதிகள் குழுவில் கொண்டுவரப்பட்ட திருத்தம்.சபாநாயகர் அப்பாவு முறைப்படி அறிவித்து விதிகளில் திருத்தம் கொண்டு வந்தார்.
தமிழக சட்டசபைக் கூட்டம் இனி காலை 9.30 மணிக்கு தொடங்கும்: விதிகள் குழுவில் திருத்தம்
Published on

சென்னை:

தமிழக சட்டசபை கூட்டம் வழக்கமாக காலை 10 மணிக்கு தொடங்கும் கடந்த மாதம் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடர் காலை 10 மணிக்கு பதிலாக 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணிக்கு முடிவடைந்தது. மாலையில் 5 மணி முதல் இரவு 8 மணி வரை சட்டசபை கூட்டம் நடத்தப்பட்டது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடந்ததையொட்டி கூட்டத்தொடரை விரைவாக முடிக்க இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டது.

இதற்காக தமிழ்நாடு சட்டமன்ற விதிகள் குழுவில் முடிவெடுத்து தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதற்கான அறிவிப்பை சமீபத்தில் சட்டசபையில் சபாநாயகர் அப்பாவு முறைப்படி அறிவித்து விதிகளில் திருத்தம் கொண்டு வந்தார்.

சட்டசபை விதிகள் குழுவில் கொண்டுவரப்பட்ட திருத்தம் அப்படியே நீடிப்பதால் இனி வரும் காலங்களில் சட்டசபை கூட்டம் காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணிக்கு முடிவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கருணாநிதி முதலமைச்சாக இருந்த கால கட்டத்தில் சட்டசபை கூட்டம் காலை 9.30 மணிக்கு தொடங்குவது வழக்கம். அந்த நடைமுறை இப்போதும் கொண்டுவரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com