என் மலர்
உள்ளூர் செய்திகள்
- மூன்று வானிலை ஆய்வு மையங்கள் சென்னையில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ளன.
- 34 ஆண்டுகளாக வானிலை ஆய்வு மையத்தில் பணியாற்றி வரும் அமுதா, வடகிழக்கு பருவமழை தரவுகளை ஆராய்ந்து அதில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.
சென்னை:
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஏழு மண்டல வானிலை ஆய்வு மையங்களில் ஒன்று தான் சென்னை வானிலை ஆய்வு மையம். இந்த மையமானது தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் வானிலை சம்பந்தப்பட்ட செயல்பாடுகளை கவனித்துக்கொள்கிறது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையமானது 18-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உருவாக்கப்பட்டது. தென்னிந்தியாவில், ஐதராபாத், பெங்களூரு மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் அமையப்பெற்றுள்ள மூன்று வானிலை ஆய்வு மையங்கள் சென்னையில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ளன.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார். இவருக்கு பிறகு புதிய தலைவராக அமுதா நாளை பொறுப்பேற்கிறார்.
34 ஆண்டுகளாக வானிலை ஆய்வு மையத்தில் பணியாற்றி வரும் அமுதா, வடகிழக்கு பருவமழை தரவுகளை ஆராய்ந்து அதில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி தர முடியாது என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசினார்
- மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானின் சென்னை வருகை ரத்து செய்யப்பட்டது.
புதிய கல்விக் கொள்கை மற்றும் மும்மொழி கொள்கையை தமிழக அரசு ஏற்க மறுக்கிறது. அதனால் தமிழ்நாட்டுக்கு நிதி தர முடியாது என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இதனிடையே, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தி திணிப்பு என்ற தவறான பிரசாரத்தை மேற்கொண்டுள்ளதாகவும், இது முழுக்க முழுக்க அரசியல் நோக்கம் கொண்டது எனவும் விமர்சித்து இருந்தார். இதனால் மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.
இதற்கிடையே, சென்னை ஐ.ஐ.டி.யில் நடைபெறும் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், தமிழகத்தில் கல்வித்துறைக்கு நிதி வழங்காதது, மும்மொழிக் கொள்கை விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இன்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானின் சென்னை வருகை ரத்து செய்யப்பட்டது.
இன்று இன்வென்டிவ் (Inventive) 2025 என்ற தலைப்பில் சென்னை ஐஐடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு பதிலாக மத்திய இணை அமைச்சர் சுகந்தா மஜும்தார் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில், காணொலி காட்சி வாயிலாக கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உரையாற்றினார்.
இந்நிலையில், சென்னை ஐஐடிக்கு வருகை தந்த ஒன்றிய இணை அமைச்சர் மஜூம்தாருக்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுக மாணவரணி, திராவிட மாணவர் கழகம் சார்பில் கருப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
- கடந்த 2 தினங்களுக்கு முன்பு தருமபுரி வந்த தர்மசெல்வன் தலைவரின் சிலைகளுக்கு மாலை அணிவித்தார்.
- எனக்கு கட்சியின் தலைவர் அதிகாரத்தை வழங்கி உள்ளார்
தருமபுரி:
தருமபுரி மாவட்டத்தில் கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி மீது உள்ள அதிருப்தியால் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவித்து புதிய கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக தர்ம செல்வனை தி.மு.க. தலைமை கழகம் நியமித்தது.
இந்த நிலையில் தர்மசெல்வனை கிழக்கு மாவட்ட செயலாளராக நியமித்த 2 நாளில் அவர் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு நடந்த தேர்தலில் தி.மு.க. வேட்பாளரை தோற்கடிக்க வேண்டும் என்று தொண்டர்களிடம் பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
அது முடிவதற்குள் கடந்த 2 தினங்களுக்கு முன்பு தருமபுரி வந்த தர்மசெல்வன் தலைவரின் சிலைகளுக்கு மாலை அணிவித்தார். அப்போது அண்ணா சிலை அருகே அவரின் ஆதரவாளர்கள் அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடித்து போக்குவரத்துக்கு இடையூறை ஏற்படுத்தியதாக தெரிகிறது.
இதனை தொடர்ந்து நேற்று நடந்த செயற்குழுக் கூட்டத்தில் தர்மசெல்வன் பேசியபோது கலெக்டர், எஸ்.பி என்னுடைய பேச்சை தான் கேட்க வேண்டும். இல்லை என்றால் அவர்களையும் மாற்றி விடுவேன்.
எனக்கு கட்சியின் தலைவர் அதிகாரத்தை வழங்கி உள்ளார் என பேசிய ஆடியோ சமூக வலை தளத்தில் வைரலாகி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ரம்ஜான், ஹோலி உள்ளிட்ட பண்டிகைகள் மார்ச் மாதத்தில் தான் வருகிறது.
- அத்தியாவசிய வங்கி சேவைகளை மேற்கொள்ள விரும்புபவர்கள் அதற்கேற்ப திட்டமிட்டுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை:
வங்கிகளுக்கான மார்ச் மாத விடுமுறை பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. பொது விடுமுறை, பிராந்திய நிகழ்வுகளுக்கான விடுமுறை மற்றும் 2, 4-வது சனிக்கிழமை விடுமுறை, வழக்கமான ஞாயிறு விடுமுறை என வங்கிகளுக்கு மொத்தம் 14 நாட்கள் விடுமுறை விடப்படுகிறது.
சில மாநிலத்திற்கான பண்டிகை அல்லது விழாக்களுக்கு அந்த குறிப்பிட்ட மாநிலத்தில் செயல்படும் வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், ரம்ஜான், ஹோலி உள்ளிட்ட பண்டிகைகள் மார்ச் மாதத்தில் தான் வருகிறது. மார்ச் மாதத்தில் வங்கிகளுக்கு விடப்பட்டுள்ள 14 நாட்கள் விடுமுறை விபரம் வருமாறு:-
மார்ச் 2 (ஞாயிறு)-வார விடுமுறை
மார்ச் 7 (வெள்ளி)-சாப்சர் குட்-மிசோரம் மாநிலத்திற்கு மட்டும் விடுமுறை
மார்ச் 8 (2-வது சனிக்கிழமை)-வார விடுமுறை
மார்ச் 9 (ஞாயிறு)-வார விடுமுறை
மார்ச் 13 (வியாழன்)-ஹோலிகா தஹான், ஆட்டுக்கல் பொங்கல் பண்டிகை-உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், ஜார்க்கண்ட், கேரளா.
மார்ச் 14 (வெள்ளி)-ஹோலி, திரிபுரா, ஒடிசா, கர்நாடகா, தமிழகம், மணிப்பூர், கேரளா மற்றும் நாகாலாந்து மாநிலங்களை தவிர்த்து பிற மாநிலங்களில் பொது விடுமுறை.
மார்ச் 15 (சனிக்கிழமை)-அகர்தலா, புவனேஸ்வர், இம்பால் மற்றும் பாட்னா உள்ளிட்ட நகரங்களில் விடுமுறை.
மார்ச் 16 (ஞாயிறு)-பொதுவிடுமுறை
மார்ச் 22 (4-வது சனிக்கிழமை)-பிஹார் திவாஸ்
மார்ச் 23 (ஞாயிறு)-பொதுவிடுமுறை
மார்ச் 27 (வியாழன்)-ஷதப் இ கத்ர்-ஜம்மு உள்ளூர் விடுமுறை
மார்ச் 28 (வெள்ளி)-ஜூமத் உள் விதா-ஜம்மு காஷ்மீரில் உள்ளூர் விடுமுறை
மார்ச் 30 (ஞாயிறு)-பொதுவிடுமுறை
மார்ச் 31 (திங்கள்)-ரம்ஜான் விடுமுறை
இதனால், அத்தியாவசிய வங்கி சேவைகளை மேற்கொள்ள விரும்புபவர்கள் அதற்கேற்ப திட்டமிட்டுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த விடுமுறை தினங்களில் மொபைல் பேங்கிங் மற்றும் யு.பி.ஐ., சேவை தொடர்ந்து வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழ்நாடு அடைந்திருக்கும் வளர்ச்சி அனைத்துமே இருமொழிக்கொள்கையால் சாதித்தவை.
- ஆதிக்கவாதிகளின் சதியை அறியாதவர்களா தமிழர்கள்?
சென்னை:
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று எக்ஸ் தள பக்கத்தில், தேசிய கல்விக் கொள்கை 2020 -ஐ அமல்படுத்துவதற்கு பெரும் தேவை உள்ளது. மாநில அரசின் கடுமையான இரு மொழிக்கொள்கை காரணமாக அண்டை மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களுடன் ஒப்பிடும்போது இந்த பிராந்திய இளைஞர்கள் வாய்ப்புகளை இழந்தவர்களாக உணர்கிறார்கள்.
துரதிருஷ்டவசமாக ஹிந்தியை எதிர்க்கிறோம் என்ற பெயரில் எந்தவொரு தென்மாநில மொழிகளையும் கூட படிக்க அனுமதிக்கப்படாதவர்களாக அவர்கள் உணர்கிறார்கள். இது உண்மையிலேயே நியாயமற்றது. மொழியை படிப்பதற்கான தேர்வு நமது இளைஞர்களுக்கு இருக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், மும்மொழி கொள்கையும் மூக்கறுப்பட்டு நிற்க போகிறது என்று அமைச்சர் ரகுபதி காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,
தமிழகம் பொருளாதாரத்திலும், கல்வியிலும் பெற்றுள்ள வளர்ச்சியை பொறுக்க முடியாமல் வெறுப்பை உமிழ்கிறார் கவர்னர். தமிழ்நாடு அடைந்திருக்கும் வளர்ச்சி அனைத்துமே இருமொழிக்கொள்கையால் சாதித்தவை.
தமிழ்நாட்டில் எப்படியாவது இந்தியை திணித்து உள்ளே நுழையலாம் எனும் ஆதிக்கவாதிகளின் சதியை அறியாதவர்களா தமிழர்கள்?
சனாதனம், சமஸ்கிருதத்தை காலூன்ற செய்திட குட்டிக்கரணம் போடும் கவர்னரின் நடவடிக்கைகள் தமிழ் மண்ணில் வேறூன்றவில்லை. அப்படித்தான் மும்மொழி கொள்கையும் மூக்கறுபட்டு நிற்க போகிறது. மொழித் தேர்வு எது? மொழித் திணிப்பு எது? என்பது எங்களுக்கு தெரியும், இந்த நாடகங்கள் எல்லாம் இங்கே எடுபடாது என்று கூறியுள்ளார்.
- அரசியல் கட்சிகள் மும்மொழி கொள்கை மூலம் இந்தியை திணிக்க முயற்சிப்பதாக கூறி போராட்டங்கள் நடத்தி வருகின்றன.
- இளநிலை உதவியாளர் சிவா அடிக்கடி ராஜினாமா செய்ய விரும்புவதாக கூறுவார்.
கரூர்:
மத்திய அரசு மும்மொழிக் கொள்கையை நாடு முழுவதும் அமல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் தி.மு.க. அரசு மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் மும்மொழி கொள்கை மூலம் இந்தியை திணிக்க முயற்சிப்பதாக கூறி போராட்டங்கள் நடத்தி வருகின்றன.
இந்த நிலையில் மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையின் மூலம் இந்தி மொழியை திணிக்க முயற்சிப்பதாக அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கரூர் கடவூர் அரசு மேல்நிலைப்பள்ளி இளநிலை உதவியாளர் சிவா (வயது 43) தனது பணியை ராஜினாமா செய்தார்.
இளநிலை உதவியாளர் சிவா அடிக்கடி ராஜினாமா செய்ய விரும்புவதாக கூறுவார். 20 நாள் மருத்துவ விடுப்பில் இருந்து அவர் திரும்பிய பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
- அமைச்சர் துரைமுருகனை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
- சட்ட விரோத மணல் கொள்ளைக்கு முழு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை:
தமிழக பா.ஜ.க. மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழகத்தில் தொடரும் சட்டவிரோத மணல் கொள்ளையை தடுக்க தவறிய, மாநிலம் முழுக்க மணல் கொள்ளையர்களுக்கு உடந்தையாக நீர்வளத்துறை அமைச்சக அதிகாரிகளும், தமிழகத்தின் பல்வேறு மாவட்ட அரசு நிர்வாகத்தினரும் செயல்பட்டு தமிழகத்தின் மண்வளம் சுரண்டப்படுவதால், நிர்வாக சீர்கேட்டிற்கு முழு காரணமாக விளங்கும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உச்ச நீதிமன்றத்தின் அறிவுரைக்கு உரிய மதிப்பளித்து, தமிழக அரசு தானாக முன்வந்து மணல் கொள்ளை குறித்து விசாரணை செய்ய, ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரித்து, தனது ஆட்சியில் தன் கண்ணெதிரே நடக்கும் மணல் கொள்ளையை உடனடியாக தடுக்க முற்பட வேண்டும்.
தமிழக விவசாயிகளின் நலத்தை பேணிக்காக்கும் வகையில், நிலத்தடி நீர் ஆதாரத்தை முழுமையாக பாதுகாக்கும் வகையில், தமிழகத்தில் சட்ட விரோத மணல் கொள்ளைக்கு முழு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் மணல் கொள்ளையை தடுக்க முனைந்து படுகொலை செய்யப்பட்டுள்ள சமூக ஆர்வலர்கள் அரசு அதிகாரிகள் குறித்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- கொலை செய்து ரீல்ஸ் போடும் குற்றவாளிகளுக்குப் போட்டியாக தினமும் ரீல்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
- உங்கள் இளமைக்கால சினிமா கனவுகளுக்குப் பலிகடா, தமிழக மக்களா முதலமைச்சரே?
சென்னை:
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
மாநிலம் முழுவதும் சீர்குலைந்து கிடக்கும் சட்டம் ஒழுங்கு, பள்ளி செல்லும் குழந்தைகளுக்குக் கூட பாதுகாப்பு இல்லாததால் அரங்கேறும் பாலியல் வன்முறைகள், மாவட்ட ஆட்சியரையே மிரட்டும் திமுக நிர்வாகி, ஆறாக ஓடும் கள்ளச்சாராயம், கஞ்சா விற்பனை, அரசு அதிகாரிகளையே படுகொலை செய்யும் மணல் கடத்தல்காரர்கள் என ஒரு புறம் ஒட்டு மொத்த தமிழகமே இருண்டு கிடக்க, கொலை செய்து ரீல்ஸ் போடும் குற்றவாளிகளுக்குப் போட்டியாக தினமும் ரீல்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
நாட்டில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் தினம் தினம் ஷூட்டிங் நடத்திக் கொண்டிருக்கிறீர்களே. உங்கள் இளமைக்கால சினிமா கனவுகளுக்குப் பலிகடா, தமிழக மக்களா முதலமைச்சரே?
மறைந்த உங்கள் தந்தையார் நேரில் வந்தால், இப்படி ஒருவரை எங்கள் தலையில் கட்டிவிட்டுச் சென்று விட்டீர்களே என்று கதறக் காத்திருக்கும் தமிழக மக்களைக் குறித்து எப்போதுதான் யோசிப்பீர்கள்? என வினவியுள்ளார்.
- என்னை எதிர்த்து நின்று சமாளிக்க முடியாமல் அவதூறுகளை பரப்புகின்றனர்.
- அதிகபட்சம் என்னை சிறையில் அடைக்க முடியும், சிறையில் அடையுங்கள்.
தருமபுரி:
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
* 234 தொகுதிகளிலும் தி.மு.க. வேட்பாளரை போட முடியுமா?
* 2026 தேர்தலில் தமிழரா? திராவிடரா? என போட்டியிடுவோம்.
* பல ஆண்டுகளை தமிழகத்தை ஆண்ட தி.மு.க. கட்சி ஓட்டு பணம் கொடுக்காமல் தேர்தலை சந்திக்க தயாரா?
* என்னை எதிர்த்து நின்று சமாளிக்க முடியாமல் அவதூறுகளை பரப்புகின்றனர்.
* அதிகபட்சம் என்னை சிறையில் அடைக்க முடியும், சிறையில் அடையுங்கள்.
* காவல் ஆய்வாளரின் தந்தை ராஜீவ் கொலையின் போது இறந்ததற்கு எதுவும் செய்ய முடியாது.
* முதன் முதலில் இந்தி பள்ளியை தமிழகத்தில் திறந்தவர் பெரியார்.
* தமிழ்நாட்டில் அதிக வழக்குகளை எதிர்கொள்ளும் தலைவராக நான் இருக்கிறேன். 230 வழக்குகளை கடந்து விட்டேன்.
* எத்தனை வழக்குகள் போட்டாலும் அஞ்சுபவன் நான் அல்ல, எல்லா வழக்குகளையும் எதிர்கொள்ளத் தயார் என்றார்.
- ஆயிரம் பேர் ஆயிரம் சொல்லலாம், புகார் கூறிவிட்டாலே குற்றவாளி போல் முத்திரை குத்துவதா?
- நானே தெருக்கோடியில் நின்னுக்கொண்டு இருக்கேன். என்கிட்ட எங்க 2 கோடி இருக்கு.
தருமபுரி:
விஜயலட்சுமி அளித்த புகார் தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது:-
* என்னுடன் மோதி ஜெயிக்க முடியாததால் பாலியல் வழக்கு.
* நடிகை சொன்னாலே அது குற்றம் ஆகிவிடுமா?
* ஆயிரம் பேர் ஆயிரம் சொல்லலாம், புகார் கூறிவிட்டாலே குற்றவாளி போல் முத்திரை குத்துவதா?
* கல்லூரியில் படிக்கும் பிள்ளையை கடத்திச்சென்று கற்பழித்தது போல் சித்தரிப்பதா?
* எனக்கு திருமணம் ஆகும் போது அதனை தடுத்து நிறுத்தி இருக்கணும்.
* சிறையில் இருந்து கருக்கலைப்பு செய்த ஒரே ஆள் நான்தான்.
* ஓராண்டில் 7 முறை கருக்கலைப்பு செய்த சாதனையாளன் நானாகதான் இருப்பேன்.
* நானே தெருக்கோடியில் நின்னுக்கொண்டு இருக்கேன். என்கிட்ட எங்க 2 கோடி இருக்கு.
* உதவின்னு கேட்கும் போது கொடுத்து உதவுறதுதான். அவங்களுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றார்.
- நான் எங்கிருக்கிறேன் என்று அனைவருக்கும் தெரியும். எங்கும் தலைமறைவாகிவிடவில்லை.
- ஒரே நேரத்தில் 4 சம்மன் அனுப்ப வேண்டியது ஏன்?
தருமபுரி:
தருமபுரியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* என் மீதான வழக்கில் மட்டும் காவல்துறை இவ்வளவு அவசரம் காட்டுவது ஏன்?
* நீதிமன்றம் 3 மாதம் அவகாசம் அளித்துள்ளது. ஆனால் மூன்றே நாளில் வழக்கை முடிப்பது போல் அவசரம் காட்டத்தேவையில்லை.
* சம்மன் ஒட்டியதுடன் காவல்துறையினரின் பணி முடிந்துவிட்டது.
* வீட்டில் ஆட்கள் இல்லாமல் இருந்திருந்தால் கதவில் சம்மன் ஒட்டலாம். எனது மனைவி இருந்தும் சம்மனை ஒட்டியது எதற்காக?
* ஆட்கள் இல்லாதது போல் அழைப்பாணையை ஒட்டிவிட்டு போலீசார் செல்லலாம். ஆனால் நாங்கள் அதனை கிழிக்கக்கூடாதா?
* கதவில் ஒட்டிய சம்மன் நான் படிக்கவா? பொதுமக்கள் படிக்கவா? சம்மனை கிழிக்காமல் பூஜை அறையில் வைத்து பூஜை செய்யவா?
* நீலாங்கரை காவல் ஆய்வாளர் அடித்து இழுத்து செல்ல வேண்டியது ஏன்?
* நான் எங்கிருக்கிறேன் என்று அனைவருக்கும் தெரியும். எங்கும் தலைமறைவாகிவிடவில்லை.
* ஒரே நேரத்தில் 4 சம்மன் அனுப்ப வேண்டியது ஏன்?
* இன்று மாலை 6 மணிக்கு மேல் வளசரவாக்கம் காவல்நிலையம் செல்வேன் என்றார்.
- தேர்தல் வாக்குறுதியில் அவர்கள் சொன்னதை பாராளுமன்றத்தில் கனிமொழி பேசியிருக்கிறாரா?
- எப்படி 2021 தேர்தலில் 525 வாக்குறுதிகள் கொடுத்து எடப்பாடி ஏமாற்றி கொண்டிருக்கிறார்
தூத்துக்குடியில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டார்.
அக்கூட்டத்தில் பேசிய அவர், "திமுகவின் 64 பக்க தேர்தல் வாக்குறுதியில் அவர்கள் சொன்னதை பாராளுமன்றத்தில் கனிமொழி பேசியிருக்கிறாரா என்றால் இல்லை. எப்படி 2021 தேர்தலில் 525 வாக்குறுதிகள் கொடுத்து எடப்பாடி ஏமாற்றி கொண்டிருக்கிறாரே. அதே போல பாராளுமன்ற தேர்தலில் 64 பக்க தேர்தல் அறிக்கையை கொடுத்து அதை நிறைவேற்றாமல் இன்றுவரை இருக்கிறார்கள்" என்று தெரிவித்தார்.
அதிமுக கூட்டத்தில், தேர்தல் வாக்குறுதி கொடுத்து எடப்பாடி பழனிச்சாமி ஏமாற்றியதாக திண்டுக்கல் சீனிவாசன் வாய் தவறி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






