என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தேர்தல் வாக்குறுதி கொடுத்து எடப்பாடி ஏமாற்றியதாக திண்டுக்கல் சீனிவாசன் பரபரப்பு பேச்சு
    X

    தேர்தல் வாக்குறுதி கொடுத்து எடப்பாடி ஏமாற்றியதாக திண்டுக்கல் சீனிவாசன் பரபரப்பு பேச்சு

    • தேர்தல் வாக்குறுதியில் அவர்கள் சொன்னதை பாராளுமன்றத்தில் கனிமொழி பேசியிருக்கிறாரா?
    • எப்படி 2021 தேர்தலில் 525 வாக்குறுதிகள் கொடுத்து எடப்பாடி ஏமாற்றி கொண்டிருக்கிறார்

    தூத்துக்குடியில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டார்.

    அக்கூட்டத்தில் பேசிய அவர், "திமுகவின் 64 பக்க தேர்தல் வாக்குறுதியில் அவர்கள் சொன்னதை பாராளுமன்றத்தில் கனிமொழி பேசியிருக்கிறாரா என்றால் இல்லை. எப்படி 2021 தேர்தலில் 525 வாக்குறுதிகள் கொடுத்து எடப்பாடி ஏமாற்றி கொண்டிருக்கிறாரே. அதே போல பாராளுமன்ற தேர்தலில் 64 பக்க தேர்தல் அறிக்கையை கொடுத்து அதை நிறைவேற்றாமல் இன்றுவரை இருக்கிறார்கள்" என்று தெரிவித்தார்.

    அதிமுக கூட்டத்தில், தேர்தல் வாக்குறுதி கொடுத்து எடப்பாடி பழனிச்சாமி ஏமாற்றியதாக திண்டுக்கல் சீனிவாசன் வாய் தவறி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×