search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Election promise"

    • தேர்தல் வாக்குறுதிகளை படிப்படியாக தமிழக முதல்வர் நிறைவேற்றுகிறார் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேசினார்
    • இதன் மூலம் 1991 மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த 23,307 மகளிர் பயன்பெற்றுள்ளனர்

    பெரம்பலூர்:

    கூட்டுறவுத்துறையின் சார்பில் பெரம்பலுார் மாவட்டத்தில் உள்ள 23,307 மகளிருக்கு வழங்கப்பட்ட ரூ.47.64 கோடி மதிப்பிலான சுயஉதவிக்குழு கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், கலெக்டர் வெங்கட பிரியா தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ. பிரபாகரன், மாவட்ட ஊராட்சிக்குழுத்தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பேசியதாவது, முதலமைச்சர் அளித்த தேர்தல் வாக்குறுதிகளை ஆட்சிப்பொறுப்பே ற்றத்திலிருந்து படிப்படியாக செய்து வருகிறார். அதில் கூட்டுறவு சங்கங்களில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் பெற்ற கடன் ரத்து செய்யப்படும் என அறிவித்தார்.

    அதனை தொடர்ந்து மகளிர் சுய உதவிக்குழுக்கள் பெற்ற கடன்கள் தள்ளுபடி என்கிற அறிவிப்பினை உறுதி செய்யும் விதமாக இன்று மகளிர் சுய உதவிக்குழுக்கள் கடன் தள்ளுபடிக்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தி ல் ரூ.47.64 கோடி கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 1991 மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த 23,307 மகளிர் பயன்பெற்றுள்ளனர். மகளிர் அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யும் திட்டம், புதுமைப் பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம் போன்ற முத்தாய்ப்பான திட்டங்கள் பல உள்ளன. இப்படி பெண்களின் முன்னேற்றத்தில் மிகுந்த அக்கறை கொண்டு, பெண்களுக்கு உரிய மரியாதை அளித்து அவர்களை வாழ்வில் உயர்த்தும் பல்வேறு திட்டங்கள் தமிழ்நாடு முதலமைச்சர் பொற்கால ஆட்சியில்தான் செயல்படுத்தப்படுகின்றது.

    இவ்வாறு தெரிவித்தார். நிகழ்ச்சியில், 23,307 மகளிருக்கு வழங்கப்பட்ட ரூ.47.64கோடி மதிப்பிலான சுயஉதவிக்குழு கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைக்கும் விதமாக 373 மகளிருக்கு ரூ.1.29 கோடி மதிப்பிலான கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான ஆவணங்களை அவர் வழங்கினார். இந்நிகழ்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி, வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி, இணைப் பதிவாளர் (கூட்டுறவு சங்கம்) பாண்டியன், வேப்பூர் ஒன்றிய குழு தலைவர் பிரபா செல்லப்பிள்ளை பேரூராட்சித் தலைவர் சங்கீதா மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


    ×