என் மலர்
நீங்கள் தேடியது "திமுக மாவட்ட பொறுப்பாளர்"
- கடந்த 2 தினங்களுக்கு முன்பு தருமபுரி வந்த தர்மசெல்வன் தலைவரின் சிலைகளுக்கு மாலை அணிவித்தார்.
- எனக்கு கட்சியின் தலைவர் அதிகாரத்தை வழங்கி உள்ளார்
தருமபுரி:
தருமபுரி மாவட்டத்தில் கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி மீது உள்ள அதிருப்தியால் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவித்து புதிய கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக தர்ம செல்வனை தி.மு.க. தலைமை கழகம் நியமித்தது.
இந்த நிலையில் தர்மசெல்வனை கிழக்கு மாவட்ட செயலாளராக நியமித்த 2 நாளில் அவர் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு நடந்த தேர்தலில் தி.மு.க. வேட்பாளரை தோற்கடிக்க வேண்டும் என்று தொண்டர்களிடம் பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
அது முடிவதற்குள் கடந்த 2 தினங்களுக்கு முன்பு தருமபுரி வந்த தர்மசெல்வன் தலைவரின் சிலைகளுக்கு மாலை அணிவித்தார். அப்போது அண்ணா சிலை அருகே அவரின் ஆதரவாளர்கள் அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடித்து போக்குவரத்துக்கு இடையூறை ஏற்படுத்தியதாக தெரிகிறது.
இதனை தொடர்ந்து நேற்று நடந்த செயற்குழுக் கூட்டத்தில் தர்மசெல்வன் பேசியபோது கலெக்டர், எஸ்.பி என்னுடைய பேச்சை தான் கேட்க வேண்டும். இல்லை என்றால் அவர்களையும் மாற்றி விடுவேன்.
எனக்கு கட்சியின் தலைவர் அதிகாரத்தை வழங்கி உள்ளார் என பேசிய ஆடியோ சமூக வலை தளத்தில் வைரலாகி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முதுகுளத்தூரிலிருந்து பரமக்குடி செல்லும் வழியில் உடைகுளம் அருகில் சாம்பகுளம் விலக்கு ரோட்டில் மணக்குளத்தை சேர்ந்த செந்தமிழ் (42), கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக கணவன்-மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் இருந்து இருந்து தவறி விழுந்தனர். இதில் செந்தமிழ் பலத்த காயமடைந்தார். விபத்து நடந்து பகுதியில் உதவிக்கு யாரும் இல்லாமல் தம்பதிகள் தவித்தனர்.
அந்த வழியாக ராமநாதபுரத்திற்கு காரில் சென்ற தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் முத்துராம லிங்கம் விபத்தில் சிக்கிய தம்பதியை மீட்டு 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்து அவர்களை ஏற்றி அனுப்பி வைத்தார்.
கமுதி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் செந்தமிழை பரிசோதித்து, மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மனிதாபிமான அடிப்படையில் செயல்பட்ட தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் முத்துராமலிங்கத்தை பொதுமக்கள் பாராட்டினர். விபத்து குறித்து கீழத் தூவல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். #tamilnews






