என் மலர்
உள்ளூர் செய்திகள்
- பழனி மலைக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் சாமி தரிசனம் முடித்த பிறகு அங்குள்ள தங்க கோபுரம் மற்றும் ராஜேகோபுரத்தை தரிசனம் செய்வது வழக்கம்.
- இன்று காலை முதல் சமூக வலைதளங்களில் ராஜகோபுரத்தில் சேதம் என்ற புகைப்படம் வேகமாக பரவியது.
பழனி:
அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சாமி கோவிலுக்கு வருடம் முழுவதும் தமிழகம் மட்டுமின்றி உலக நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர். பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் செல்ல படிப்பாதை, யானைப்பாதை மட்டுமின்றி, விரைவாக செல்ல ரோப்கார் மற்றும் மின்இழுவை ரெயில்களும் இயக்கப்பட்டு வருகிறது.
பழனி மலைக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் சாமி தரிசனம் முடித்த பிறகு அங்குள்ள தங்க கோபுரம் மற்றும் ராஜேகோபுரத்தை தரிசனம் செய்வது வழக்கம். கடந்த 2023ம் ஆண்டு ஜன.27ம் தேதி பழனி மலைக்கோவிலில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து 48 நாட்கள் நடந்த மண்டல பூஜையிலும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
இந்நிலையில் இன்று காலை முதல் சமூக வலைதளங்களில் ராஜகோபுரத்தில் சேதம் என்ற புகைப்படம் வேகமாக பரவியது. இதனை தொடர்ந்து பக்தர்கள் மற்றும் கோவில் அலுவலர்கள் அங்கு சென்று பார்த்தபோது 5 கோபுர கலசங்களுக்கு இடையில் இருக்கும் அலங்கார வளைவு உடைந்து தொங்கிக் கொண்டிருந்தது. இதை பார்த்த பக்தர்கள் மிகவும் வேதனையடைந்தனர். விரைவில் சேதமடைந்த பகுதியை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
- காலங்கள் மாறலாம், தொழில் நுட்பங்கள் கூடலாம், சினிமாவின் முகமே மாற்றத்துக்கு இலக்காகியிருக்கலாம்.
- பிரமிக்க வைக்கும் சாதனைகளைச் செய்துகாட்டியவரை பிறந்த நாளில் வணங்குகிறேன்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 97-வது பிறந்தநாளையொட்டி நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
காலங்கள் மாறலாம், தொழில் நுட்பங்கள் கூடலாம், சினிமாவின் முகமே மாற்றத்துக்கு இலக்காகியிருக்கலாம். ஆனால், நடிப்புக் கலையின் உச்சம் என்பது எப்படி இருக்கும் என்று காட்டிய மாபெரும் கலைஞன் சிவாஜி சாரின் பங்களிப்பு மறக்கவொண்ணாதது. பிரமிக்க வைக்கும் சாதனைகளைச் செய்துகாட்டியவரை பிறந்த நாளில் வணங்குகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
- ரத்தநாளத்தில் ஏற்பட்ட அடைப்பிற்கு ஆஞ்சியோ சிகிச்சை.
- 24 மணி நேரம் ஐசியூ பிரிவில் இருப்பார் எனத் தகவல்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்றிரவு திடீரென சென்னையில் உள்ள ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். செரிமானம் பிரச்சனை, சீரற்ற ரத்த ஓட்டம் மற்றும்வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்டதாகவும், பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு விரைவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும் அறிவிக்கப்பட்டது.
பின்னர் அவருக்கு ரத்தநாளத்தில் அடைப்பு இருப்பதாக தகவல் வெளியானது. 70 வயதிற்கு மேற்பட்டோருக்கான அதிநவீன ஆஞ்சியோதெரபி சிகிச்சை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியானது.
இந்தநிலையில் அவருக்கு ஆஞ்சியோபிஸ்ட் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும், ஐசியூ-வில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
24 மணி நேரம் ஐசியூ-வில் இருப்பார். அதன்பின் சாதாரண வார்டுக்கு மாற்றப்படுவார் எனவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுவரை மருத்துவமனை சார்பில் அதிகாரப்பூர்வ அறிக்கை ஏதும் வெளியாகவில்லை. இதற்கிடையே ரஜினிகாந்த் நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இருதய சிகிச்சை சிறப்பு மருத்துவர் சாய் சதீஷ் தலைமையில் மருத்துவக்குழுவினர் நடிகர் ரஜினியின் உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர்.
- சென்னன் கோவிலுக்கு செல்வதற்காக தனது மகள் சுதா, பேரன் விஷ்ணு ஆகியோரை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சென்றார்.
- நாமக்கல் நோக்கி பருப்பு ஏற்றி வந்த லாரி அவர்கள் மீது மோதி விபத்தானது.
பனமரத்துப்பட்டி:
சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அருகே உள்ள திப்பம்பட்டி காமராஜர் காலனியை சேர்ந்தவர் சென்னன் (65). இவரது மகள் சுதா (38). இவரை சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள வெள்ளாள குண்டத்தை சேர்ந்த வெங்கடாசலம் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தார். சுதா-வெங்கடாசலம் ஆகியோருக்கு விஷ்ணு (12) என்ற மகன் இருந்தார். இவர் வெள்ளாள குண்டம் அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.
தற்போது விஷ்ணுவுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை என்பதால் சுதா தனது மகன் விஷ்ணுவை அழைத்துக்கொண்டு திப்பம்பட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு வந்தார். இந்த நிலையில் சென்னன் தனது மகள் சுதா, பேரன் விஷ்ணு ஆகியோருடன் சமயபுரம் கோவிலுக்கு செல்ல முடிவு செய்தார்.
அதன்படி இன்று காலை சென்னன் கோவிலுக்கு செல்வதற்காக தனது மகள் சுதா, பேரன் விஷ்ணு ஆகியோரை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சென்றார். தனது மோட்டார் சைக்கிளை மல்லூரில் உள்ள ஒரு ஸ்டேண்டில் நிறுத்திவிட்டு பஸ்சில் செல்ல திட்டமிட்டு இருந்தார்.
இந்த நிலையில் இன்று காலை 7 மணியளவில் சென்னன் சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மல்லூர் பிரிவு ரோட்டில் வந்தபோது சேலத்தில் இருந்து நாமக்கல் நோக்கி பருப்பு ஏற்றி வந்த லாரி அவர்கள் மீது மோதி விபத்தானது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட சென்னன், அவரது மகள் சுதா, பேரன் விஷ்ணு ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார்கள்.
இதுபற்றி தெரியவந்ததும் மல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் பலியான 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதியை சேர்ந்த சுந்தரராஜன் (57) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- நடிகர் சிவாஜி கணேசன் 97-வது பிறந்தநாள்.
- உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை.
சென்னை:
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 97-வது பிறந்த நாளை முன்னிட்டு அடையாறு தேஷ்முக் சாலையில் அமைந்துள்ள மணிமண்டபத்தில் சிவாஜி சிலை அலங்கரிக்கப்பட்டிருந்தது.
தமிழ்நாடு அரசின் சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு நேரில் சென்று சிவாஜியின் திருஉருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி னார்.
சிவாஜியின் குடும்பத்தினர் நடிகர் பிரபு, இயக்குனர் ராம்குமார், நடிகர் விக்ரம் பிரபு, கவிஞர் வைரமுத்து அமைச்சர்கள் மு.பெரிய சாமிநாதன், மா.சுப்பிர மணியன், சேகர்பாபு, மேயர் பிரியா, மயிலை த.வேலு உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

மணிமண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த சிவாஜியின் புகைப்பட கண்காட்சிையயும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். சிவாஜி வசனம் பேசி நடித்த காட்சியும் ஒளிபரப்பப்பட்டது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமர்ந்து அவற்றை பார்வையிட்டார்.

தென்னிந்திய நடிகர் சங்க வளாகத்தில் சிவாஜி யின் உருவப்படத்திற்கு தலைவர் நாசர், துணைத் தலைவர் பூச்சி எஸ்.முருகன், செயற்குழு உறுப்பினர்களான தளபதி தினேஷ், ஹேமச் சந்திரன், நியமன செயற்குழு உறுப்பினர்களான லலிதா குமாரி, சவுந்தரராஜா, சபிதா, அனந்த நாராயணன், ஆனந்த், காமராஜ், ரத்தின குமார் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
- நேற்று மாலை ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 16 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது.
- மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
பென்னாகரம்:
கர்நாடகம் மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது கனமழை பெய்து வருவதால் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்டது.
நேற்று மாலை ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 16 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது.
இந்த நிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை குறைந்தது. இதனால் நீர்வரத்து படிப்படியாக குறைய தொடங்கியது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 14 ஆயிரம் கன அடியாக தண்ணீர் குறைந்து வந்தது.
மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் உள்ள மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை என்பதால் இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லுக்கு வந்து எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு அருவி மற்றும் காவிரி ஆற்றில் உற்சாகமாக குளித்தனர். பின்னர் அவர்கள் பாதுகாப்பு உடை அணிந்து பரிசலில் சென்று மகிழ்ந்தனர்.
- ஆகஸ்ட் மாத இறுதியில் இருந்து மீண்டும் தங்கம் விலை உயரத்தொடங்கி இருக்கிறது.
- வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.
தங்கம் விலை கடந்த சில நாட்களாக யாரும் எட்டிப்பிடிக்க முடியாத நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. கடந்த மார்ச் மாதம் ரூ.50 ஆயிரத்தை கடந்த நிலையில், தொடர்ந்து விலை அதிகரித்து கொண்டே வந்து, கடந்த ஜூலை மாதம் 17-ந் தேதி ஒரு பவுன் ரூ.55 ஆயிரத்தையும் கடந்து வரலாறு காணாத உச்சத்தை அப்போது பதிவு செய்தது.
அதன் பின்னர், மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதால், அதன் விலையும் சரியத்தொடங்கியது. ஒரு கட்டத்தில் ரூ.50 ஆயிரத்துக்கும் கீழ் வந்துவிடும் என நினைத்து கொண்டிருந்த நேரத்தில், ஆகஸ்ட் மாத இறுதியில் இருந்து மீண்டும் விலை உயரத்தொடங்கி இருக்கிறது.
தொடர்ந்து தங்கம் விலை ஏறுமுகத்திலேயே இருந்த நிலையில், கடந்த மாதம் 21-ந் தேதி இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. அதன் தொடர்ச்சியாகவும் விலை உயர்ந்து, ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை பதிவு செய்து வருகிறது.
சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை சவரன் ரூ.56 ஆயிரத்துக்கு 640-க்கு விற்பனையானது.
இந்நிலையில் சென்னையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.56 ஆயிரத்து 400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.7,050-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.101-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- ஏன் இப்படியெல்லாம் செய்கிறார் என்று நாங்கள் முழுமையாக அறிந்தாக வேண்டும்
- அங்கு பணியாற்றும் மருத்துவர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
கோவையில் ஆன்மீக குரு ஜக்கி வாசுதேவ் நடத்தி வரும் ஈஷா யோகா மையத்தில் பெண்கள் சந்நியாசம் மேற்கொள்ள மூளைச்சலவை செய்யப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அவ்வாறு ஈஷா மையத்தில் தங்கியிருக்கும் தனது இரு மகள்களை மீட்டுத் தரக் கோரி கோவை வேளாண் பல்கலை.யில் பேராசிரியராக பணியாற்றி வரும் காமராஜ் என்பவர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்குதல் செய்திருந்தனர்.
இந்த மனு நேற்றைய தினம் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம் மற்றும் வி.சிவஞானம் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில் ஆஜரான காமராஜின் பெண்கள் இருவரும் தங்கள் விருப்பத்தின் பேரிலேயே ஈஷா மையத்தில் உள்ளதாகக் கூறினார்.
இதைத்தொடர்ந்து பேசிய நீதிபதிகள், தனது மகளுக்குத் திருமணம் செய்து வைத்து அவரை வாழ்க்கையில் நல்லபடியாக செட்டில் ஆக்கிய ஜக்கி வாசுதேவ் மற்ற இளம் பெண்களின் தலையை மொட்டையடித்துக்கொள்ள ஊக்குவிப்பது ஏன்? அவர் இப்படிச் செய்வதற்குக் காரணம் என்ன? என்று கேள்வி எழுப்பினர். மேலும் துறவியாகத் தன்னை கூறிக்கொள்ளும் ஒருவர் ஏன் இப்படியெல்லாம் செய்கிறார் என்று நாங்கள் முழுமையாக அறிந்தாக வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே மனுதாரரின் வழக்கறிஞர் பேசுகையில், ஈஷா அறக்கட்டளை தொடர்பாக பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதாகவும், சமீபத்தில் அங்கு பணியாற்றும் மருத்துவர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். எனவே ஈஷா அறக்கட்டளை தொடர்பான அனைத்து வழக்குகளையும் பட்டியலிட்டு, அக்டோபர் 4-ம் தேதிக்குள் அரசு வழக்கறிஞர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
- ரசிகர்களுடன் சேர்ந்து நானும் வேண்டிக் கொள்கிறேன்.
- ரஜினிகாந்த் குணமடைய வேண்டுகிறேன்.
நடிகர் ரஜினிகாந்த் நேற்று இரவு திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை கிரீம்ஸ் ரோட்டில் அமைந்துள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று இரவு அவர் அனுமதிக்கப்பட்டார். இன்று அவருக்கு மருத்துவப் பரிசோதனை நடக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து கவர்னர் ஆன் என்.ரவி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
நடிகர் ரஜினிகாந்த் விரைவாகவும் சீராகவும் குணமடைய உலகெங்கிலும் உள்ள அவரது கோடிக்கணக்கான ரசிகர்களுடன் சேர்ந்து நானும் வேண்டிக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
- திராவிடமணி திருச்சி மத்திய சிறையில் உயிரிழந்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
- இனி இதுபோன்ற சம்பவங்கள் நிகழாவண்ணம் உறுதிசெய்யுமாறு விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்.
அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
திருச்சி மாவட்டம் பழூரைச் சேர்ந்த திராவிடமணி என்பவர், திருச்சி மத்திய சிறையில் உயிரிழந்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
விடியா திமுக ஆட்சியில் காவல் நிலைய மரணங்கள் என்பது தொடர்கதையாகிவிட்ட நிலையில், காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக சொல்லும் விடியா திமுக முதல்வரோ, தன் வாரிசுக்கு முடி சூட்டுவதில் மட்டும் கவனம் செலுத்துவது கண்டனத்திற்குரியது.
உயிரிழந்த திராவிடமணியின் குடும்பத்தாருக்கு இழப்பீடு வழங்கவும், மரணம் குறித்த உண்மைக் காரணத்தைக் கண்டறிந்து, தொடர்புள்ளோர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன், இனி இதுபோன்ற சம்பவங்கள் நிகழாவண்ணம் உறுதிசெய்யுமாறு விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
- சென்னை குடிநீர் வாரியத்துக்கு ஆண்டுதோறும் 2 முறை பொதுமக்கள் குடிநீர் மற்றும் கழிவுநீர் வரி செலுத்தி வருகிறார்கள்.
- இன்று முதல் வரும் 30-ந்தேதி வரையில் முழுமையாக வரி செலுத்துவோருக்கு முதன் முறையாக 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது.
சென்னை:
சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை குடிநீர் வாரியத்துக்கு ஆண்டுதோறும் 2 முறை பொதுமக்கள் குடிநீர் மற்றும் கழிவுநீர் வரி செலுத்தி வருகிறார்கள். உரிய காலக்கட்டத்தில் வரியை செலுத்துவோர்களை ஊக்குவிக்கும் வகையில், இன்று முதல் (1-ந்தேதி) வரும் 30-ந்தேதி வரையில் முழுமையாக வரி செலுத்துவோருக்கு முதன் முறையாக 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது. இந்த முறை இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.
எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களது 2024-25-ம் ஆண்டுக்கான 2-வது அரையாண்டுக்கான வரியை முழுமையாக செலுத்தி 5 சதவீதம் ஊக்கத்தொகையாக அதாவது அதிகபட்சம் ரூ.1,500 வரையில் பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஆஞ்சியோகிராமை விட அதி நவீன அறுவை சிகிச்சை செய்ய இருப்பதாக தகவல்.
- சிறுநீரகம் அருகே ஏற்பட்ட கோளாறு காரணமாக அறுவை சிகிச்சை செய்யப்படுவதாக தகவல்.
வேட்டையன் படம் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூலி படத்தில் நடித்து வருகிறார். நேற்றிரவு அவருக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
செரிமானம் பிரச்சனை மற்றும் கடுமையான வயிற்று வலி காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. பல்வேறு பரிசோதனைக்குப் பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என தகவல் வெளியானது.
இந்த நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஆஞ்சியோகிராமை விட 70 வயதை கடந்தவர்களுக்கு செய்யப்படும் அதி நவீன அறுவை சிகிச்சை செய்ய இருப்பதாக அந்த தகவல் தெரிவிக்கிறது.
மற்றொரு தகவல்படி அவருக்கு சிறுநீரகம் அருகே ஏற்பட்ட கோளாறு காரணமாக அறுவை சிகிச்சை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினிக்கு தொடையிலிருந்து சதையை எடுத்து அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை அப்பல்லோ மூத்த மருத்துவர்கள் மூவர் இந்த அறுவை சிகிச்சையில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.






