என் மலர்
உள்ளூர் செய்திகள்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்தநாள்: மு.க.ஸ்டாலின் மரியாதை
- நடிகர் சிவாஜி கணேசன் 97-வது பிறந்தநாள்.
- உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை.
சென்னை:
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 97-வது பிறந்த நாளை முன்னிட்டு அடையாறு தேஷ்முக் சாலையில் அமைந்துள்ள மணிமண்டபத்தில் சிவாஜி சிலை அலங்கரிக்கப்பட்டிருந்தது.
தமிழ்நாடு அரசின் சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு நேரில் சென்று சிவாஜியின் திருஉருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி னார்.
சிவாஜியின் குடும்பத்தினர் நடிகர் பிரபு, இயக்குனர் ராம்குமார், நடிகர் விக்ரம் பிரபு, கவிஞர் வைரமுத்து அமைச்சர்கள் மு.பெரிய சாமிநாதன், மா.சுப்பிர மணியன், சேகர்பாபு, மேயர் பிரியா, மயிலை த.வேலு உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.
மணிமண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த சிவாஜியின் புகைப்பட கண்காட்சிையயும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். சிவாஜி வசனம் பேசி நடித்த காட்சியும் ஒளிபரப்பப்பட்டது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமர்ந்து அவற்றை பார்வையிட்டார்.
தென்னிந்திய நடிகர் சங்க வளாகத்தில் சிவாஜி யின் உருவப்படத்திற்கு தலைவர் நாசர், துணைத் தலைவர் பூச்சி எஸ்.முருகன், செயற்குழு உறுப்பினர்களான தளபதி தினேஷ், ஹேமச் சந்திரன், நியமன செயற்குழு உறுப்பினர்களான லலிதா குமாரி, சவுந்தரராஜா, சபிதா, அனந்த நாராயணன், ஆனந்த், காமராஜ், ரத்தின குமார் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.






