என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தி.மு.க. அரசு, பாதுகாப்பற்ற உபகரணங்கள் கொண்டு விளையாடுவது கடும் கண்டனத்திற்குரியது.
    • இரு பெண்கள் 20 நிமிடங்கள் சிக்கி, அந்தரத்திலேயே இருந்து அலறினர்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:

    தி.மு.க. முதல்வர், தனது தந்தை கருணாநிதி பெயரில் சென்னையில் பூங்கா திறந்த வெறும் ஐந்தே நாட்களில், பூங்காவில் உள்ள ஜிப்லைன் (Zipline) பழுதடைந்து, அதில் பயணித்த இரு பெண்கள் 20 நிமிடங்கள் சிக்கி, அந்தரத்திலேயே இருந்து, பின் கயிறு மூலமாக கீழிறக்கப்பட்டதாக செய்திகள் வருகின்றன.

    அரசுப் பூங்கா; புதிதாகத் திறக்கப்பட்டுள்ளது என்பதை நம்பி வரும் மக்களின் உயிரோடு, கலெக்ஷன்-கரப்ஷன்-கமிஷன் மட்டுமே கொள்கையாகக் கொண்ட தி.மு.க. அரசு, பாதுகாப்பற்ற உபகரணங்கள் கொண்டு விளையாடுவது கடும் கண்டனத்திற்குரியது.

    கருணாநிதி பெயரிலான இந்த பூங்காவிற்குள் நுழையவே நூறு ரூபாய் கட்ட வேண்டுமாம். அது போக, ஜிப்லைனுக்கு 250 ரூபாய் என அதில் உள்ள வசதி ஒவ்வொன்றிற்கும் தனி கட்டணம் வசூல் செய்கிறது தி.மு.க. அரசு. இந்த பூங்காவை முழுவதும் சுற்றிப்பார்க்க 650 ரூபாய் ஆகிறது. தனியார் பொழுதுபோக்கு பூங்காக்கள் வசூலிக்கும் கட்டணத்திற்கு இணையாக இந்த கருணாநிதி பூங்காவிற்கு வசூலிக்கிறது தி.மு.க. அரசு.

    பூங்காவிற்கு வருகை புரியும் மக்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என தி.மு.க. முதல்வரை வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

    • முத்தாரம்மன் கோவிலில் சூரசம்ஹாரம் விழா கோலாகலமாக நடைபெற்றது.
    • காலை முதல் மதியம் வரையிலும் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    குலசேகரன்பட்டினம்:

    இந்தியாவில் தசரா பெருந்திருவிழா மைசூருக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில்தான் பிரசித்தியாக கொண்டாடப்படுகிறது.

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து முத்தாரம்மன் கோவிலில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில், வெவ்வேறு திருக்கோலத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    தினமும் மாலையில் சமய சொற்பொழிவு, திருமுறை இன்னிசை, பரதநாட்டியம், வில்லிசை, இன்னிசை நிகழ்ச்சி போன்றவை நடந்தது.

    இந்நிலையில், பத்தாவது நாளில் முத்தாரம்மன் கோவில் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று இரவு கோலாகலமாக நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனையொட்டி, காலை முதல் மதியம் வரையிலும் சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.

    இரவு 11 மணி அளவில் அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. நள்ளிரவு 12 மணி அளவில் அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேசுவரர் கோவிலுக்கு முன் எழுந்தருளினார். அப்போது காளி வேடம் அணிந்த பக்தர்களும் அம்மனை பின்தொடர்ந்து வந்தனர். சூரசம்ஹாரத்தைக் காண்பதற்காக கடற்கரையில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு இருந்தனர்.

    முதலில் ஆணவமே உருவான மகிஷாசூரன் 3 முறை அம்மனை வலம்வந்து போரிட தயாரானான். அவனை அம்மன் சூலாயுதத்தால் வதம் செய்தார். அதன்பின் சிங்க முகமாக உருமாறிய மகிஷாசூரன் மீண்டும் உக்கிரத்துடன் போரிடுவதற்காக அம்மனை 3 முறை சுற்றி வந்தான். அவனையும் அம்மன் சூலாயுதம் கொண்டு அழித்தார்.

    தொடா்ந்து எருமை முகமாக உருமாறிய மகிஷாசூரன் மறுபடியும் பெருங்கோபத்துடன் அம்மனுடன் போர் புரிய வந்தான். அவனையும் சூலாயுதத்தால் அம்மன் சம்ஹாரம் செய்தார். அதன்பிறகு சேவலாக உருமாறி போரிட்ட மகிஷாசூரனையும் அன்னை சூலாயுதத்தால் வதம் செய்தார்.

    அப்போது அங்கு கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் 'ஓம் காளி, ஜெய் காளி' என்று விண்ணதிர பக்தி கோஷங்களை முழங்கி அம்மனை வழிபட்டனர்.

    குலசேகரன்பட்டினம் நகர் முழுவதும் ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
    • சவுக்கு சங்கர் தற்போது ஜாமீனில் வெளியே உள்ளார்.

    பிரபல அரசியல் விமர்சகரும் யூடியூபருமான சவுக்கு சங்கர் திடீர் நெஞ்சுவலியால் காரணமாக சென்னை வடபழனி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    கடந்த ஏப்ரல் மாதம் பெண் காலவர்கள் குறித்து நேர்காணலில்  அவதூறாக பேசியது உட்பட பல்வேறு வழக்குகளில்  கைதாகி சிறையில் இருந்த சவுக்கு சங்கர் தற்போது ஜாமீனில் வெளியே உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கவரப்பேட்டை ரெயில் விபத்தில் 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
    • கவரைப்பேட்டையில் ரயில் விபத்து நடந்த இடத்தில் சென்னை மார்க்கத்தில் மீண்டும் ரயில் சேவை தொடங்கியது.

    மைசூரிலிருந்து தர்பங்கா நோக்கிச் சென்ற பாக்மதி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (12578) வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணியளவில் பொன்னேரியை அடுத்த கவரைப்பேட்டை ரயில் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தது. அப்போது சரக்கு ரெயில் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    சிக்னல் கோளாறு காரணமாக இவ்விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    இந்த விபத்தில், இரண்டு ரெயில்களின் பெட்டிகளும் தடம்புரண்டு மற்ற தண்டவாளங்களை ஆக்கிரமித்துள்ளன. இதனால், தடம்புரண்ட பெட்டிகளை அகற்றும் பணியில் ஊழியர்கள் விடிய விடிய தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

    இந்நிலையில், கவரைப்பேட்டையில் ரயில் விபத்து நடந்த இடத்தில் சென்னை மார்க்கத்தில் மீண்டும் ரயில் சேவை தொடங்கியது.

    தற்போது டெல்லியில் இருந்து சென்னை வந்த ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில், மெயின் லைனில் 10 கி.மீ. வேகத்தில் கடந்து சென்றது.

    • லாரியில் சிக்கிய கார், நடந்து சென்ற 2 முதியவர்கள் மீது மோதியுள்ளது.
    • லாரி ஓட்டுநர் பிரவீனை போலீசார் கைது செய்தனர்.

    கோவை மாவட்டம் புளியகுளம் சாலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, முன்னால் நின்றிருந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    லாரியில் சிக்கிய கார், நடந்து சென்ற 2 முதியவர்கள் மீது மோதியுள்ளது. அதில் முதியவர் மருதாசலம் என்பவர் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொருவர் சிறு காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளார்.

    இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,

    விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் பிரவீனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 7 பேர் படுகாயம்.
    • விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னை பூந்தமல்லியில் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கியிருந்த வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 2 சிறுவர்கள் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    கேஸ் சிலிண்டர் வெடித்ததில் வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்து சேதம் அடைந்துள்ளது. இந்த விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    • கவரைப்பேட்டை ரெயில் விபத்தில் 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
    • ரெயில் விபத்தில் சரக்கு ரயிலின் 3 பெட்டிகள் சேதமடைந்தன.

    மைசூரிலிருந்து தர்பங்கா நோக்கிச் சென்ற பாக்மதி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (12578) வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணியளவில் பொன்னேரியை அடுத்த கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தது. அப்போது சரக்கு ரெயில் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    சிக்னல் கோளாறு காரணமாக இவ்விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    இந்நிலையில், கவரைப்பேட்டை ரெயில் விபத்து தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட மீட்பு பணிகள் குறித்து தமிழ்நாடு அரசு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

    அந்த அறிக்கையில், "திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டம், கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகில் லூப்லைனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரயில் மீது 11.10.2024 அன்று சுமார் இரவு 08.30 மணியளவில் மைசூரிலிருந்து பீகார் மாநிலம் தர்பாங்கா செல்லும் பாக்மதி அதிவிரைவு பயணிகள் ரயில் எண். 12578 மோதியது. இதில் பயணிகள் ரயிலின் முதல் 7 பெட்டிகள் தடம் புரண்டது. இதில் ஒரு பெட்டியில் தீ விபத்தும் ஏற்பட்டது. பயணிகள் ரயிலில் பயணம் செய்த 19 பேர் காயமடைந்தனர்.

    இச்சம்பவம் தொடர்பாக நேற்றிரவு தகவல் கிடைத்தவுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், சம்மந்தப்பட்ட நிகழ்விடத்திற்கு சிறுபான்மையினர் நலம் மற்றும் அயல்நாட்டுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் நாசர், கும்மிடிபூண்டி சட்டமன்ற உறுப்பினர், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், கூடுதல் காவல்துறை இயக்குநர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) ஆகியோர் சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டனர். இந்நிகழ்வில் பயணிகள் ரயிலில் சுமார் 1,600 பேர் பயணம் செய்ததாக தெரியவருகிறது. சரக்கு ரயிலின் 3 பெட்டிகள் சேதமடைந்தன.

    சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் காயமடைந்த 19 நபர்கள் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டு, அவர்களில் மேல் சிகிச்சைக்காக 4 பயணிகள் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், காயமடைந்த பயணிகள் பொன்னேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இவ்விபத்தில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை, ஸ்டான்லி மருத்துவமனைக்கு நேரில் சென்று, காயம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறி, அவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்திட மருத்துவர்களுக்கு உத்தரவிட்டார்.

    மேலும், விபத்து நடந்த இடத்தில் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள பயணிகள் தங்க வைக்கப்பட்டுள்ள விவரம், அவர்கள் சொந்த ஊருக்குத் திரும்புவதற்கான மாற்று ஏற்பாடு, உணவு மற்றும் குடிநீர் உள்ளிட்ட வசதிகள் குறித்து கேட்டறிந்து அவற்றை உரிய முறையில் செய்து தரப்பட வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தினார். இந்த விபத்து நடந்த இடத்தல் மீட்புப் பணிகளுக்காக திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் 3 தீயணைப்பு வாகனங்கள் வட மண்டல இணை இயக்குநர் தலைமையில் 2 மாவட்ட அலுவலர்கள் மூன்று நிலைய அலுவலர்கள் மற்றும் 25 தீயணைப்பு வீரர்களுடன் துரிதமாக செயல்பட்டது.

    இதனால் விபத்து இடத்தில் ஏற்பட்ட தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டு இதர பெட்டிகளுக்கு தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது. இதுதவிர விபத்து ஏற்பட்ட இடத்திற்கு 28 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் 3 மருத்துவக் குழுவினர் மீட்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். விபத்தினால் தங்கள் பயணத்தை தொடர முடியாத பயணிகள் சுமார் 800-க்கும் மேற்பட்டோர் கவரப்பேட்டையிலுள்ள கல்யாண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான குடிநீர், உணவு மற்றும் இதர வசதிகள் செய்து தரப்பட்டதுடன், அத்திருமண மண்டபங்களிலிருந்து பொன்னேரி ரயில் நிலையத்திற்கு 20-க்கும் மேற்பட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் மூலம் அழைத்து செல்லப்பட்டு, பொன்னேரியிலிருந்து சிறப்பு ரயில் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர்.

    நேற்றிரவு நடந்த ரயில் விபத்தில் உரிய மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை ஏற்படாமல், உடனடியாக மேற்கொண்டு, உயிர்ச்சேதம் ஏதும் காயமடைந்தவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளித்ததுடன், பாதிக்கப்பட்ட பயணிகள் அனைவர்க்கும் தேவையான உதவிகள் வழங்கியதற்காக தமிழ்நாடு அரசுக்கு அப்பயணிகள் தங்களது நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சிக்னல் கோளாறு காரணமாக இவ்விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
    • இந்த விபத்தில் 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    மைசூரிலிருந்து தர்பங்கா நோக்கிச் சென்ற பாக்மதி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (12578) வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணியளவில் பொன்னேரியை அடுத்த கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தது. அப்போது சரக்கு ரெயில் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    சிக்னல் கோளாறு காரணமாக இவ்விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    இந்த விபத்தில், இரண்டு ரெயில்களின் பெட்டிகளும் தடம்புரண்டு மற்ற தண்டவாளங்களை ஆக்கிரமித்துள்ளன. இதனால், தடம்புரண்ட பெட்டிகளை அகற்றும் பணியில் ஊழியர்கள் விடிய விடிய தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், கவரைப்பேட்டை ரெயில் விபத்து தொடர்பாக 13 ரயில்வே ஊழியர்களுக்கு சென்னை கோட்ட மேலாளர் சம்மன் அனுப்பியுள்ளார்.

    கவரைப்பேட்டை ஸ்டேஷன் மாஸ்டர், லோகோ பைலட், உதவி லோகோ பைலட், மோட்டர் மேன், கவரைப்பேட்டை கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரி என 13 பேர் இன்று மாலை தெற்கு ரெயில்வே அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    • அணைகளை பொறுத்த வரை பாபநாசம், சேர்வலாறு அணை பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
    • மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள குற்றாலம் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    நெல்லை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ள நிலையில், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே மாலை நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் நேற்று பகலில் வெயில் அடித்த நிலையில் பிற்பகலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள அணைகள், மலைப்பிரதேசங்கள், புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்ய தொடங்கியது.

    புறநகரில் சேரன்மகாதேவி, நாங்குநேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. இதமான காற்றும் வீசியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். களக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் கனமழை பெய்தது. மாலையில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக களக்காடு மலைப்பகுதியில் பெய்த மழையால் தலையணையில் நீர் வரத்து அதிகரித்தது. அங்கு அதிகபட்சமாக 27.40 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    நேற்று ஆயுதபூஜை விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அங்கு அதிகரித்து காணப்பட்டது. தொடர்ந்து 3 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் பாபநாசம் அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவிகளிலும் இன்று காலை முதலே சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகாமாக இருந்தது. மாநகரில் மழை பெய்யவில்லை. எனினும் மாலை நேரத்தில் குளிர்ந்த காற்று வீசியது.

    அணைகளை பொறுத்த வரை பாபநாசம், சேர்வலாறு அணை பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக சேர்வலாறில் 27 மில்லி மீட்டரும், பாபநாசத்தில் 14 மில்லிமீட்டரும் மழை பதிவாகியது. கொடுமுடியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த 1 வாரமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்றும் அங்கு 17 மில்லிமீட்டர் மழை பதிவாகியது.

    பாபநாசம் அணைக்கு வினாடிக்கு நேற்று முன்தினம் 430 கனஅடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில், மலைப்பகுதியில் நேற்று பெய்த மழையால் நீர்வரத்து அதிகரித்தது. இன்று காலை வினாடிக்கு 552 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 504 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணை நீர்மட்டம் 94.50 அடியாக உள்ளது. சேர்வலாறு அணையில் 106.33 அடி நீர் இருப்பு உள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலை வனப்பகுதி யில் நேற்று பிற்பகலில் தொடங்கி இரவு வரையிலும் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக நாலுமுக்கு, ஊத்து எஸ்டேட்டுகளில் கனமழை பெய்தது. நாலுமுக்கில் 29 மில்லிமீட்டரும், ஊத்தில் 26 மில்லிமீட்டரும் மழை பதிவாகியது. காக்காசியில் 19 மில்லிமீட்டர் மழை பதிவாகியது.

    தென்காசி மாவட்டத்தில் சிவகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக அங்கு 31 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. ராமநதியில் 2 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. அந்த அணையின் நீர்மட்டம் 55.50 அடியாக உள்ளது. கடனா அணை நீர்மட்டம் 46 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 49.87 அடியாகவும் உள்ளது. குண்டாறு அணை நிரம்பி வழிகிறது.

    மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள குற்றாலம் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. தொடர் விடுமுறை என்பதால் காலை முதலே சுற்றுலா பயணிகள் அங்கு முகாமிட்டு குளித்து மகிழ்கின்றனர்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் கயத்தாறு, கடம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலையில் கனமழை கொட்டியது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கடம்பூரில் அதிகபட்சமாக 68 மில்லிமீட்டர் மழை பெய்தது. கயத்தாறில் 27 மில்லிமீட்டர் மழை பெய்தது. சூரன்குடி, சாத்தான்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் பரவலாக மழை பெய்தது.

    • ஊசி மருந்து பாட்டில் ரூ.7 க்கு வாங்கி அதை ரூ. 300 வரை விற்பனை செய்துள்ளனர்.
    • போதை பழக்கத்திற்கு அடிமையான மாணவர்கள் உடல் மெலிந்து சோர்வாக காணப்படுவார்கள்.

    திருச்சி:

    திருச்சி மாநகரில் இளைஞர்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்களை சீரழிக்கும் போதை ஊசி பழக்கம் அதிகரித்து வருவதாக புகார் எழுந்தது. அவ்வப்போது போலீசார் போதை ஊசி விற்பனை கும்பலை கைது செய்து வந்தனர்.

    அதைத் தொடர்ந்து மாநகர போலீஸ் கமிஷனர் காமினி போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் போதை பொருட்கள், மாத்திரைகள், ஊசிகளை கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்பவர்களை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

    இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரபடுத்தப்பட்டது. இதில் உறையூர் பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கு ஒரு கும்பல் போதை ஊசி சப்ளை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் ராமராஜ் தலைமையிலான போலீசார் திருச்சி வடவூர் பகுதியில் ஊசியுடன் போதை மருந்து மாணவர்களுக்கு சப்ளை செய்த அதே பகுதியைச் சேர்ந்த பிரசாத் (வயது 32) இஃப்ரான்( 23) சாலை ரோடு ரியாஸ்கான்(23) ஆகியோரை கைது செய்தனர்.

    பின்னர் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 3 பேரும் ஆன்லைனில் போதை மாத்திரைகள் ஆர்டர் செய்து வாங்கி சப்ளை செய்தது தெரியவந்தது. மேலும் டாக்டர்கள் சிலரின் மருந்து சீட்டுகளை போலியாக அச்சடித்து அதில் டாக்டர்கள் பரிந்துரைப்பது போன்று கையெழுத்திட்டு போதை மாத்திரை மற்றும் ஊசிகளை ஆர்டர் செய்து தபால் மூலமும் வாங்கிய தகவலும் கிடைத்தது.

    ஊசி மருந்து பாட்டில் ரூ.7 க்கு வாங்கி அதை ரூ. 300 வரை விற்பனை செய்துள்ளனர். இது தொடர்பாக தனிப்படை போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, மாணவர்களுக்கு போதை ஊசி மற்றும் மருந்து சப்ளை செய்த பழைய குற்றவாளிகள் 20 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 8 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    போதை பழக்கத்திற்கு அடிமையான மாணவர்கள் உடல் மெலிந்து சோர்வாக காணப்படுவார்கள். அவர்களின் கைகளில் ஆங்காங்கே தழும்புகள் இருக்கும். எனவே தங்கள் குழந்தைகளின் கைகளில் சந்தேகத்திற்குரிய வகையில் தழும்புகள் உள்ளதா? என்பதை பெற்றோர் அடிக்கடி கண்காணித்து அவர்களை பாதுகாக்க வேண்டும்.

    போதை ஊசி செலுத்தும் போது அது நேராக நரம்பு மண்டலத்தை பாதிக்கும். உணவு உட்கொள்வதில் ஆர்வம் குறையும். தொடர்ந்து 3 ஆண்டுகள் இதே பழக்கத்தில் இருந்தால் மூளை நரம்பு மண்டலம் முற்றிலுமாக செயல் இழந்து உயிருக்கு ஆபத்தாக முடியும் என்றார்.

    • கோவை மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக இருக்ககூடிய சிறுவாணி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    • கோவை மாவட்டத்தில் அதிகபட்சமாக சோலையாரில் 59 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    கோவை:

    மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரையொட்டி கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மாலை, இரவு நேரங்களில் கனமழை கொட்டுகிறது.

    நேற்றும் மழை நீடித்தது. கோவை மாநகர் பகுதிகளான ரெயில் நிலையம், காந்திபுரம், பாப்பநாயக்கன் பாளையம், காந்திபார்க், சிங்காநல்லூர், உக்கடம், குனியமுத்தூர், சுந்தராபுரம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் இரவில் பலத்த மழை பெய்தது. அதனை தொடர்ந்து சாரல் மழை அடித்து கொண்டே இருந்தது.

    இந்த மழையால் சாலைகள் மற்றும் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு மத்தியிலேயே வாகனத்தை இயக்கி சென்றனர்.

    புறநகர் பகுதிகளான மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, வடவள்ளி, தொண்டாமுத்தூர், பேரூர், சூலூர், வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியது. சுமார் அரைமணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. இந்த மழையால் கடும் குளிரும் நிலவியது. இன்று காலையும் லேசான சாரல் மழை பெய்தது.

    மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள அடர்ந்த வனப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழைப்பொழிவு இருந்து வருகிறது.

    இதன் காரணமாக கோவை மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக இருக்ககூடிய சிறுவாணி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    நீர்வரத்து அதிகரிப்பால் அணையின் நீர்மட்டமும் வெகுவாக உயர்ந்தது. தற்போது அணையின் நீர்மட்டம் 42 அடியாக உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 9.82 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டது.

    கோவை மாவட்டத்தில் அதிகபட்சமாக சோலையாரில் 59 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    கோவை மாவட்டத்தில் பதிவான மழை விவரம் மி.மீட்டரில் வருமாறு:

    சோலையார்-59, சின்னக்கல்லார்-49, சின்கோனா-42, வாரப்பட்டி பி.டபிள்யூடி அலுவலகம்-34, பெரிய நாயக்கன்பாளையம்-29, வால்பாறை பி.ஏ.பி-27, பொள்ளாச்சி தாலுகா-25, வால்பாறை தாலுகா-24, கோவை தெற்கு-22 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    • வேதாரண்யம் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் உப்பள பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
    • தற்போது ஒரு டன் உப்பு ரூ.1200 முதல் ரூ.1500 வரை விற்பனை ஆகிறது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கடினல்வயல், கோடியக்காடு உள்ளிட்ட பகுதிகளில் 9000 ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது . தமிழகத்தில் தூத்துக்குடிக்கு அடுத்து இங்கு தான் உப்பு உற்பத்தி அதிகளவில் நடைபெறுகிறது.

    ஆண்டுதோறும் ஜனவரி மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் முதல் வாரம் வரை உப்பு உற்பத்தி நடைபெறும். ஆண்டு ஒன்றுக்கு 6 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த ஆண்டு 6 லட்சம் டன் உப்பு உற்பத்தி இலக்கை எட்டிய நிலையில் விற்பனை போக ஒரு லட்சம் டன் உப்பு உற்பத்தி இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வேதாரண்யம் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் உப்பள பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

    மேலும் அடுத்து வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் இந்த ஆண்டு உப்பு உற்பத்தி அடியோடு நிறுத்தப்பட்டது. இதனால் நேரிடையாகவும், மறைமுகமாகவும் 10 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளனர். இவர்கள் விவசாயம் உள்ளிட்ட பிற பணிகளுக்கு செல்கின்றனர்.

    இதையடுத்து உப்பத்தில் சேமித்து வைத்துள்ள உப்பை பனை ஓலைகள் மற்றும் தார்பாய்களைக் கொண்டு தொழிலாளர்கள் முழுமையாக மூடி பாதுகாப்பாக வைத்துள்ளனர்.

    தற்போது ஒரு டன் உப்பு ரூ.1200 முதல் ரூ.1500 வரை விற்பனை ஆகிறது. மழைக்கால விற்பனைக்காக சேமித்து வைக்கப்பட்டுள்ள உப்பிற்கு கூடுதல் விலை கிடைக்கும் எனவும் மீண்டும் மூன்றுமாத ஓய்விற்கு பிறகு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் உப்பு உற்பத்தி தொடங்கப்படும் என உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். 

    ×