search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுவாணி அணை"

    பருவ மழை தொடரும் என்பதால், மெல்ல மெல்ல நீர் மட்டம் உயரும். அப்போது கூடுதலாக தண்ணீர் எடுக்கப்படும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கோவை:

    கோவை மாநகராட்சி மற்றும் வழியோர கிராம மக்களுக்கு மிக முக்கிய குடிநீர் ஆதாரமாக சிறுவாணி அணை இருந்து வருகிறது.

    இங்கு நீர்ப்பிடிப்பு பகுதிகளில், தென்மேற்கு பருவ மழை பெய்யத் தொடங்கி உள்ளது. நேற்று காலை, 8 மணி நிலவரப்படி, அணை பகுதியில், 21 மி.மீ., மழை பதிவாகி இருந்தது. அடிவாரத்தில் மழைப்பொழிவு இல்லை.

    ஆனாலும் சிற்றருவிகளில் நீர் வரத்து காணப்படுவதால் அணையில் 5 செ.மீ., நீர் மட்டம் உயர்ந்திருக்கிறது. அதன்படி நேற்று 18.5 அடிக்கு நீர் இருப்பு இருந்தது.

    4-வது வால்வு மூடப்பட்டு இருப்பதால், 5 கோடி லிட்டரே எடுக்கப்பட்டது. அதில், 3.2 கோடி கோவை மாநகராட்சி பகுதி மக்களுக்கு வினியோகிக்கப்பட்டது.

    பருவ மழை தொடரும் என்பதால், மெல்ல மெல்ல நீர் மட்டம் உயரும். அப்போது கூடுதலாக தண்ணீர் எடுக்கப்படும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×